"ஹலோ தலைவரே, காஞ்சிபுரம் அத்தி வரதர் சயனத்தில் இருந்த கோலத்தைக் கடும் நெரிசலுக்கு மத்தியில் தரிசனம் செய்த பக்தர்கள், அவரின் நின்ற கோலத்தை தரிசிக்க குறைந்த அவகாசமே இருக்குதுன்னு கவலைப்படறாங்க.''’

""அவங்க கவலையில் நியாயம் இருக்குப்பா. 40 வருடத்துக்குப் பிறகு, வெளியே எடுக்கப்பட்டு ஜூலை 1-ஆம் தேதியில் இருந்து 48 நாட்கள் தரிசனம் தரும் அத்திவரதர், முதல் 24 நாட்கள் படுத்த நிலையிலும், அடுத்த 24 நாட்கள் நின்ற கோலத்திலும் தரிசனம் தருவாருங்கிறதால இரண்டு கோலத்திலும் தரிசனம் செய்ய பக்தர்கள் ஆர்வமா இருந்தாங்க. ஆனால் 24 நாட்கள் முடிஞ்ச நிலையிலும் அத்திவரதர் நின்ற கோலத்துக்கு மாறலை. 1-ஆம் தேதியிலிருந்துதான் நின்ற கோலத்தில் தரிசனமாம். பக்தர்கள் கவலைப் படத்தானே செய்வாங்க?''

""ரொம்பகாலமா தண்ணிக்குள்ளேயே ஊறியிருந்ததால் அத்திவரதரின் திருமேனி ரொம்பவும் வீக்கா இருக்கு. அதனால்தான் அவரை உடனடியா நிற்க வைக்கலைன்னு அங்கிருக்கும் ஒருதரப்பு சொல்லுது. இன்னொரு தரப்போ, பிரதமர் மோடி 31-ந் தேதி வர்றார். அவர் கிடந்த கோலத்தைத் தரிசிக்கணும் என்பதற்காகத்தான், வரதரை இன்னும் எழுப்பலைன்னு இன்னொரு தரப்பு சொல்லுது. இரண்டாவது காரணமே உண்மையான காரணம்ன்னு தெரியுது. இதுக்கிடையில் அத்திவரதரை தரிசிப்பதற்கான பாஸை, போலியா அச்சடித்து, தங்கள் கடைக்கு வரும் கஸ்டமர்களுக்கு அங்க இருக்கும் பாபுஷாங் கிற ஜவுளிக்கடை தாராளமா விநியோகிச்சிருக்கு. இதை மாவட்ட கலெக்டரே கண்டுபிடிச்சிருக்கார். இதைத் தொடர்ந்து கடை மேனேஜர் ரவிங்கிறவரை போலீஸ் கைது செய்துச்சு. என்ன மேஜிக் நடந்ததோ, அவரும் கைதான வேகத்தில் வெளியே வந்துட்டார்.''’

athivaradhar

Advertisment

""காஞ்சிபுரத்தில் இன்னொரு அத்திவரதரும் கிணற்றில் இருந்து வெளியே வந்திருக்காராமே?''’

""ரயில் நிலையம் அரு கில் இருக்கும் பவழவண்ணப் பெருமாள் கோயிலிலும் 40 வருசத்துக்கு ஒரு தடவை, இன்னொரு அத்திவரதர் மேலே வந்து பக்தர்களுக்கு தரிசனம் தருவது வழக்கமாம். அதேபோல் இவரும் ஜூலை 1-ஆம் தேதி தரிசனம் தர மேலே வந்துட்டார். ஆனால், இவர் பிரபலமாகலை. விளம்பரமும் சரியா செய்யலை. அங்கே கூட்டம் கம்மிதான்.''’

Advertisment

""அத்திவரதரை தரிசிக்க வரும்போது பிரதமர் மோடி, சென்னையில் ஒரு பஞ்சாயத்தையும் தீர்த்துவைக்கப் போறாராமே?''’

""உண்மைதாங்க தலைவரே, முதல்வர் எடப்பாடிக்கும் துணை முதல்வர் ஓ.பி.எஸ்.சுக்கும் இடையிலான பவர் யுத்தம் உச்சத்தை எட்டி யிருக்குதாம். டெல்லிக்குப் போன ஓ.பி.எஸ். இது பற்றி புகார் வாசிச்சதை ஏற்கனவே நாம பேசி யிருக்கோம். அந்தப் புகார்களுக்கான பதில்களோட எடப்பாடி சார்பில் அமைச்சர் தங்கமணி டெல்லிபோகப் போறாராம். இதுக்கிடையில் மோடி-அமித்ஷா-நிர்மலா சீதாராமன் மூவரும் அத்திவரதர் தரிசனத்துக்காக வரும்போது எடப்பாடி-ஓ.பி.எஸ். இடையே பஞ்சாயத்து பேசப்போறாங்கன்னும் சொல்லப்படுது.''’

""ஆளும்கட்சிக்குள்ளே ஏகப்பட்ட பஞ்சாயத்து ஓடிக்கிட்டிருக்கே.. அதையெல்லாம் சரி செய்ய முடியுமா?''’

""தமிழக அரசின் 32 வாரியங்களுக்கான பதவிகள் இன்னும் நிரப்பப்படலை. அமைச்சர் பதவிக்கு இணையான இந்தப் பதவிகளைக் குறிவச்சி அ.தி.மு.க.வின் சீனியர்கள் பலரும் காத்துக்கிட்டு இருக்காங்க. இந்த நிலையில், கால்நடைத்துறை அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணனை, தமிழக அரசின் கேபிள் டி.வி. கார்ப்பரேசன் சேர்மனா நியமிச்சிருக்கார் எடப்பாடி. இதைப்பார்த்த சீனியர்கள், கட்சிக்காக கடுமையா உழைச்ச எங்களுக்கு ஒரு பதவி கூட கிடைக்கலை. ஆனா ஏற்கனவே அமைச்சர் பதவியில் இருக்கும் ராதாகிருஷ்ணனுக்கு இன்னொரு பதவியான்னு, எடப்பாடியிடமே வரிஞ்சிக்கட்டி நின்னிருக்காங்க.''’’

""எடப்பாடி, எதுக்காக ராதாகிருஷ்ணனுக்கு கூடுதல் போஸ்டிங் கொடுத்தாராம்?''’’

hh

""ஓ.பி.எஸ். அ.தி.மு.க.வில் மீண்டும் ஐக்கிய மானப்ப, அவருக்கு வலுவான துறைகள் வேணும்னு கேட்டதால், நிதித்துறையோடு, ராதாகிருஷ்ணனிடம் இருந்த வீட்டு வசதித்துறையையும் பிடுங்கிக் கொடுத்தார் எடப்பாடி. கூடிய விரைவில் வளமான துறையைக் கொடுப்பேன்னு ராதாகிருஷ்ணனை அப்போது சமாதானப்படுத்தினாலும், ஒண்ணும் கொடுக்கலை. சமீபத்தில் இதை எடப்பாடியிடம் ஞாபகப்படுத்திய ராதாகிருஷ்ணன், கூவத்தூரில் ஒரே நாள் இரவில் உங்களுக்கு 75 ’சி’யைப் புரட்டிக்கொடுத்தேனே, அதுக்கு கைமாறு இதுதானான்னு சூடா கேட்டாராம். அதனால்தான் அவருக்கு திடுதிப்புன்னு இந்த உபரிப் பதவியாம்.''’

""அமைச்சர்கள் பலவிதம்.. ஒவ்வொருவரும் ஒரு விதம்..''’

""ஆமாங்க தலைவரே, விராலிமலை டெக்னிக்குன்னே அமைச்சர்கள் மத்தியில் ஒரு பேச்சு இருக்குது. அந்தத் தொகுதிக்காரரான சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தன் அன்புப்பிடியில் 35 எம்.எல்.ஏ.க்களை வச்சிருக் காராம். அவங்களுக்கு மாதா மாதம் வெயிட்டா மதிப்பூட்டுத் தொகையை கொடுக்கும் அவர், என் துறையில் எந்த ரெக்கமண்டேசனுக்கும் வராதீங்க. அதுக்காகத்தான் இந்த கவனிப்புன்னு அவங்க ளோட பரிந்துரை நெருக்கடிகள் எதுவும் இல்லாமல் ஹாயாக இருக்காராம். இருப்பினும் எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்கள் கொண்டுவரும் பரிந்துரைகளை மட்டும் அவர் உடனுக்குடன் செய்து கொடுத்துடுறாராம். அதனால் அவர் துறையில் அநாவசியப் பஞ்சாயத்துக்கள் இருப்பதில்லை.''’

""வேலூரில் இடைத்தேர்தல் களம் விறு விறுப்பா போவுதே?''’

""ஆமாங்க தலைவரே, இலைச் சின்னத் தில் நிற்கும் ஏ.சி.சண்முகத்தை டெல்லி உத்தரவுப்படி எப்படியாவது ஜெயிக்கவைச் சாகணும். உண்மையான உழைப்பைக் கொடுங்க. எல்லாச் செலவையும் அவரே பாத்துக்குவார்ன்னு அமைச்சர்களான வேலு மணி, தங்கமணி, வீரமணி ஆகிய மும்மணி களிடமும் வேலூரில் வைத்தே அழுத்தம் கொடுத்துச் சொல்லியிருக்காராம் எடப்பாடி. தி.மு.க. துரைமுருகனுக்கும் அமைச்சர் வீரமணிக்கும் இடையில் நட்பு மின்சாரம் பாய்கிறதாம். அதனால் தி.மு.க. வேட்பாளர் கதிர் ஆனந்த் தெம்பா வளைய வர்றார். அதே சமயம் எல்லாத் தரப்பு வாக்காளர்களிடமும் கரன்ஸி எதிர்பார்ப்பு அதிகமாவே இருக்கு. அதனால் பட்டுவாடாவும் இரு தரப்பி லிருந்தும் கனஜோரா நடக்குது. இதைத் தேர்தல் செலவினப் பார்வையாளரான முர்ளிகுமார் கண்டுக்குறதில்லையாம். இவரைப் பற்றியும் இவர் மீதான புகார்கள் பற்றியும் ஏற்கனவே நக்கீரன் அம்பலப்படுத்தி யிருக்கு. இந்த நிலையில் இதுபோன்ற புகார்களால் இவர் எதிர்பார்த்த தென்மண்டலத்துக்கான வருமான வரித்துறை தீர்ப்பாயத்தின் தலைவர் பதவியை டெல்லி தரமறுத்துடுச்சாம். அதனால் வெக்ஸ் ஆன முர்ளிகுமார், சைலண்ட் குமாரா மாறி எல்லாத்தையும் கைகட்டி வேடிக்கை பார்த்துக்கிட்டு இருக்காராம்.''’

""வருமான வரித்துறையின் பார்வை இப்ப காங்கிரஸ் பக்கம் திரும்பி இருக்குதாமே?''’

""உண்மைதாங்க தலைவரே, காங்கிரஸை பலவீனப்படுத்தும் நோக்கத்தில், சோனியா குடும்பத்தின் மீது வழக்கு, ப.சி. குடும்பத்தின் மீது வழக்குன்னு பரவலா காங்கிரஸ் பிரமுகர்களின் குடும்பத்தினரை ஒரு பக்கம் வழக்குகளால் அதிர வைக்கும் மோடி அரசு, இப்ப ஒவ்வொரு மாநிலத்திலும் இருக்கும் காங்கிரஸ் கட்சியின் டிரஸ்டுகளில் ஏதேனும் சிக்கல்கள் இருக்கிறதான்னு வருமான வரித்துறை யை கவனிக்கச் சொல்லியிருக்குதாம். இதைத் தொடர்ந்து பலநூறு கோடி ரூபாய் சொத்துக் களைக் கொண்டிருக்கும் தமிழக காங்கிரஸ் கட்சி யின் டிரஸ்ட்டையும் தோண்டித் துருவப் போகுதாம் வருமானவரித்துறை. ஏற்கனவே இது தொடர்பாக எழுந்த புகார்களையும் அது சேகரிக்குதாம்..''’

""காங்கிரஸ் தரப்பில் வைகோ மேலே வருத்தம் இருக்குதாமே?''’

""ராஜ்யசபா எம்.பி.யான ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ, சென்னையில் ஸ்டாலினை சந்திச்சது போல, டெல்லியில் சோனியாவையும் ராகுலையும் சந்திப்பார்ங்கிற எதிர்பார்ப்பு காங்கிரஸ் தரப்பில் அதிகரிக்க, மாறாக வைகோ அத்வானி உள்ளிட்ட பா.ஜ.க. தலைவர்களைச் சந்தித்ததோடு, மறைந்த முன்னாள் மத்திய அமைச்சர் ஜார்ஜ் பெர்னாண்டஸின் வீட்டிற்கும் போய் அஞ்சலி செலுத்தினார். 29-ந் தேதி இரவுவரை அவர் காங்கிரஸ் தரப்பில் யாரிடமும் அப்பாயிண்ட்மெண்ட் வாங்கலையாம். அந்த ஆதங்கம்தான் கதர்சட்டைக்காரர்களுக்கு''’

""அரசியலில் ஒவ்வொரு நகர்வும் உற்று கவனிக்கப்படுதுப்பா.. நெல்லை தி.மு.க. முன்னாள் மேயர் உமாமகேஸ்வரி படுகொலை விவகாரத்தில் தி.மு.க. மேலிடத்தைக் குறிவைக்குதாமே போலீஸ்.''’

stalinn

""அப்படித்தான் தெரியுதுங்க தலைவரே. முன்னாள் மேயர் உமாமகேஸ்வரியும் அவர் கணவர் முருகசங்கரனும் பணிப்பெண் மாரியம்மாளும் போன 23-ந் தேதி அவர்கள் வீட்டிலேயே வைத்துக் கொடூரமாகக் கொல்லப் பட்டிருந்தாங்க. இதுதொடர்பாக நமது நக்கீரன் வெளியிட்ட புலனாய்வுச் செய்தியில் பெண் பிரமுகர் ஒருவருக்கு இதில் தொடர்பு இருக்குன்னு குறிப்பிடப்பட்டிருந்தது. தனக்கும் தன் குடும்பத்துக்கும் இந்தக் கொலைகளோடு தொடர்பில்லைன்னு தி.மு.க. பெண் பிரமுகர் சீனியம்மாள் மறுத்துவந்த நிலையில், அவர் மகன் கார்த்திகேயனை கைது செய்திருக்கு போலீஸ். தேர்தலில் சீனியம்மாளுக்கு சீட் வாங்கித் தருவ தாகச் சொல்லி 50 லட்ச ரூபாயைப் பெற்றுக் கொண்ட உமாமகேஸ்வரி, சீட்டை வாங்கித் தராததோடு பணத்தையும் அவருக்குத் திருப்பித் தரலையாம். அந்தக் கோபத்தில் கொலை நடந் திருக்கும்னு விசாரணையின் கோணம் போகுது.''

""நானும் இது சம்பந்தமான கூடுதல் தகவலைச் சொல்றேன். சீட் வாங்கித் தருவதாக கைமாறிய பணம், தி.மு.க. தலைமையிடம் கொடுக்கப்பட்டதான்னு விசாரணையை நகர்த்த போலீசுக்கு மேலிடம் உத்தரவிட்டிருக்காம். அதாவது, தி.மு.க. தலைமையின் நிலைப்பாட் டால்தான் உமாமகேஸ்வரிக்கும் சீனியம்மாளுக் கும் பகைன்னும், அதனால் கொலை வரை போயிருக்காங்கன்னும் விசாரணையைக் கொண்டுபோய், தி.மு.க. தலைவர்ங்கிற முறையில், ஸ்டாலினைக் குறிவச்சி விசாரணையைக் கொண்டுபோய் அவரோட இமேஜை காலி பண்ண எடப்பாடி அரசு திட்டமிட்டிருக்காம்.''’

_______

இறுதிச்சுற்று

பறிகொடுத்தவர் களின் புலம்பல்!

ஜூலை 27-30 தேதியிட்ட நக்கீரன் இதழில் “"அமைச்சருக்கு ஷேர்! ஒன்றரைக் கோடியுடன் சிக்கிய அதிகாரி!' என்ற செய்தியில், திருச்சி மத்திய மண்டல கூட்டுறவு சங்கங்களின் இணைப் பதிவாளர் ரவிச்சந்திரன் அமைச்சர் செல்லூர் ராஜுவுக்கு பணம் கொண்டுபோனது பற்றி எழுதி யிருந்தோம்.

இதழ் வெளியான தினமே, இணைப்பதிவாளர் ரவிசந்திரனை, அந்தப் பணியிலிருந்து விடு வித்துவிட்டு, அதில் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கியின் மேலாண்மை இயக்குநர் உமாமகேஸ்வரியை கூடுதல் பொறுப்பேற்க வைத்தனர். ஏற்கனவே உத்தரவிட்டதுபோல, தூத்துக்குடி இணைப்பதிவாளர் அருளரசுவை திருச்சியில் உடனடி யாக பொறுப்பேற்கவும் அறிவிக்கப் பட்டுள்ளது.

இந்நிலையில், நக்கீரன் செய்தி வெளியானதிலிருந்து ரேசன் கடைகளில் எடையாளர், உதவியாளர் பணிக்காக பணம் கொடுத்தவர்கள், "அமைச்சர், எம்.பி., எம்.எல்.ஏ.க்கள், முக்கியப் பிரமுகர்கள் பரஞ்ஜோதி, சிவபதி போன்றோரிடம் வேலைக்காக பணம் கொடுத்தோமே. ஆர்டர் போடுவார்களா?'’என புலம்பு கின்றனர். "எந்தத் தகுதியும் இல்லாமல் பணம் கொடுப்பவர் களுக்கு அரசு வேலையா?' என்று கொதிப்படைந்த சமூகஆர்வலர்கள் நீதிமன்றத்தில் முறையிட தயாராகி றார்கள். பணம் கொடுத்தவர்களும் "நீதிமன்றம் செல்வோம்' என்கின்ற னர். ஆனால் இது தொடர்பான நீதிமன்ற திருச்சி மாவட்ட கூட்டுறவுத் துறையில் 183 விற்பனையாளர் பணியிடங்களை நிரப்ப தடை ஆணை விலகியதால், திங்களன்று (ஜூலை 29) இரவோடு இரவாக, அமைச்சர் தரப்பு வேகம் காட்டியது. மன்னார்புரத்தில் உள்ள துறையின் இணைப்பதிவாளர் அலுவலகத்திற்கு அதிகாரிகள் அனைவரும் அழைக்கப்பட்டு இணைப் பதிவாளர் ரவிச்சந்திரன் முன்னிலையில் சுறுசுறுப்பாக வேலைகள் நடந்தன.

-ஜெ.டி.ஆர்.

7 பேர் விடுதலை: அமித்ஷாவிடம் மனு!

th

முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி கொலைவழக்கில் 28 ஆண்டு களாக சிறையிலிருந்து வருகிறார்கள் பேரறிவாளன் உள்ளிட்ட 7 பேர். இவர்களது விடுதலையில் ஆளுநர் முடிவெடுக்கலாம் என உச்சநீதி மன்றம் வழிகாட்டிவிட்டது. தமிழக அரசும் எழுவரை விடுதலைசெய்ய ஆளுநருக்கு பரிந்துரைத்து பத்து மாதங்களாகிவிட்டது. இந்நிலையில் பேரறிவாளனின் தாயார் அற்புதம்மாள், விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன், எம்.பி. ரவிக்குமார் ஆகியோர் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷாவை ஜூலை 29-ஆம் தேதி நேரில்சென்று சந்தித்து 7 பேர் விடுதலை விவகாரம் தொடர்பாக கோரிக்கை வைத்தனர். அமித்ஷா, நம்பிக்கை தரும்விதத்தில் அற்புதம்மாளுக்குப் பதிலளித்தார். ஐந்து வருடங்களுக்கு முன் முன்னாள் முதல்வர் ஜெ.வும் அற்புதம்மாளுக்கு நம்பிக்கையளித்தார். இந்த முறை யாவது நம்பிக்கை சிறைக்கதவு களைத் திறக்குமா?

-சுப்பிரமணி