""ஹலோ தலைவரே, உலகம் முழுக்கத் தமிழர்கள் பொங்கல் விழாவையும் தமிழ்ப் புத்தாண்டுத் திருநாளையும் கோலாகலமாகக் கொண்டாடிக்கிட்டிருக்காங்க''

""ஆமாம்பா. கொஞ்சநாளா சரியாகப் பேசமுடியாமல் இருந்த விஜயகாந்த் கூட, பொங்கல் விழாவில் உணர்ச்சிகரமாகப் பேசி தே.மு.தி.க. தொண்டர்களை குஷிப்படுத்தியிருக்காரே?''’

""உண்மைதாங்க தலைவரே, 12-ந் தேதி சென்னை கொரட்டூரில் தே.மு.தி.க. சார்பில் நடத்தப்பட்ட பொங்கல் விழாவில் உற்சாகமாகக் கலந்துக்கிட்ட விஜயகாந்த், "எனக்குப் பிடித்த தெய்வங்கள்னா 5 தெய்வங்கள் இருக்காங்க. அதில் முதலாவது தெய்வம் யாருன்னா.. என்னை வாழவைக்கும் தெய்வங்களான என் தொண்டர்கள்தான்'னு உணர்ச்சிவசப்பட்ட நிலையிலும் தெளிவான குரலில் சொல்ல... அதைக்கேட்டு தே.மு.தி.க. தொண் டர்கள் நெகிழ்ந்து போயிட் டாங்க. கூட்டம் முடிந்ததும் பிரேமலதாவை சந்தித்த தே.மு. தி.க.வின் மாநில நிர்வாகிகள், நிறுத்தி வைக்கப்பட்டிருக்கும் 7 மாவட்ட உள்ளாட்சித் தேர்தலில் முதல்வர் எடப்பாடியிடம் பேசி, நம் கட்சிக்குக் கூடுதல் சீட்டுக் களை வாங்கணும்னு வலியுறுத்தி இருக்காங்க''’

""காங்கிரஸ் தலைமையில் 13 ந் தேதி டெல்லியில் நடந்த எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தில் மேற்கு வங்க முதல்வரான மம்தா கலந்துகொள்ள மறுத்துவிட்டாரே?''’

Advertisment

modi

""உண்மைதாங்க தலைவரே, மோடி அரசின் குடியுரிமை சட்ட திருத்த மசோதா மற்றும் தேசிய குடியுரிமைப் பதிவேடு திட்டத்துக்கு எதிரான போராட்ட வியூகங்களை வகுக்க, காங்கிரஸ் தலைமையில் எதிர்க்கட்சிகளின் ஆலோசனைக் கூட்டத்தை டெல்லியில் கூட்டினார் சோனியா. ஜார்கண்ட் மாநில முதல்வராகப் பொறுப்பேற்ற ஹேமந்த் சோரனின் பதவி ஏற்புவிழாவுக்குப் போன தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கொடுத்த ஆலோசனையின் பேரில்தான் இந்தக் கூட்டம் கூட்டப்பட்டிருக்கு. இது தொடர்பாக சோனியா, மம்தாவைத் தொடர்புகொண்டு அழைத்த போது, பா.ஜ.க.வின் இந்த குடியுரிமை மற்றும் குடிமக்கள் பதிவேட்டுத் திட்டத்தை நாங்கள் கடுமையாக எதிர்க்கிறோம். அதே சமயம், எங்க மாநிலம் சந்தித்துவரும் பிரச்சினைகளுக்கு பா.ஜ.க. எப்படி காரணமாக இருக்கிறதோ, அதேபோல் காங்கிரஸும் அதுக்கு ஒரு காரணமாக இருக்கிறது. அதனால் காங்கிரஸ் தலைமையிலான இந்த ஆலோசனைக் கூட்டத்தில் என்னால் கலந்து கொள்ள இயலாதுன்னு கறார் குரலிலேயே மறுத்துவிட்டாராம் மம்தா''’

""மம்தாவும் மோடியும் ரகசியமான நட்பில் இருக்கிறார்கள்னு காங்கிரஸ் தரப்பில் ஹாட் டாக் இருக்குதே?''’

Advertisment

rr

""எங்களுக்கு எதிரான அரசியலை நீங்கள் முன்னெடுப்பதில் எங்களுக்கு எந்தவிதமான கோபமும் இல்லை. அதேசமயம், காங்கிரஸ் தலைமையில நீங்கள் எங்களை எதிர்க்காதீர்கள்னு மோடியே மம்தாவிடம் நட்பின் அடிப்படையில் வேண்டுகோள் வச்சதாகவும், அதனால்தான் மம்தா இந்த ஆலோசனைக் கூட்டத்தில் கலந்துக்கலைன்னும் சொல்லும் காங்கிரஸ் தரப்பினர், கடந்தவாரம் கொல்கத்தா துறைமுகத்தின் 150-ஆவது ஆண்டுவிழா உள்ளிட்ட நிகழ்ச்சிகளுக்காக இரண்டு நாள் பயணமாக மேற்கு வங்கத்துக்கு மோடி சென்றபோது, அவரை அங்குள்ள கவர்னர் மாளிகையில் மம்தா சந்தித்து 40 நிமிடம் பேசியதையும் சுட்டிக்காட்டு கிறார்கள்''’

""லஞ்ச ஒழிப்புத்துறையின் இயக்குநரான விஜயகுமார் ஐ.பி.எஸ்.ஸை, டிரான்ஸ்பர் செய்யணும்னு கொங்கு மண்டலத்தைச் சேர்ந்த தொழிலதிபர்கள் பலரும் முதல்வர் எடப்பாடிக்கு பிரஷர் கொடுக்கறாங்களாமே?''’

""உள்ளாட்சித்துறை அமைச்சர் வேலுமணிக்கு எதிராகத் தொடரப்பட்ட ஊழல் வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் உன்னிப்பாக கவனித்து வருகிறது. இந்த வழக்கை விசாரித்துவரும் தமிழக விஜிலென் ஸின் இயக்குநரான விஜயகுமார், வழக்கைத் தீவிரமாக நகர்த்திக்கிட்டு இருக்கிறார். அதனால்தான், அமைச்சர் வேலுமணிக்கு நெருக்கமான தொழி லதிபர்கள் தரப்பு, அவரை டிரான்ஸ்பர் செய்ய ணும்னு எடப்பாடிக்கு நெருக்கடி கொடுத்துக்கிட்டு இருக்கு. அவரை விடுப்பில் அனுப்பலாமான்னு அரசு ஆலோசிக்கிது’''

""நெடுஞ்சாலைத்துறைக்கு உட்பட்ட சாலைக் கட்டுமானத்துக்கான திட்ட அதிகாரியான அருண் தம்புராஜ் ஐ.ஏ.எஸ். மீது, அவர் துறையில் இருந்தே காவல்துறைக்குப் புகார் போயிருக்குதாமே?''’rr

""சாலை டெண்டர் ஒன்றில் கலந்துகொண்ட பி.எஸ்.பி.கன்ஸ்ட்ரக்ஷன் என்ற நிறுவனம், தனக்கான அனுபவச் சான்றிதழை ஒரு கர்நாடக நிறுவனத் திடமிருந்து போலியாக வாங்கி சமர்பித்திருக்கிறது. இதைக் கண்டுபிடித்த துறை அதிகாரிகள் சம்பந்தப்பட்ட நிறுவனத்துக்கு விளக்கம் கேட்டு கடிதம் அனுப்பியிருக்கிறார்கள். இந்தக் கடிதம் போடப்பட்டிருந்த அபிராமபுரம் அஞ்ச லகத்தின் தபால் பெட்டி உடைக்கப்பட்டு, அந்தக் கடிதம் எடுக்கப்பட்டிருக்கிறது. இதைத் தொடர்ந்துதான் திட்ட இயக்குநர் அருண் தம்புராஜ் மீது அபிராமபுரம் காவல் நிலையத்தில் புகார் கொடுக்கப்பட்டிருக்கிறதா தகவல் வருது. ஆனா, ஐ.ஏ.எஸ். அதிகாரியோ இந்த விவகாரத்தை மறுக்கிறார்.

""தி.மு.க.வுக்கு உள்ளாட்சித் தேர்தலில் மக்கள் வாக்களித்தும், மறைமுகத் தேர்தலில் சொந்தக் கட்சி கவுன்சிலர்களும், கூட்டணி கவுன்சிலர்களும் ஆங்காங்கே உள்ளடி வேலை பார்த்து கவிழ்த்ததில் மு.க.ஸ்டாலின் அப்செட். குறிப்பா, காங்கிரஸ் மேலே அவருக்கு செமத்தியான கோபமாம். டெல்லித் தலைமைக்கு தி.மு.க. தரப்பிலிருந்து புகார் போயிருக்கு. திங்களன்று சோனியா தலைமையில் நடந்த கூட்டத்தையும் தி.மு.க. புறக்கணித்தது இதனால்தானாம்.