""ஹலோ தலைவரே, கொரோனா விவகாரத்தில் அரசியல் இருக்கக்கூடாதுங்கிறதுதான் எல்லோருடைய விருப்பமும்.''

""நியாயம்தானே.. அனைத்துக்கட்சிக்கூட்டம் கூட தேவையில்லைன்னு முதலமைச்சர் சொல்லிட்டாரே!''

“""கொரோனா விஷயத்தில் எடப்பாடியோட புரோகிராம், பேச்சு, பிரஸ்மீட் எல்லாத்தையும் ப்ளான் பண்ணுறது சுனில் டீம்தான். ஏற்கனவே மு.க.ஸ்டாலினோடு இணைந்திருந்தவர் சுனில். இப்ப எடப்பாடி பக்கம் சேர்ந்து, அவர் தரும் ஐடியாக்கள் மக்களிடம் நல்லா ஒர்க் அவுட் ஆகுறதா உளவுத்துறை ரிப்போர்ட் கொடுத்திருக்குது. முடிந்தவரை முயற்சிகளை மேற்கொள்வோம். அதன்மூலம் மக்களிடம் நல்ல பேர் எடுப் போம்ங்கிறதுதான் சுனில் டீமின் ப்ளானாம். சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கரும், துறை அதிகாரிகளும் தனியா வரிஞ்சிகட்டி நின்ன நிலையில், இவர்களோடு பேரிடர் மேலாண்மைத்துறைப் பொறுப்பையும் வச்சிருக்கும் வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி.உதயகுமாரையும், வருவாய்த்துறை நிர்வாக ஆணையரான முன்னாள் சுகாதாரத் துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் ஐ.ஏ. எஸ்.சையும் முதல்வர் எடப்பாடி களமிறக்கி விட்டிருக்கிறார். முக்கிய மாவட்டங்களில் வீடு வீடாகப் போய், கொரோனா தொற்றுச் சோதனைகளை நடத்தும் வேலைகளும் நடக்க ஆரம்பிச்சிருக்குது.''

ff

Advertisment

""கொரோனா தடுப்பு நடவடிக்கையில் உள்ளாட்சித்துறையின் பங்களிப்பு எப்படி?''

""கிராமப்புறங்களோடு நெருங்கியிருப்பது உள்ளாட்சித்துறை. புதிதாகத் தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கும் ஊரக உள்ளாட்சி அமைப்புகளின் நிர்வாகிகளை இன்னும் ஒருங்கிணைகலைங்கிற புகார், பல பக்கமிருந்தும் முதல்வர் அலுவல கத்துக்குப் போய்க்கிட்டிருக்குதாம். அதை எப்படி மேனேஜ் பண்றதுன்னு ஆலோசனை நடக்குதாம்.’’ எடப்பாடி விறுவிறுத்துக்கிட்டு இருக்காராம்.''

Advertisment

""எதிர்க்கட்சியான தி.மு.க.வின் அறக்கட்ட ளை சார்பில் முதலமைச்சர் நிவாரண நிதிக்கு ஒரு கோடி ரூபாய் கொடுத்த மு.க.ஸ்டாலின், அறிவாலயத்தில் உள்ள கலைஞர் அரங்கத்தை யும் தனிமைப்படுத்தல் வார்டாக பயன் படுத்தலாம்னு சென்னை மாநகராட்சியிடம் கடிதம் மூலம் தெரிவிச்சிருக்காரே?''

""கேரள முதல்வரும் கர்நாடக முதல்வரும் அனைத்துக்கட்சிக் கூட்டத்தைக் கூட்டி அந்தந்த மாநிலங்களில் நடவடிக்கைகளை ஒருங் கிணைச்சி செய்றாங்க. தமிழ்நாட்டில் அதற்கு முதல்வர் ஒப்புக்கொள்ளாத நிலையில், தி.மு.க. சார்பிலான உதவிகளை அரசியல் கண் ணோட்டமில்லாமல் செய்யணும்னு ஸ்டாலின் சொல்லியிருக்காரு. தி.மு.க. எம்.எல்.ஏக்கள் 98 பேரும் ஒரு மாத சம்பளமான தலா 1லட்சத்து 5 ஆயிரத்தை கொடுத்திருக் காங்க. எம்.பிக்கள் தலா 1 லட்சம் கொடுத்திருக்காங்க. அதுபோக தி.மு.க. எம்.பி.க் களும் எம்.எல்.ஏக்களும் தங்கள் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்தும் ஏராளமா நிதி ஒதுக்கியிருக்காங்க. அவரவர் பகுதிகளில் சானிட்டைசர், மாஸ்க் கொடுக்கும் பணிகளும் நடக்குது.''

""கட்சி பிரதிநிதிகளோடு மு.க.ஸ்டாலின் பேசுற வீடியோகூட வெளியானதே?''

ff

‘""வீட்டிலிருந்தபடியே எம்.எல்.ஏ, எம்.பி, மா.செ.க்கள் எல்லாரையும் தொடர்பு கொண்டு அவரவர் நடவடிக்கைகள் பற்றி விசாரிக்கிறாரு. திருப்பூரில் மேற்கு வங்க மாநிலத் தொழி லாளர்கள் தவிக்கிறாங்கன்னு திரிணாமூல் எம்.பி. ஓ பிரையன் ட்வீட் செய்ய உடனே தி.மு.க சார்பில் அவங்களுக்கு உதவி செய்யப்பட்டது. அதுபோல சென்னையில் பீகார் தொழி லாளர்கள் தவிப்பதை லாலு பிரசாத் மகன் தேஜஸ்வி ட்வீட் செய்ய, அவங்களுக்கு தி.மு.க. மா.செ. மா.சுப்ரமணியன் டீம் உதவி செய்தது. இளைஞரணியை உதயநிதி களமிறக்க, தி.மு.க மருத்துவரணி சார்பில் 70 டாக்டர்களை ஆன்லைன் மற்றும் நேரடி உதவிகளுக்கேற்றபடி 10 மண்டலங்களா பிரிச்சி விட்டிருக்காங்க.''

""இந்த நேரத்தில் ஒழுங்கு நடவடிக் கையையும் ஸ்டாலின் மேற்கொண்டிருக்காரே? அனைத்துக் கட்சிக் கூட்டம் கூட்டணும்னு ஸ்டாலின் கோரியபோது, அது தேவை யில்லைன்னு சொன்னதோடு பிரதமரையும் முதல்வரையும் பாரட்டிய தி.மு.க.வின் விவசாய அணி மாநிலச் செயலாளரும் முன்னாள் எம்.பி.யுமான கே.பி.ராமலிங்கத்தை கட்சிப் பொறுப்பிலிருந்து நீக்கிட்டாரு ஸ்டாலின் மதுரையில் ஓய்வா இருக்கும் மு.க.அழகிரி யின் ஆதரவாளரான கே.பி.ராமலிங்கம், அங்கிருந்து வந்த உத்தரவுப்படிதான் பேசியிருக்காருன்னு அறிவாலயத்துக்கு தகவல் வந்ததாம். ரஜினி, பா.ஜ.க.ன்னு டச்சில் இருக்கும் மு.க.அழகிரி, ஜூன்3ல் தனிக் கட்சி ஆரம்பிப்பாருன்னு அரசியல் ஏரியாவில் எதிர்பார்ப்பு இருக்குது.''

""கலைஞர் பிறந்தநாளில் கழகத்தில் கலகமா?''

ff

""காங்கிரசிலும் களேபரம்தாங்க தலைவரே.. மத்தியிலும் பல மாநிலங்களிலும் 6 வருடத்துக்கு மேல ஆட்சியில் இல்லாத காங்கிரசின் நிதித் தேவைகளை மத்திய பிரதேச முதல்வரா இருந்த கமல்நாத்தான் சமாளிச்சிக்கிட்டிருந்தாரு. அங் கேயும் ஆட்சி கவிழ்ந்ததால கொரோனாவைவிட மோசமான பாதிப்பில் இருக்குது காங்கிரஸ் தலைமை.’’

""கொரோனா நேரத்தில் எல்லா இடத்திலும் நிதி நெருக்கடிதானே?''

""நெருக்கடியான நிலை யிலும் லோக்சபா சபாநாயகர் ஓம்பிர்லா, ராஜ்யசபா தலைவ ரான துணை ஜனாதிபதி வெங்கைய்யா நாயுடு, ராஜ்யசபா எதிர்க்கட்சித் தலைவர் குலாம்நபி ஆசாத் உள்ளிட்ட மூத்த தலைவர்கள் பலருக்கும் காஸ்ட்லியான நவீன கார்களை வாங்கச் சொல்லி க்ரீன் சிக்னல் கொடுத்தாராம் மோடி. ஆனா, வெங்கைய்யா நாயுடு, ஓம்பிர்லா உள்ளிட்ட சிலர் இப்ப இருக் கும் நிலையில் எங்களுக்குப் புதிய கார்கள் வேண்டாம்ன்னு சொல்லிட்டாங்களாம்.''

""எனக்கு கிடைச்ச தகவலைப் பகிர்ந்துக்கிறேன். டெல்லியில் முஸ்லிம் அமைப்பு நடத்திய மாநாட்டில் வெளி நாட்டவர் கலந்துக்கிட் டதுபோலவே, போன மாதம் ஜக்கியின் ஈஷா மையம் நடத்திய மகா சிவராத்திரி விழாவில் வெளிநாட்டவர் பலர் கலந்துக்கிட்டாங்க. உலகளவில் கொரோனா பரவுன நேரத்தில் வந்த வெளிநாட்டுக்காரர்கள் சோதிக்கப்ப்டடாங்களான்னு சர்ச்சை உருவாகியிருக்கு.''

____________________

பதைபதைப்பில் ஈரோடு!

பெருந்துறை அரசு மருத்துவ கல்லூரி (கொரோனா சிறப்பு) மருத்துவமனையில் அட்மிட் செய்யப்பட்ட 84 நபர்களில் 20 பேருக்கு வைரஸ் தொற்று உறுதி என அறிவிக்கப்பட்டது. இதில் இரண்டு தாய்லாந்து நபர்கள், 10 பேர் ஈரோட்டைச் சேர்ந்தவர்கள். மேலும் லேடி டாக்டர் உட்பட நான்கு பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

ஈரோட்டில் கொரோனா வைரஸ் பரவுதலுக்கு சம்பந்தப்பட்ட நபர்களின் மூன்று நிகழ்வுகள்.

ஒன்று:

மார்ச் மாத முதல் வாரத்தில் ஈரோடு இஸ்லாமியர்கள் 40 பேர் டெல்லியில் உள்ள மசூதிக்கு சென்று மத நெறிமுறைகள் பயிற்சியில் சில நாட்கள் கலந்து கொண்ட பிறகு ஈரோடு திரும்பினார்கள். அந்த 40 பேரில் 10 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கிறது.

இரண்டு :

மத மார்க்கம், வகுப்பு எடுக்க தாய்லாந்திலிருந்து டெல்லி வந்த இஸ்லாமிய குழுவான தப்லிக் குழுவினர் 7 பேர் டெல்லியிலிருந்து மார்ச் 11ந் தேதி ஈரோடு வந்து கொல்லம்பாளையம் மற்றும் சுல்தான் பேட்டை என இரண்டு மசூதிகளில் தங்கினார்கள். அதில் இரண்டு பேர் திரும்ப தாய்லாந்து செல்ல கோவை விமான நிலையம் சென்ற போதுதான் அவர்கள் பரிசோதனை செய்யப்பட, காய்ச்சல் உறுதியானது. அதில் ஒரு நபர் இறந்து விட்டார். மீதி இருந்த ஒரு நபருடன் ஈரோட்டில் தங்கியிருந்த எஞ்சிய ஐந்து தாய்லாந்து நபர்கள் என 6 பேர் பெருந்துறை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, அதில் இருவருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி என கண்டுபிக்கப்பட்டது. இந்த தாய்லாந்து நபர்களுக்கு உதவி செய்ததாக, வீட்டுக்கு வரவழைத்து சாப்பாடு போட்டது என நெருக்கமான தொடர்பில் இருந்த 84 பேரை பெருந்துறை ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர் அதில் தான் ஈரோட்டைச் சேர்ந்த 8 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டது.

மூன்று :

ஈரோடு ரயில்வே காலனி ரயில்வே நிர்வாக மருத்துவமனையில் டாக்டராக பணிபுரிந்தவர் அந்த லேடி டாக்டர். கோவையிலிருந்த தனது வீட்டிலிருந்து தினமும் ரயில் மூலம் ஈரோடு வந்து சென்றுள்ளார். இவரது பூர்வீகம் கேரளாவின் பாலக்காடு மாவட்டம். சில நாட்களுக்கு முன்பு கேரளா சென்று வந்துள்ளார். அங்கு இவருக்கு ஏற்பட்ட தொற்று இவர் மூலம் இவரது கணவர், குழந்தை மற்றும் வீட்டில் வேலை செய்த பெண் ஒருவர் என நான்கு பேருக்கு வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட் டது. இந்த நால்வரும் தற்போது கோவை அரசு மருத்துவ மனையில் உள்ளார்கள்.

- ஜீவாதங்கவேல்