ராங்கால் தி.மு.க. டார்கெட்! முதல் அஸ்திரத்தில் சிக்கும் அ.தி.மு.க மாஜி!

th

"ஹலோ தலைவரே, முதல்வர் ஸ்டாலின் ஒவ்வொரு நாளும் வெளியிடும் அறிவிப்புகள் மக்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கு. அதிகாரிகளும் ஆச்சரியப்படுறாங்க.''”

"ஆமாப்பா.. கொரோனா நிவாரணத்துக்காக வெளிநாடு வாழ் தமிழர்களிடமும் நிதி கோரி அறிவிப்பு, தடுப்பூசிக்காக தமிழக அரசின் சார்பில் உலகளாவிய டெண்டர்னு எதிர்பாராத அறிவிப்புகளா இருக்கே?''”

t

"ஆமாங்க தலைவரே, பத்தாண்டுகளுக்குப் பிறகு தி.மு.க. ஆட்சி மலர்ந்திருக்கும் நிலையில், தலைமைச் செயலகத்துக்கு அவர் முதன்முறை வந்தபோது, அந்த வளாகத்தில் கலைஞர்-ஸ்டாலின் படங்களை செய்தித்துறை சார்பில் வச்சிருந்தாங்க. அ.தி.மு.க ஆட்சியில் அங்கே ஜெ படம் இருந்தது. முதல்வராக கோட்டைக்கு வந்த ஸ்டாலின், புதிய பேனர்களை எடுக்கச் சொல்லிட்டாரு. இனி அதுமாதிரி பேனர் வைக்கக் கூடாதுன்னும் உத்தரவாம். அதுபோல, கொரோனா கால நிவாரண நிதியாக வழங்கப்படும் ரூ.2000 டோக்கனிலும் முதல்வர் படம் இல்லை. தமிழக அரசு சின்னம் மட்டும்தான்.''”

"மக்களின் மனநிலை உணர்ந்த இந்த செயல்பாடுகள் தொடரணும்.''”

"இன்னொரு விஷயம் சொல்றேன்.. முதல்வர் ஸ்டாலினுக்கு ஸ்பெஷலாக மக்கள் தொடர்பு அலுவலர்களை நியமிக்கும் முயற்சிகள் நடக்குது. தலைமைச் செயலகத்தில் இயங்கும் முதல்வரின் செயலகத்தை கவனிக்க, ஒரு உதவி இயக்குநர் மற்றும் பி.ஆர்.ஓ.க்கள் நியமிக்கப்படுவது வழக்கம். இதற்காக, பிரபுகுமார், ராஜன், ரசூல் ஆகிய மூன்று பேரின் பெயர்களை ஸ்டாலினின் கவனத்துக்கு முதலில் கொண்டு போயி ருக்காங்க. பட்டியலைப் பார்த்த உடனேயே ஸ்டாலின் அதை நிராகரிச் சிட்டாராம். இதற்கிடையே, கடந்த ஆட்சிக்காலத்தில் கோட்டைத் தரப்பில் கோலோச்சிய இயக்குநர் பாஸ்கர பாண்டியனும், கூடுதல் இயக்குநர் சாந்தியும் இந்த

"ஹலோ தலைவரே, முதல்வர் ஸ்டாலின் ஒவ்வொரு நாளும் வெளியிடும் அறிவிப்புகள் மக்களிடம் வரவேற்பைப் பெற்றிருக்கு. அதிகாரிகளும் ஆச்சரியப்படுறாங்க.''”

"ஆமாப்பா.. கொரோனா நிவாரணத்துக்காக வெளிநாடு வாழ் தமிழர்களிடமும் நிதி கோரி அறிவிப்பு, தடுப்பூசிக்காக தமிழக அரசின் சார்பில் உலகளாவிய டெண்டர்னு எதிர்பாராத அறிவிப்புகளா இருக்கே?''”

t

"ஆமாங்க தலைவரே, பத்தாண்டுகளுக்குப் பிறகு தி.மு.க. ஆட்சி மலர்ந்திருக்கும் நிலையில், தலைமைச் செயலகத்துக்கு அவர் முதன்முறை வந்தபோது, அந்த வளாகத்தில் கலைஞர்-ஸ்டாலின் படங்களை செய்தித்துறை சார்பில் வச்சிருந்தாங்க. அ.தி.மு.க ஆட்சியில் அங்கே ஜெ படம் இருந்தது. முதல்வராக கோட்டைக்கு வந்த ஸ்டாலின், புதிய பேனர்களை எடுக்கச் சொல்லிட்டாரு. இனி அதுமாதிரி பேனர் வைக்கக் கூடாதுன்னும் உத்தரவாம். அதுபோல, கொரோனா கால நிவாரண நிதியாக வழங்கப்படும் ரூ.2000 டோக்கனிலும் முதல்வர் படம் இல்லை. தமிழக அரசு சின்னம் மட்டும்தான்.''”

"மக்களின் மனநிலை உணர்ந்த இந்த செயல்பாடுகள் தொடரணும்.''”

"இன்னொரு விஷயம் சொல்றேன்.. முதல்வர் ஸ்டாலினுக்கு ஸ்பெஷலாக மக்கள் தொடர்பு அலுவலர்களை நியமிக்கும் முயற்சிகள் நடக்குது. தலைமைச் செயலகத்தில் இயங்கும் முதல்வரின் செயலகத்தை கவனிக்க, ஒரு உதவி இயக்குநர் மற்றும் பி.ஆர்.ஓ.க்கள் நியமிக்கப்படுவது வழக்கம். இதற்காக, பிரபுகுமார், ராஜன், ரசூல் ஆகிய மூன்று பேரின் பெயர்களை ஸ்டாலினின் கவனத்துக்கு முதலில் கொண்டு போயி ருக்காங்க. பட்டியலைப் பார்த்த உடனேயே ஸ்டாலின் அதை நிராகரிச் சிட்டாராம். இதற்கிடையே, கடந்த ஆட்சிக்காலத்தில் கோட்டைத் தரப்பில் கோலோச்சிய இயக்குநர் பாஸ்கர பாண்டியனும், கூடுதல் இயக்குநர் சாந்தியும் இந்த விவகாரத்தில் மூக்கை நுழைப்ப தால், பி.ஆர்.ஓ.க்கள் விசயத்தில் குழப்ப நிலை ஏற்பட்டிருக்குதாம்.''”

"அ.தி.மு.க. எம்.பி.க்களான கே.பி.முனு சாமியும், வைத்திலிங்கமும் தங்கள் எம்.பி. பதவிகளை ராஜினாமா பண்ணிட்டாங்களே?''”

admk

"ஆமாங்க தலைவரே, மக்கள் பிரதிநிதியாக இருக்கும் ஒருவர், ஒரு பதவியில் மட்டும்தான் தொடர முடியும். அதனால், எம்.எல்.ஏ.க்களாகத் தேர்வான கே.பி.முனுசாமியிடமும் வைத்தியலிங்கத் திடமும் இருந்த எம்.பி. பதவியை, எடப்பாடி ராஜினாமா பண்ணச் சொன்னார். இது பற்றி நாம், சமீபத்தில் விரிவாகவே பேசிக்கிட்டோம். இவங்க எம்.எல்.ஏ. பதவிகளை ராஜினாமா செய்தால், இவர்களின் தொகுதிக்கான இடைத்தேர்தலில் தி.மு.கவுக்கு சாதகமான சூழல் ஏற்படும்னு எடப்பாடி யோசிக்கிறார். அதனால் இருவரும், எம்.எல்.ஏ. பதவியை தக்கவைத்துக் கொண்டு, எம்.பி. பதவிக்கான ராஜினாமா கடிதத்தை ராஜ்ய சபா தலைவர் வெங்கைய்யா நாயுடுவுக்கு அனுப்பிட்டாங்க.''”

"இதனால் ராஜ்ய சபாவில் அ.தி.மு.க.வின் பலம் குறையுமே?''

"உண்மைதாங்க தலை வரே, ராஜ்யசபாவில் 9 எம்.பி.க்களை பெற்றிருந்தது அ.தி.முக. இந்த நிலையில் கடந்த மார்ச் மாதம் அவர்களில் ஒரு ராஜ்யசபா எம்.பி.யான முகமது ஜான் மரணமடைந்துவிட்டார். இதனால் அ.தி.மு.க.வின் பலம் 8 ஆகக் குறைந்தது. இந்த நிலையில், தற்போது கே.பி.முனுசாமியும், வைத்தியலிங்கமும் தங்கள் எம்.பி. பதவிகளை ராஜினாமா செய்திருப்பதால், அ.தி.மு.க.வின் ராஜ்யசபா பலம் 6 ஆகக் குறைந்துவிட்டது. இந்த 3 அ.தி.மு.க. எம்.பி.க்களின் காலியான இடங்களுக்கு, தனித்தனியாகத் தேர்தல் நடத்தப்பட இருக்கிறது. அப்படி நடக்கும் போது 3 எம்.பி. பதவிகளையும் தி.மு.க.வே கைப்பற்றக்கூடிய வாய்ப்பு அவர் களுக்குக் கனிஞ்சிருக்கு.''”

"அ.தி.மு.க. சட்டமன்றத் துணைத் தலைவர் பதவிக்கு பலத்த போட்டி நிலவுதே?''”

"ஆமாங்க தலைவரே, அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் 10 ஆம் தேதி நடந்தப்ப, எதிர்க்கட்சித் தலைவரா ஆகிடணும்னு ஓ.பி.எஸ். பலவகையிலும் முயற்சி செய்தார். அதற்காக முதல் நாளே ஹெவியா டீலிங்கெல்லாம் நடந்தது. ஆனாலும், 66 அ.தி.மு.க. எம்.எல்.ஏ.க்களில் 14 பேர் மட்டும்தான், ஓ.பி.எஸ்.சை ஆதரிச்சாங்க. அதனால் எடப்பாடியிடம் தோல்வியடைந்த ஓ.பிஎஸ்., இன்னும் கோபம் தணியாமத்தான் இருக்காராம். இந்த நிலையில் எதிர்க்கட்சித் துணைத் தலைவர் பதவிக்கு செங்கோட்டையனும், வேலுமணியும் முண்டியடிக்கிறாங்க. அதேபோல் முன்னாள் சபாநாயகரான தனபால், அ.தி.முக. கொறடா பதவியை எதிர்பார்க்கிறாராம். இந்தப் பதவிகளுக்கும் இப்போ கேன்வாசிங்கும் அண்டர் டீலிங்குகளும் பரபரப்பா நடக்குது.''”

senthilbalaji

"தேர்தல் செலவுக்கணக்கை கட்சியின் முக்கிய சீனியர்களிடம் எடப்பாடி காட்டி வருகிறாரே?''”

"அ.தி.மு.க. போட்டியிட்ட ஒவ்வொரு தொகுதிக்கும், 15 சி’யில் இருந்து 20 சி’வரை தேர்தல் செலவுக்குக் கொடுத்ததாக, செலவுக் கணக்கை எழுதிக் காட்டும் எடப்பாடி, அப்படிப் பட்ட தன்னை ஓ.பி.எஸ். எதிர்த்துவருவது பற்றிச் சொல்லி, கட்சி சீனியர்களிடம் ஆதங்கப்படுகிறாராம். இப்படிப்பட்ட நபர்கள் கட்சிக்கே ஆபத்தானவர்கள்னும் எடப்பாடி கவலையோடு சொல்கிறாராம். அதேபோல் தனது தொகுதியில், செலவிடக் கொடுத்த பணத்தில், கட்சிப்புள்ளிகள் சிலர், பல "சி'க்களை அமுக்கியதாகவும், அதில் பெரும்பகுதியை, தேர்தலுக்குப் பின் சேலத்தில் தங்கி, தான் மீட்டுவிட்டதாகவும் எடப்பாடி சொல்கிறாராம். எதிர்கட்சித் தலைவராக இருந்து அதிரடி அரசியலுக்கு எடப்பாடி ரெடியாகற தாகவும், அவர் தரப்பு சொல்லுது.''”

"11-ந் தேதி சட்டசபையில் முதல்வர் ஸ்டாலின் உட்பட அத்தனை உறுப்பினர் களும் எம்.எல்.ஏ.க்களாகப் பதவி ஏத்துக் கிட்டாங்களேப்பா?''”

"ஆமாங்க தலைவரே, முதல்வர் ஸ்டாலின் தன் பெயரை முத்துவேல் கருணாநிதி ஸ்டாலின்னு சொல்லி, ‘உளமார’ உறுதிகூறி பதவி ஏத்துக்கிட்டார். மற்ற தி,மு.க உறுப்பினர்களும் இதுபோலவே உறுதிமொழி ஏற்க, எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி உள்ளிட்ட அ.தி.மு.க. உறுப்பினர்கள் அத்தனை பேரும், ’கடவுளறிய’ என்று சொல்லி பதவிப் பிரமாணம் செய்துக்கிட்டாங்க. அ.தி.மு.க.வைச் சேர்ந்த கே.பி.முனுசாமி மட்டும், அவங்க கட்சிக்காரர் களிடமிருந்து வேறுபட்டு, தி.மு.க.வினர் பாணியில் "உளமார'ன்னு சொல்லி பதவியேற்றார். விடுதலைச் சிறுத்தைகள் கட்சி திருப்போரூர் பாலாஜியோ, "வாழ்க பெரியார்', "வாழ்க அம்பேத்கர்', "வாழ்க கலைஞர்'னு வாழ்த்துச் சொல்லி பதவியேற்றார். கொரோனா தொற்றுக்கு ஆளான அமைச்சர்கள் சிவசங்கர், மதிவேந்தன் ஆகிய ரெண்டுபேரும் அன்று பதவி ஏற்க வரமுடியலை.''”

"ம்...''”

"முதல் நாள் மட்டும் 234 எம்.எல்.ஏ.க்களில் 223 பேர் பதவி ஏத்துக்கிட்டாங்க. இவர்களில் மன்னார்குடி தி.மு.க. எம்.எல்.ஏ.வான டி.ஆர்.பி.ராஜா, "தளிக்கோட்டை ராஜுத்தேவர் பாலுராஜா எனும் நான்''னு, சொல்லிப் பதவி ஏற்க... ஸ்டாலின் உள்ளிட்ட தி.மு.க.வினர் யாரும் ரசிக்கலை. அதேபோல், சட்டப் பேரவைக்குள் எம்.எல்.ஏ.க்கள் ஃபோன்களை எடுத்து வரக்கூடாதுன்னு விதி இருக்கு. கடந்த அ.தி.மு.க ஆட்சியின்போது அதை மீறும் வகையில் ராஜா, மொபைல் போனை பேரவைக்குள் எடுத்துவந்து சர்ச்சையில் சிக்கினார். அதேபோல ஸ்டாலின் தலைமையிலான முதல் பேரவை கூட்டத்துக்கும் அவர் போனுடன் காட்சி தர, அதைப் பலரும் வினோதமாகப் பார்த்தனர்.''”

"ஸ்ரீரங்கம் கோயில் ஜீயர் பதவிக்கு விண்ணப்பம் கோரப்பட்ட விவகாரம் சர்ச்சையாகி இருக்குதே?''”

"ஸ்ரீரங்கம் கோயிலின் 51-வது ஜீயர் பதவியை நியமிக்க, தகுதியான நபர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுவதாக கோயில் நிர்வாகம் அறிவித்திருந்தது. இதற்கு பல தரப்பிலிருந்தும் எதிர்ப்பு கிளம்பியது. குறிப்பாக, முதல்வர் ஸ்டாலினுக்கு இதுபற்றி கடிதம் எழுதிய பா.ஜ.க.வின் ஊடகப்பிரிவுத் தலைவர் பிரசாத், ஸ்ரீரங்கம் ஜீயருக்கு விண்ணப்பம் கேட்டதுபோல், கிறிஸ்தவ மத பிஷப்புகளையும் பாதிரியார்களை யும் நியமிக்க, அரசு விண்ணப்பம் போடச் சொல்லுமா? இது இந்துமத மரபுகளை சீரழிக்க முயல்வதுபோல் இருக்கிறது. மத வழிபாட்டு உரிமைக்கும் இது எதிரானது’ என்றெல்லாம் குறிப்பிட்டிருக்கிறார். இதேபோல் பிராமண சங்கம் உள்ளிட்ட பல்வேறு அமைப்பினரும் இந்த விண்ணப்ப முறைக்கு எதிர்ப்பு தெரிவிக்க, ஸ்டாலின் இது குறித்து, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவிடம் பேசியிருக்கிறார். இதைத் தொடர்ந்து விண்ணப்ப அறிவிப்பு நிறுத்தி வைக்கப்பட்டிருக்கிறது.''”

"நானும் ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். எடப்பாடி ஆட்சியில் மின்துறை அமைச்சராக இருந்த தங்கமணி, பதவியின் கடைசி நாட்களில் வெளிநாட்டில் இருந்து 4 ஆயிரம் டன் நிலக்கரியை இறக்குமதி செய்திருக்கார். அது தரமற்ற நிலக்கரி என்பதைத் தெரிந்துகொண்ட அதிகாரிகள், அதற்கான பேமென்ட்டில் ஒரு பகுதியை நிறுத்தி வச்சிருக்காங்களாம். இதைத் தெரிந்து கொண்ட தற்போதைய மின்துறை அமைச்சரான செந்தில்பாலாஜி, இதை அ.தி.மு.க. தரப்புக்கு எதிரான முதல் அஸ்திரமாகக் கையில் எடுக்கத் தயாராகிவிட்டாராம். தி.மு.கவின் டார்கெட் தொடங்கிவிட்டதுன்னு சொல்றாங்க.''”

nkn150521
இதையும் படியுங்கள்
Subscribe