லோ தலைவரே, "அ.தி.மு.க.வின் மாஸ்க்கை கழற்றினால் பா.ஜ.க. தெரியும்'னு ராகுல் காந்தி பேசியதை கவனிச்சீங்களா?''’

""மார்ச் 28-ந் தேதி சென்னையில் பிரச்சாரம் செய்த ராகுல், அதற்கப்புறம் சேலத்தில் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட தமிழக கூட்டணிக் கட்சித் தலைவர்களோடு ஒரே மேடையில் ஏறி பா.ஜ.க.-அ.தி.மு.க. கூட்டணிக்கு எதிரா பேசியதையும் கவனிச்சேம்ப்பா.''’’

dmk-allaiance

""ஆமாங்க தலைவரே, தமிழ்நாடு தன்மான பூமி. இதை அடிமைகள் ஆள்வது வேடிக்கை. இந்தியாவில் அடிபணிவது, அடிபணிய வைப்பதுன்னு இரண்டு சித்தாந்தங்கள் இருக்கிறது. இங்கே ஆட்சி செய்யும் தமிழக முதல்வர், இந்த மண்ணின் தன்மைக்கு மாறாக மோடி காலிலும் அமித்ஷா காலிலும் விழுந்து அடிபணிகிறார். தமிழகத்தை டெல்லியில் இருப்பவர்கள் ஆட்சி செய்வதை அனுமதிக்கக் கூடாது. இது "சித்தாந்தப் போர்'னு ராகுல் பேசியது பலரையும் கவர்ந்திருக்கு.''’’

Advertisment

""தேர்தல்நேரப் பேச்சுகள் வரவேற்பையும் பெறுது. சர்ச்சையையும் உண்டாக்குதே?''’’

dmk

""உண்மைதாங்க தலைவரே, தொண்டாமுத்தூரில் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய தி.முக.வின் கொள்கை பரப்புச் செயலாளரான திண்டுக்கல் லியோனி, பெண்களின் உடல் அமைப்பைப் பற்றிப் பேசிய பேச்சு சமூக வலைத்தளங்களில் வைரலானது. அந்த சர்ச்சையின் சூடு அடங்கறதுக்குள்ளேயே, ஆயிரம்விளக்கு தொகுதியில் பேசிய தி.மு.க. எம்.பி.யான ஆ.ராசா, அரசியல் வளர்ச்சியில் எடப்பாடியையும் மு.க.ஸ்டாலினையும் ஒப்பிட்டு, "கள்ள உறவில் பிறந்த குறை பிரசவக் குழந்தை'னு சொன்னது பெரிய விவகாரமாயிடிச்சி. ட்விட் டரில் கனிமொழி எம்.பி., ’"யாராக இருந்தாலும் பெண்களை இழிவுபடுத்தி தனிப்பட்ட முறையில் விமர்சனம் செய்வது கண்டிக்கத்தக்கது'ன்னு பதிவிட்டாரு. அதற்கப்புறம் ஆ.ராசா வும் "தன்னோட பேச்சு வெட்டி -ஒட்டப்பட்டிருக்கு'ன்னு விளக்கம் கொடுத்த நிலையில், "பேச்சாளர்களுக்கு கண்ணியம் முக்கியம். கண்ணியமற்ற சொற்களை பேசக்கூடாது'ன்னு ஸ்டாலினும் அறிவுறுத்தி அறிக்கை வெளியிட்டாரு. இதற்கிடையில், அ.தி.மு.க. தரப்பில் தந்த புகாரின் பேரில் ஆ.ராசா மேலே வழக்குப்பதிவு செய்யப்பட்டிருக்கு.''’’

Advertisment

kanimozhi

""தேர்தல் நேரத்தில் இதுபோலப் பேசுவது தேவையற்ற விளைவுகளை ஏற்படுத்துமே?''’’

""உண்மைதாங்க தலைவரே, சென்னையில் பிரச்சாரம் செய்த எடப்பாடி பழனிசாமி, என் தாயை இழிவாகப் பேசுறாங்கனு தழுதழுத்த குரலில் சொன்னாரு. ஆனா இவர் அரியலூரில் பேசுறப்ப, ""மு.க.ஸ்டாலின் எப்ப பாரு, நான் கலைஞரின் மகன்னு சொல்றாரு. அதிலே அவருக்கு என்ன சந்தேகம்''னு கொச்சையா விமர்சிச்சாரு. போன நாடாளுமன்றத் தேர்தலின்போது தி.முக. அணிக்கு ஆதரவு அதிகரிச்ச நிலையில்... தி.க. தலைவர் கி.வீரமணி, எப்போதோ கிருஷ்ணரைப் பற்றி பேசிய பழைய வீடியோவைக் கையில் எடுத்து, இந்துத்துவா அமைப்பினர் தி.மு.க.வுக்கு எதிராகக் கொடி பிடிச்சாங்க. இந்த தேர்தலிலும் தி.மு.க. கூட் டணிக்கு சாதகமான சூழல் இருப்பதா கருத்துக் கணிப்புகள் வெளியாகிற நிலையில், அதை சிதைக்கக் கூடிய அளவுக்கு எதற்கும் இடம் கொடுத்திடக் கூடாதுன்னு தி.மு.க. நினைக்குது. அதனால்தான் "பேச்சில் கவனம் தேவை'ன்னு அறிவுறுத்துது.''’’

""சசிகலாவுக்கு ஆதரவாக ஓ.பி.எஸ். பேச ஆரம்பிச்சிருக்காரே?''’’

""போடியில் போட்டியிடும் ஓ.பி.எஸ்.சிடம், கள நிலவரம் கடுமையா இருக்குன்னு சொல்லப்பட்டி ருக்கு. அது தொடர்பாக அவர் தீவிரமாக தன் ஆதர வாளர்களுடன் ஆலோசனை செய்தபோது, முக்குலத் தோர் ஆதரவு சசிகலா பக்கம் இருப்பதால, தமிழகம் முழுக்கவே நமக்கு பின்னடைவான சூழல்தான் இருக்குதுனு சொல்லியிருக்காங்க. அதனால, தன் தொகுதியிலே முக்குலத்தோர் சமுதாயத்து ஆதரவை எதிர்பார்க்கும் ஓ.பி.எஸ்., ஒரு டி.வி. சேனலுக்கு கொடுத்த பேட்டியில் சசிகலா மீது எங்களுக்கு எந்தக் கோபமும் இல்லை. ஜெ.’மரணத்திலும் அவர் மேலே சந்தேகம் இல்லை. அவர் அ.தி.மு.க.வில் இணைவது, அவரது விருப்பத்தைப் பொறுத்ததுன்னு ஓ.பி.எஸ் சொல்ல... இ.பி.எஸ். தரப்பு ஷாக் ஆயிடிச்சி.''’’

dd

""எடப்பாடி என்ன நினைக்கிறாரு?''

""24-ந் தேதி சேலம் ’சென்னிஸ் கேட்வே’ ஓட்டலில் தங்கியிருந்த ஓ.பி.எஸ்.சை சந்தித்து, "குழம்பாதீங்கண்ணே'ன்னு சமாதானப்படுத்தியிருக்காரு எடப்பாடி. அப்ப, போடி தொகுதி நிலவரத்தை ஓ.பி.எஸ். சொல்ல, "காசை அள்ளிவிடுங்கண்ணே... ஜமாய்ச்சுடலாம். நானும் உங்களைக் கவனிக்கிறேன்'னு சொல்லி விட்டுப் போக, இப்போது ஓட்டுக்கு தலா 6 ஆயிரம் வீதம் போடியில் வினியோகிக்க முடிவெடுத்திருக்கிறாராம் ஓ.பி.எஸ்.''’’

""எடப்பாடி தரப்பும் போலீஸை வச்சி, பெரிய அளவில் கரன்சிப் பாசனத்துக்கு தயாராயிடிச்சே.''’’

""உண்மைதாங்க தலைவரே, எடப்பாடி பெரிதும் நம்புவது கொங்கு மண்டலமான கோவை மண்டலத்தையும் மத்திய மண்டல மான திருச்சி மண்டலத்தையும்தானாம். இந்தப் பகுதிகளை கரன்ஸிப் பாசனத்தால் நல்லபடியா பதப்படுத்திடணும்னு நினைக்கிறாராம் அவர். இதைப் புரிந்துகொண்ட தி.மு.க., தமிழக தேர்தல் கமிஷனிடம் புகார் கொடுக்க, தேர்தல் கமிஷனும் ஆளும் கட்சியினரின் கரன்ஸி விநியோகத்துக்கு ஐ.ஜி. லெவலில் உள்ள அதிகாரி முதல் எஸ்.பி. லெவலில் உள்ள அதிகாரிகள் வரை, உதவிக்கரம் நீட்டறாங்க. அதனால் அவங்களை டிரான்ஸ்பர் செய்ய ணும்னு சொல்லியிருக்கு. ஆனால் எடப்பாடியோ, டெல்லியைத் தொடர்பு கொண்டு, அந்த அதிகாரிகள்தான் நமக்கு ஆபத்பாந்த வன்களாக இருக் காங்க. அவங் களை எக்காரணம் கொண்டும் மாற்றி விட வேண்டாம்னு, வலியுறுத்தறாராம்.''’

""அ.தி.மு.க.வினர் பலரும் தங்களோட பிரச்சாரத்தில் மோடி படம் வேண்டாம், அமித்ஷா படம் வேண்டாம்னு சொல்றாங்களாமே?''’’

""கேஸ் -பெட்ரோல் -டீசல்னு சாமானிய மக்கள்வரை மோடி அரசு பெரும் பாதிப்பை ஏற்படுத்தியிருப்பதால அவர் படத்தையும், பா.ஜ.க. அரசின் சாதனைகளையும் அ.தி.மு.க பிரபலங்கள் தவிர்த்திடுறாங்க. தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள் இது பற்றி டெல்லியிடம் புகார் தெரி விக்க, பா.ஜ.க.தேசியத் தலைவரான ஜே.பி.நட்டா, எடப்பாடியையும், ஓ.பி.எஸ்.சையும் தொடர்பு கொண்டு, எங்கள் தயவு உங்களுக்கு வேண்டாமா? என்று கோபமாகப் பேச, இருவரும் சமாளித்து மழுப்பியிருக்கிறார்கள். அதே நேரத்தில், பா.ஜ.க. தலைவர் முருகன் உள்பட தாமரை சின்னத்தில் போட்டியிடும் தொகுதிகளிலேயே மோடி படத்தையும் பெயரையும் தவிர்க் கிற நிலைமையும் இருக்குது.''’’

""மோடியின் தமிழக விசிட்டின் போது இதெல்லாம் சரியாயிடுமா?''’’

""மார்ச் 30 மற்றும் ஏப்ரல் 2-ந் தேதி மோடி தமிழகத்துக்கு வர்றார். 5 இடங் களில் அவர் மக்க ளிடம் பிரச்சாரம் செய்வதா ப்ளான். இதில் ஒரு கூட் டத்தில் அ.தி.மு.க. கூட்டணியின் தலைவர்கள் அனைவரும் கலந்துக் கணும்னு எடப்பாடி சொல்லிக்கிட்டிருக்கார். பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் கொரோனா நேரத்தை காரணம் காட்டி நான் எப்படி வர்றதுன்னு தயக்கத்தைக் காட்டியிருக்கார். வாசன் ஓகே. சொல்லிட்டாராம். இந்தக் கூட்டணிக் கட்சிகளின் கூட்டத்தை நடத்துவது பற்றி, டெல்லியிடம் எடப்பாடி வேண்டுகோள் வச்சும், 28-ந் தேதிவரை, அங்கிருந்து பாசிட்டிவ் சிக்னல் கிடைக்கலையாம்.''’’

""தமிழக கள நிலவரம் பா.ஜ.க.வை அப்செட்டில் ஆழ்த்தியிருக்குதே?''’’

""ஆமாங்க தலைவரே, மத்திய உள்துறை அமைச்சரான அமித்ஷா, தமிழகத்தில் பா.ஜ.க. போட்டியிடும் 20 தொகுதிகளிலும் தனது துறையினரை வைத்து 2 முறை சர்வே எடுத்தும், உதடு பிதுக்கும்படிதான் முடிவுகள் வந்ததாம். கடைசியாக மூன்றாம் முறையும் சர்வே எடுக்கச் சொல்லியிருக்கிறார். அதில் நடிகர் கமலை எதிர்த்து கோவை தெற்கில் போட்டியிடும் வானதி சீனிவாச னுக்கு மட்டும் முந்தைய சர்வேயை விட கிராஃப் சற்று உயர்ந்திருக்குதாம். இதையொட்டி தமிழகத் தில் 5 தொகுதிகளிலாவது பா.ஜ.க. கரையேறியாக ணும். இல்லைன்னா பெருத்த அவமானமாயிடும். ஆகவே ஆகவேண்டியதைப் பாருங்கன்னு தமிழக பா.ஜ.க. பிரமுகர்களுக்கு டெல்லியில் இருந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்குதாம்.''’’

bb

""பா.ஜ.க. பிரச்சாரத்தில் இருக்கும் நடிகை நமீதாவை, நடிகை குஷ்பு புறக்கணிச்சதா செய்தி வருதேப்பா?''’’

""சென்னை ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிடுகிற குஷ்புக்காக, நானும் பிரச்சாரம் செய்ய வர்றேன்னு சொல்லியிருக்கார் நடிகை நமீதா. குஷ்புவோ, பா.ஜ.க. மாநிலத் தலைவர் முருகனைத் தொடர்புகொண்டு, சீனியர் ஆர்ட்டிஸ்ட்டான எனக்கு நமீதா பிரச்சாரம் செய்யத் தேவையில் லைன்னு கறார் தொனியில் சொல்லிவிட்டாராம். இந்தத் தகவலை நாசுக்காக நமீதாவிடம், பா.ஜ.க. தலைமை சொல்ல... அதற்கு, "ஓகே மச்சான்ஸ்' என்று சுரத்தில்லாமல் சொல்லியிருக்கிறார் நமீதா. இதுதான் இப்ப பா.ஜ.க.வில் ஹாட் டாபிக்.''’’

""“கே.என்.நேரு போட்டியிடும் தொகுதியில் தபால் ஓட்டுக்கு பணம் வாங்கியதா போலீஸ் அதி காரிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்குதே?''

kushboo

""தி.மு.க.வின் சீனியர் தலைவர்களை பா.ஜ.க. குறி வச்சிருப்பது பற்றி நம்ம நக்கீரனில் தொடர்ந்து சொல்லிக்கிட்டுத்தான் இருக்காங்க. கட்சியின் முதன்மைச் செயலாளரான கே.என்.நேருவுக்கு திருச்சி மேற்கு தொகுதியில் பெரியளவில் போட்டியில்லை. இந்த நிலையில்தான், தில்லைநகர் போலீஸ் ஸ்டேஷனிலும், அரசு மருத்துவமனை ஸ்டேஷனிலும் தபால் ஓட்டுக்கான பணத்தை கவரில் போட்டுக்கொண்டு வந்து ஒரு நபர் கொடுத்ததாகவும், அதுபற்றி தகவல் கிடைத்து கமிஷனர் லோகநாதனும் மற்ற அதிகாரிகளும் சோதனை நடத்தியிருக்காங்க. ஓட்டுக்குப் பணம் தொடர்பா இன்ஸ்பெக்டர் சிவகுமார், சப்-இன்ஸ் பெக்டர் பாலாஜி, தலைமைக் காவலர் சுகந்தி, எழுத்தர் பாலாஜி உள்ளிட்ட 6 பேர் சஸ்பெண்ட் செய்யப்பட்டிருக்காங்க. பண விவகாரம் தொடர்பா நேரு மீது நடவடிக்கை எடுக்கணும்னு அ.தி.மு.க வேட்பாளர் பத்மநாபன் புகார் கொடுத்திருக்காரு.''’’

""போலீசுக்கு எதிர்க்கட்சி சைடிலிருந்து பணம் கொடுத்திருப்பது ஆச்சரியமா இருக்கே?''’’

""அதைத்தாங்க தலைவரே போலீஸ் சைடிலும் பேசிக்கிறாங்க. நேருவுக்கு தொகுதி சாதகமா இருப்பதால, தேர்தலை நிறுத்துறதுக்கான ஐடியாவா இந்த பண விவகாரம் கையாளப்படும்னு எதிர்பார்க்கப்படுது. திருச்சியில மட்டு மில்ல, தி.மு.க.வின் முக்கிய நிர்வாகிகள் போட்டியிடும் தொகுதிகளை குறிவச்சி, இதேமாதிரி பணப் பட்டுவாடா பிரச்சினையை கிளப்பி, குறைந்தது 25 தொகுதிகளிலாவது தேர்தலை நிறுத்திட்டா, தி.மு.க. தரப்பு மனரீதியா பலம் இழந்திடும்னும், தி.மு.கவின் மெஜாரிட்டியைத் தடுத்திட முடியும்னும் டெல்லியிலிருந்து ரூட் போட்டுக் கொடுக்கப்பட்டிருக்குதாம். அ.தி.மு.க. ஆதரவு போலீஸ் அதிகாரிகளை வச்சி இதற்கான வேலை நடக்குது. தி.மு.க. சைடில் இதைப் புரிஞ்சிக்கிட்டு, ஆளுந்தரப்பு ஆதரவு போலீசார் ஒவ்வொருவரையும் லிஸ்ட் பண்ணி, தேர்தல் கமிஷன்கிட்ட புகார் கொடுக்கணும்னு காவல்துறை சைடிலிருந்தே சொல்றாங்க.''’’

22

""நானும் சசிகலா தொடர்பான ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். ஓ.பி.எஸ்., சசிக்கு ஆதரவாகப் பேசிய தகவல் அவருக்கு சொல்லப்பட்டதோடு, ஓ.பி.எஸ். விரைவில் உங்களைச் சந்திக்க வரலாம் என்றும் சொல்லப்பட்டிருக்கு. இதைக்கேட்டு டென்ஷனான சசிகலா, நான் துரோகிகளின் முகத்தில் விழிக்க விரும்பலைனு சொல்லிட்டாரம். அதற்கப்புறம் பல மாவட்டங்களில் உள்ள கோவில்களுக்குப் போய் சாமி தரிசனம் பண்ணியிருக்கிறார். அந்த சமயத்தில் டி.டி.வி. தினகரன் சந்திக்க விரும்பிய போதும் நோ சொல்லிட்டாராம்.''’’