ராங் -கால் ஜெ. சொத்துகளை விற்ற தினகரன்? சசி குடும்ப பஞ்சாயத்து! என்.ஐ.ஏ….! மினி பொடா?

dd

"ஹலோ தலைவரே, நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் ஆரம்பித்து வைத்து, கூட்டணிக் கட்சிகளில் தொடங்கி, ராஜ்யசபாவில் கட்சி பேதம் பார்க்காமல் தமிழக எம்.பி.க்கள் தூக்கிய போர்க்கொடியால் இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டும் நடத்திய அஞ்சல்துறைத் தேர்வை மத்திய அரசு ரத்து செய்திருப்பது முதல் கட்ட வெற்றிதானே.''’

""ஆமாம்பா, மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கிற மத்திய அரசிடம் போராடிப் பெற்ற வெற்றிங்கிறது ஒரு பக்கம், தமிழக கட்சிகள் ஒரு பிரச்சினையில் ஒருங்கிணைந்து குரல் கொடுத்து வெற்றி பெற்றிருப்பது இன் னொரு பக்கம்.''’

""சரியா சொன்னீங்க தலைவரே, அஞ்சல்துறை பணியிடங்களுக்கான தேர்வில் மாநில மொழிகளை ரத்து செய்து, இந்தி ஆங்கிலத்தில் மட்டும் கடந்த 14-ந் தேதி நடத்தப்பட்டதற்குத்தான் இத்தனை எதிர்ப்பு. தமிழில் தேர்வு நடத்த மத்திய அரசை வலியுறுத்தணும்னு சட்டசபையில் தி.மு.க. குரல் கொடுத்தது. அதற்கு அமைச்சர் ஜெயக்குமார், இது தொடர்பாக டெல்லி மக்களவையில் நீங்கள் குரல்கொடுங்கள். நாங்கள் மாநிலங்களவையில் குரல் கொடுக்கிறோம்ன்னு சொன்னார். தி.மு.க. வலியுறுத்திய தீர்மானத்தை எடப்பாடி அரசு நிறைவேற்றாததால், அவங்க வெளிநடப்பு செய்தாங்க. அதே நேரத்தில், லோக்சபாவில் தி.மு.க. கூட்டணி எம்.பி.க்கள் பா.ஜ.க. அரசிடம் இது சம் பந்தமா வாதம் பண் ணிக்கிட்டிருந் தாங்க.''

""ராஜ்யசபா வில் அ.தி.மு.க. எண்ணிக்கை அதிகமாச்சே.. அவங்க?''

""தி.மு.க. ஸ்டார்ட் செய்ததும் ராஜ்ய சபாவில் அ.தி.மு.க.வும் தொடர்ந் தது. எப்பவும் எதிரும் புதிருமா இருக்கிற இரண்டு கட்சிகளும் ஒரே குரலில் எதிர்ப்புத் தெரி வித்ததையும், கூட்டணிக் கட்சிகளும் வரிஞ்சி கட்டுறதையும் பார்த்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், நடத்தப்பட்ட அஞ்சலகத் தேர்வை ரத்து செய்வதாக அறிவிச்சதோட, தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளிலும் இனி நடத்தப்படும்ன்னு அறிவிச்சாரு. இது தமிழகத்தின் ஒருமித்த குரலுக்குக் கிடைச்ச வெற்றி.''’

""இப்படி ஒவ்வொரு உரி மைக்காகவும் மத்திய அரசோடு கடுமையா போராட வேண்டிய நிலைமை இருக்கேப்பா?''’

""ஆமாங்க தலைவரே.. மத்திய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ.வுக்கு கூடுதல் அதிகாரம் கொடுக்கும் மசோதா பெரும் விவாதத்தை உருவாக்கியிருக்கு. மாநில காவல்துறையின் கையில் இருந்த ஆள் கடத்தல், கள்ளப் பணம் ஆகிய குற்றங்களை விசாரிக்கும் பொற

"ஹலோ தலைவரே, நாடாளுமன்றத்தில் தி.மு.க. எம்.பி.க்கள் ஆரம்பித்து வைத்து, கூட்டணிக் கட்சிகளில் தொடங்கி, ராஜ்யசபாவில் கட்சி பேதம் பார்க்காமல் தமிழக எம்.பி.க்கள் தூக்கிய போர்க்கொடியால் இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டும் நடத்திய அஞ்சல்துறைத் தேர்வை மத்திய அரசு ரத்து செய்திருப்பது முதல் கட்ட வெற்றிதானே.''’

""ஆமாம்பா, மாநிலங்களின் உரிமைகளைப் பறிக்கிற மத்திய அரசிடம் போராடிப் பெற்ற வெற்றிங்கிறது ஒரு பக்கம், தமிழக கட்சிகள் ஒரு பிரச்சினையில் ஒருங்கிணைந்து குரல் கொடுத்து வெற்றி பெற்றிருப்பது இன் னொரு பக்கம்.''’

""சரியா சொன்னீங்க தலைவரே, அஞ்சல்துறை பணியிடங்களுக்கான தேர்வில் மாநில மொழிகளை ரத்து செய்து, இந்தி ஆங்கிலத்தில் மட்டும் கடந்த 14-ந் தேதி நடத்தப்பட்டதற்குத்தான் இத்தனை எதிர்ப்பு. தமிழில் தேர்வு நடத்த மத்திய அரசை வலியுறுத்தணும்னு சட்டசபையில் தி.மு.க. குரல் கொடுத்தது. அதற்கு அமைச்சர் ஜெயக்குமார், இது தொடர்பாக டெல்லி மக்களவையில் நீங்கள் குரல்கொடுங்கள். நாங்கள் மாநிலங்களவையில் குரல் கொடுக்கிறோம்ன்னு சொன்னார். தி.மு.க. வலியுறுத்திய தீர்மானத்தை எடப்பாடி அரசு நிறைவேற்றாததால், அவங்க வெளிநடப்பு செய்தாங்க. அதே நேரத்தில், லோக்சபாவில் தி.மு.க. கூட்டணி எம்.பி.க்கள் பா.ஜ.க. அரசிடம் இது சம் பந்தமா வாதம் பண் ணிக்கிட்டிருந் தாங்க.''

""ராஜ்யசபா வில் அ.தி.மு.க. எண்ணிக்கை அதிகமாச்சே.. அவங்க?''

""தி.மு.க. ஸ்டார்ட் செய்ததும் ராஜ்ய சபாவில் அ.தி.மு.க.வும் தொடர்ந் தது. எப்பவும் எதிரும் புதிருமா இருக்கிற இரண்டு கட்சிகளும் ஒரே குரலில் எதிர்ப்புத் தெரி வித்ததையும், கூட்டணிக் கட்சிகளும் வரிஞ்சி கட்டுறதையும் பார்த்த மத்திய அமைச்சர் ரவிசங்கர் பிரசாத், நடத்தப்பட்ட அஞ்சலகத் தேர்வை ரத்து செய்வதாக அறிவிச்சதோட, தமிழ் உள்ளிட்ட அனைத்து மாநில மொழிகளிலும் இனி நடத்தப்படும்ன்னு அறிவிச்சாரு. இது தமிழகத்தின் ஒருமித்த குரலுக்குக் கிடைச்ச வெற்றி.''’

""இப்படி ஒவ்வொரு உரி மைக்காகவும் மத்திய அரசோடு கடுமையா போராட வேண்டிய நிலைமை இருக்கேப்பா?''’

""ஆமாங்க தலைவரே.. மத்திய புலனாய்வு அமைப்பான என்.ஐ.ஏ.வுக்கு கூடுதல் அதிகாரம் கொடுக்கும் மசோதா பெரும் விவாதத்தை உருவாக்கியிருக்கு. மாநில காவல்துறையின் கையில் இருந்த ஆள் கடத்தல், கள்ளப் பணம் ஆகிய குற்றங்களை விசாரிக்கும் பொறுப்பை, என்.ஐ.ஏ.விடம் கொடுத்திருக்கு மத்திய அரசு. இப்பவே, பா.ஜ.க. அரசுக்கு எதிரா யார்கிட்டே யிருந்து கருத்து வெளிப்பட்டா லும் அவங்களை தீவிரவாதியா, ஆன்ட்டி இந்தியனா முத்திரை குத்தி குற்றவாளியாக்குற சூழலில், என்.ஐ.ஏ.விடம் கூடுதல் அதி காரத்தைக் கொடுத்தால், எந்த கேள்வியும் இல்லாமல், வகை தொகையில்லாமல் கைது நடவடிக்கை இருக்கும். இது ஒரு மினி பொடாவைப் போல ஆகிடும்னு ஜனநாயகவாதிகள் எச்சரிக்கிறாங்க.''

""அதெல்லாம் மத்திய அரசின் காதில் விழணுமே?''

""பொதுவா, என்.ஐ.ஏ.வின் செயல்பாடுகள் முஸ்லிம்களை குறி வைக்குதுங்கிற விமர்சனம் இருக்குது. மக்களவையில் இது பற்றி தி.மு.க. எம்.பி. ஆ.ராசா பேசுறப்ப, இந்தியாவில் இதுவரை அமல்படுத்தப் பட்டுள்ள கிரிமினல் சட்டங்கள் அனைத்துமே மதச்சார்பற்ற சட்டங்களாகத்தான் இருந்துள் ளன என்பதை வலியுறுத்தினாரு. ஆனாலும், மசோதாவை தி.மு.க. எதிர்த்து வாக்களிக்கலைன்னு சர்ச்சை உண்டாகியிருக்கு. தி.மு.க. தரப்பிலோ, இது ஐ.மு. கூட்டணி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட தேசப்பாதுகாப்பு சட்டம். அதில் இப்போது செய்யப்பட்டுள்ள நான்கு திருத் தங்கள் சிறுபான்மையின ருக்கோ, மாநில உரிமை களுக்கோ எதிரானதல்ல என்பதை உறுதிப்படுத்தவும் எந்தவிதத்திலும் இந்த சட்டத்தை அத்துமீறலாக பயன்படுத்தக்கூடாது என்பதை யும் வலியுறுத்தியிருப்பதால் எங்களைப் பற்றி தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என்கின்றனர்.''’

""தேசத்தைப் பாதுகாக் கிற அளவில் என்.ஐ.ஏ.வின் நடவடிக்கைகள் எப்படி இருக்குது?''’

""அன்சுருல்லா’ என்ற தீவிரவாத அமைப்பைக் கண்டறிந்ததோடு, இலங்கை குண்டுவெடிப்பு விவகாரத்தில், இந்திய நபர்களின் தொடர்பு களைத் தோண்டித் துருவி, தமிழ்நாடு கேரளான்னு பல ரெய்டுகளை நடத்தி, கைது நடவடிக்கையை மேற்கொண் டது. இப்படி பெரியளவில் நெட்வொர்க்கோடு இயங்கி னாலும், தஞ்சை மாவட்டம் திருபுவனம் பா.ம.க. பிரமுகரும் இந்துத்வாவாதியுமான ராமலிங்கம் கொலை வழக்கு விசாரணையில் என்.ஐ.ஏ.வின் வேகம், நம்ம உள்ளூரு போலீஸைவிட மோசமா இருக்குன்னு சொல்றாங்க. ராமலிங்கத்தை கொலை செய்த உண்மைக் குற்றவாளிகளின் தடயத்தைக் கூட என்.ஐ.ஏ.வால் இன்னும் கண்டுபிடிக்க முடி யலைன்னு டிபார்ட்மெண்ட்டில் உள்ளவங்களே சொல்றாங்க. இப்படிப்பட்ட நிலையில், என்.ஐ.ஏ.வுக்கு கூடுதல் அதிகாரம் கொடுத்த உள்துறை அமைச்சர் அமித்ஷாவின் செயல்பாட்டில் உள்நோக்கம் இருக்குமோங்கிற சந்தேகம் பல தரப்புக்கும் இருக்குது.''’

""அரசியல் ஏரியாவில் என்ன ஹாட் நியூஸ்?''’

""சசிகலாவை சந்திச்சி, தேர்தல் செலவு கணக்கை தினகரன் கொடுத்தது பற்றி ஏற்கனவே நாம பேசியிருந்தோம். அந்த கணக்குக் குறிப்பில் அவர், மயிலாடுதுறை அ.ம.மு.க. வேட்பாளர் செந்தமிழனுக்கு 17 "சி' கொடுத்தேன். அதில் அவர் முழுசா 10 ‘சி’யை விழுங்கிட் டார். தேர்தல் முடிஞ்சதும் அதில் அவர் பங்களா, காரெல் லாம் வாங்கியிருக்கார். இதேபோல் தஞ்சை வேட்பாளரும் தன் பங்கிற்கு விளையாடிட்டாரு. இப்படி பலரும் தேர்தலை வச்சி தேற்றிவிட்டார்கள்ன்னு புகார் சொல்லியிருக்காராம். இதைத் தொடர்ந்து அப்படிப் பட்டவர்களிடம் கொடுத்ததை எல்லாம் வசூலிக்க குடவாசல் ராஜேந்திரன் மூலம் பஞ்சாயத்தும் நடக்குதாம். இந்த நிலையில் தஞ்சைப் பகுதியில் இருந்து சசிகலாவுக்கு நெருக்கமான சிலர், ஜெ.’ காலத்தில் அவர் பணத்தில், எங்க பேரில் ஏகப்பட்ட நிலத்தை வாங்கிப்போட்டீங்க. அந்த நிலத்தில் சில ஏக்கரைத் தேர்தல் செலவுக்குன்னு தினகரன் வித்து எடுத்துக்கிட் டார். எங்களால் தடுக்க முடியலை. என்ன இருந்தாலும் அது ஜெ.வின் சொத்துதானேன்னு புகார் கடிதம் எழுதியிருக்காங்களாம். இது சம்பந்தமா தினகரனிடமும் கேள்வி எழுப்பப்பட்டிருக்குதாம். சசிகலா குடும்பத்தில் இப்ப இதுதான் பெரிய பஞ்சாயத்து.''’

ss

""உள்ளுக்குள்ளே ஆயிரம் பஞ்சாயத்து நடந்தாலும், எந்த ஃபீலிங்கையும் வெளியில காட்டிக்காம, அ.ம.மு.க.வை அழிக்க உளவுத்துறை சதி செய்யுதுன்னு சொன்னபடி டூர் போய்க்கிட்டிருக்காரே தினகரன்?''’

""உண்மைதாங்க தலைவரே, தேர்தல் படுதோல்வி யால் இத்தனை நாளா வீட்டுக்குள்ளேயே முடங்கிக் கிடந்த தினகரன், அண்மையில் தர்மபுரிக்குப் போயிருக்கார். அங்க நடந்த கட்சி ஊழியர்கள் கூட்டத்தில் பேசுறப்ப, நான் நம் கட்சியில் இருந்தவர்களுக்கு டெஸ்ட் வச்சேன். நெருக்கடி நேரத்தில் யார் யார் நம் கூடவே இருக்காங்கன்னு பார்த்தேன். அதில் வயசானவங்க எல்லாம் நம்மை விட்டுட்டு ஓடிப் போயிட்டாங்க. கட்சி மீது அக்கறை கொண்டவர்களும் இளைஞர்களும்தான் இப்போது இருக்கிறார்கள். நம்பியவர்களைக் கைவிடமாட்டேன். இன்னும் சில வருடங்களில் நாம் ஆட்சியைப் பிடிப் போம்னு நம்பிக்கை யோடு சொல்லியிருக் கார். அதோட மறு படியும் தமிழகம் முழுக்க டூர் அடிச்சி கட்சியை பலப்படுத்தப் போறாராம்.''’

""சட்டமன்றக் கூட்டத்தொடரில் அ.தி.மு.க.வும் தி.மு.க.வும் ரொம்ப ஒத்துழைப்பா இருந்த மாதிரி, அமைதி நிலவியதே?''’’

""வெளிநடப்பு வெளியேற்றம் இதெல்லாம் குறைவுங்கிறதால அப்படித் தெரிந்தது. காரசாரமான விவாதங்கள் நடந்தன. ஒரு சில சமயங்களில் பரபரப்பும் உண்டாச்சி. போக்குவரத்துத் துறை மானியக் கோரிக்கையில் பேசிய துறை அமைச்சரான விஜயபாஸ்கர், ஜெ.வை உயர்வாகவும், கலைஞரைத் தாழ்வாகவும் பேச, தி.மு.க. உறுப்பினர்கள் இதைக் கடுமையாக ஆட்சேபிச்சாங்க. மதுராந்தகம் தி.மு.க. எம்.எல்.ஏ. புகழேந்தி, பதிலுக்கு அமைச்சரை கடுமையா விமர்சிக்க, அமைச்சரும் பேச, இதைப் பார்த்த ஆளும்கட்சி எம்.எல்.ஏ.வான தி.நகர் சத்யா, புகழேந்தியை ஒருமையில் திட்டி அவரை நோக்கிப் பாய்ந்தார். இதைப் பார்த்த தி.மு.க. உறுப்பினரான சேகர்பாபுவும் சத்யாவை ஒருமையில் விளித்து, என்னோடு மோதுங்கிற மாதிரி கூப்பிட்டார். இதனால் கலவரச் சூழல் ஏற்பட்டுச்சு. எல்லோரும் பதட்டமாயிட்டாங்க. அப்ப சபாநாயகரும் அமைச்சர்கள் சிலரும் தலையிட்டு தி.நகர் சத்யாவை அமைதியா உட்காரவச்சிட் டாங்க..''’

""காஞ்சிபுரம் அத்திவரதர் தரி சனத்தில் புதுப்புது வி.ஐ.பி.க்களின் தரிசனத்தை பொதுமக்கள் பார்க்க முடியுதே?''’

dd

""மதுரையைச் சேர்ந்த வரிச்சூர் செல்வம், கெத்தா வி.ஐ.பி. வரிசையில் வந்து சாமி கும்பிட்டுட்டுப் போனார். தி.மு.க. ஆட்கள் மூலமா அவர் வந்துட்டாருன்னு அரசாங்கத் தரப்பில் சொல்லப்பட்டது. ஆளுங்கட்சியா அ.தி.மு.க. இருக்கிற நிலையில், யார் தயவில் வேண்டுமானாலும் வி.ஐ.பி.யாயிடலாமா இதுதான் நிர்வாகமான்னு கேள்வி வந்தது. அப்புறம், வரிச்சூர் செல்வத்தை லோக்கல் அ.தி.மு.க.வினர்தான் அழைச்சிச்சிட்டு வந்தாங்கன்னு போலீஸ் தரப்பிலிருந்து தகவல் கிடைச்சுது. எல்லாத்தையும் விசாரிக்கும்படி கலெக்டர் சொல்லியிருக்காரு. இதைப் பயன் படுத்திக்கிட்டு, ஏற்கனவே காஞ்சி சங்கர மடம் நிர்வாகத்தின் மேலே கடுப்பில் இருக்கிற ஆடிட்டர் குருமூர்த்தி, இதே வரதராஜப் பெருமாள் கோவிலில் கொலையில் மடம் அசிங்கப்பட்டது போதாதா? யார் யாரோ வி.ஐ.பி.ன்னு தரிசனம் பண்ண அனுமதிச்சா என்ன அர்த்தம்னு கோபத்தைக் காட்டியிருக்காராம்..''’

""ம்…''’

dd

""தலைவரே.. முன்னாள் தலைமைச் செயலாளர் கிரிஜா வைத்தியநாதன், இப்பவும் தலைமைச் செயலகத்தில் தன் அதிகாரக் கொடியைப் பறக்கவிடறார்னு ஏற்கனவே பேசியிருக்கோம். வீட்டு வசதித்துறை செயலாளரா இருந்த கிருஷ்ணனை நிதித்துறைச் செயலாளரா உட்காரவச்சதும் அவர்தான். கோட்டையில் இருக்கும் பிராமண ஐ.ஏ.எஸ். அதிகாரிகளை ஒருங்கிணைச்சி, அவர்கள் மூலம் இந்துத்துவா பிரமுகர்களுக்கும் ஆன்மிக மடங்களுக்கும் தேவையான உதவிகளை விறுவிறுப்பா செய்து கொண்டிருப்பவரும் அவர்தான்னு அங்க இருக்கும் அதிகாரிகள் முணுமுணுக்கறாங்க.''’

""நானும் ஒரு முக்கியமான தகவலைச் சொல்றேன். தி.மு.க. தொடர்ந்த வழக்கின் அடிப்படையில், உள்ளாட்சித் தேர்தலை நடத்தும்படி தமிழக அரசுக்கு உயர்நீதி மன்றம் தொடர்ந்து நெருக்கடி கொடுத்து வந்த நிலையில், இனி காலக்கெடு இல்லையென்று அது அறிவித்தது. இதைத் தொடர்ந்து அக்டோபர் இறுதி வாரத்தில் உள்ளாட்சித் தேர்தலுக்கான அறிவிப்பாணை வெளியிடப் படும்ன்னு நீதிமன்றத்தில் மாநில தேர்தல் ஆணையம் உறுதிகொடுத்திருக்கு. அதனால தமிழக அரசியல் கட்சிகள் அனைத்திற்கும் இப்போதே தேர்தல் காய்ச்சல் ஆரம்பித்து விட்டது.''’

___________

இறுதிச்சுற்று

தரிசிக்க வந்த 4 பேர் பலி!

athi

காஞ்சிபுரம் வரதராஜப் பெருமாள் கோவிலில் நாற்பதாண்டுகளுக்கு ஒருமுறை அத்திவரதர் தரிசனம் தருவார். இம்முறை செமத்தியான கூட்டம். போலீசுடன் ஏற்பட்ட பிரச்சினை, வெளியூர் அர்ச்சகர்களுடன் வாக்குவாதம் போன்றவற்றால் சில மணி நேரத்திற்கு அத்திவரதருக்கான பூசையைக் கூட மறுத்துவிட்டது லோக்கல் அர்ச்சகர் தரப்பு.

ஜூலை 18 ஆம் தேதி திருவோண நட்சத்திர நாள் என்பதால், கத்தரிப்பூ பட்டாடையில் காட்சிதந்த அத்திவரதரை தரிசிக்க காலைமுதலே நீண்ட வரிசையில் கூட்டம் சேர்ந்தது. கிட்டத்தட்ட 2 லட்சம் பக்தர்கள் திரண்ட நிலையில் காவல்துறையாலும் கூட்டத்தை ஓரளவுக்குமேல் கட்டுப்படுத்த முடிய வில்லை. வரதரை தரிசிக்கும் ஆர்வத்தில் பக்தர்கள் முண்டியடித்ததால், கூட்டநெரிசலில் சிக்கி சென்னை யைச் சேர்ந்த நாராயணி, நடராஜன், சேலத்தைச் சேர்ந்த ஆனந்தவேல், ஆந்திராவைச் சேர்ந்த கங்காலட்சுமி ஆகியோர் மூச்சுத்திணறல் ஏற்பட்டு பலியாகினர். கூட்ட நெரிசலில் சிக்கி 31 பேர் மயக்க மடைந்தனர். 4 பேருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட் டது. சட்டமன்றம் வரை இதுபற்றி கேள்வி எழுப்பப்பட, ""ஏற்கனவே உடல்நல பாதிப்பில் இருந்தவர்கள்தான் இறந்து போயுள்ளனர்'' என பதில் சொன்ன முதல்வர், பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கான நிவாரணத் தொகையையும் அறிவித்தார்.

-அரவிந்த்

nkn230719
இதையும் படியுங்கள்
Subscribe