Advertisment

ராங்-கால் : அமித்ஷா பஞ்சாயத்து! டி.ஜி.பி. ரேஸில் ஐ.பி.எஸ். வேகம்!

rangcall

"ஹலோ தலைவரே, அமித்ஷாவின் வருகை, தங்களுக்குப் புத்துணர்வைக் கொடுத்திருக்குன்னு தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள் உற்சாகமா சொல்லிக்கிட்டு இருக்காங்க''’

Advertisment

""ஆமாம்ப்பா, அதுக்காகத்தானே அமித்ஷா இங்கே வந்தார். வந்த இடத்தில் பஞ்சாயத்தெல்லாம் நடந்திருக்கே?''’

Advertisment

amitsha

""உண்மைதாங்க தலைவரே, தமிழக பா.ஜ.க.வின் தற்போதைய நிலையைப் பல்ஸ் பார்க்கவும், கட்சியைத் தேர்தலுக்கு ஆயத்தப்படுத்தவும், கொடுக்கப்பட்ட உறுப்பினர் சேர்ப்பு அசைன்மெண்ட் எந்த அளவுக்கு இருக்குன்னு தெரிஞ்சிக்கவும்தான் அமித்ஷா தமிழகம் வந்தார். இதுபத்தி ஏற்கனவே நாம பேசியிருக்கோம். அதுபோலவே தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளிடம் பல்வேறு ஆலோசனைகளையும், கட்சி தொடர்பான ஆய்வுகளையும் அமித்ஷா நடத்தினார். அப்ப உட்கட்சி விவகாரங்கள் பத்தின புகார் பட்டியல் அமித்ஷாவிடம் சொல்லப்பட்டிருக்கு''’

""அந்தப் பட்டியல்லதான் பொன்னாரும் தமிழிசையும் வர்றாங்களா?''

dgp

""ஆமாங்க தலைவரே, அண்மைக்காலமா தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசைக்கும் மத்திய அமைச்சர் பொன்னாருக்கும் இடையில் ஏழாம்பொருத்தமா இருக்கு. ஈகோவால் இவங்க மத்தியில் நடந்த உரசல் விவகாரமெல்லாம் அமித்ஷவின் கவனத்துக்குக் கொண்டுபோகப்பட்டது. குறிப்பா 7-ந் தேதி அன்னைக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவரான ரெட்டைமலை சீனிவாசனின் 159 ஆவது பிறந்தநாள் விழாவின் போது, கிண்டியில் உள்ள அவரது மணிமண்டபத்துக்கு மரியாதை செலுத்தப்போன மத்திய இணையமைச்சர் பொன்னார், மாநிலத் தலைவரான தமிழிசை வரவுக்குக் காத்திருக்காமல் ரெட்டைமலை சீனிவாசன் சிலைக்கு மாலை அணிவிச்சார். தாமதமாக வந்த தமிழிசை, பொன்னாரின் செயலால் கோபமாகி அவர்கிட்ட பேசாம கிளம்பிப் போய்விட்டார். இதுவெல்லாம் அமித்ஷாவின் பஞ்சாயத்துக்குக் கொண்டுபோகப்பட்டிருக்கு. இதையெல்லாம் கவனமாகக் கேட்டுக்கிட்ட அமித்ஷா, இவங்க பிரச்சினையை அப்படியே பெண்டிங்ல வச்சிட்ட

"ஹலோ தலைவரே, அமித்ஷாவின் வருகை, தங்களுக்குப் புத்துணர்வைக் கொடுத்திருக்குன்னு தமிழக பா.ஜ.க. நிர்வாகிகள் உற்சாகமா சொல்லிக்கிட்டு இருக்காங்க''’

Advertisment

""ஆமாம்ப்பா, அதுக்காகத்தானே அமித்ஷா இங்கே வந்தார். வந்த இடத்தில் பஞ்சாயத்தெல்லாம் நடந்திருக்கே?''’

Advertisment

amitsha

""உண்மைதாங்க தலைவரே, தமிழக பா.ஜ.க.வின் தற்போதைய நிலையைப் பல்ஸ் பார்க்கவும், கட்சியைத் தேர்தலுக்கு ஆயத்தப்படுத்தவும், கொடுக்கப்பட்ட உறுப்பினர் சேர்ப்பு அசைன்மெண்ட் எந்த அளவுக்கு இருக்குன்னு தெரிஞ்சிக்கவும்தான் அமித்ஷா தமிழகம் வந்தார். இதுபத்தி ஏற்கனவே நாம பேசியிருக்கோம். அதுபோலவே தமிழக பா.ஜ.க. நிர்வாகிகளிடம் பல்வேறு ஆலோசனைகளையும், கட்சி தொடர்பான ஆய்வுகளையும் அமித்ஷா நடத்தினார். அப்ப உட்கட்சி விவகாரங்கள் பத்தின புகார் பட்டியல் அமித்ஷாவிடம் சொல்லப்பட்டிருக்கு''’

""அந்தப் பட்டியல்லதான் பொன்னாரும் தமிழிசையும் வர்றாங்களா?''

dgp

""ஆமாங்க தலைவரே, அண்மைக்காலமா தமிழக பா.ஜ.க. தலைவர் தமிழிசைக்கும் மத்திய அமைச்சர் பொன்னாருக்கும் இடையில் ஏழாம்பொருத்தமா இருக்கு. ஈகோவால் இவங்க மத்தியில் நடந்த உரசல் விவகாரமெல்லாம் அமித்ஷவின் கவனத்துக்குக் கொண்டுபோகப்பட்டது. குறிப்பா 7-ந் தேதி அன்னைக்கி ஒடுக்கப்பட்ட மக்களின் தலைவரான ரெட்டைமலை சீனிவாசனின் 159 ஆவது பிறந்தநாள் விழாவின் போது, கிண்டியில் உள்ள அவரது மணிமண்டபத்துக்கு மரியாதை செலுத்தப்போன மத்திய இணையமைச்சர் பொன்னார், மாநிலத் தலைவரான தமிழிசை வரவுக்குக் காத்திருக்காமல் ரெட்டைமலை சீனிவாசன் சிலைக்கு மாலை அணிவிச்சார். தாமதமாக வந்த தமிழிசை, பொன்னாரின் செயலால் கோபமாகி அவர்கிட்ட பேசாம கிளம்பிப் போய்விட்டார். இதுவெல்லாம் அமித்ஷாவின் பஞ்சாயத்துக்குக் கொண்டுபோகப்பட்டிருக்கு. இதையெல்லாம் கவனமாகக் கேட்டுக்கிட்ட அமித்ஷா, இவங்க பிரச்சினையை அப்படியே பெண்டிங்ல வச்சிட்டு பிளைட் ஏறிட்டாரு''’

""Go Back Modi-ங்கிற மாதிரி, ஏர் Go Back Amitsha-னு சமூக வலைத்தளத்தில் வேற ட்ரெண்ட் பண்ணிவிட்டுட்டாங்களே...! சரிப்பா, ஜெ.வால் பெண்டிங்கில் போடப்பட்டிருந்த ’வன்னியர் நல வாரியம்’ தொடர்பான சட்டம், இந்த கூட்டத்தொடரில் நிறைவேற்றப்பட்டிருக்கே?''’

""ஆமாங்க தலைவரே, பல்வேறு காரணங்களால், வன்னியர் நல வாரியத்தை கிடப்பிலேயே போட்டுவச்சிருந்தார் ஜெ’. அந்த சமூகத்தைச் சேர்ந்தவரான சட்ட அமைச்சர் சி.வி.சண்முகம், இதில் அதிக அக்கறை எடுத்துக்கிட்டு, முதல்வர் எடப்பாடியிடம் இது தொடர்பாக 6 முறை பேச்சுவார்த்தை நடத்தி, வாரியம் தொடர்பான சட்டத்தை நிறைவேற்ற வச்சிருக்கார். வன்னியர் அறக்கட்டளைக்கான சொத்துக்களையும் இந்த வாரியம் கவனிக்க இருப்பதால், அதற்கு ஜனாதிபதியின் ஒப்புதலையும் பெற்றாகவேண்டுமாம். அதனால் மாநில அரசின் சட்டத்துறை சார்பா டெல்லிக்குப் போகும் போதெல்லாம் இது தொடர்பான மூவ்களை அங்கே நகர்த்தியிருக்கார் சி.வி.சண்முகம். இதைத் தொடர்ந்து உருவாக இருக்கும் வன்னியர் நல வாரியம், வஃபு போர்டைப் போல் தன்னாட்சி பெற்ற அமைப்பாக இருக்குமாம். இதன் சேர்மனாக அமைச்சர் சி.வி.சண்முகத்தையே நியமிக்கணுங்கிற கோரிக்கையும், வன்னிய அமைப்புகளிடமிருந்து அரசுக்கு வரத் தொடங்கியிருக்கு''’

""அதுசரிப்பா, தமிழக அரசும் மத்திய அரசும் விரும்புகிற விசயங்களில் உடனுக்குடன் சட்டசபையில் தீர்மானம் நிறைவேத்தி, ஜனாதிபதி ஒப்புதலைப் பெற ஆர்வம் காட்டும் எடப்பாடி அரசு, நீட் தேர்வு வேண்டாம்னு இதே சட்டசபையில் 2 மசோதாவை நிறைவேத்துச்சே, அதற்கு ஏன் இன்னும் ஜனாதிபதி ஒப்புதல் பெற டெல்லி மூலம் நடவடிக்கை எடுக்கலை?''

rajagopal-IAS""சரியான கேள்விதாங்க தலைவரே, நீட் தேர்வு தொடர்பாக எடப்பாடி அரசு நிறைவேத்திய மசோதா ஃபைல் எங்கே இருக்குன்னு தெரியலைன்னு மத்திய பாதுகாப்பு அமைச்சர் நிர்மலா சீதாராமனே அறிவிச்சும், மாநில அரசு ஸ்டெப் எடுக்கலை. இந்த நிலையில் மாணவர்கள் வருடத்துக்கு 2 தடவை நீட் தேர்வு எழுதியாகணும்ன்னு மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் சவடாலா அறிவிச்சிருக்காரு. பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையனோ, இது பற்றிய அறிவிப்போ கடிதமோ டெல்லியில் இருந்து எங்களுக்கு இன்னும் வரலைன்னு சொல்றார். இரட்டை நீட்டால் ஏற்கனவே இதன் சுமையை அனுபவித்துவரும் தமிழ்நாட்டு மாணவர்களின் நிலை, மேலும் நெருக்கடிக்கு ஆளாகியிருக்கு''’

""டி.ஜி.பி. விவகாரத்திலும் தமிழக அரசும் ஒருவித நெருக்கடியை சந்திக்குதே?''’

""டி.ஜி.பி.போன்ற உயர்ந்த பதவிகளில், ஓய்வுபெற்ற அதிகாரிகளைப் பதவி நீட்டிப்பில் உட்காரவைப்பது சரியில்லன்னு உச்சநீதிமன்றம் சமீபத்தில் அதிரடியா அறிவிச்சிருக்கு. அதனால், பதவி நீட்டிப்பில் உட்காரவைக்கப்பட்டிருக்கும் டி.ஜி.பி.யான டி.கே.ராஜேந்திரனுக்கு பதிலாகப் புதிதாக ஒருவரை அமர்த்தவேண்டிய நெருக்கடியில் எடப்பாடி அரசு இருக்கு. இதைத் தொடர்ந்து அந்தப் பதவியைக் குறிவைத்து காவல்துறை உயர் அதிகாரிகளின் ரேஸும் ஆரம்பித்துவிட்டது. இந்தப் பதவிக்கு ரேங்க் வாரியாக மகேந்திரன், திரிபாதி, ஜாங்கிட், காந்திராஜன், ஜாபர்சேட் என ஐ.பி.எஸ். அதிகாரிகள் ஐவர் இருந்தாலும், இவர்களில் திரிபாதி முன்னால ஓடிக்கிட்டு இருக்காராம். இந்த நிலையில், ஜாபர்சேட்டுக்கு டி.ஜி.பி. அந்தஸ்து வழங்கி அவரை அந்த இடத்தில் உட்கார வைக்க, முதல்வர் எடப்பாடியிடம் பரிந்துரை செஞ்சிருக்காரு உளவுத்துறை ஐ.ஜி. சத்யமூர்த்தி, தி.மு.க. ஆட்சிக் காலத்தில் ஆட்சியாளர்களோடு ஜாபர்சேட் நெருங்கியிருந்தது, நிர்வாக ரீதியில் மட்டும்தான். அதனால் அவரைப் பரிசீலியுங்கள்னு ஐ.ஜி. சொல்றாராம்''’

""எடப்பாடியின் மனநிலை என்னவாம்?''

""அவரைப் பொறுத்தவரை டெல்லியின் சிக்னலை எதிர்பார்த்துக்கிட்டு இருக்கார். அண்மையில் அமைச்சர்களும் அதிகாரிகளும் எடப்பாடிகிட்ட, கவர்னரின் செயலாளர் ராஜகோபால் சொல்றபடிதான் தலைமைச் செயலாளர் கிரிஜா நடக்கறார். அரசுத்துறை முழுதிலும் ராஜகோபாலின் ஆதிக்கம்தான் கொடிகட்டிப் பறக்குதுன்னு புகார் சொல்லியிருக்காங்க. அதுக்கு, முதல்வர் எடப்பாடி, நான் ராஜ்பவன் விசயத்தில் எப்படி எல்லாத்தையும் கண்டும் காணாத மாதிரி இருக்கேனோ, அதேபோல் நீங்களும் இருந்துக்கங்க. ராஜகோபால் எதைச் சொன்னாலும் தலையை ஆட்டுங்க. ஏன்னா இப்போதைக்கு அவர்தான் நம்ம தமிழ்நாட்டுக்கு மோடின்னு சொல்லியிருக்காரு.''

cvsanmugam""அ.ம.மு.க. தினகரன் போற இடமெல்லாம் பெருங்கூட்டம் கூடுறதும் எடப்பாடி கவனத்துக்குப் போயிருக்காமே?''

""உண்மைதாங்க தலைவரே, ஆளும்கட்சியையும் எதிர்க்கட்சியையும் மிரளவைக்கும் அளவுக்கு, தினகரன் கலந்துக்கிற எல்லா நிகழ்ச்சியிலும் பெரும்கூட்டம் கூடுது. மாவட்ட எல்லையில் இருந்தே அவருக்கு பிரமாண்ட வரவேற்பு கொடுக்கப்படுது. கடந்த 8-ந் தேதி கோவை கொடீசியா அரங்கில் நடந்த அவர் கட்சி நலத்திட்ட விழா பொதுக் கூட்டத்திலும் கூட்டமான கூட்டம். அவரது தொண்டர்களே, அண்ணன் ரொம்ப தாராளம்... நாமக்கல், கோவையில் மட்டுமே 30 கோடிக்கும் மேல் வாரி இறைச்சி கூட்டத்தைக் கூட்டறாரேன்னு வாயைப் பிளக்குறாங்க. அதே நேரம் அவரது வழக்கறிஞர்கள் தரப்போ, 18 எம்.எல்.ஏ.க்களின் தகுதி நீக்க வழக்கில் ஆஜரான காங்கிரசின் மூத்த தலைவரான வழக்கறிஞர் அபிஷேக் சிங்வீக்கும், முன்னாள் அட்வகேட் ஜெனரல் சுப்பிரமணியத்துக்குமே கூட ஃபீஸ் இன்னும் கொடுக்கப்படலை’ன்னு ஆதங்கப்படறாங்க''’

""ஓ...''

’""வக்கீல்களுக்கு தினகரன் இன்னும் ஃபீஸே தரலைங்கிற தகவல் டெல்லிபூராவும் பரவியிருக்கு. அது ஒருவகை சேஃப்டிதானே. தினகரன் தரப்பிடம் என்னதான் பணம் இருந்தாலும் ரெய்டுபயம் இன்னும் அவர் தரப்பை விட்டுப் போகலை. ஏற்கனவே சசி தரப்பில் நடத்தப்பட்ட ரெய்டில் சிக்கிய சொத்துக்கள், ஆவணங்களை எல்லாம் சரியா கணக்கில் ஏத்தி, அதன் அடிப்படையில் பினாமி ஒழிப்பு சட்டப் பிரிவின் படி அவர்மேல் நடவடிக்கை எடுக்கப்பட்டு வருதாம். அதனால்தான் இந்த உஷாரய்யா பாலிஸியாம்'' ’

""நானும் ஒரு தகவலைச் சொல்றேன். துணை முதல்வர் ஓ.பி.எஸ்., 9-ந் தேதி இரவு வீட்டு வசதித்துறை உயர் அதிகாரிகளோடு சிங்கப்பூர் போவதாக இருந்தது. அவர் கைவசம் இருக்கும் இந்தத் துறைக்காக, நகர்ப்புற வளர்ச்சித் திட்டம் பற்றிய ஆலோசனைகளை, அங்குள்ள நிபுணர்களிடம் பெறுவதற்காகத்தான் இந்த ஒருவார டூர் புரோகிராமாம். ஆனால் சில பல காரணங்களால் கடைசி நேரத்தில் கேன்சலாயிடுச்சாம்.’''

________

வந்த செய்தி! விசாரித்த உண்மை!

வந்த செய்தி: வீட்டு வசதித் துறைக்கு சொந்தமான இடம் போரூர் ராமச்சந்திரா மருத்துவமனையை சார்ந்த அறக்கட்டளைக்கு குறைந்த விலையில் தாரை வார்க்கப்பட்டது அ.தி.மு.க. ஆட்சியிலா? தி.மு.க. ஆட்சியிலா?

விசாரித்த உண்மை : ஆங்கில நாளிதழில் வந்த செய்தியின் அடிப்படையில், சுகாதார அறக் கட்டளையின் பொதுநல செயல்பாட்டிற்காக அரசு இடத்தை குறைந்த விலைக்குவாங்கி அதில் பணக்காரர்கள் பயன்படுத்தும் கல்யாண மண்டபம் கட்டி அதிக வாடகைக்கு விடுவது பற்றி மு.க.ஸ்டாலின் கண்டன அறிக்கை வெளியிட்டார். தி.மு.க/ தொழிற்சங்க பிரமுகர் பூச்சி முருகன்தான், "இது அ.தி.மு.க. அரசின் மோசடி' என ஸ்டாலினின் கவனத் துக்கு கொண்டு சென்றுள்ளார். இதனையடுத்து, துணை முதல்வர் ஓ.பி.எஸ். தரப்பு, ஸ்டாலின் தரப்பைத் தொடர்புகொண்டு, "இது 1998 தி.மு.க. ஆட்சிக் காலத்தில், அப்போது அமைக்கப்பட்ட குழுவின் மதிப் பீட்டின்படி அந்த அறக்கட்டளைக்கு கொடுக்கப்பட்டி ருக்கிறது' எனத் தெரிவித்துள்ளது. பூச்சிமுருகனிடம் ஸ்டாலின் இது பற்றி சீரியஸாக விசாரித்துள்ளார். அறிவாலயத் தரப்பிலோ, ""தி.மு.க. ஆட்சியில் அறக் கட்டளை பணிக்காகத்தான் பரிசீலிக்கப்பட்டது. கல்யாண மண்டபம் கட்டுவதற்கல்ல''’என்கிறார்கள்.

-பிரகாஷ்

rangcall nkn13.07.2018
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe