""ஹலோ தலைவரே, தின கரனின் அ.ம.மு.க.வில் இருக்கும் பெரும்புள்ளி கள் பலரும் ஆளுக்கொரு திசையில் ஓடிக்கிட்டு இருக்காங்க.''’

""அவங்க மன நிலையைப் புரிஞ்சிக் கிட்டதால்தான் அ.தி.மு.க.வுக்குக் கொண்டு வரும் அசைன் மெண்ட்டை, முதல்வர் எடப்பாடி ஒரு டீமிடம் ஒப்படைச்சிருக்கார்ன்னு சொல்றாங்களே?''’

bjp""உண்மைதாங்க தலைவரே, தினகரன் தரப்பு எம்.எல்.ஏ.க்களை நம்ம பக்கம் கொண்டுவாங்கன்னு அமைச்சர் களான ’சுகாதாரம்’ விஜயபாஸ்கர், ’உள்ளாட்சி’ வேலுமணி, எம்.எல்.ஏ.க்களான தி.நகர் சத்யா, விருகை ரவி ஆகியோர் அடங்கிய டீமிடம் அதிரடி அசைன்மெண்ட்டை ஒப்படைச்சிருக்கார் எடப்பாடி. அந்த வகையில், தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.வான அறந்தாங்கி ரத்தினசபாபதியை ஒரே அமுக்கா அமுக்கி அ.தி.மு.க.வுக்கு கொண்டு வந்தார் விஜயபாஸ்கர். அடுத்து விருத்தாசலம் கலைச் செல்வனையும் இந்த டீம் வெயிட்டா மடக்கிடுச்சி. அடுத்து கள்ளக்குறிச்சி பிரபுதான் பாக்கி. நான் எப்பவும் சின்னம்மா பக்கம்தான் இருப்பேன்னு சொல்லிக்கிட்டிருந்த அவரை, தி.நகர் சத்யாவும் விருகை ரவியும் தங்கள் கஸ்டடிக்குக் கொண்டுவந்துட்டாங்க. அவரை இப்ப சகல விதத்திலும் குஷியா குளிப்பாட்டிக்கிட்டு இருக்காங்க.''’

""இந்த மூணு பேரையும் பதவி நீக்கம் செய்யும் நோக்கத்தில், சபாநாயகர் தனபால் நோட்டீஸ் அனுப்பியிருந்தாரே? இப்ப அவங்களை அ.தி.மு.க.வில் சேர்த்தது எந்தக் கணக்கில்?''’

Advertisment

""உங்களுக்குத் தெரியாத கணக்காங்க தலைவரே, இடைத்தேர்தலுக்கு முன்பு அரசுக்கு எதிரா நம்பிக்கையிலாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டா என்ன பண்றதுன்னு, தினகரன் ஆதரவு எம்.எல்.ஏ.க்களான இந்த மூணுபேரையும் பதவி நீக்கம் செய்து, சபையின் டோட்டல் வேல்யூவைக் குறைக்க அப்படி யொரு முடிவை ஆளும்கட்சி எடுத்துச்சு. அடுத்து நாடாளு மன்றத் தேர்தலோடு நடந்த 22 தொகுதிகளின் சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுக்கு 9 எம்.எல்.ஏ.க்கள் கிடைச்சதால், நம்பிக்கையில்லாத் தீர்மானம் குறித்த பயம் எடப்பாடி அரசுக்குப் போயிடுச்சி. இந்த நிலையில் இப்ப ஓ.பி.எஸ். தரப்பு எம்.எல்.ஏ.க்கள் 11 பேரைத் தகுதி நீக்கம் செய்யணும்னு தி.மு.க. தொடர்ந்த வழக்கு அ.தி.மு.க.வை நெருக்கடியில் நிறுத்தியிருக்கு. இந்த வழக்கில் ஒருவேளை நெருப்பு தீர்ப்பு தங்களுக்கு வந்தா என்ன பண்ணுறதுங்கிற யோசனையுடன், தினகரன் தரப்பு எம்.எல்.ஏ.க்களை, இப்ப தடபுடலா வரவேற்குது எடப்பாடித் தரப்பு.''’

""எம்.எல்.ஏ.க்களுக்கு வலைவிரிக்கும் அ.தி.மு.க.வைப்போல், டெல்லி பா.ஜ.க., எதிர்க்கட்சி ராஜ்யசபா எம்.பி.க்களுக்கு வலை விரிக்குதாமே?''’

""உண்மைதாங்க தலைவரே, லோக்சபாவில் அறுதிப் பெரும்பான்மை பா.ஜ.க. பெற்றாலும், ராஜ்யசபாவில் தான் நினைக்கும் தீர்மானங்களையும் சட்டத் திருத்தங்களையும் நிறைவேற்ற, அது மேலும் பலம் பெறவேண்டிய நிலையில் இருக்குது. அதனால்தான் எதிர்க்கட்சி எம்.பி.க்களை தங்கள் பக்கம் இழுக்கும் முயற்சியில் மும்முரம் காட்டுது. அந்த வகையில், தெலுங்கு தேச எம்.பி.க்கள் 6 பேரில் 4 எம்.பி.க்களைத் தங்கள் பக்கம் பா.ஜ.க. அண்மையில் இழுத்துக்குச்சு. இந்த எண்ணிக்கையால் கட்சித்தாவல் தடை சட்டத்திலிருந்து தப்பிச்சிட்டாங்க.''

Advertisment

dd

""அடுத்து அதன் பார்வை, தங்கள் ரிமோட்டுக்கு ஆடும் அ.தி.மு.க. பக்கம்தான் இருக்கு. இப்ப அ.தி.மு.க. வுக்கு புதுவையையும் சேர்த்து 13 ராஜ்யசபா எம்.பி.க் கள் இருக்காங்க. இதில் 4 பேரோட பதவி காலியாகுது. வர்ற 18-ந் தேதி நடக்க இருக்கும் ராஜ்யசபா தேர்தலில் அ.தி.மு.க. தரப்புக்கு 3 சீட் கிடைக்கும். அதில் பா.ம.க.வுக்கு ஒண்ணு கொடுத்தா, அ.தி.மு.க.வுக்கு நேரடியா 2 சீட் கிடைக்கும். அதன் மூலம் அ.தி.மு.க. எண்ணிக்கை 11 ஆயிடும். இந்த நிலை யில், ராஜ்யசபாவில் பலத்தை அதிகரிக்க நினைக்கும் பா.ஜ.க. தலைமையோ, அ.தி.மு.க.விலிருந்து 10 பேரை தங்கள் பக்கம் கொண்டுபோக ப்ளான் போட்டு காய் நகர்த்துது. இப்பவே 3 அ.தி.மு.க. ராஜ்யசபா எம்.பி.க்கள் சிக்கியிருக்காங்கன்னு டெல்லி தகவல் சொல்லுது. இன்னும் சில பேர் தாவ தயாராயிட்டாங்களாம்.''’

dd

""பா.ஜ.க. தொடர்பான ஒரு முக்கியத் தகவலை நானும் பகிர்ந்துக்கறேன். நாடு முழுக்க தன் பலத்தை அதிகரிச்சிக்க நினைக்கும் பா.ஜ.க. தலைமை, புதிய உறுப்பினர்களைச் சேர்க்கும் பணியில் ஜரூரா இறங்கியிருக்கு. இதற்கான நிகழ்ச்சியை 6-ந் தேதி தன் வாரணாசி தொகுதியிலிருந்து மோடி துவக்கி வைக்கிறார். அதே நாள்ல தெலுங்கானா மற்றும் ஆந்திராவில் அமித்ஷா வும், தமிழகத்தில் பா.ஜ.கவின் செயல் தலைவர் ஜே.பி. நட்டாவும் இந்த உறுப்பினர் சேர்க்கையைத் துவக்கி வைக்கிறாங்க. இதுக்காகத் தமிழகம் வரும் நட்டா, இங்குள்ள பா.ஜ.க. தலைவர்களுடன் தற்போதைய அரசியல் நிலவரங்கள் பற்றி விவாதிக்கத் திட்டமிட்டிருக்காராம். அவர் வரும் போது, தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட கட்சி களில் இருந்து ஒருசில பிரமுகர்களையாவது பா.ஜ.க.வில் சேர்க்கப் பாருங்கன்னு இங்குள்ள கட்சிப் புள்ளிகளுக்கு அசைன் மெண்ட் கொடுக்கப் பட்டிருக்கு. அதனால் பாவம் ஆளாளுக்கு வலையோடு அலையறாங்க.''’