"ஹலோ தலைவரே, சட்ட மன்றத் தேர்தலில் தனிப்பெரும்பான்மை யுடன் தி.மு.க வெற்றி பெற்ற நிலையில், சாட்டை எடுக்கும் ஸ்டாலின்னு நம்ம நக்கீரனில் வந்த அட்டைப் படத்தைப் பார்த்தீங்களா?''”

"தமிழ்நாடே பார்த்திருக்குதே.. அசத்தலான அட்டைப் படம். அதில் சொன்ன மாதிரியே முதல்வர் மு.க.ஸ்டாலின் தன் கையில் சாட்டையை எடுத்துவிட்டார். சென்னை மதுரவாயலில் அம்மா உணவகத்தை தி.மு.க.வினர் இரண்டு பேர் தாக்கியதாக சமூக வலைத்தளத்தில் வீடியோ பரவியதுமே அவங்களை கட்சியிலிருந்து நீக்கியதோடு, காவல்துறையில் வழக்கும் பதிவு செய்யப்பட்டிருக்கு. இந்த மாதிரி நடவடிக்கைகளைத்தான் தி.மு.க.வின் புதிய அரசிடம் மக்கள் எதிர்பார்க்குறாங்க.''”

r

"உண்மைதாங்க தலைவரே, தி.மு.க. வெற்றி பெற்ற உடனேயே, தலைமைச் செயலாளர் ராஜீவ் ரஞ்சன், சுகாதாரத்துறைச் செயலாளர் ராதா கிருஷ்ணன் உள்ளிட்ட உயர் அதிகாரிகளை அழைத்து, கொரோனாவைக் கட்டுப் படுத்தும் நடவடிக்கைகளை ஸ்டாலின் முடுக்கிவிட்டார். கலைஞர் என்ற பத்திரிகை யாளரின் மகன் என்ற நினைவோடு, பத்திரிகை உள்ளிட்ட ஊடகத் தினரையும், கொரோனா காலத்து முன்களப் பணியாளர்களாக அறிவித்திருக்கிறார் ஸ்டாலின். இது இந்தப் பேரிடர் நேரத்தில் உயிரைப் பணயம் வைத்து உண்மை நிலவரத்தை மக்களிடம் தெரிவித்து பாதுகாப்பையும் விழிப்புணர்வையும் ஏற்படுத்தும் ஊடகத்தினருக்கு கிடைத்த ஊக்கம்.''”

Advertisment

"செனடாப் சாலை இல் லத்திலிருந்து இந்த உத்தரவுகள் வந்தாலும், முதல்வர் பொறுப்பேற்ற பிறகு, கிரீன்வேஸ் சாலையில் உள்ள அரசு இல்லத்திற்கு மாறுவார்னு எதிர்பார்க்கப்படுதே?''”

"தனது பணிகளுக்கு வசதியாக, அவர் செனடாப் சாலை வீட்டிலிருந்து, க்ரீன்வேஸ் சாலையில் அமைச்சர்களுக்காக ஒதுக்கப்படும் பங்களா ஒன்றில் தங்கியிருக்க முடிவு செய்திருக் காருன்னு ஒரு தகவல் வருது. அனேகமாக, சபாநாயகர் தனபால் வசித்த குறிஞ்சி இல்லத்துக்கு ஸ்டாலின் குடிபோகலாம்னு எதிர்பார்க்கப்படுது. அலுவலக ரீதியாக அந்த பங்களா இல்லம் பல சந்திப்புகளை நடந்த வசதியாக இருக்கும் என்பதால்தான், இந்த இடமாற்ற முடிவுன்னு சொல்றாங்க.. அதேபோல் பாதுகாப்புக் காவலர்களைத் தங்கவைக்கவும் அதுதான் சிறந்த இடமாம்.. மேலும், சக அமைச்சர்கள் இருக்கின்ற பகுதியிலேயே முதல்வரும் இருந்தால், எந்த நேரத்திலும் அமைச்சர்களை அழைத்து விவாதிக்க முடியும் என்றும் சொல்றாங்க. அதேநேரத்தில், செனடாப் சாலை வீட்டிலும் முதல்வரை சந்திப்பதற்கு -ஆலோசிப்பதற்கு வசதியா ஏற்பாடுகள் பல செய்யப்பட்டிருக்கு.''”

"ஆட்சி அமைக்க முடியாமல் போன அ.தி.மு.க.வின் வி.வி.ஐ.பி.க்களும் வீடு தேடும் படலத்தில் இறங்கிட்டாங்களே?''”

Advertisment

ra

"உண்மைதாங்க தலைவரே, கோட்டையில் உள்ள அமைச்சர்களின் அறைகள் அசுர வேகத்தில் அதிகாரிகளால் காலி செய்யப்பட்டு, புதிய அமைச்சர்களுக்காகத் தயாராகி வருது. அதே போல கிரீன்வேஸ் சாலையில் இருக்கும் எடப்பாடி, ஓ.பி.எஸ். உள்ளிட்ட மாஜிக்களாகிவிட்ட அமைச் சர்களின் பங்களாக்களையும், உடனே காலிசெய்யச் சொல்லி, தகவல் போயிருக்கு. அதனால எடப்பாடி பழனிசாமி அடையாறு, மைலாப்பூர், ஆழ்வார்ப் பேட்டை பகுதிகளில், தனக்குத் தோதா ஒரு பங்களாவைத் தேடிக்கிட்டிருக்கார். ஓ.பி.எஸ்.ஸோ, தன் மகன் ரவீந்திரநாத்துக்கு சென்னையில் தனி வீடு இருந்தபோதும் அங்கே தங்க விரும்பாமல், அடையாறு பகுதியில் ஒரு பங்களா கிடைத்தால் நல்லா இருக்கும்னு, கட்சிப் பிரமுகர்களை முடுக்கி விட்டிருக்காராம்.''”

"மாஜி அமைச்சர் வேலுமணியின் தேடல் வேறுமாதிரி இருக்குதே?''”

r

"ஆமாங்க தலைவரே, தேர்தலுக்கு முன்பே வேலுமணியின் ஆசை, பெருசு பெருசா இருந்தது. குறிப்பாக, அ.தி.மு.க. ஆட்சி யைப் பிடித்தால், தன்னை தமிழக முதல்வராக ஆக்கணும்னு, வாக்குப்பதிவு முடிந்ததுமே கோவாவுக்குப் போய் அங்கிருந்தபடியே கோவை ஈஷா மைய ஜக்கி வாசுதேவ் மூலம், டெல்லியிடம் முட்டி மோதினார். ஒருவேளை அ.தி.மு.க.வால் ஆட்சி அமைக்க முடியாமல் போனால் எதிர்க்கட்சித் தலைவர் பதவியிலாவது தன்னை உட்காரவைக்கணும்னு பா.ஜ.க. மேலிடத்திடம் அவர் கேட்டுக்கிட்டார். அவர்களும், ஓ.கே. ரிசல்ட் வரட்டும் பார்க்கலாம்னு சொல்லியிருந்தார்களாம். இப்போது தி.மு.க. வெற்றிபெற்று ஆட்சி அமைப்பதால், தன்னை எதிர்க்கட்சித் தலைவராக ஆக்கணும்... அல்லது துணைத்தலைவராகவாவது உட்கார வைக்கணும்னு க்ளைமாக்ஸ் நேரம்வரை டெல்லிக்கு பிரஷர் கொடுத்துக்கிட்டே இருந்தார்.''”

"அதனால்தான், தமிழக எதிர்க்கட்சித் தலைவரை பா.ஜ.க. தேர்ந்தெடுக்கும்னு பா.ஜ.க. எம்.எல்.ஏ.வான வானதி சீனிவாசன் சொன்னாரா?''”

"ஆமாங்க தலைவரே, கோவை மாவட்டத்தில் தனது ஆதரவாளர்களுக்கு கட்சியில் சீட் வாங்கி நிற்கவைத்த வேலுமணி, அவர்களுக்கான தேர்தல் செலவையும், தானே பார்த்துக்கிட்டாராம். அதே போல் கோவை தெற்கில் பா.ஜ.க. சார்பில் களமிறங்கிய வானதி சீனிவாசனின் தேர்தல் செலவை யும் அவரே கவனிச்சிக்கிட் டாராம். அதனால், கோவை மாவட்டத்தில் வென்ற எம்.எல். ஏ.க்களைத் தன் கையில் வைத்திருக்கும் வேலுமணி, அந்த தெம்பில்தான், அமைச்சர் களுக்கு நிகராக சலுகைகள் கிடைக்கக்கூடிய, எதிர்க் கட்சித் தலைவர் பதவிக்கு தீவிரமாக பலப்பிரயோகம் செய்தார்.''”

"தி.மு.க. தரப்பையும் வேலுமணி தரப்பு அணுகி யிருக்குதே?''”

"தேர்தலுக்கு முன்பே, வேலுமணியின் ஊழல் விவகாரங்களையே தி.மு.க. பெரிதாகக் கையில் எடுத்தது. கிராமசபைக் கூட்டங்களில் ஸ்டாலின் பேசும்போதும், ஊழல் செய்த வேலுமணி தப்பிக்க முடியாதுன்னு சொன்னார். அதனால் ஆட்சி மாற்றத்தால் ரொம்பவே மிரண்டுபோயிருக்கிறார் வேலுமணி. இந்த நிலையில் அவரது சார்பில், அவரது சகோதரர் அன்பு, தி.மு.க சீனியர் ஒருவரை அண்மையில் சந்தித்து, எங்களுக்கு சிக்கல் வராமல் பார்த்துக் கொள்ளுங்கள்னு டீலிங் பேசியிருக்கார். அந்த சீனியரும், இதை ஸ்டாலின் கவனத்துக்குக் கொண்டுபோக, அதைக்கேட்டுக் கோபமான ஸ்டாலின், "இப்படிப் பட்ட நபர்கள், உங்களைச் சந்திக்க அனுமதிக்காதீங்க. ஊழல் செய்த யாரும் தப்ப முடியாது. நம் மேலே நம்பிக்கை வச்சி மக்கள் ஓட்டு போட்டிருக்காங் கன்னு கறாராவே சொல்லிவிட் டாராம்.''”

"வேலுமணியை எதிர்க்கட்சித் தலைவராக்க எடப்பாடியும் ஓ.பி.எஸ்.சும் சம்மதிப்பாங்களா?''”

"அவங்க ரெண்டு பேருமே, எதிர்க் கட்சித் தலைவர் பதவியைக் குறிவச்சிருக்காங்க. அதுக்காக கட்சி எம்.எல்.ஏ.க்களிடம் கேன் வாசையும் நடத்தினாங்க. இந்த நிலையில், வானதி சீனிவாசன், எதிர்க்கட்சித் தலைவரை எங்க கட்சிதான் தேர்ந்தெடுக்கும்னு சொன்னதால், அவங்க ரெண்டு பேருமே கடுப்பாயிட்டாங்க. ஆட்சியில் இருந்தபோதுதான் சுதந்திரமா நம்மை செயல்பட விடலை. தோற்றுப்போன நிலை யிலும்கூட நம்ம முதுகில் அவர்கள் சவாரி செய்யணு மான்னு கொதிப்படைந்திருக்கும் அவர்கள், பா.ஜ.க.விடம் இந்த விவகாரத்தில் பணியக்கூடாதுங் கிற முடிவோடு இருக்காங்க. அ.தி.மு.க.வின் எம்.எல்.ஏ.க்கள் கூட்டமும் 7-ந் தேதிதான் நடக்குது. அதில் எதிர்க்கட்சித் தலைவரை, ஆதரவின் அடிப் படையில் தேர்ந்தெடுக்கலாம்னு நினைக்கிறாங்க. கட்சியின் ஒருங்கிணைப்பாளராக இருப்ப தால், ஓ.பி.எஸ். ஒரு பக்கமும், முதல்வராக இருந்துவிட்டு, சும்மா வெறும் உறுப்பினராக அமர முடியுமா என எடப் பாடியும், முதல்நாள்வரை எதிர்க்கட்சித் தலைவர் பதவிக்கு வரிந்துகட்டி நின்றார்கள்.''”

"அ.தி.மு.க. தரப்பில் வெற்றிபெற்ற இரண்டு எம்.எல். ஏ.க்கள் இருதலைக் கொள்ளி எறும்பாகத் தவிக்கிறாங் களேப்பா?''”

r

"ராஜ்யசபா எம்.பி.க்களாக இருக்கும்போதே, தேர்தலில் நின்று எம்.எல்.ஏ.க்களாகி இருக்கும் கே.பி.முனுசாமியும், வைத்தியலிங்கமும், தங்கள் வசமுள்ள பதவிகளில் ஒன்றை ராஜினாமா செய்தாக வேண்டிய நிர்பந்தத்தில் இருக்காங்க. அ.தி.மு.க ஆட்சி அமைந்தால், அதில் அமைச்சர்கள் ஆகிவிட லாம் என்றுதான் அவர்கள் கனவுக்கோட்டை கட்டியிருந்தாங்க. ஆனால் அந்தக் கனவு தகர்ந்துபோனதால், குழம்பிப்போய்விட் டார்கள். வைத்தியலிங்கத்துக்கு எம்.பி. பதவி இன்னும் 1 வருடம் தான் இருக்கிறது. அதனால் எம்.எல்.ஏ. பதவியை தக்க வைத்துக் கொள்ள நினைக்கிறார். முனுசாமியின் எம்.பி. பதவியோ, இன்னும் 5 வருடங்களுக்கு இருக்கிறது. அதனால் அவர் தடுமாறுகிறார். எடப்பாடி, ஓ.பி.எஸ். உள்ளிட்ட சீனியர்களோ, "ரெண்டு பேருமே எம்.பி. பதவியை ராஜினாமா செய்யுங்கள். நீங்கள் எம்.எல்.ஏ. பதவியை ராஜினாமா செய்தால், உங்கள் தொகுதி இடைத்தேர்தலை சந்திக்கும்போது, அதில் தி.மு.க.தான் ஜெயிக்கும். எனவே, எதற்காக நாம் அவர்கள் பலத்தை மேலும் உயர்த்தவேண்டும்' என்கிறார்களாம்.''”

"ஆன்லைன் வகுப்புகளை நடத்தும் அரசு மற்றும் தனியார் கல்லூரிகள், முழுக்கல்விக் கட்டணத்தையும் கட்டணும்னு, மாணவர்களை மனஉளைச்சலில் ஆழ்த்தி வருதே?''”

"உண்மைதாங்க தலைவரே, கொரோனா பேரிடரால் கடும் பொருளாதார நெருக்கடிக்கு ஆளான பல்லாயிரக்கணக்கான பெற்றோர்கள், இன்னும் தங்கள் பிள்ளைகளின் பள்ளி மற்றும் கல்லூரி கட்டணங்களைச் செலுத்தவில்லை. கட்டணத்தைச் செலுத்தினால்தான் தேர்வு முடிவுகளைத் தருவோம்னு கல்வி நிறுவனங்கள் மிரட்டுது. இந்த நேரத்தில், பள்ளிகளின் ஆன் லைன் வகுப்புகளுக்கு முழு கல்விக் கட்டணத்தை செலுத்தச் சொல்வது அநீதின்னு உச்சநீதிமன்றம் கண்டிச்சிருக்கு. ஆனால், ஆன்லைன் வகுப்புகளுக்காக பல லட்சங்களைப் பெற்றோர்களிடம் இருந்து பிடுங்கும் தனியார் பொறியியல் மற்றும் மருத்துவக் கல்லூரிகள் பற்றி இதுவரை யாருமே வாய் திறக்கலை. அதனால் கல்லூரி மாணவர்கள் தரப்பு, தணல்மேல் நிற்பதுபோல், நெருக்கடியில் நிற்குது.''”

r

"கல்விக் கடன்களை ரத்து செய்வோம்னு ஏற்கனவே தி.மு.க., வாக்குறுதி கொடுத்திருக்கேப்பா?''”

"அது வரவேற்கத்தக்க வாக்குறுதிதான். ஆனால். இந்தப் பேரிடர் காலத்தில் கல்விக் கடனைப் பெறமுடியாமல், அநியாய வட்டிக்குக் கடன் வாங்கி, பிள்ளைகளின் கல்விக் கட்டணத்தை முழுதாகவும் பாதிமட்டும்னு கட்டியிருக்கும் பெற்றோர்களுக்கு, எந்த நிவாரணமும் இதுவரை அறிவிக்கப்படலை. இந்த நிலையில்தான் கல்லூரித் தரப்பு, கல்லூரிக் கட்டணத்தை முழுதாகச் செலுத்தாதவர்களின் தேர்வு முடிவுகளை ’கட்டப்பஞ்சாயத்து பாணியில்’நிறுத்தி வைத்து, அடாவடி செய்யுது. மேலும், அந்தக் கல்லூரிகள், கட்டணம் செலுத்தாத மாணவர்களை ஆன்லைன் வகுப்புகளிலும் அனுமதிக்கமாட்டோம் என்றும், தேர்வுகளையும் எழுதவிட மாட்டோம்னு கெடுபிடி செய்வ தால் மாணவர்களும் பெற் றோர்களும் கடும் மனஉளைச்சலில் இருக்காங்க. முதல்வர் ஸ்டாலி னிடம் நீதியை எதிர்பார்க்கறாங்க.''”

"புதிய அமைச்சரவை பதவி ஏற்ற பிறகுதான் இது பற்றி நடவடிக்கை எடுக்கணும். தி.மு.க அமைச்சர்கள் லிஸ்ட்னு சமூக வலைத்தளங்களில் நிறைய சுற்றியது. இதை ஸ்டாலினிடமே அவரது உதவியாளர்கள் காட்டியிருக்காங்க. அவரு லேசா சிரிச்சிட்டு, புது அமைச்சரவை லிஸ்ட்டை தயாரிப்பதில் சீரியஸா கவனம் செலுத்தினாராம். வழக்கமான தி.மு.க சீனியர் களுக்குத் தரப்படும் முக்கியத் துவத்துடன், புதியவர்களுக்கு -அதிலும் திறமையானவர்களுக்கு வாய்ப்பு வழங்கப்படணும்ங் கிறதில் ஸ்டாலின் கவனம் செலுத்தினாரு. கவர்னர் மாளிகைக்கு ஸ்டாலின் புறப் படுவதற்கு முன்பாக கேபினட் லிஸ்ட்டில் இடம் பிடிச்சிட ணும்னு கட்சியின் சீனியர் நிர்வாகிகள் மூலமாகவும், ஸ்டாலின் குடும்பத்தினர் மூலமாகவும், நண்பர்கள் வட்டத்தின் மூலமாகவும் பல சிபாரிசுகள் வந்திருக்கு.''”