ராங்கால் : 7 பேர் விடுதலை! கைவிட்ட கவர்னர்! மோடியின் தேர்தல் கணக்கு!

gg

""ஹலோ தலைவரே, ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் தன்னிடம் இருந்த பந்தை மீண்டும் குடியரசுத் தலைவர் பக்கமே கவர்னர் உருட்டி விட்டிருப்பது, தமிழக மக்கள் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கு.''’

""ஆமாம்பா, "வேந்தருக்கு தலையறுத்தல் பொழுது போக்கு; நமக்கெல்லாம் உயிரின் வாதை'ன்னு புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் எழுதிய கவிதையைப் போல, அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு அந்த ஏழுபேரின் வாழ்க்கை, விளையாட்டு மைதானமாத் தெரியுது.''

dd

""உண்மைதாங்க தலைவரே, அவர்களை விடுவிப்பது பற்றி பரிசீலித்து நல்ல முடிவெடுக்கனும்னு, நீதித்துறை உணர்த்தியும், காங்கிரஸ் தவிர அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்தியும், தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி விடுதலைக்குப் பரிந்துரை செய்தும், ராஜ்பவன், தன் பிடிவாதத்தில் இருந்து இறங்கி வராமல், முடிவெடுக்கும் முடிவை குடியரசுத் தலைவரிடமே ஒப்படைப்பதாக ராஜ்பவன் அறிவித்துவிட்டது. இந்த நிலையில் தமிழக அமைச்சரவை மீண்டும் தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பினால், அதை ஆளுநர் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். அப்படி ஏற்காத பட்சத்தில் தமிழக அமைச்சரவையே அதில் இறுதி முடிவெடுக்கலாம். ஆனால், இங்கு, இந்தப் பிரச்சனையில் ஆளுநரை வைத்து தமிழக அரசும், மத்திய அரசை வைத்து ஆளுநரும் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்றே தமிழுணர்வாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.''

g

""தேர்தல் நேரத்தில் இந்த விவகாரத்தை டெல்லி எப்படி அணுகப்போகுது?''

""ஏழுபேர் விடுதலை விவகாரத்தை வைத்து, ஓட்டு வாங்க முடியு மாங்கிறதுதான் டெல்லி கணக்கு. இந்த விடுதலையை கவர்னர் அறிவித்தால், அது எடப்பாடி அரசின்

""ஹலோ தலைவரே, ராஜீவ் கொலை வழக்கில் சிறையில் இருக்கும் பேரறிவாளன் உள்ளிட்ட ஏழு பேர் விடுதலை விவகாரத்தில் தன்னிடம் இருந்த பந்தை மீண்டும் குடியரசுத் தலைவர் பக்கமே கவர்னர் உருட்டி விட்டிருப்பது, தமிழக மக்கள் மத்தியில் எரிச்சலை ஏற்படுத்தியிருக்கு.''’

""ஆமாம்பா, "வேந்தருக்கு தலையறுத்தல் பொழுது போக்கு; நமக்கெல்லாம் உயிரின் வாதை'ன்னு புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் எழுதிய கவிதையைப் போல, அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு அந்த ஏழுபேரின் வாழ்க்கை, விளையாட்டு மைதானமாத் தெரியுது.''

dd

""உண்மைதாங்க தலைவரே, அவர்களை விடுவிப்பது பற்றி பரிசீலித்து நல்ல முடிவெடுக்கனும்னு, நீதித்துறை உணர்த்தியும், காங்கிரஸ் தவிர அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்தியும், தமிழக அமைச்சரவை தீர்மானம் நிறைவேற்றி விடுதலைக்குப் பரிந்துரை செய்தும், ராஜ்பவன், தன் பிடிவாதத்தில் இருந்து இறங்கி வராமல், முடிவெடுக்கும் முடிவை குடியரசுத் தலைவரிடமே ஒப்படைப்பதாக ராஜ்பவன் அறிவித்துவிட்டது. இந்த நிலையில் தமிழக அமைச்சரவை மீண்டும் தீர்மானத்தை நிறைவேற்றி அனுப்பினால், அதை ஆளுநர் ஏற்றுக்கொண்டே ஆக வேண்டும். அப்படி ஏற்காத பட்சத்தில் தமிழக அமைச்சரவையே அதில் இறுதி முடிவெடுக்கலாம். ஆனால், இங்கு, இந்தப் பிரச்சனையில் ஆளுநரை வைத்து தமிழக அரசும், மத்திய அரசை வைத்து ஆளுநரும் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள் என்றே தமிழுணர்வாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.''

g

""தேர்தல் நேரத்தில் இந்த விவகாரத்தை டெல்லி எப்படி அணுகப்போகுது?''

""ஏழுபேர் விடுதலை விவகாரத்தை வைத்து, ஓட்டு வாங்க முடியு மாங்கிறதுதான் டெல்லி கணக்கு. இந்த விடுதலையை கவர்னர் அறிவித்தால், அது எடப்பாடி அரசின் பரிந்துரையால் நடந்ததாக ஆகிவிடும்னு நினைக்கு தாம். அதற்கு பதில் 7 பேரை குடியரசுத் தலைவர் மூலம் விடுவித்தால், அது மத்திய அரசின் தயவால்தான் நடந்ததுங்கிற இமேஜ் கிடைக்கும்னு மோடி எதிர்பார்க்கிறாராம். கவர்னரிடம் அந்த அதிகாரம் இருந்ததால்தான் அவரை நோக்கி நீதிமன்றம் உட்பட கேள்விகள் எழுப்பியது. அதனால் அவர்களை விடுவிக்கும் அதிகாரம் குடியரசுத் தலைவருக்கேன்னு கவர்னரை விட்டே சொல்லச் சொன்னதால், இனி குடியர சுத் தலைவரை யாரும் நிர்பந்திக்க முடியாதுன்னு டெல்லி கருதுதாம். அதனால் தேர்தல் நேரத்தில் மோடி முயற்சியில்னு முத்திரை குத்தப்பட்டு அவர்கள் விடுவிக்கப்படலாம்னு டெல்லி வட்டாரங்கள் சொல்லுது. அவர்கள் விடுவிக்கப் படலைன்னா, மக்களின் வெறுப்பு கூடுதலாகும்.''’

mm

""ராஜ்பவனை மையமா வச்சி அரசியல் ஆட்டமா?''

""ஆமாங்க தலைவரே, இன்னொரு விஷயம் பற்றி சொல்றேன். திருச்சி பாரதிதாசன் பல்கலைக் கழகத்தின் புதிய துணைவேந்தராக இருந்த மணிசங்கர், ஓய்வு பெறவேண்டிய நிலையில் பணிநீட்டிப்பு பெற்றார். அது விவாதமானது. இந்த நிலையில், அழகப்பா பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த பேராசிரியர் டாக்டர் எம்.செல்வம் பாரதிதாசன் பல்கலை துணைவேந்தரா நியமிக்கப்பட்டிருக்கார். இதற்கான சான்றிதழைக் கடந்த 4-ந் தேதி அவரிடம் ராஜ்பவனில் கவர்னர் பன்வாரி லால் வழங்கியிருக்கார். இப்படி துணைவேந்தரைத் தேர்வு செய்வதற்காக ஒரு தேடுதல் கமிட்டியும் சமீபத்தில் அமைக்கப்பட்டிருக்கு. தகுதியுள்ள பேராசிரியர்கள் பலரும் விண்ணப்பித்த நிலையில், இறுதி நேர்காணலுக்கு சிலர் மட்டுமே அழைக்கப்பட்டிருந்தாங்களாம்.''

""ம்...''

""அழைக்கப்பட்டவர்களில் பாரதிதாசன் பல்கலைக் கழகத்தைச் சேர்ந்த எம்.செல்வமும் ஒருவராம். அவர்தான் தேர்வு லிஸ்டில் முதலிடத்தில் இருந்தாராம். அவரே தேர்வு செய்யப்பட்டதாக பாரதிதாசன் பல்கலைக் கழக நிர்வாகத்துக்கு தகவலும் கிடைச்சிருக்கு. இதனால் சம்மந்தப்பட்ட பேராசிரியர் எம்.செல்வத்திற்கு பலரும் வாழ்த்து தெரிவித்து வந்த நிலையில்தான், ஆர்.எஸ்.எஸ். தரப்பினர் தலையீட்டின் பேரில், தேர்வுப் பட்டியலில் இருந்த இவருக்கு பதில், அழகப்பா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த இனனொரு எம்.செல்வம் பெயர், திருத்தி எழுதப்பட்டிருக்கு. அதன்பிறகு தான் அவரை நியமித்து ராஜ்பவன் ஆணை பிறப்பித்த துன்னு சொல்றாங்க. இருவரின் இனிஷியலும் ஒன்றாக இருந் ததை சாதகமாக்கி, இந்த நியமன சடுகுடு நடந்திருக்குது.''

dd

""பெயர் குறித்த சர்ச்சை எல்லாப் பக்கமும் எழுந்திருக்கே?''

""ஆமாங்க.. சென்னை சென்ட்ரல் ரயில் நிலையத்துக்கு எம்.ஜி.ஆர்.பெயரையும், ஆலந்தூர் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு அறிஞர் அண்ணா பெயரையும், கோயம் பேடு புறநகர் மெட்ரோ ரயில் நிலையத்துக்கு ஜெயலலிதா பெயரையும் கடந்த ஆண்டு எடப்பாடி அரசு சூட்டியது. அந்த வரிசையில் இப்ப பாஷ்யம் பெயர் கோயம்பேட்டுக்கு சூட்டப்பட, அ.தி.மு.க.வில் இருப்பவர்களுக்கே அதிர்ச்சி. இந்த அதிர்ச்சி இப்ப எல்லாப் பக்கமும் பரவத் தொடங்கிய நிலையில், வைகோ உள்ளிட்ட அரசியல் கட்சித் தலைவர்கள், கண்டன அறிக்கை வெளியிட்டுக்கிட்டு இருக்காங்க.''

""அந்த பாஷ்யம் யாருப்பா? சுதந்திரப் போராட்ட தியாகியா?''

""நாட்டின் விடுதலையைக் கட்டமைத்தவ ரல்ல... கட்டிடங்களைக் கட்டுறவர். பாஷ்யம், பெரிய அளவில் வளர்ந்துக்கிட்டு வர்ற கட்டுமான நிறுவனத்தின் அதிபர். குறிப்பா ஓ.பி.எஸ்சு.க்கு, அவரோட பினாமின்னு கட்சிக்காரங்களே வர் ணிக்கும் அளவுக்கு ரொம்பவும் நெருக்கமானவர். அவரது பாஷ்யம் பில்டர்ஸ் நிறுவனத்தில் அமைச்சர்கள் பலரின் முதலீடுகள் இருக்குன்னு சொல்லப்பட்ட நிலையில், அவர் பெயரை ரயில் நிலையத்துக்கு சூட்டி அழகு பார்க்கப்பட்டிருக்கு. கோயம்பேடு மெட்ரோ பக்கத்தில் இருந்த ஒரு வில்லங்கமான இடத்தை வாங்கி, மினி சிட்டி என்று சொல்லும் அளவுக்கு ஒரு கட்டுமான வளாகத்தை உருவாக்கி வருகிறாராம். ஏற்கனவே ரெய்டுகளுக்கு ஆளானவர். ஓ.பி.எஸ்.சை முன்னிறுத்தும் அரசியல் விளம்பரங்களையும் இவர் செய்கிறாராம். இவரது முயற்சியில்தான் தலைமைச் செயலாளர் சண்முகம் இருந்த இடத்துக்கு ராஜீவ் ரஞ்சன் வந்திருக்கிறாராம். அதற்காகவே, டெல்லி செல்வாக்கைப் பயன் படுத்தி, பாஷ்யம் பெயரை, ஓ.பி.எஸ்.சும் ரஞ்சனும் சூட்ட வச்சிட்டாங்களாம். இதைப் பார்த்த பலரும், இனிமே ஊர் பேரெல்லாம் கூட மாறிடுமோங்கிற பீதியில் இருக்காங்க.''

""நீண்ட நாட்களா மாணவர்களின் போராட்டம் நடந்து வந்த நிலையில், சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக் கழக கட்டுப்பாட்டில் இருந்த ராஜா முத்தையா மருத்துவ கல்லூரி, ராஜா முத்தையா பல்மருத்துவ கல்லூரி, அதன் மருத்துவமனை, ராணி மெய்யம்மை செவிலியர் கல்லூரி ஆகிய மூன்றையும் தமிழக அரசு தன் கட்டுப்பாட்டில் எடுத்துக் கொண்டது. உயர் கல்வித் துறையில் இருந்ததால் கட்டண நிர்ணயம் தொடர் பாக சர்ச்சைகள் நீடித்தது. இதையடுத்து, இதற்கான சட்ட திருத்த மசோதாவை சட்டப் பேரவை யிலும் 5-ந் தேதி நிறைவேற்றியிருக்கு எடப்பாடி அரசு, அதனால் மருத்துவம் சார்ந்த இந்த 3 கல்லூரி கள் சுகாதாரத் துறையுடன் இணைக்கப்பட்டுவிட்டது.''

""நானும் கல்லூரி சம்பந்தப்பட்ட தகவல் சொல்றேன்... தமிழ்நாட்டில் முறையான தேர்வுகளை எழுதி தகுதி பெற்ற 1 லட்சத்து 28 ஆயிரம் பேர் விரிவுரையாளர் பணிக்காக காத்திருக்காங்க. கௌரவ விரிவுரையாளர்களை யும் நிரந்தரமாக்கலை. அதிகாரத்தில் இருப்பவர்கள் குறுக்கு வழியில் தங்க ளுக்கு வேண்டியவர்களை பணி நிரந்தரம் செய்யுறாங்களாம். இதைக் கண்டிச்சி 5 அம்ச கோரிக்கையை முன் வைத்திருக்கும் விரிவுரையாளர் கூட் டமைப்பு, இரத்தக் கையெழுத்திட்ட கடிதத்தை முதல்வருக்கு அனுப்பு வோம்னு சூளுரைச்சிருக்காங்க.''

_____________

கடன் தள்ளுபடி! உள்ஒதுக்கீடு? தேர்தல் சிறப்பு சலுகைகள்!

cm

2004 எம்.பி தேர்தலில் 40 தொகுதிகளிலும் அ.தி.மு.க தோற்ற நிலையில், தனது அதிரடி நடவடிக்கைகளைக் குறைத்து, சலுகை அறிவிப்புகளை 2006 சடட்மன்றத் தேர்தல் நேரத்தில் வெளியிடத் தொடங்கினார் ஜெயலலிதா. அதே பாலிசியை 2021 தேர்தல் நேரத்தில் கடைப்பிடிக்கிறார் எடப்பாடி பழனிசாமி. அதில் ஒன்றுதான், 12 ஆயிரத்து 110 கோடி விவசாயக் கூட்டுறவுக் கடன் தள்ளுபடி. இந்தக் கடன் தள்ளுபடி குறித்து தி.மு.க தலைவர் ஸ்டாலின் வாக்குறுதி அளித்தபோது, மிட்டாய் கொடுத்து ஏமாற்றுகிறார் என அறிவித்த எடப்பாடி தற்போது தேர்தல் நெருங்கும் நிலையில், 110 விதியின் கீழ் இதனை அறிவித்துள்ளார். விவசாய அமைப்பினர் பலரும் இதற்காக அவரை சந்தித்து நன்றி தெரிவிக்கும் படலமும் அரங்கேறியுள்ளது.

இதனையடுத்து, பா.ம.க நிறுவனர் டாக்டர் ராமதாஸ் முன்வைக்கும் வன்னியர் களுக்கான உள்ஒதுக்கீட்டுக்கான திட்டமும் கடைசிக்கட்டத்தில் உள்ளது என்கிறது கோட்டை வட்டாரம். போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியர்கள், ஜல்லிக்கட்டு இளைஞர்கள் ஆகியோர் மீதான வழக்குகளையும் வாபஸ் பெற்றுள்ளது தேர்தல் நேர சிறப்பு சலுகைகளை அளிக்கும் எடப்பாடி அரசு.

nkn100221
இதையும் படியுங்கள்
Subscribe