லோ தலைவரே, ஆட்சியில் மட்டு மல்லாது கட்சியிலும் தனது அதிகாரத்தை உயர்த்திக்கணும்னு முதல்வர் எடப்பாடி நினைக்கிறார்.''

""சாத்தான்குள விவகாரத்தில் முதல்வரை விசாரிக்கணும்னு நீதிமன்றம்வரை வழக்கு சென்று அவரை மிரள வச்சிருக்கும் நிலையில், தேர்தல் நெருங்கி வரும் நேரத்தில் ஓ.பி.எஸ்.சுக்கு தப்பித்தவறி கூட வாய்ப்பு கொடுத்துடக் கூடாதுன்னு எடப்பாடி கணக்குப் போடறார் போலிருக்கு.''

""உண்மைதாங்க தலைவரே! தான் முதல்வராக இருந்தாலும் கட்சியில் தன்னை இணை ஒருங்கிணைப்பாளர் ஆக்கிவிட்டு, தொடர்ந்து ஓ.பி.எஸ்.சே ஒருங்கிணைப்பாளராக இருப்பதை எடப்பாடியால் ஜீரணிச்சிக்க முடியலை. அதோடு, சசிகலா ரீலீஸ் ஆவதற்குள் கட்சியிலும் தன்னை வலுவா நிலை நாட்டிக்க நினைக்கிறார். எனவே கட்சிப் பதவிகளில் தன் ஆதரவாளர்களுக்கு 60 சதவீதத்தையும் ஓ.பி.எஸ். ஆதரவாளர்களுக்கு 40 சதவீதத்தையும் ஒதுக்கனும்ங்கிறதுதான் அவர் கணக்கு. மேலும் 3 சட்டமன்ற தொகுதிக்கு ஒரு மா.செ.ன்னு புதுசா நியமிக்க நினைக்கும் அவர், அவற்றில் தன் ஆதரவாளர்களை எப்படியாவது உட்கார வச்சிடனும்ன்னு கணக்குப் போடறார்.''

""அ.தி.மு.க. தலைமைக் கழக அலுவலகத்தில் ஐவரணி கூட்டம் நடந்ததே?''

Advertisment

rang

""ஆமாங்க தலைவரே, 6ந் தேதியன்னைக்கு எடப்பாடி விருப்பப்படி நடந்த அந்தக் கூட்டத்தில் ஓ.பி.எஸ். ஆதரவாளர்களான வைத்திலிங்கம், கே.பி.முனு சாமி மற்றும் எடப்பாடி ஆதரவாளர்களான தங்கமணி, வேலுமணி, நத்தம் விசுவநாதன் ஆகியோர் கலந்துக்கிட்டாங்க. அப்ப கட்சிப் பதவிகளில் எடப்பாடி விரும்பும் 60+40 ஃபார்முலா இப்போதைக்குத் தேவையில்லை. அதை நிர்பந்திச்சா கட்சியில் குழப்பம் வரும்னு கே.பி.முனுசாமியும் வைத்திலிங்கமும் எடப்பாடியின் திட்டத்துக்கு பிரேக் பிடிச்சாங்க. இதைத் தொடர்ந்து ஒருவருக்கு ஒருபதவி என்பதன் அடிப்படையில் அமைச்சர்களி டம் இருக்கும் மா.செ. பதவிகளை, வாங்கி புதியவர்களுக்குக் கொடுக்கனும்ங்கிற கருத்தும் தீவிரமா விவாதிக்கப்பட்டிருக்கு. விரைவில் கட்சி அமைப்புகளில் மாற்றம் கொண்டுவர அ.தி.மு.க. தயாராகுது. ஆனால் மாவட்டம் தொடங்கி ஒன்றியம் வரை பிரிப்பதற்கு அ.தி.மு.க.வினர் மத்தியில் கடும் எதிர்ப்பு கிளம்பியிருக்கு.''

""எடப்பாடி மீது விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவரும் எம்.பி.யுமான திருமாவளவனும் கடும் அதிருப்தியை வெளிப்படுத்தியிருக்காரே?''

Advertisment

""அரியலூர் அரசு மருத்துவக் கல்லூரிக்கான அடிக்கல் நாட்டு விழாவை, கோட்டையில் இருந்தபடியே நடத்தினார் எடப்பாடி. இதற்கான அழைப்பிதழ் தயாரான போது அதிகாரிகள் அவரிடம் சென்று, சிதம்பரம் நாடாளுமன்றத் தொகுதிக்குள் அரியலூர் வருவதால் அதன் எம்.பியான திருமாவளவன் பெயரை சேர்ப்பது பற்றி கேட்டிருக்காங்க. எடப்பாடியோ அதெல்லாம் வேணாம். அவருக்கு அழைப்புகூட அனுப்பத் தேவையில்லைன்னு சொல்லிட்டாராம். இதையெல்லாம் அறிந்த திருமா தரப்பு, மத்திய அரசின் 60 சத நிதியோடுதான் மருத்துவக் கல்லூரி கட்டப்படுது. மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம் தனக்கு தகவல் தெரிவித்திருக்கும் நிலையில், மாநில அரசு என்னைப் புறக்கணித்ததன் மூலம், எடப்பாடி தனது அரசியல் காழ்ப்பை காட்டியிருக்கார்ன்னு டெல்லி வரைக்கும் புகார் தெரிவிச்சிருக்காரு.''

""நடத்தப்படாமல் இருக்கும் உள்ளாட்சித் தேர்தலை நடத்த வலியுறுத்தி, சுப்ரீம்கோர்ட்டில் தி.மு.க. போட்ட வழக்கு விசாரணைக்கு வந்திருக்குதே?''

rang1

""ஆமாங்க தலைவரே, 9 மாவட்ட உள்ளாட்சித் தேர்தலையும் மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சித் தேர்தல்களையும் விரைவில் நடத்தனும்னு தி.மு.க தொடுத்த வழக்கு 7-ந் தேதி உச்சநீதி மன்றத்தில் விசாரணைக்கு வந்தது. அப்ப தேர்தல் நடத்துவது பற்றி மாநில தேர்தல் ஆணையம் 2 வாரத்தில் பதில் தரணும்னு நீதிமன்றம் உத்தரவிட்டது. இதைத் தொடர்ந்து தேர்தல் ஆணைய அதிகாரிகள், முதல்வர் எடப்பாடியிடம் ஆலோசிச்சிருக்காங்க. கொரோனா நெருக்கடியாலும் நிதி நெருக்கடியாலும் தேர்தலை இப்போதைக்கு நடத்த இயலாதுன்னு ஒரு டிராஃப்டை ரெடி பண்ணி முதல்ல எனக்கு அனுப்புங்க. அதைச் சரிபார்த்த பிறகு நீதிமன்றத்தில் தாக்கல் செய்துடலாம்னு சொல்லியிருக்காராம் எடப்பாடி.''

""பா.ம.க.விலும் பரபரப்பு தெரியுதே?''

""அண்மையில் பா.ம.க. இளைஞரணி செயலாளர் அன்புமணி தன் புஜத்தில், வன்னியர் சங்க சின்னமான அக்கினி கலசத்தை டாட்டூவாக வரைந்திருக்கும் படம், சமூக ஊடகங்கள்ல வைரல் ஆச்சு. இதைப் பார்த்த தர்மபுரி தொகுதி தி.முக எம்.பி.யும், தேர்தலில் அன்புமணியைத் தோற்கடித்தவருமான செந்தில், சின்ன வயசுல தடுப்பு ஊசி போட்டா சின்னதா ஒரு தழும்பு இருக்கும். சாதி மறுப்பு, சமூக நீதி பற்றி பெற்றோர் சொல்லி கொடுக்க வில்லை என்றால் இப்படிதான் பெரிய தழும்பா கையில வரும். இந்த சமூக நோய்க்கு மருத்துவம் அவசியம்னு விமர்சித்திருக்கிறார். இது பா.ம.வினரைக் கொதிப்படைய வைக்க, மாநிலம் முழுவதும் அவர் மீது புகார் கொடுக்க முடிவெடுத்திருக்காங்க. அதெல்லாம் வேணாம்னு டாக்டர் ராமதாஸ் தடுத்தாலும், அன்புமணி இதை சீரியசாவே பார்க்கிறாராம்.''

""நான் ஒரு தகவல் சொல்றேன்... ஐ.பி.எஸ். அதிகாரிகள் அதிரடி டிரான்ஸ்பர் பற்றி நம்ம நக்கீரன் வெளியிட்ட செய்தியில், தென்சென்னை கூடுதல் கமிஷனராக தினகரன் ஐ.பி.எஸ் கடைசி நேரத்தில், முதல்வருக்கு வேண்டியவர்களின் சிபாரிசால் நியமிக்கப்பட்டார்னு சொல்லப்பட்டிருந்தது. ஊரடங்கு காலத்தில் மக்களைக் காக்கும் பணியில் திறம்பட செயல்பட்டு, அதனால் கொரோனா பாதிப்புக்குள்ளானபோதும், மனதிடத்துடன் மீண்டு வந்திருக்கும் தினகரன் நம்மிடம், ""நான் யார் மீதும் சவாரி செய்து வரவில்லை. அந்த வழக்கமும் இல்லை. வட சென்னையில் கூடுதல் கமிஷனராக இருந்து, தென்சென்னைக்கு வந்திருக்கேன். எந்த இடமாக இருந்தாலும் என் கடமையை சரிவரச் செய்வேன்''னு சொன்னாரு.''