ராங்கால் : 2021 சட்டமன்றத் தேர்தல்! ரஜினிதான் கிருஷ்ணர்! பா.ஜ.க. வியூகம்! நிர்மலா மீது மோடி அதிருப்தி!

ffa

"ஹலோ தலைவரே, கிருஷ்ண பரமாத்மாவையும் அர்ஜுனனையும் அமித்ஷாவோடும் மோடியோடும் ஒப்பிட்டு, ரஜினி பேசிய பேச்சு அரசியல் வட்டாரத்தில் ஹாட் டாபிக் ஆயிடிச்சி.''’’

""ஆமாம்பா, ரஜினிக்கு அமித்ஷாவும் மோடியும் தொடர்ந்து முக்கியத்துவம் தர்றாங்க. அதனாலதான், துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடுவின் "லிசனிங் லேர்னிங் அண்ட் லீடிங்' அப்படிங்கிற புத்தக விழாவிலும் பேசும் வாய்ப்பைக் கொடுத்தாங்க. விழாவில் அவருக்கு அதிக முக்கியத்துவம் தரப்பட்டுச்சு.''’’

""உண்மைதாங்க தலைவரே, எப்படியாவது 2021 சட்டமன்றத் தேர்தலுக்கு முன்னாடி, ரஜினியைத் தீவிர அரசியலுக்கு கொண்டுவந்துடணும்னு பா.ஜ.க. நினைச்சி வியூகம் வகுக்குது. வெங்கையா நாயுடு புத்தக விழாவில் கலந்துக்கிட்ட ரஜினி, காஷ்மீரின் சிறப்பு சலுகைகளை ரத்து செய்த காரணத்துக்காக அமித்ஷாவைப் பாராட்டு மழையில் நனைச்சிட்டார். இதனால் தான் கண்டுவரும் கனவுகள் விரைவில் தமிழகத்தில் பலிச்சிடும்னு பா.ஜ.க. நம்புது.''’’

dd

""தமிழகத்தில் ஆட்சியைப் பிடிச்சிட முடியும்னு பா.ஜ.க. நம்புதா?''’’

""பா.ஜ.க.வைப் பொறுத்தவரை, தி.மு.க. எந்த வகையிலும் ஆட்சிக்கு வந்துடக் கூடாதுங்கிறதுதான் முக்கிய இலக்கு. தி.மு.க.வின் வெற்றியைத் தடுத்தால், அ.தி.மு.க.வைத் தங்கள் விருப்பம்போல இயக்கலாம். அதை ரஜினி மூலமா செய்யலாம்னு நினைக்குது. தங்கள் கொள்கையோடு ஒத்துப்போகக்கூடிய ரஜினியை தீவிர அரசியலுக்குக் vகொண்டுவவருவதற்கு பல ப்ளான் போடப்பட்டிருக்கு. ரஜினி புதுப்புது படங்களை ஒத்துக்கிட்டாலும், வரும் சட்டமன்றத் தேர்தலில் களத்தைச் சந்திப்பேன்னும் சொல்லிக் கிட்டு இருக்கார். அதோட நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்பும், தேர்தல் முடிவு வந்த பிறகும் பா.ஜ.க.வுக்கு ஆதரவாக ரஜினி வாய்ஸ் கொடுத்தார். இப்ப நடந்துமுடிஞ்ச வேலூர் இடைத் தேர்தலிலும் ரஜினி மக்கள் மன்றத்தினர், ரஜினியிடமிருந்து வந்த உத்தரவின் அடிப் படையில் இரட்டை இலைக்கு வாக்களிக்கணும்னு கூட்டம் போட்டுப் பேசியதோடு, பா.ஜ.க.வுக்கு நெருக்கமான இலை வேட்பாளர் ஏ.சி.எஸ்.சுக்கு ஆதரவா வாக்கு சேகரித்தாங்க. இதையெல்லாம் கவனிச்சித்தான், ரஜினியை மையமாக்கி, ஒரு அரசியல் மாற்றத்தை இங்கே ஏற்படுத்த பா.ஜ.க. விரும்புது.''’’

""எப்படி?''’’

""ரஜினியை சட்டமன்றத் தேர்தலுக்

""ரஜினியை சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாகவே அரசியல் கட்சியைத் தொடங்க வைச்சி, அதோடு அ.தி.மு.க. கூட்டணி அமைச்சா அது தி.மு.க.வுக்கு எதிரான பெரிய அணியா இருக்கும்ன்னு பா.ஜ.க. கணக்குப்போடுது. அப்படி நடந்தால், பா.ஜ.க. நேரடி கூட்டணியில் இல்லாமல், திரைமறைவில் இருக்குமாம். ஒருவேளை, ரஜினியை முதல்வர் வேட்பாளரா ஏற்க அ.தி.மு.க. சீனியர் தலைவர்களும் நீண்டகாலத் தொண்டர் களும் விரும்பாமல் போனால், ஓ.பி.எஸ். தலைமையில் அ.தி.மு.க.வில் மீண்டும் ஒரு பிளவை ஏற்படுத்தி, அதை ரஜினியும் பா.ஜ.க.வும் இணைந்த கூட்டணியுடன் சேர்த்து, தேர்தலை சந்திப்ப துன்னும் கணக்கு போடப்பட்டிருக்கு. எப்படிப் பார்த்தாலும் 2021 சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க.வுக்கு ரஜினிதான் கிருஷ்ணராக கூட்டணித் தேரை ஓட்டப் போகிறார். சென்னை புத்தக வெளியீட்டு விழாவுக்கு வந்த அமித்ஷா ரஜினியை, தான் தங்கியிருந்த கவர்னர் மாளிகைக்கு அழைத்தாராம். அங்கே சந்திப்பது சரியா இருக்காதுன்னு ரஜினி மறுத்துட்டாராம்.''’

""பா.ஜ.க.வின் செல்லப்பிள்ளை யாவே ஓ.பி.எஸ். இருக்கும் நிலையில், அமித்ஷாவை சந்தித்துப் பேசியிருக்காரே இ.பி.எஸ்.?''’’

sta

’""ராஜ்பவனில் நடந்த சந்திப்பு பற்றி நம்ம நக்கீரனில் விரிவான செய்தி இருக்கு. இருந்தாலும் எனக்கு கிடைச்ச விவரங் களையும் சொல்றேன். முதல் வர் மேற்கொள்ளவிருக்கும் வெளிநாடு பயணத்தில், முதலீட்டை இழுப்பதோடு ஆரோக்கியம் குறித்த கவனமும் இருக்குமாம். அவர் வெளிநாடு போகும் போது, தன்னிடம் இருக்கும் உள்துறை, நெடுஞ்சாலைத்துறை உள்ளிட்ட முக்கிய துறைகளை அவர் ஓ.பி.எஸ்.சிடம் ஒப்படைக்க விரும்பலை. தன் நம்பிக்கைக்குரிய அமைச்சர் களான தங்கமணி உள்ளிட்டோரிடம் பகிர்ந்து கொடுத்துட்டுப் போகலாம்னு நினைச்சார். இதையறிந்த ஓ.பி.எஸ்., பஞ்சாயத்து வச்சார்.''’’

""புத்தக விழா நடந்த கலைவாணர் அரங்கத்தில் மேடையின் பின்பக்கத்திலேயே எடப்பாடியும் ஓ.பி.எஸ்.சும் அமித்ஷா எதிரிலேயே கடுமையான வார்த்தைகளால் மோதிக்கிட்டாங்களாமே?''

""மேடைக்கு பின்புறம் அமித்ஷா, ஆடிட்டர் குருமூர்த்தி ஆகியோருடன் பேசிக்கிட்டிருந்த முதல்வர் எடப்பாடி, வெளிநாட்டு டூரின் போது என் துறைப் பொறுப்புகளை ஓ.பி.எஸ்.சிடம் நான் ஒப்படைக்க விரும்பலை. அவர் தந்திர மானவர்ன்னு அழுத்தமா சொல்ல, ஆடிட்டரோ, அப்படியெல்லாம் நினைக்காதீங்க. துணை முதல்வரா இருக்கும் ஒருவரை விட்டுட்டு இன்னொருவரிடம் எப்படி பொறுப்பைக் கொடுப்பீங்கன்னு கேட்டிருக்கார். அந்த சமயம் அங்கே வந்த ஓ.பி.எஸ்., என்னை டம்மியாவே வச்சிக்கப் பார்க்கிறார் எடப்பாடி. தன் பொறுப்பை இன் னொரு அமைச்சரிடம் கொடுத்து, ஏனைய அமைச்சர்களின் முன் என் இமேஜை எடப்பாடி சரிக்க நினைக்கிறார்ன்னு புகார்களை அடுக்கியிருக்கார். அப்ப எடப் பாடிக்கும் ஓ.பி.எஸ்.சுக்கும் இடையில் கடும் வாக்குவாதம் ஏற்பட்டிருக்கு. அமித்ஷா தான் அமைதிப்படுத்தி யிருக்கார். ஓ.பி.எஸ்.சுக்கு உரிய மரியாதையைக் கொடுத்தே ஆகணும்னு எடப்பாடியிடம் அமித்ஷா கறார்க் குரலில் சொல்லியிருக்கார். எடப்பாடியிடம் டெல்லி கறாராத்தான் இருக்காம்.''’’

""தமிழக அமைச்சரவையில் மாற்றம் எப்பன்னு ஆளுந்தரப்பிலேயே எதிர்பார்ப்பு இருக்குதே?''’’

d

""ஃபாரின் டூருக்கு முன்னாடி அமைச்சரவை மாற்றத்தைச் செய்திடணும்ன்னு எடப்பாடி நினைக்கிறார். அமைச்சரவையில் ஏற்கனவே பதவி இழந்த பாலகிருஷ்ண ரெட்டி, பதவி நீக்கம் செய்யப்பட்ட மணிகண்டனின் துறைகளை குறிவச்சிப் பலரும் லைன் கட்டி நிக்கிறாங்க. ஆனால் முதல்வர் எடப்பாடியோ, முதலில், குடும்பப் பாசத்துடன் பழகும் உளுந்தூர்பேட்டை எம்.எல்.ஏ. குமரகுருவை அமைச்சர் நாற்காலியில் உட்காரவைக்க ஆசைப்படறாராம். அதே நேரத்தில் ஏற்கனவே போர்க்கொடி தூக்கிய தோப்பு வெங்கடாசலம் போன்றவங்களும் அமைச்சர் பதவியை எதிர்பார்க்குறாங்க.''’’

""வேலூர் தேர்தல் முடிவை எடப்பாடி எதிர்பார்த்திருந்தாரா?''’’

""அதிகார பலத்தால் ஜெயிச்சிட முடியும்ங் கிறதுதான் கணக்கா இருந்தது. அவருக்கு உளவுத்துறை அனுப்பிய அறிக் கையில், அமைச்சர் கே.சி.வீரமணி சமு தாய ரீதியாக, துரை முருகனிடம் காம்ப் ரமைஸ் ஆயிட் டாருன்னும், அவரால், அ.தி.மு.க. மற்றும் பா.ம.க.வில் உள்ள வன்னிய வாக்குகளும் தி.மு.க. பக்கம் திரும்பிடிச்சின்னும் தெரிவிக்கப்பட்டிருக்கு. அதோடு, டெல்லியுடன் ஏ.சி.எஸ். நெருக்கமா இருந்தும் வேலூரில் பா.ஜ.க.வினர் சின்னத் துரும்பைக் கூட கிள்ளிப் போடலைன்னும் உளவுத்துறையினரின் ரிப் போர்ட்டில் சொல்லப்பட்டிருக்குதாம்''’’

""ஆனாலும் பா.ஜ.க.வின் உறவை விட முடியாதே? சிறையில் இருக்கும் சசிகலாவும் இப்ப பா.ஜ.க.வின் நட்பை விரும்பறாராமே?''’

dd

""சிறையிலிருந்து சீக்கிரமா விடுதலை யாகணும்னா அதுக்கு பா.ஜ.க.வின் ஒத்துழைப்பு அவசியம்ன்னு சசிகலாவுக்குப் புரியுது. அதனால் பா.ஜ.க.வுடன் நட்பை வளர்த்துக்கொள்ள அவர் நினைக்கிறாராம். ஆனால் தினகரனோ சசியின் நிலைமையைப் பற்றி யோசிக்காமல், தொடர்ந்து பா.ஜ.க.வை எதிர்ப்பதிலேயே குறியாக இருக் கிறாராம். அதனால் சசிகலாவுக்கும் தினகரனுக்கும் இடையில் இணக்கமான உறவு இல்லை என்கிறார்கள். அதே சமயம், இளவரசியின் மகனான விவேக், தன் கட்டுப்பாட்டில் இருக்கும் ஜெயா டி.வி.யில் சசிகலாவின் குறிப்பறிந்து, பா.ஜ.க.வுக்கு எதிரான செய்திகள் வராமல் பார்த் துக்கறாராம். அதேபோல், அந்த டி.வி.யில், தினகரன் பற்றிய செய்தி களுக்கும் பிரேக் போட்டுவிட்டாராம். இதனால் எரிச்சலான தினகரன், தமிழ் நாட்டின் முக்கிய நதியின் பெயரில் உள்ள தொலைக் காட்சி சேனலை சைலண்ட்டா வாங் கிட்டாராம். அந்த சேனலின் பழைய ஊழியர்கள் வீட்டுக்கு அனுப் பப்பட்டு, புதிய வேகத்துக்கு அந்த சேனலைத் தயார்படுத்துறாராம் தினகரன்.''

""வைகோ விவகாரத்தில் தி.மு.க. தலைமை மேலே காங்கிரசுக்கு மனத்தாங்கல்ன்னு செய்தி வருதே?''’

""காஷ்மீர் விவகாரத்தில் காங்கிரசை நாடாளுமன்றத்திலேயே விமர்சித்தார் வைகோ. அது பற்றி கூட்டணியின் தலைமை என்ற வகையில் தி.மு.க. ஏன் வைகோவிடம் விளக்கம் கேட்கலை என்பது காங்கிரஸ் தரப்பின் ஆதங்கம். அதேபோல் டெல்லி சென்ற வைகோ, பா.ஜ.க. தலைவர்களைச் சந்தித்தாரே தவிர சோனியா காந்தியையும், ராகுல்காந்தியையும் சந்திக்க முயலலை. இதையும் சுட்டிக்காட்டும் காங்கிரஸ் பிரமுகர்கள், வைகோ மூலம், தங்கள் கூட்டணியில் இருந்து காங்கிரஸை தி.மு.க. கழற்றிவிடப் பார்க்கிறதா? என்ற கேள்வியையும் எழுப்பிக்கொண்டு இருக்கிறார்கள். தி.மு.க. தரப்போ, வைகோவின் அரசியல் தனிப்பட்டது. அவரின் ஒவ்வொரு அரசியல் நடவடிக்கையிலும் தி.மு.க எப்படி கேள்வி கேட்க முடியும்ன்னு பதில் கேள்வி எழுப்புது.''’’

""மத்திய மந்திரி சபையிலும் மாற்றம் இருக்கும்ன்னு சொல்லப்படுதே?''’

""ஆமாங்க தலைவரே, இந்த மாத இறுதிக்குள் மத்திய அமைச்சரவையை விரிவாக்கம் செய்ய திட்டமிட்டிருக்கிறாராம் மோடி. அப்போது சில அமைச்சர்களின் இலாகாக்களையும் மாற்றி யமைக்கப் போகிறார்ன்னு டெல்லி தரப்பிலிருந்தே செய்திகள் வருது. இதில் குறிப்பா, தமிழகத்தைச் சேர்ந்தவரான நிர்மலா சீதாராமனிடம் இருக்கும் நிதித்துறையை மோடி, பியூஷ்கோயலிடம் மாற்றிவிடப் போகிறார் என்றும் சொல்லப் படுகிறது. நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த பட்ஜெட், பொருளாதார ரீதியில் பல பின்னடைவுகளை ஏற்படுத்திக் கொண்டிருக் கிறதாம். கடந்த காலங்களில் இல்லாத அளவுக்கு 5.8 சதவீதமாக பொருளாதாரச் சரிவை நாடு சந்தித்திருக்கிறதாம். எங்களிடம் ஆலோசித்த மாதிரி பட்ஜெட் இல்லை என்று நிதி ஆயோக் அதிகாரிகள் மோடியிடம் புகார் தெரிவித்ததாகவும் சொல்கிறார்கள். தற்போது வெளிநாட்டு முதலீடுகளில் ஏற்பட்டுள்ள தேக்கத்துக்கும் பங்குச் சந்தை வீழ்ச்சிக்கும், விலைவாசி ஏற்றத்துக்கும் அவர்போட்ட பட்ஜெட் வழிவகுப்பதாகப் பரவலாகப் புகார் எழுந்திருக்கிறதாம். இதுபோல் புகாருக்கு ஆளான அமைச்சர்கள் சிலரின் இலாகாக்களும் மாற்றியமைக்கப்பட இருக்குதாம்.''’

""நிர்மலா சீதாராமனை பா.ஜ.க. மேலிடம் அத்தனை சுலபத்தில் சும்மா விட்டுடுமா?’’

“அவருக்கு வேறு இலாகா தரப்படு வதோடு, தமிழ்நாட்டு பா.ஜ.க. வளர்ச்சியை கவனிக்கும் பொறுப்பும் தரப்படுமாம். சென்னை வந்துசென்ற அமித்ஷா, தமிழக பா.ஜ.க பிரமுகர்களுடன் கட்சியின் நிலவரம் குறித்து விசாரித்திருக்கிறார். அப்போது பா.ஜ.க. அரசின் புதிய சட்டத் திருத்தங்களின் சாதக அம்சங்களை மக்களிடம் எடுத்துச் சொல்ல வேண்டும் என்று அவர்களைக் கேட்டுக் கொண்டிருக்கிறார். அதோடு, தமிழக பா.ஜ.க.வுக்கான புதிய தலைவர் பற்றியும் ஆலோசிக்கப்பட, அதில் நயினார் நாகேந்திரனும் கருப்பு முருகானந்தமும் முன்னணியில் இருக்கிறார்களாம்.''’’

""காஷ்மீர் கவர்னராக முன்னாள் டிஜி.பி. விஜயகுமார் நியமிக்கப்பட இருக்காருன்னு ரெண்டுவாரமா தகவல் கிளம்புதே?''

""இது கிளம்பிய தகவல் இல்லை. கிளப்பி விடப்பட்ட தகவல். வீரப்பன் வேட்டையின் மூலம் புகழ் தேடிக் கொண்டவரான விஜய குமாருக்கு ஆதரவான மீடியா டீம் ஒன்று இருக்கிறது. அதன் மூலம் தான் இப்படியொரு செய்தி பரப்பப்பட்டி ருக்கிறது. இந்த செய்தி மத்திய உள்துறையின் காதுவரை போக, அவர் தன்னைத் தானே கவர்னராக நியமிச்சிக் கிட்டாரான்னு அங்கிருக் கும் அதிகாரிகள் கேட்டி ருக்காங்க. காஷ்மீர் மாநிலத்தின் தட்ப வெப்ப நிலையை மத்திய அரசு கூர்ந்து கவனித்துக் கொண்டிருக்கிறது.''’

nkn160819
இதையும் படியுங்கள்
Subscribe