"ஹலோ தலைவரே, தீபாவளி கொண்டாட்டத்துக்காக சென்னையிலிருந்து சொந்த ஊருக்கு கிளம்புனவங்க பஸ், ரயில் பிடிக்கிறதுக்குள்ளே பெரும்பாடு பட்டாங்க. போக்குவரத்து அமைச்சர் தலைமை யில் கோயம்பேட்டில் சீரியஸா செயல்பட்ட டீமால ஓரளவு நிம்மதியா பஸ் பிடிச்சி, ஊருக்குப் போய் தீபாவளியைக் கொண்டாட முடிஞ்சிது.''’’

""என்னத்த கொண்டாடுறது, தீபாவளிக்கு வெடி வெடிக்கவே ஏகப்பட்ட கட்டுப்பாடு?''’’

deepavali-womens

""கோர்ட் தீர்ப்பையே புஸ்வாணம் ஆக்கிட்டாங்க போலிருக்கே?''’

""ஆமாங்க தலைவரே, 2 மணிநேரம்தான் வெடிக்கலாம்ங்கிற சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு மக்களை கடுப்பாக்கிடிச்சி. மீறி வெடிச்சி, போலீஸ் நடவடிக்கை எடுத்தா அது அரசாங்கத்து மேலான கோபமா மாறிடக்கூடாதுன்னு டி.ஜி.பி.யான டி.கே.ராஜேந்திரனையும், உள்துறைச் செயலாளரான நிரஞ்சன் மார்ட்டியையும் கேட்டுக்கிட்டார் முதல்வர் எடப்பாடி. அவங்களும் சக அதிகாரிகளை வச்சிக்கிட்டு இது தொடர்பா அலசினாங்க. கடைசியில், பட்டாசு வெடிப்பதைத் தடுத்தால் பிரச்சினை வரும். அதனால் கோர்ட் கொடுத்த காலக் கெடுவுக்கு அப்பால் வெடிப்பவர்கள் மீது வழக்குப் போடாமல், அவர்கள் பெயர்களை பட்டியல் மட்டும் எடுத்து வச்சிக்கு வோம். அதன் பிறகு சுப்ரீம்கோர்ட் எப்படி வழிகாட்டுதோ, அதன்படி நடந்துக்கலாம்னு முடிவெடுத்தாங்க.''’

""சரிப்பா, இடைத்தேர்தல் தொடர்பா, அரசியல் கட்சிகளுக்குள்ளும் மத்தாப்பு, வெடிச் சத்தமெல்லாம் கேட்குதே?''’

""முக்கியமான எல்லாக் கட்சிகளிலுமே பரபரப்பான வியூகங்கள் ஓடிக்கிட்டு இருக்கு. தன் 18 எம்.எல்.ஏ.க்களைப் பறிகொடுத்திருக்கும் தினகரன், மீண்டும் ஜெயிச்சாக ணும்னு பரபரக்கிறார். அதேபோல் அந்த 18 தொகுதிகளின் மீது ஆர்வம் காட்டும் தி.மு.க.வின் கூட்டணிக் கட்சிகளும் இடைத்தேர்தல் வியூகங்களில் இறங்கியிருக்கு. குறிப்பாக, ம.ம.க. மீண்டும் ஆம்பூர் தொகுதி மீதும், பெருந்தலைவர் மக்கள் கட்சி தனபாலன், பெரம்பூர் தொகுதி மீதும் கண்வைத்திருக்க, சோளிங்கரில் வெற்றி வாய்ப்பைப் பறிகொடுத்த காங்கிரஸ், மறுபடியும் அங்கே நிற்பதோடு, திருப்பரங்குன்றத்தையும் கூடுதலாகத் தி.மு.க.விடம் கேட்டு வாங்கும் முடிவில் இருக்கு. தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலினைப் பொறுத்தவரை தேர்தல் தேதி உறுதியானதும் 20-ல் எத்தனை கூட்டணிகளுக்கு ஒதுக்குவதுன்னு முடிவெடுக்கலாம்னு இருக்காங்களாம்.''’

stalin""தி.மு.க. பக்கம் நிற்கும் விடுதலைச் சிறுத்தைகள், ம.தி.மு.க. போன்ற கட்சிகளுக்கெல்லாம் இடைத்தேர்தல் ஆசை ஒண்ணும் இல்லையா?''’

""இடைத்தேர்தலில் தி.மு.க.வை முழுமையாக ஆதரிக்கும் நிலைப்பாட்

டில் இருக்கிறார்கள் சிறுத்தைகள். அதே சமயம், நாடாளுமன்றத் தேர்தலில் சிதம்பரம் தொகுதியில் நிற்க விரும்புவதாக திருமாவளவன் அறிவிச்சிருக்கார். இதேபோல் வடசென்னையில் தி.மு.க. கூட்டணி சார்பில் வைகோ நிறுத்தப்பட வேண்டும் என்கிற விருப்பத்தை, அவர் தரப்பைச் சேர்ந்தவர்கள் வைக்கிறார்கள். காங்கிரஸிலும் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன், திருப்பூரில் சீட் வாங்கும் ஆர்வத்தில் இருக்கார்.''

""ஆளுங்கட்சியோட இடைத்தேர்தல் வியூகம் என்னன்னு சொல்லலையே?''’

""சொல்றேங்க தலைவரே, இடைத் தேர்தல் களம் பற்றி உளவுத்துறை கொடுத்த சர்வே ரிப்போர்ட் முதல்வர் தரப்பை அதிர்ச்சியடைய வச்சிருக்கு. அந்த ரிப்போர்ட்டில், இடைத்தேர்தல் நடக்கப் போகும் 20 தொகுதிகளில் 10 தொகுதியைத் தி.மு.க. கைப்பற்றும்னு கள நிலவரத்தோடு தெளிவா சொல்லப்பட்டிருக்கு. அதேபோல், 6-ல் இருந்து 8 தொகுதிகள் வரை தினகரன் கட்சிக்கு சாதகமான நிலை இருக்குதுன்னும், 2-ல் இருந்து 4 தொகுதிகள் வரை இழுபறி பொஷிசன்ல இருக்குன்னும் அதில் சொல்லப் பட்டிருக்கு. ஆளுங்கட்சிங்கிற அதிகாரம், இரட்டை இலை சின்னம் இதெல்லாம் இருந்தும் இந்த நிலையான்னு முதல்வர்- துணை முதல்வர் எல்லாருக்கும் அதிர்ச்சி.''

""8 தொகுதிகளுக்கு குறைவா அ.தி.மு.க ஜெயிச்சா அது ஆட்சிக்கே ஆபத்தாச்சே!''

""அதனால்தான் தென் மாவட்டங்களில் இருக்கும் நாடார் சமூக ஓட்டுக்களை ஈர்க்க, நடிகர் சரத்குமாரின் சமத்துவ மக்கள் கட்சியைக் கூட்டணிக்குள் இழுத்துக்கொள்ள அ.தி.மு.க. விரும்புது. இதற்கு சரத் தரப்பிடமிருந்தும் க்ரீன் சிக்னல் கிடைச்சிருக்காம். தினகரனின் ரைட் ஹேண்ட்டான வெற்றிவேலின் பெரம்பூர் தொகுதியில், சரத்தை நிறுத்தலாம்ன்னும், தி.மு.க.வுக்கும் தினகரன் கட்சிக்கும் அவர் டஃப் ஃபைட் கொடுப்பாருன்னும் எடப்பாடித் தரப்பு கணக்குப் போட்டுக்கிட்டு இருக்கு.''’

ttv""ஆளுங்கட்சித் தரப்பில் தீபாவளி கணக்குகளும் இருக்குமே!''

""துணை முதல்வர் ஓ.பி.எஸ். தன் பகுதியைச் சேர்ந்த கட்சிப் பிரமுகர்களை போன 1-ந் தேதி கைலாசம்பட்டியில் இருக்கும் தன் பண்ணை வீட்டிற்கு வரச்சொன்னார். ந.செ., ஒ.செ.க்களுக்குத் தலா 50 ஆயிரமும், மாவட்ட நிர்வாகிகளுக்குத் தலா 20 ஆயிரமும், மற்ற சார்பு அணிகளின் செயலாளர்களுக்குத் தலா 10 ஆயிரமும், ஊராட்சி நிர்வாகி களுக்குத் தலா 3 ஆயிரமும், மற்ற கீழ்மட்டப் பொறுப் பாளர்களுக்குத் தலா ரூ 1000-மும் கொடுத்தார். இது போன வருசம் கொடுத்த அன்பளிப்பில் பாதிதானாம். அந்த ஆதங்கம் சிலருக்கு இருக்க, கீழ்மட்டப் பொறுப்பாளர்களோ, கட்சிக்காக நேரம் காலம் பார்க்காம வேலை பார்க்கும் எங்களுக்கு மட்டும் ஆயிரம் ரூபாய் தானான்னு பொருமுறாங்க. அதேநேரத்தில், மாவட்டத்தில் தனக்கு எதிர் அரசியல் பண்ணிக்கிட்டு இருந்த கம்பம் எம்.எல்.ஏ. ஜக்கையனை இந்தமுறை தன் பக்கத்தில் உட்கார வச்சிக்கிட்டதில் ஓ.பி.எஸ்.சின் சாதுர்யம் தெரியுதுன் னும் ஊர்க்காரங்க சொல்றாங்க.''’’

""வி.வி.மினரல்ஸ் வைகுண்டராஜனைக் கூட இப்படி ஒரு டெக்னிக் மூலம்தான் பா.ஜ.க. வளைச் சிருக்குதாமே?''

eps-ops

""பிசினஸ்மேன்களை அதிகாரத்தில் இருப்பவங்க பல வழிகளிலும் வளைப்பாங்க. தினகரனோட இணக்கமா இருக்கும் வைகுண்ட ராஜனை பா.ஜ.க. பக்கம் கொண்டுவரணும் என்பதுதான் அவர் தொடர்பான இடங்களில் நடந்த வருமான வரித்துறை ரெய்டுகளின் பின்னணியில் இருந்த டிமாண்டாம். அதோட, நாடாளு மன்றத் தேர்தலின் போது தென் மாவட்டத்தைச் சேர்ந்த 10 தொகுதிகளுக்கான செலவை முழுசா ஏத்துக்கணும்னும் அறிவுறுத்தப் பட்டிருக்கு. அதற்கான சரியான ரெஸ்பான்ஸை எதிர்பார்த்துதான் இந்த அதிரடி ரெய்டாம். இந்த ரெய்டின் போது, வைகுண்டராஜனின் அக்கவுண்டன்ட்டான கோகிலா என்பவரை அதிகாரிகள் துருவியபோது, அவருக்கே கொடைக்கானல் பகுதியில் பலகோடி ரூபாய்க்குச் சொத்து இருப்பதைக் கண்டு ஆடிப் போயிருக் காங்க. இதில் பல சொத்து விவரங்கள் வைகுண்டராஜனுக்கே தெரியாதாம். அந்தக் கோகிலா மூலம் வைகுண்ட ராஜனின் முழு கணக்கு வழக்கையும் அதிகாரிகள் எடுத்துவிட்டார்களாம். இதைத் தொடர்ந்து டெல்லிக்கேற்றபடி தலையாட்ட ஆரம்பிச்சிடுச்சாம் வைகுண்டராஜன் தரப்பு.''’

""பா.ஜ.க.வின் அதிகாரச் செல்வாக்கு.... திரைக்குப் பின்னாலும் பவர்ஃபுல்லா வேலை செய்யுதே?''’

""உண்மைதாங்க தலைவரே, பவரை மட்டும் அல்லாது பவர் புள்ளிகளையும் கையில் வச்சிக்கிறதுதான் பா.ஜ.க.வின் பாலிஸி. குறிப்பா அமித்ஷா, சிலருக்கு அதிக பவரை ஏற்படுத்தி அவர்களைக் கையில் வச்சிக்கிட்டு, அரசியல்ல வசதியாகக் காய் நகர்த்துகிறவர். அந்த வகையில் அவரிடம் இருக்கும் ஒரு பவர் புள்ளிதான் கேரள கவர்னர் சதாசிவம். ஒரு பெரும் வழக்குச் சிக்கலில் இருந்து, தனக்குச் சின்னச் சிராய்ப்புக் கூட இல்லாமல் அமித்ஷா தப்பித்தார். இப்ப இந்த சதாசிவம் மூலம்தான் தமிழக முதல்வர் எடப்பாடிக்குச் சாதகமாக வழக்குகளின் வெற்றிகள் கிடைச்சிக்கிட்டு இருக்கு. இன்றைக்கு எடப்பாடி அரசையே காப்பாற்றும் காவல் அரணா சதாசிவம் இருக்காராம். அந்த கெத்தில்தான் அமித்ஷா, கேரளாவுக்கே போய், சபரிமலை விசயத்தில் சரிப்பட்டு வராட்டி, கேரள அரசையே கலைப்பேன்னு சவாலும் விட்டாராம்.''’

""எதிர்ப்பக்கம் இருப்பவர்களைக்கூட பா.ஜ.க. தன் பக்கம் இழுக்கப் பார்ப்பது வழக்கம்தானே!''

Advertisment

vaiko-thiruma

""ஆமாங்க தலைவரே.. ஆனா, தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி தலைவர் திருநாவுக்கரசர் தனது ஆதரவாளரான ரூபி மனோகரனுக்காக பா.ஜ.க.வைச் சேர்ந்த துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு விருப்பப்படி நடந்துக்குவதா ராகுல் வரை புகார் போயிருப்பதா போன முறை நாம பேசிக்கிட்டோமே, அதை திருநாவுக்கரசர் தரப்பு முழுமையா மறுக்குது. டெல்லி மேலிடத்திடம் திருநாவுக்கரசருக்கு நல்ல பெயர் இருப்பதையும், தி.மு.க. கூட்டணியைப் பலப்படுத்துவதிலும் ராகுல்தான் பிரதமர்ங்கிற முழக்கத்தை முன்னெடுப்பதிலும் திருநாவுக்கரசர் தீவிரமா இருப்பதையும் அவரது ஆதரவாளர்கள் சுட்டிக்காட்டுறாங்க.''’’

""சசிகலா தரப்பில் என்ன மூவ்மெண்ட் இருக்குது?''’

""சகோதரரின் உடல் சுகவீனத்தைக் காட்டி இளவரசி பரோல்ல வந்திருந்தாலும், அவர் மருமகளும் விவேக்கின் மனைவியுமான கீர்த்தனாவின் வளைகாப்பு வைபவத்தையும் நடத்தி வச்சிட்டுதான் அவர் சிறைக்குத் திரும்ப றாராம். எடப்பாடி தரப்பின் தூதுப் படலத் தையும் இளவரசி தரப்பு கவனிச்சி, சசிகலா வுக்கு தகவல் அனுப்புது.''’

""தீபாவளி நேரம்.. சினிமா இல்லைன்னா இன்ட்ரஸ்ட்டிங்கா இருக்காதே.. "எந்திரன் 2.0' ட்ரெய்லர் வெளியீட்டில் ரஜினி ஏக உற்சாகத்தோடு பேசியிருப்பதை கவனிச்சியா?''’

rajini

Advertisment

""600 கோடி முதலீட்டில் தயாராகியிருக்கும் எந்திரன் 2.0, அதிக கவனத்தோடு புரமோட் ஆகுது. டிரெய்லர் வெளியீட்டில், ரஜினியோடு, அக் ஷய்குமார், எமி ஜாக்சன்னு நட்சத்திரப் பட்டாளம் அணிவகுத்துச்சு. இந்தப் படத்தை லைக்கா நிறுவனம் சார்பில் சுபாஷ்கரன் தயாரிச்சிருக்கார். இதுக்கு முன் இவர் விஜய் நடித்த "கத்தி' படத்தைத் தயாரிச்சப்ப, இவர் ராஜபக்ஷேவின் நண்பர்ங்கிறதால் ஏகப்பட்ட எதிர்ப்பும் போராட்டமும் வெடிச்சிது. ஆனால் இந்தமுறை அப்படிப்பட்ட சங்கடங்கள் இல்லாமல் இந்தப் படம் வெளியாகப் போகுது. ட்ரெய்லர் வெளியீட்டில் பேசிய ரஜினி, "கொஞ்சம் லேட்டா படம் வருது. லேட்டானாலும் சரியான நேரத்துக்கு வந்து அடிக்கணும். கண்டிப்பா அடிக்கணும்.

நான் படத்தைப் பற்றிச் சொன்னேன்'னு பஞ்ச்சிங் வச்சிப்பேசினார். அரசியல் பிரவேசத்தைப் பத்திதான் இப்படி கோடிட்டுச் சொல்லி இருக் காருன்னு மன்றத் தரப்பு குஷியில் இருக்கு. இந்த விழாவில் கலந்துக்கிட்ட டைரக்டர் ஷங்கர், மீடியாக்களிடம் ரொம்பப் பணிவா கேட்டுக்குறேன். இந்தப் படத்தின் வெற்றிக்கு உங்கள் ஒத்துழைப்பைக் கொடுங்கள்ன்னு கேட்டுக்கிட்டார். அந்த ஒத்துழைப்பெல்லாம் அவருக்குக் கிடைக்கும். அதற்கு முன், அவர் ஏற்கனவே எடுத்த எந்திரன் படத்தின் கதை விவகாரத்துக்கு ஒரு நியாயமான தீர்வைச் சொல்லட்டும்ன்னு பலரும் சொல்றாங்க.''’

""நானும் ரிலீஸுக்குக் காத்திருக்கும் ஒரு விவகாரத்தைப் பத்திதான் சொல்லப்போறேன். ஏற்கனவே அமைச்சர் ஜெயக்குமாருக்கு எதிரான பாலியல் பூகம்பம் ஒண்ணு கிளம்புச்சு. இப்ப எடப்பாடியின் அமைச்சரவையில் இருக்கும் ரெண்டு ’மணி’யான மந்திரிகள் பத்தின ரகசிய ஆதாரங்கள் தினகரன் தரப்பின் கையில் ரெடியா இருக்கு. அதன் ரிலீஸ் தேதி விரைவில் இருக்க லாம்ங்குறாங்க.''

________________

இறுதிச்சுற்று

chinmayee

யூ டூ?

உலகம் முழுவதும் "மீ டூ' இயக்கம் பரவிய நிலையில் தமிழகத்திலும் அது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பெண்களை பாலியல் ரீதியாக தீண்டிய பல பெரிய மனிதர்கள் அம்பலப்பட்டார்கள். அதேசமயம் இதன் பின்னணியில் பா.ஜ.க. இருந்து தூண்டிவிடுவதை 2018, அக்டோபர் 24- 26 இதழில், விரிவாக விளக்கும்போது, தமிழகத் தில் முக்கியமாக உள்ள வேறு பிரச்சினைகளை மூடிமறைக்க மீ டூவைப் பயன்படுத்துகிறது பா.ஜ.க. எனக் குறிப்பிட்டிருந்தோம். அதற்கேற்ப பா.ஜ. கட்சியைச் சேர்ந்தவர்களுடன் சின்மயி உள்ளிட் டோர் இருக்கும் படம் சமூக ஊடகங்களில் வெளியாகியுள்ளது."மீ டூ' புகார் போலவே இந்தப் படங்களும் சில ஆண்டுகளுக்கு முன் எடுக்கப் பட்டவைதான்.

-சுப்பிரமணி