ன்னதான் தமிழ்நாட்டில் தாராளமாக சரக்கு கிடைத்தாலும் பக்கத்தில் உள்ள "புதுச்சேரி சரக்கை அடிக்கணும்' என்பது இங்குள்ளவர்களுக்கு ஒரு அலாதி ப்ரியம். இதற்காக அங்கிருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக சென்னை வரும் விஐபி கார்களில் அம்மாநில சரக்குகள் வருவது ரொம்ப காலமாகவே நடந்து வருகிறது. கொரோனா தொற்று காரணமாக தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மதுபானக் கடைகள் மூடப்பட்டன.

ஊரடங்கில் சில தளர்வுகள் கொடுக்கப்பட்டபோது சென்னை மற்றும் புறநகர்களை தவிர்த்து மற்ற மாவட்டங்களில் தமிழக அரசு மதுபானக் கடைகளை திறந்தது. ஆனால் தமிழகத்தைவிட கொரோனா தொற்று குறைவான எண்ணிக்கையில் இருந்த புதுச்சேரி அரசு, மதுபானக் கடைகளை திறக்க யோசித்தது. இதனால் முதல் முறையாக பாண்டிச்சேரியைச் சேர்ந்தவர்கள் மதுபானங் களை வாங்க தமிழகத்திற்கு வந்தனர்.

ramya

மதுபானக் கடைகளை திறக்க வேண்டும் என்று அதன் உரிமையாளர்கள் புதுச்சேரி அரசுக்கு கோரிக்கை வைத்து வலியுறுத்தினர். பின்னர் ஆளுநரின் ஒப்புதலோடு பாண்டிச்சேரியிலும் மதுபானக் கடைகளை திறந்தது அம்மாநில அரசு. இதனிடையே தமிழகத்தில் கொரோனா தொற்று அதிகமானதால் தமிழகம் புதுச்சேரி எல்லையில் சுமார் 40 சோதனைச் சாவடிகளை அமைத்து பாண்டிச்சேரியைச் சேர்ந்தவர்களைத் தவிர மற்ற மாநிலத்தவர்களுக்கு மதுபானங்கள் விற்பனை செய்யவும் தடை விதித்திருந்தது.

Advertisment

என்னதான் அம்மாநில அரசு உத்தரவு போட்டாலும், மற்ற மாநிலங்களைப் போல எந்த உத்தரவும் அங்கும் மதிக்கப்படவில்லை. அம்மாநிலத்தில் இருந்து கிழக்கு கடற்கரை சாலை வழியாக மதுபானங்கள் கொண்டு செல்வது தொடர்ந்து கொண்டுதான் இருக்கிறது. உயர் பதவியில் இருப்பவர்கள், அதிகாரத்தில் இருப்பவர்கள், பிரபலமாக இருப்பவர்கள், விஐபி கார்களை சோதனை செய்யும்போது அவர்கள் தங்களது செல்வாக்கை பயன்படுத்தி வந்துவிடுகிறார்கள். அப்படியே வழக்கு போட்டாலும் உடனடியாக ஜாமீனில் வெளியே வந்துவிடுவது வழக்கமான ஒன்றாகிவிட்டது.

கடந்த வியாழக்கிழமை மாலை கானாத்தூர் காவல்நிலைய எல்லைக்குள் வரும் முட்டுக்காடு சோதனைச்சாவடியில் அடையாறு மதுவிலக்கு காவல்துறையின் உதவி ஆய்வாளர் சங்கர் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். விலை உயர்ந்த கார்கள் பலவற்றை சோதனை செய்த போலீசார், பசஞ7 ஸ்ரீண 0099 இனோவா கிறிஸ்டா காரை நிறுத்தி டிரைவரிடம் சோதனை செய்ய வேண்டும் என்று சொல்லியுள்ளனர். அதற்கு டிரைவர், ""இது ஆக்ட்ரஸ் ரம்யா கிருஷ்ணன் கார், அவர்களும் வண்டியில் இருக்கிறார்கள்'' என தெரிவித்திருக்கிறார். ""சோதனைச் சாவடியை கடந்து செல்லும் அனைத்து வாகனங்களையும் சோதனை செய்ய வேண்டும் என்பது எங்களுக்கு போட்ட உத்தரவு. ஆகையால் சோதனை செய்ய வேண்டும்'' என்று தெரிவித்துள்ளனர் போலீசார்.

உடனே, உள்ளே தனது தங்கை வினயா கிருஷ்ணனுடன் இருந்த ரம்யா கிருஷ்ணன், காரை சோதனையிட சம்மதித்துள்ளார். காரை சோதனையிட்ட போலீசார் அதிர்ச்சியில் உறைந்தனர். காரில் 96 பீர் பாட்டில்கள், 8 மதுப்பாட்டில்கள் இருந்துள்ளன. உடனே போலீஸார், காரை ஓட்டி வந்த சென்னை அபிராமபுரத்தைச் சேர்ந்த செல்வகுமாரிடம் உங்களிடம் விசாரிக்க வேண்டும் என காவல்நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டார். சிறிது நேரத்தில் கார் ஓட்டுநர் செல்வகுமாரை ரம்யாகிருஷ்ணன் ஜாமீனில் அழைத்துச் சென்றுள்ளார் என்று பரபரப்பு தகவல் வெளியானது.

Advertisment

போலீஸ் தரப்பில் நாம் விசாரித்தபோது, வியாழக்கிழமை அன்று மதுபானங்களை மறைத்து எடுத்துச் சென்ற ஏழு கார்களை மடக்கினோம். ஆனால் ரம்யாகிருஷ்ணன் எந்த காரிலும் வரவில்லை என்கின்றனர். பாண்டிச்சேரியில் இருந்து அவர்கள் மதுபானங்கள் வாங்கி வந்ததாக சொல்கிறார்களே என நாம் கேட்டபோது, ""மகாபலிபுரத்தில் உள்ள எலைட் ஷோரூமில் மொத்தமாக வாங்கியுள்ளனர். அங்கிருந்து முட்டுக்காடு வழியாக வந்தபோதுதான் வாகன சோதனையில் சிக்கியுள்ளனர், பாண்டிச்சேரி போக வேண்டுமென்றால் இபாஸ் வேண்டும், அதனையும் அவ்வளவு சீக்கிரமாக வாங்கிவிட முடியாது. இவர்கள் இங்குள்ள எலைட் ஷோரூமில்தான் வாங்கியுள்னர்'' என்றனர் போலீஸ் தரப்பில்.

ரம்யா கிருஷ்ணன் காரில் இருந்தாரா என்பது விசாரணையில் தெரியவரும். எனினும், இதுபோன்ற வழக்குகளில் விஐபிக்கள் செல்வாக்கை பயன்படுத்தி தப்பிப்பதும், அதனை அப்படியே மறைப்பதும் ரொம்ப காலமாகவே நடப்பது தான். இதில் ஆச்சரியப்படுவதற்கோ, அதிர்ச்சியடைவதற்கோ ஒன்றுமில்லை என்கின்றனர் சம்பந்தப்பட்ட காவல்நிலைய தொடர்பில் உள்ளவர்கள்.

96 பீர்பாட்டிலா என ஆச்சரியப்படுத்தும் வகையில் ரம்யாகிருஷ்ணன் பெயர் சர்ச்சைக்குள்ளாகியிருக்கும் நிலையில், சிக்கியவர்கள் தலைப்புச் செய்திகளாகிறார்கள், தப்பியவர்கள் தங்கள் செல்வாக்கை நிரூபிக்கிறார்கள். இதுதான் இந்த ஏரியாவில் தொடர்ந்து நடக்கிறது என்றனர் நம்மிடம் பேசிய காவலர்கள்.

-வே.ராஜவேல், அரவிந்த்