Advertisment

ராம்குமார் மர்ம மரணம்! மனித உரிமைக் கமிஷனில் நக்கீரன் ஆவணம்

ramkumar

2016-ன் முதல் பாதியில் சுவாதி கொலை வழக்கில் தமிழகமே எண்ணி நடுங்கும் கொலையாளியாகக் கருதப்பட்டு, அடுத்த பாதியில் புழல் சிறைக்குள் பரிதாபமாக இறந்துபோன மீனாட்சிபுரம் ராம்குமாரை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது.

Advertisment

ramkumar18.09.2016-ல் புழல் சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார் மின்சார வயரைக் கடித்து தற்கொலை செய்துகொண்டானென போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ராம்குமார் சாவில் மர்மம் இருக்கிறது; அது தற்கொலையல்ல. அதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று அவனது தந்தை பரமசிவன் மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் செய்திருந்தார்.

Advertisment

"புழல் சிறையில் ராம்குமார் தற்கொலை ச

2016-ன் முதல் பாதியில் சுவாதி கொலை வழக்கில் தமிழகமே எண்ணி நடுங்கும் கொலையாளியாகக் கருதப்பட்டு, அடுத்த பாதியில் புழல் சிறைக்குள் பரிதாபமாக இறந்துபோன மீனாட்சிபுரம் ராம்குமாரை அவ்வளவு எளிதில் யாரும் மறந்திருக்க முடியாது.

Advertisment

ramkumar18.09.2016-ல் புழல் சிறையில் அடைக்கப்பட்ட ராம்குமார் மின்சார வயரைக் கடித்து தற்கொலை செய்துகொண்டானென போலீஸ் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. ஆனால் ராம்குமார் சாவில் மர்மம் இருக்கிறது; அது தற்கொலையல்ல. அதுதொடர்பாக விசாரணை நடத்தப்பட வேண்டுமென்று அவனது தந்தை பரமசிவன் மனித உரிமைகள் ஆணையத்தில் புகார் செய்திருந்தார்.

Advertisment

"புழல் சிறையில் ராம்குமார் தற்கொலை செய்துகொள்ளவில்லை. அதற்கான முகாந்திரமும் இல்லை. சந்தேகங்கள் உள்ளன' என்று "நக்கீரன்' இதழில் சிறை வார்டர்கள், ராம்குமாருடன் சிறையில் அடைக்கப்பட்டிருந்த சக கைதிகள் ஆகியோரின் பேட்டி மற்றும் ஆதாரத்துடன் அட்டைப்படக் கட்டுரை வெளியாகி, அதிர்வலைகளைக் கிளப்பியது. அதேசமயம் "அது தற்கொலையல்ல. கொலை வழக்காக மாற்றி அதற்கான விசாரணை நடத்தப்பட வேண்டும்' என்று அவர் தந்தை கொடுத்த புகார் நிலுவையிலிருந்தது.

இந்த நிலையில், மனித உரிமை ஆணைய புலனாய்வுப் பிரிவு, தாமாக முன்வந்து ராம்குமார் மரணம் தொடர்பான வழக்கில் மீண்டும் விசாரணையைத் துவக்கியது. அதற்காக பிப்-15 அன்று ராம்குமாரின் தந்தை பரமசிவன் ஆஜராகவேண்டுமென புலனாய்வுப் பிரிவு அவருக்கு சம்மன் அனுப்பியது.

நெல்லை வந்த மனித உரிமை ஆணைய புலானாய்வுப் பிரிவின் எஸ்.பி. சத்யபிரியா, டி.எஸ்.பி. பிரபு, இன்ஸ்பெக்டர் அகிலா ஆகியோர் முன்னிலையில் பரமசிவன் ஆஜரானார்.

அவரிடம் "ராம்குமார் மரணத்தில் என்னென்ன சந்தேகங்கள் உள்ளன' என்று எஸ்.பி. சத்யபிரியா விசாரிக்க, பரமசிவன், சில ஆவணங்களைக் கொடுத்துவிட்டு தனது தரப்பு வாக்குமூலங்களை எஸ்.பி. சத்யபிரியா குழுவிடம் பதிவுசெய்திருக்கிறார்.

விசாரணை முடிந்து வந்தவரிடம் நாம் பேசியபோது, “""எஸ்.பி.யம்மா என்கிட்ட விவரமெல்லாம் கேட்டாங்க. என் சந்தேகங்களைச் சொன்னேன். சுவாதிய கொன்னது யாரு, உண்மையான குற்றவாளி யாரு, அது தெரியணும். அரசு பொறுப்புல இருந்தவன், சிறைப் பாதுகாப்புல இருந்தவன் எப்படிச் செத்தான், ஜெயில்ல ஒயரைக் கடிச்சாம்னு சொன்னாங்க. ஒருத்தரால அப்படி மின்சார வயரைக் கடிக்கமுடியுமா? நடக்குற காரியமா? மொதல்ல அவனுக்கு மோஷன் போவுது ஆஸ்பத்திரிக்கி கொண்டுபோறோம் வாங்கன்னுதான் சொன்னாங்க. அடுத்த பத்து நிமிஷத்தில் அவம் இறந்திட்டான்னு சொல்லிட்டாங்க. நடந்தது தற்கொலை இல்ல, கொலைதான்... அதை விசாரிக்கணும்னு ஆதாரத்த எல்லாம் குடுத்தோம்.

parasivan

எஸ்.பி.யம்மா, "நாங்க ஜெயில்ல வார்டர்கள், அவனோட இருந்த கைதிகள்னு எல்லார்கிட்டயும் விசாரிச்சோம்'’னு சொன்னாங்க. ராம்குமார் சாவு தற்கொலையில்லன்னு, ஜெயில்ல உள்ளவங்ககிட்டல்லாம் விசாரிச்சு "நக்கீரன்' செய்தி வெளியிட்ட இதழோட ஜெராக்ஸ் காப்பியை அந்தம்மாகிட்ட குடுத்து, "இதப்பாருங்க, அதுலகூட தற்கொலையில்லன்னு போட்ருக்கு'ன்னு கொடுத்தேன். வாங்கிப் பாத்த எஸ்.பி.யம்மா, அதப் பதிவு பண்ணிக்கிட்டு, நானும் பாத்தேன்னு சொல்லி ரெக்கார்டா வைச்சுக்கிட்டாக. நல்ல நடவடிக்கை எடுக்குறோம்னு சொன்னாங்க. என்னால முடிஞ்சவரைக்கும் ஆதாரம் குடுத்திருக்கேன். சந்தேகங்களை எழுப்பியிருக்கேன் என்ன நடக்கும்னு பாப்போம்யா''’என்றார் தளர்வான குரலில்.

மனித உரிமை ஆணைய புலன் விசாரணைக்குழு, "நக்கீரன்' கட்டுரையை ராம்குமாரின் மர்மச்சாவு விஷயத்தில் முக்கிய ஆவணமாகப் பதிவுசெய்திருக்கிறது.

-பரமசிவன்

படம் : ப.இராம்குமார்

nkn270319
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe