காவல்துறையின் மாமூல் வேட்டையால் கோவை மாணவி வன்புணர்விற்கு ஆளானார். அதே காவல்துறையின் மாமூல் வேட்டையால் கொலை செய்யப்பட்டிருக்கின்றார் ராமேஸ்வரம் மாணவி.
ராமேஸ்வரம் தீவில் பர்வதவர்த்தினி மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்துவந்தார் சேராங்கோட்டை பகுதியைச் சேர்ந்த மாரியப்பன்- கவிதா தம்பதியினரின் மகள் ஷாலினி. புதன்கிழமையன்று வழக்கம்போல் பள்ளிக்கு தோழியுடன் சென்றுகொண்டிருந்தபொழுது அதே பகுதியைச் சேர்ந்த குப்புசாமியின் மகனான முனியராஜ் பின்னாடியே துரத்திவந்து, "நீ என்னை லவ் பண்றியா.. இல்லையா..?' எனக் கேட்டுக்கொண்டே வந்தவன், அவள் மறுத்ததால் பின்னங்கழுத்திலும், கழுத்திலும் கத்தியைக் கொண்டு குத்திய நிலையில்... அங்கேயே சரிந்திருக்கின்றார் ஷாலினி. அதன்பின் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்ற நிலையில் "ஏற்கனவே' உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர் அங்குள்ள மருத்துவர்கள்.
"அவ எங்ககூட வந்துட்டு இருந்தா. எங்க பின்னாடியே வந்த முனியராஜ் அவளைப் பிடித்து வம்பிழுத்தான். ‘உன் அப்பங்கிட்ட சொன்னால் பயந்த
காவல்துறையின் மாமூல் வேட்டையால் கோவை மாணவி வன்புணர்விற்கு ஆளானார். அதே காவல்துறையின் மாமூல் வேட்டையால் கொலை செய்யப்பட்டிருக்கின்றார் ராமேஸ்வரம் மாணவி.
ராமேஸ்வரம் தீவில் பர்வதவர்த்தினி மேல்நிலைப் பள்ளியில் 12-ஆம் வகுப்பு படித்துவந்தார் சேராங்கோட்டை பகுதியைச் சேர்ந்த மாரியப்பன்- கவிதா தம்பதியினரின் மகள் ஷாலினி. புதன்கிழமையன்று வழக்கம்போல் பள்ளிக்கு தோழியுடன் சென்றுகொண்டிருந்தபொழுது அதே பகுதியைச் சேர்ந்த குப்புசாமியின் மகனான முனியராஜ் பின்னாடியே துரத்திவந்து, "நீ என்னை லவ் பண்றியா.. இல்லையா..?' எனக் கேட்டுக்கொண்டே வந்தவன், அவள் மறுத்ததால் பின்னங்கழுத்திலும், கழுத்திலும் கத்தியைக் கொண்டு குத்திய நிலையில்... அங்கேயே சரிந்திருக்கின்றார் ஷாலினி. அதன்பின் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனைக்குக் கொண்டுசென்ற நிலையில் "ஏற்கனவே' உயிரிழந்துவிட்டதாக அறிவித்தனர் அங்குள்ள மருத்துவர்கள்.
"அவ எங்ககூட வந்துட்டு இருந்தா. எங்க பின்னாடியே வந்த முனியராஜ் அவளைப் பிடித்து வம்பிழுத்தான். ‘உன் அப்பங்கிட்ட சொன்னால் பயந்துருவோமா.?’ என நமட்டு சிரிப்பு சிரித்தவன், ‘இப்பவே சொல்லு.. தாலி கட்டுறேன். நீ என்னை லவ் செய்றீயா..? இல்லையா?ன்னு கேட்டுக்கிட்டே வந்தான். ஒருகட்டத்தில் "ஒழுங்கா பள்ளிக்கூடம் போகவிடு. இல்லைன்னா அப்பாவ கூப்பிடவேண்டியிருக்கும்' என முன்னோக்கி நடந்துவந்தாள் ஷாலினி. பின்னாடியே வந்த அவன், கைலியில் மறைத்து வைத்திருந்த கத்தியை எடுத்து குத்தத் தொடங்கினான். நாங்க அலறிக் கத்த... அவன் அங்கிருந்து ஓடிப் போய்விட்டான். அருகிலிருந்த சொந்தக்காரங்களைக் கூப்பிட்டு மருத்துவமனைக்குக் கொண்டுபோக முயற்சிபண்ணினோம். ஆட்டோ, ஆம்புலன்ஸ் எதுவும் கிடைக்கலை. வேற வழியில்லாமல் டூவீலர் பின்னாடி ஒருத்தங்களை உட்கார வச்சு அவளை ஆஸ்பத்திரிக்குக் கூட்டிட்டுப் போனோம். ஆனால் வழியிலே உசுரு போயிருச்சுன்னு சொல்லிட்டாங்க. நேரத்துக்கு வண்டி வந்திருந்தால் அவளைக் காப்பாத்தி யிருக்கலாம்'' என அழுது அரற்றினாள் கொலையான ஷாலினியின் தோழி.
கொலையுண்டவரும், கொலையாளியும் ஒரே சமூகத்தைச் சார்ந்தவர்கள், மீனவக் குடும்பம் என்றாலும், படித்து முன்னேறிவிடவேண்டுமென தீராத ஆசை ஷாலினிக்கு. ஆதலால் காதல் அது, இதுவென சலனப்படா மல் கல்வியில் மட்டுமே கவனம் செலுத்தியிருக்கிறார் ஷாலினி. கடலுக்குச் சென்று மீன் பிடித்துவரும் முனியராஜிற்கு ஷாலினி மீது ஒருதலைக் காதல். மீன்பாடு முடிந்த நாட்களில் பள்ளியிலிருந்தோ, வீட்டிலிருந்தோ ஷாலினி பின்னாலேயே சென்று தன் காதலைத் தெரிவிப்பது முனியராஜின் பழக்கங்களில் ஒன்று. இதனை அவ்வப்போது கண்டித்தும் வந்திருக்கின்றார் ஷாலினி. ஒருகட்டத்தில் எல்லை மீற, தந்தை மாரியப்பனிடம் முனியராஜின் சீண்டலைக் கூறியிருக்கின்றார் ஷாலினி. முனிய ராஜின் வீட்டிற்கே சென்று கண்டித்திருக்கின்றார் மாரியப்பன். அந்த கோபத்தின் வெளிப்பாடுதான் ஷாலினி கொலையுண்டது என்கின்றனர் அவரது உறவினர்கள்.
"பொதுவாக ராமேஸ்வரம் தீவுப்பகுதியில் குறிப்பாக ராமேஸ்வரம் வேர்க்கோடு, சேராங் கோட்டை, தெற்கு கரையூர், சுனாமி குடியிருப்பு போன்ற பகுதிகளில் பள்ளி மாணவர்களுக்கும், இளைஞர்களுக்கும் எளிதாக கஞ்சா, பிராந்தி போன்ற போதைப்பொருள் கள் கள்ளத்தனமாக விற் கப்படுவதால் இதுபோன்ற சம்பவங்கள் தொடர்ந்து நடைபெற்றுவருவது வேதனைக்குரியது. எனவே தமிழக அரசும், மாவட்ட காவல்துறையும் உடனடியாக பள்ளி மாணவிகள், இளம் பெண்கள், பொதுமக்களுக்கு பாதுகாப்பை உறுதிப் படுத்தவேண்டும். கள்ளத் தனமாக ராமேஸ்வரம் தீவு முழுவதும் சரளமாக விற்கப்படும் போதைப் பொருள்களை விற்கும் நபர்கள் மீது இரும்புக்கரம் கொண்டு கடும் நடவடிக்கை எடுக்கவேண்டும்'' எனக் கூறினர் சி.பி.எம்., சி.பி.ஐ. கட்சியைச் சேர்ந்தவர்கள். கொலைக்குக் காரணம் தீவுப்பகுதியில் தடைசெய் யப்பட்ட கஞ்சாவும், சரக்குமே'' என்கிறார்கள்.
இது இப்படியிருக்க, அவசர அவசரமாக முனியராஜை கைதுசெய்த காவல்துறை தங்கள் வசம் வைத்து விசாரித்தனர். இதேவேளையில், ஷாலினியின் உடலைக் கைப்பற்றி பிரேதப் பரிசோதனைக்காக ராமநாதபுரம் மாவட்ட மருத்துவமனைக்கு அனுப்பிவைக்க காவல்துறை முயற்சித்தது. ஆனால் ஷாலினியின் உறவினர்களோ, "முனியராஜை எங்கள் வசம் ஒப்படையுங்கள். நாங்களே தண்டனை கொடுக்கிறோம். இல்லையெனில் அவனை சுட்டுக்கொல்லுங்கள். அதுபோல் எங்களுடைய குழந்தை ராமநாதபுரம் போகக்கூடாது'' என துறைமுகம் காவல் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். அதற்கடுத்து சாலை மறியலில் ஈடுபட்டனர். ஏ.எஸ்.பி., நகராட்சித் தலைவர் சமாதான முயற்சிகளில் இறங்கியும் மறியலைக் கைவிடவில்லை அவர்கள். ஒருகட்டத்தில் "ராமநாதபுரத்திலிருந்து மருத்துவர்கள் வருகின்றார்கள். இங்கேயே பிரேதப் பரிசோத னை செய்யலாம்' என அறிவிக்க, மறியலைக் கைவிட்டனர். அதன்பின் ராமேஸ்வரம் அரசு மருத்துவமனையில் அவரது உடலை உடற்கூறு ஆய்வு செய்தபிறகு அவரது பெற்றோர், உறவினர்கள் உடலைப் பெற்றுக்கொண்டனர்.
"தீவுப்பகுதி புனிதமான பகுதி என்பதால் இங்கு டாஸ்மாக் சமாச்சாரங்கள் தடைசெய்யப் பட்டுள்ளது. ஆனால், காவல்துறையில் பணியாற்றும் சிலர் தங்களுக்கு வேண்டப் பட்டவர்களைக் கொண்டு இங்கு டாஸ்மாக் சமாச்சாரங்களை 24 மணி நேரமும் கிடைக்கும்படியாகச் செய்கின்றனர். அதுபோக கஞ்சாவும் இங்கு ஏராளம். போலீஸே இதனைச் செய்வதால் எவராலும் கட்டுப்படுத்த முடியவில்லை. ஷாலினி ஒரு தலைக்காதலால் கொல்லப்படவில்லை. போலீஸால் விற்கப்படும் கஞ்சாவால்தான் கொலை செய்யப்பட்டார்'' என்கின்றார் அதே பகுதியில் பணியாற்றும் தனிப்பிரிவு போலீஸ் ஒருவர்.
இதற்கு என்ன பதிலை வைத்திருக்கின்றது காவல்துறை?
-வேகா
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us