இராமநாதபுர மாவட்டத்தில் ராமநாதபுரம், பரமக்குடி, முதுகுளத்தூர், திருவாடனை என நான்கு சட்டமன்றத் தொகுதிகளையும், புதுக்கோட்டை மாவட்டத்தில் அறந் தாங்கி சட்டமன்றத் தொகுதியையும் விருதுநகர் மாவட்டத்தில் திருச்சுழி சட்டமன்றத் தொகுதியையும் உள்ளடக்கியதே ராமநாதபுர நாடாளுமன்றத் தொகுதி. முக்குலத்தோர், பட்டியலினம், இஸ்லாமியர், யாதவர், முத்தரையர், நாடார், கிறிஸ்தவர், செட்டியார், சௌராஷ்டிரா, வேளாளர், உடையார் மற்றும் இதர சமூக வாக்குகள் தொகுதிக்குள் விரவிக் கிடக்கின்றது.
நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் ராமநாதபுரம் நாடாளுமன்றத் தொகுதியில் தி.மு.க. கூட்டணி சார்பாக இந்திய யூனியன் முஸ்லிம் லீக்கின் நவாஸ்கனியும், அ.தி.மு.க. சார்பில் ஜெயபெருமாளும் மற்றும் பா.ஜ.க. கூட்டணி சார்பில் முன்னாள் சி.எம். ஓ.பி. எஸ்.ஸும் போட்டியிடு கின்றனர். பா.ஜ.க.வின் தனித்த வாக்குகள், அ.ம.மு.க.வின் வாக்குகள், ஜான்பாண்டியன், தேவநாதன் சமூக வாக்குகள் மற்றும் தான் சார்ந்துள்ள சமூக வாக்குகளும் தமக்கு கை கொடுக்கும் என்கின்ற நம்பிக்கையில் ஓ.பி.எஸ். பலாப்பழ சின்னத்தில், திங்கட்கிழமை தொடங்கி பிரச்சார களம் காண்கின் றார். ஆனால் அவ ரது நம்பிக்கை ஜெயிக்குமா? என் பது தான் கேள்விக் குறியே!
குண்டுகுளத்தை சேர்ந்த வெள்ளைப்பாண்டியோ, "முதலில் அவர்மேல் உள்ள அனுதாபம் தான் அவரை ஜெயிக்க வைக்கும். அவர் சமூகத்தின் முக்கிய நபர். இப் பொழுதுதான் ஆப்பநாடு மறவர் சங்கம் உள்ளிட்ட சமூக சங்கங்கள் ஓ.பி.எஸ்.ஸிற்கு ஆதரவாக இருக்காங்க. இதனால் சமூக வாக்குகள் அவருக்கு எப்படியாவது கிடைத்துவிடும். அதுபோக பரமக்குடியிலுள்ள சௌராஷ்டிரா வாக்குகள், பிள்ளைமார், மீனவர் மற்றும் தேவேந்திரகுல வேளாளர் சமூக வாக்கு களுடன், ஓ.பி.எஸ்.ஸின் தனிப்பட்ட செல்வாக்கு அவரை ஜெயிக்க வைக்கும். மாமன், மச்சினன் உறவு பாராட்டுற சிட்டிங் எம்.பி. நவாஸ்கனியை பொறுத்தவரை அவருக்கு எதிராக எதுவும் கிடையாது. இருந்தாலும் ஒரு கோரிக்கைன்னு சென்றால், அவரைப் பார்க்க சென்னை தான் செல்லணும்'' என்கிறார் அவர்.
ஞாயிற்றுக்கிழமை வரை இரட்டை இலை சின்னம் போட்டியிடு தாமே..? அப்படின்னு கேள்வி கேட்ட நிலையில், தலைமையிலிருந்து டோஸ் கிடைத்த நிலை யில், மா.செ. முனியசாமி, முன்னாள் அமைச்சர்கள் அன்வர்ராஜா, மணிகண் டன் மற்றும் முன்னாள் ராமநாதபுரம் நகராட்சி தலைவி கவிதா ஆகியோர் பம்பரமாக சுழன்றுவரு கின்றனர். வீட்டிலேயே முடங்கி கிடந்த ராமேஸ் வரம் ந.செ. கே.கே. அர்ச்சுனனை சந்தித்து, "தினசரி பிரச்சார செலவிற்கு ரூ.1 லட்சம், ந.செ. உங்களுக்கு ரூ.50 ஆயிரம், பூத்துக்கு ரூ.5 ஆயிரம், வார்டு செயலாளருக்கு ரூ.5 ஆயிரம் என வைட்டமின் "ப'வை கொடுக்க... தீவு முழுமைக்கும் இரட்டை இலை துளிர்விட ஆரம்பித்துள்ளது. இந்த நிலைதான் தொகுதி முழுமைக்கும். ஆனால், இதேவேளையில் கட்சியில் வேட்பாளருக்கு ஆதரவாக களமிறங்கியுள்ள முன்னாள் அமைச்சர் கள் அன்வர்ராஜாவிற்கும், மணிகண்டனுக்கும் நேரெதிராக அக்னி நட்சத்திரமாக கொதிப்பது இரட்டை இலையை துவளச் செய்துள்ளது. குறிப்பாக, பரமக்குடி கீர்த்தி மகாலில் நடந்த பரமக்குடி யூனியன் செயல்வீரர்கள் கூட்டத்தில் அன்வர்ராஜாவும், மணிகண்டனும் தொடை தட்டி வாடா, போடா என ஆரம்பித்து காது கூசும் அளவிற்கு பேசியது குறித்து வருத்தப்படு கின்றார் வேட்பாளர் ஜெயபெருமாள்.
இது இப்படியிருக்க, வேட்பாளர் தோற்றால் அந்தந்தப் பகுதி தி.மு.க. நிர்வாகிகள் பதில் கூற வேண்டியிருக்கும் என கட்சித் தலைவர் ஸ்டா லின் எச்சரிக்கை விடுக்க, மாவட்டமே தனக்கு எதிரியாக இருப்பினும், நவாஸ்கனியின் ஏணியை ஜெயிக்க வைக்க வேண்டுமென போராடி வருகின்றார் மா.செ.வும், ராமநாதபுரம் ச.ம.உ.வும் ஆன காதார்பாட்சா முத்துராமலிங்கம். இன் னொரு பக்கம், முதுகுளத்தூர், பரமக்குடி தவிர மற்ற இடங்களில் அதிகளவில் வாக்குகளை ஏணி சின்னம் அறுவடை செய்யக்கூடாது என்பதில் கவனமாக காய் நகர்த்தி வருகின்றார் அமைச்சர் ராஜகண்ணப்பன். வேட்பாளர் தோற்றால் மா.செ.வுக்கு பல்புதானே என்கின்ற நினைப்பு அமைச்சர் தொடங்கி அனைவரிடமும் உள்ளது. இதனையும் தாண்டி பலமான கூட்டணியில் "நீண்ட கடற்கரைப் பகுதி வாக்குகளும், பட்டிய லின வாக்குகளும் ஏணியை ஏற்றிவிடுமென்பதில் நம்பிக்கையுடன் இருக்கின்றது தி.மு.க. தலைமை.
-நா.ஆதித்யா
படங்கள்: விவேக்