சீனியர் அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொல்லப் பட்ட வழக்கில் தனிப் படை சிறப்புப்படை போலீசார், செல் போன்கள், செல்போன் சிக்னல்கள், கார்கள், ரவுடிகளின் நடமாட்டம் என ஒவ்வொன்றாக தேடித் தேடி சந்தேக நபர்களைப் பிடித்து விசாரணை, ஆழ்நிலைச் சோதனை எனப் பல்வேறு அறிவியல்பூர்வ மான சோதனைகளையும் செய்து முடித்து அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளனர்.

இந்நிலையில், கடந்த ஆண்டு 2024, ஜூலை 11ஆம் தேதி மாலை, புதுக்கோட்டை மாவட்ட எஸ்.பி.யாக வந்திதா பாண்டே இருந்தபோது, வம்பன் -திருவரங்குளம் இடைப்பட்ட வனத்துறைக்கு சொந்தமான தைல மரக்காட்டில் வைத்து, திருச்சி எம்.ஜி.ஆர். நகர் துரை (எ) துரைச்சாமி என்கிற ரவுடி, ஆலங்குடி போலீசாருடன் மோதலில் ஈடுபட்டதில் உதவி ஆய்வாளர் மகாலிங்கம் காயமடைந்ததால், அப்போதைய ஆய்வாளர் முத்தையா துப்பாக்கியால் சுட்டதில் ரவுடி துரை உயிரிழந்தார். இந்த சம்பவம் அப் போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

ff

ஆனால், மரணத் தறுவாயிலிருந்த துரை சொன்ன துருப்புச்சீட்டுதான் போலீசார் மத்தியில் பெரும் அதிர்வுகளையும், ஆச்சரியத் தையும் கொடுத்துள்ளது. அப்போது துரையின் மேட்டர் பெரிதாக பேசப்பட்டதால், அந்த துருப்புச்சீட்டை காவல்துறை உயரதிகாரி களுக்கு மட்டும் அனுப்பிவிட்டு அமைதி யாகினர் போலீசார். இந்த நிலையில்தான் சிறப்பு விசாரணை அதிகாரியாக இருந்த எஸ்.பி. ஜெயக்குமார் மாற்றப்பட்டு, திருச்சி சரக டி.ஐ.ஜி. வருண்குமார் மற்றும் தஞ்சை மாவட்ட எஸ்.பி. ராஜாராம் ஆகியோர் நியமிக்கப் பட்டுள்ளனர்.

இப்போது என்கவுன்டரில் கொல்லப் பட்ட துரை கொடுத்த துருப்புச்சீட்டை தூசுதட்டி எடுத்துள்ளனர்.

Advertisment

ரவுடி துரை மரணத் தறுவாயில் கொடுத்த துருப்புச்சீட்டு என்னவென்று நாம் விசாரித்தபோது, "ராமஜெயம் கொலையில் சம்மந்தப்பட்டவர்கள் எனக்கூறி ஒரு நீண்ட பட்டியலை கொடுத்திருக்கிறார். அதைக் கேட்டதும்தான் அதிர்ச்சியாக இருந்திருக்கிறது. இந்த தகவல்கள் காவல்துறை உயரதிகாரிகளுக்கு கொண்டுசெல்லப்பட்ட நிலையில்தான், சிறப்பு விசாரணை அதிகாரிகள் மாற்றம் நடந்தது. தற்போது ராமஜெயம் கொலை வழக்கு விசாரணையானது, ரவுடி துரையின் மரண வாக்குமூலத்தின் அடிப்படையில் நகரத் தொடங்கியுள்ளது. மிக விரைவில் கொலையாளிகளை சிறப்புப்படையினர் கைது செய்ய உள்ளனர். கைது செய்யப்படும்போதுதான் அவர்கள் யாரென்பது வெளியுலகிற்கு தெரியவரும்'' என்றனர்.

மேலும், "இந்த கொலை வழக்கில் ஒரு கூட்டுச்சதி உள்ளது. அது தொடர் பாகப் பல்வேறு கேள்விகள் வரிசைகட்டி எழுகின்றன. கூட்டுச்சதியை தீட்டியது யார்? எவ்வளவு நாள் இதற்கு திட்ட மிடப்பட்டது? கொலையை அரங்கேற் றியது யார்? ராமஜெயம் கடத்தப்பட்ட நேரம் காலை 5:30 மணி. அவரது உடல் கண்டுபிடிக்கப்பட்டது காலை 8:20 மணிக்கு. இடைப்பட்ட காலத்தில் என்ன நடந்தது? கொலையின் நோக்கம் என்ன? கொலைக்கு மறைமுகமாக உதவிய இந்நாள், முன்னாள் காவல்துறை அதிகாரிகள் யார், யார்? கொலை யாளிகளை காவல்துறை நெருங்கும் போதெல்லாம் வெவ்வேறு கோணங் களை முன்வைத்து, இந்த கொலை வழக்கின் சூத்திரதாரியைக் கண்டு பிடிப்பதைத் தடுத்து திசை திருப்பிய காவல்துறையினர் யார் யார்?, கொலை செய்ததற்கு நடத்தப்பட்ட பணப் பரிமாற்றம் எவ்வளவு? இப்படி அடுக் கடுக்காக பல கேள்விகளுக்கு துரை மரணத் தறுவாயில் தெரிவித்த தகவல்களே பதிலாக அமைந்துள்ளன.

மேலும், குடும்பத்தில் யாரோ ஒருத்தர்தான் இந்த கொலையை செய்துவிட்டார் என்று சொல்லி அ.இ. அ.தி.மு.க. ஆட்சியில் ஒன்பது ஆண்டு களுக்கும் மேலாக இந்த வழக்கு கிடப்பில் போடப்பட்டது. பெண்கள் தொடர்பு என்று ஒரு கற்பனைக் கதையும் உலாவந்தது. அதுவும் தவிடுபொடியாகிவிட்டது. விசாரணை சூடு பிடித்து விட்டது. ரவுடிகளின் சாம்ராஜ்யமாக இருந்த 2011-2013ஆம் ஆண்டிற்கான விளைவுகளை தற்போது சந்திக்க நேரிடுமோ என்று ரவுடிகள் நடுங்கிப்போய் உள்ளனர். இந்த கால கட்டத்தில்தான் சசிகலாவும் அவரது குடும்பத்தாரும் போயஸ் கார்டனிலிருந்து வெளியே அனுப்பப்பட்டு, மீண்டும் போயஸ் கார்டனுக்குள் சசிகலா சேர்க்கப் பட்டு, சசிகலாவின் அனைத்து குடும்பத்தினரும் சிறைக்கு அனுப்பப்பட்ட காலம். இதில் கூடுதல் முக்கியத்துவமாக, அவர்கள் அனைவருமே திருச்சி மத்திய சிறையில்தான் அடைக்கப்பட்டிருந்தனர்.

Advertisment

துரைசாமி என்கவுண்டரில் கொல்லப்பட்டு ஒரு வருடம் ஆகிறது. இந்த சூழலில், இரண்டு பேரின் கொலையிலும் அவிழும் முடிச்சுகளில், வெளிவரும் மர்மங்களில் எத்தனை பேரின் வாழ்க்கை தலை கீழாக மாறப்போகிறது என்பதைப் பொறுத்திருந்து பார்க்கவேண்டும்.