’"ஹலோ தலைவரே, அ.தி.மு.க ஆட்சியில் போக்குவரத்து அமைச்சரா இருந்த எம்.ஆர்.விஜய பாஸ்கரின் கரூர் ஆண்டாள் கோயில் பகுதியில் உள்ள அவரது வீட்டிலும் சென்னை உட்பட அவருக்குச் சொந்தமான 21 இடங்களில் வியாழன் காலையில் லஞ்ச ஒழிப்புத்துறையினர் அதிரடி ரெய்டு நடத்தியதால், எடப்பாடி உள்ளிட்ட அ.தி.மு.க. மாஜி மந்திரிகள் பலரும் மிரட்சியில் இருக்காங்க.''”

"மாஜி மந்திரிக்கு நெருக்கமானவரான வேலுசாமிங்கிறவர் தலைமறைவாயிட்டதாகவும் தகவல் வந்ததே.''”

ddd

"ஆமாங்க தலைவரே.. அதிரடி ஆட்டத்தை தி.மு.க அரசு ஆரம்பிச்சிருக்கு. இதே போல ரெய்டு நடவடிக்கைகள் தொடருமாம். எடப்பாடிக்கு சிக்கல் தரக்கூடிய கொடநாடு கொள்ளை மற்றும் கொலை மர்மத்தையும், ஜெ. ஆட்சியில் நடந்த அமைச்சர் கே.என்.நேருவின் தம்பி ராமஜெயம் கொலை வழக்கையும், மாஜி மந்திரிகள் தொடர் புடைய ஊழல் மற்றும் வில்லங்க வழக்குகள் சிலவற்றையும், தி.மு.க அரசு, இப்ப தூசி தட்டிக் கைல எடுத்திருக்கு. ராமஜெயம் கொலை வழக்கை சி.பி.ஐ. விசாரிச்சாலும், அந்தக் கொலை தொடர் பான பல முக்கிய ஆதாரங்கள் உளவுத்துறைக்கு கிடைச்சிருக்குதாம். அதனால் சில வாரங்களி லேயே, இந்தக் கொலை வழக்கில் சில திடுக்கிடும் திருப்பங்களும் அதையொட்டி சில அதிரடிக் கைதுகளும் இருக்கும்னு உள்துறை வட்டாரத்தில் பேச்சு அடிபடுது. லஞ்ச ஒழிப்பு போலீசார் ரெய்டால் ஊழல் மாஜிகள் பீதியில் இருக்காங்க.''”

Advertisment

"அமைச்சர் வேலுமணி மீது லஞ்ச ஒழிப்புத்துறை, அதிரடியா எஃப்.ஐ.ஆர் போட்டிருக்கே?''”

"உண்மைதாங்க தலைவரே, முன்னாள் உள்ளாட்சித்துறை அமைச்சரான வேலுமணி மீது, ஏற்கனவே அறப்போர் இயக்கம் ஊழல் புகார்களை எழுப்பி, நீதிமன்றம் வரை கொண்டுபோனது. கடந்த அ.தி.மு.க. ஆட்சிக்காலத்தில் லஞ்ச ஒழிப்புத் துறை, அந்த வழக்கிற்கு முகாந்திரம் இல்லைன்னு சொல்லுச்சு. இப்ப ஆட்சி மாற்றம் நடந்திருக்கும் நிலையில், அதே லஞ்ச ஒழிப்புத்துறை, அந்த வழக்கில் ஆஜராகி, வேலுமணி மீதான புகார்களுக்கு வலுவான ஆதரங்கள் இருக்கு, அதனால் rrஎஃப்.ஐ.ஆர். போடப் போறோம்னு சொல்லிவிட்டது. காரணம், அந்தத் துறையின் புது இயக்குநரான கந்தசாமிதானாம். மத்திய தணிக்கை அறிக்கை சுட்டிக்காட்டிய இழப்புகளின் அடிப்படையிலும், வேலுமணிக்கு எதிரான ஆதாரங்கள் கிடைச்சிருக்குதாம். சீனியர் அமைச்சர் துரைமுருகன் மூலம் முதல்வரின் மருமகனான சபரீசனை வேலுமணி தரப்பு தொடர்பு கொண்டும், அங்கிருந்து சாதகமான பதில் கிடைக்கலையாம். அதனால் மாஜி தரப்பு, வெலவெலத்துப் போயிருக்குதாம்.''”

"’மாஜி மந்திரிகள் தொடர்பான பஞ்சாயத்து ஒன்னும் டெல்லியில் நடக்குதேப்பா?''”

Advertisment

"ஆமாங்க தலைவரே, எடப்பாடி, வேலுமணி, தங்கமணி உள்ளிட்ட சில அ.தி.மு.க. மாஜி மந்திரிகள், அதிகாரத்தின் மூலம் சம்பாதிச்சதில் ஒரு பகுதியை, இங்குள்ள தொழிலதிபர்களின் துணையோட, ஒன்றிய அமைச்சர் பிரகாஷ் ஜவ்டேகர் மூலம், மும்பை மார்வாடிகள் வழியா பிஸ்னஸ்ல முதலீடு செய்யப்பட்டது பற்றியும், அவர்களுக்குள் ஏற்பட்ட உரசலால், அந்தப் பணத்தை மாஜிக்கள் தரப்பு மீட்க முடியாமல் தவிப்பது பற்றியும் போன முறையே நாம் பேசிக்கிட்டோம். இவர்களின் முதலீட்டை அதிகமா ஆக்டிவேட் பண்ணியது மற்றொரு ஒன்றிய அமைச்சரான பியூஸ் கோயல் தரப்புதான்னு இப்ப அடுத்தகட்ட தகவல்கள் கிடைச் சிருக்கு. அந்தப் பணத்தை மீட்க, இப்ப டெல்லியில் மாஜிக்கள் தரப்பு பஞ்சாயத்து பேச ஆரம்பிச்சிருக்குதாம். ஆனால் எதிர்தரப்பு ரொம்ப அலட்சியமாக இதை டீல் பண்ணுதாம். அதனால் மாஜிக்கள் தரப்பு, மேலும் அப்செட்ல இருக்கு.''”

rr

"தனியார் தொலைக்காட்சிக்கு அண்மையில் சசிகலா கொடுத்த பேட்டியில், கார்டன் ரகசியங்கள் பலவும் வெளில வருதே?''”

"உண்மைதாங்க தலைவரே, அந்தத் தனியார் தொலைக் காட்சிப் பேட்டியில் சசிகலா, நான் எப்பவும் ஜெயலலிதாவை ‘"குட்டிப் பையா'ன்னுதான் அழைப்பேன்னு தங்களுக்குள் இருந்த பழக்கம் பற்றி மனம் திறந்தார். அப்பல்லோவில் ஜெய லலிதா உயிருக்குப் போராடிய கடைசி நிமிசத்தில் துடிதுடிச்சப் பவும், அவருக்கு கார்டியாக் அரெஸ்ட் ஏற்பட்டப்பவும், அவரது அறைக்கு ஓடிப்போய், அவர் உடலைத் தொட்டு, ’"குட்டிப் பையா எழுந்திரு, குட்டிப் பையா எழுந்திரு'ன்னு சொல்லி அவர் கூப்பிட் டாராம். இதை நமது நக்கீரன் மட்டும்தான் அப்பவே எழுதியிருந் தது. நமக்கு மட்டுமே கிடைத்த அந்த செய்தி, இப்ப சசிகலா வாயாலேயே உறுதியாயிடிச்சின்னு, நக்கீரன் வாசகர்கள் பாராட்டுறாங்க.''”

"வாசகர்களின் நினைவாற்றலும் அவர்களோட ஆதரவும்தான் நக்கீரனின் பெரும்பலம்.''”

rr

"தலைவரே, தமிழக பா.ஜ.க தலைவராக இருந்த முருகன், மத்திய இணையமைச்சரானதால், புதிய தலைவரா முன்னாள் ஐ.பி.எஸ். அதிகாரியான அண்ணாமலை நியமிக்கப்பட்டார். பொதுவா, புதுசா ஒருத்தர் தலைவர் பொறுப்புக்கு வந்தால், மாநில, மாவட்ட நிர்வாகிகளை மாற்றுவது வழக்கம். அந்த வகையில் தனக்குத் தோதான புதிய நிர்வாகிகள் பட்டியலை அண்ணாமலை தயாரிக்க ஆரம்பிச்சார். அதனால், இப்ப பதவியில் இருக்கும் முருகன் ஆதரவாளர்கள், தங்கள் பதவி பறிக்கப்பட்டு விடுமோங்கிற பயத்தில், முருகனைத் தொடர்பு கொண்டு முறையிட்டிருக்காங்க. முருகனோ, பயப்படாதீங்க, அண்ணாமலை உங்களை டிஸ்டர்ப் பண்ணமாட்டார்ன்னு நம்பிக்கையூட்டியதோட, அண்ணாமலையைத் தொடர்புகொண்டும் இது குறித்துப் பேசியிருக்காரு. அண்ணாமலையோ, "உங்க ஆளுங்களுக்கு எந்த வகையிலும் நான் சங்கடம் தரமாட்டேன்'னு உத்தரவாதம் கொடுத்திருக்காராம்.''”

"தஞ்சைத் தமிழ்ப் பல்கலைக் கழகத்திலும் புதுசா சர்ச்சை ஒன்னு கிளம்பியிருக்கே?''”

"உண்மைதாங்க தலைவரே, தஞ்சை தமிழ்ப் பல்கலைக்கழக வளர்ச்சி மற்றும் அதன் ஆய்வு பணிகளுக்காக, ரூசா திட்ட நிதியில் இருந்து 20 கோடி ரூபாயை, ஒன்றிய அரசு கடந்த காலத்தில் ஒதுக்குச்சு. இந்த நிதியைப் பயன்படுத்துவதில் ஏடாகூடம்னு ஒன்றிய அரசுக்குப் புகார்கள் போய் குவிஞ்சிருக்காம். இதைப் பார்த்துத் திகைத்த ஒன் றிய உயர்கல்வி அமைச்சகம், இந்த விவகாரத்தை தீவிரமா விசாரிக்கும்படி, சி.பி.ஐ.க்கு உத்தரவிட்டிருக்கு. இதனால் ஷாக் ஆன, துணைவேந்தர், ராஜ் பவனால் பல்கலைக்கழகத்தில் நியமிக்கப்பட்ட பேராசிரியர்கள் மற்றும் பணியாளர்களின் தகுதி களை மூவர் குழு மூலம் ஆய்வு செய்து வருகிறாராம். தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் முன்னாள் துணைவேந்தர் குரூப், இந்நாள் துணைவேந்தர் குரூப் என இரண்டு தரப்பு இருப்பதால், சர்ச்சைகள் ஓய்வதே யில்லை. சி.பி.ஐ விசாரணையைத் திசை திருப்ப, மூவர் குழு ஆய்வுங்கிற பேரில் மிரட்டல் விடப்படு வதா மேலிடத்துக்குப் புகார்கள் பரவ ஆரம்பிச்சிருக்கு.''’

"நெடுஞ்சாலைத் துறையிலும் சலசலப்பு கேட்குதேப்பா?''”

"நெடுஞ்சாலைத் துறையில் ஏ.டி.க்கள், ஏ.இ.க்கள்னு 1700 பேர் இருக்காங்க. இவங்கள்ல 90 சதவீதம் பேர், டெண்டர் தொடர்பான கமிஷன் விவகாரங்கள்ல சம்பந்தப்பட்டவங்களாம். இவர்கள் தங்கள் இடத்தை தக்க வச்சிக்கவும், இடமாற்றல் நடந்தால் வருமானம் அதிகமுள்ள இடங்களுக்குச் செல்லவும், அமைச்சரின் உதவியாளர் ஒருத்தரை வெயிட்டா போய் சந்திச்சிக்கிட்டு இருக்காங்க. அந்த உதவியாளர் துறை அலுவலகத்துக்கே வந்து யார், யார் எந்தெந்த இடத் தைக் கேட்டிருக்காங்கன்னு லிஸ்ட் வாங்கிட்டு போயிருக்கா ராம். நெடுஞ்சாலைத்துறை காண்ட்ராக்ட் வேலைகளுக் காக, திருவண்ணாமலையில் உள்ள அமைச்சரின் இல்லத்தை, 10 வருசமா சம்பாதிச்ச அ.தி.மு.க. காண்ட்ராக்டர் கள்தான் அதிகமா மொய்க்கிறாங்களாம். தி.மு.க. ஒப்பந்ததாரர்களுக்கு மரியாதை இல்லைனு குமுறல் கேட்குது. 10 வருசமா கட்சிக்கு செலவு பண்ணி போண்டியாயிட்டோம். அப்பகூட எங்களை கை தூக்கிவிடக் கூடாதான்னு தி.மு.க. காண்ட்ராக்டர்கள் புலம்ப, உள்ளாட்சித் தேர்தல் முடியட்டும். உங்களுக்கும் காண்ட்ராக்ட் கிடைக்கும்னு சமாதானம் சொல்லப்படுதாம்.''”

"அமைச்சர் என்ன சொல்றாரு?''”

"அவர்கிட்டேயே கேட்டேன்... மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை இடமாறுதல் செய்யப் படவேண்டியவர்கள் ஏழெட்டு ஆண்டுகளாக ஒரே இடத்தில் இருப்பதும், டிரான்ஸ்பருக்காக லஞ்சம் புரள்வதும் தெரியவந்ததா சொன்னவர், அதனால பொறியாளர் சங்க நிர்வாகிகளை அழைத்து கூட்டம் போட்டு, டிரான்ஸ்பருக்கு யாரும் லஞ்சம் கொடுக்க வேணாம்னு சொன்னதாகவும், நெடுஞ்சாலைத்துறையில் உள்ள 10 டிவிஷனில் கட்டுமானம் மற்றும் பராமரிப்பு டிவிஷனை மட்டுமே எல்லாரும் குறிவைத்து டிரான்ஸ்பர் வாங்குவதால், அதைத் தடுத்து, டிரான்ஸ்பர் கேட்பவர்கள் மூன்று டிவிஷன்களை சாய்ஸாகக் குறிப்பிட்டு விண்ணப்பிக்கணும்னும் ஆய்வுக்கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டதாகவும் சொன்னார். அதன்படி, வெளிப்படைத் தன்மையுடன் நெடுஞ்சாலைத்துறையில் இட மாறுதல்கள் செய்யப்பட்டு, அதனை முறைப்படி இணைய தளத்திலும் பதிவு செய்திருக் கிறோம்னு சொல்றாரு. துறைரீதியான புகார்கள் மீது உரிய நடடிவக்கை எடுக்கப் படும்னு உறுதியா சொல்றாரு.''”