திருச்சி தொழிலதிபர் ராமஜெயம் கொலைவழக்கில் தொடர்புடையவராகக் கூறப்படும் பிரபு என்கிற பிரபாகரன் கடந்த டிசம்பர் 11-ஆம் தேதி கொலைசெய்யப்பட்டார்.
இவர் கடந்த...
சில வாரங்களுக்கு முன்பு ராமகிருஷ்ணன் என்பவரை மிரட்டி பணம்பறித்தது தொடர்பாக ராமகிருஷ்ணன் கொடுத்த புகாரின் அடிப்படையில் கைதாகி நிபந்தனை பிணையில் வெளியே வந்தார். பின்னர் திருச்சி அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் இரவு 7:00 மணிக்கு ஆஜராகி கையெழுத்திட்டுள்ளார். இதனைத்தொடர்ந்து அருகிலுள்ள தனது அலுவலகத்தில் நண்பர்களுடன் சேர்ந்து மது அருந்தியுள்ளார்.
இரவு 9.30 மணிக்கு இரண்டு இருசக்கர வாகனத்தில் வந்த 4 பேர் முகமூடி அணிந்து பிரபாகரன் அலுவலகத்திற்குள் நுழைந்து அவரை சரமாரியாக வெட்டித்தள்ளினர். இதில், அவர் சம்பவ இடத்திலே உயிரிழந்தார். பின்னர் கொலையாளிகள் நான்கு பேரும் அங்கிருந்து தப்பியோடிவிட்டனர். இதுபற்றி தகவலறிந்து வந்த போலீசார் உடலைக் கைப்பற்றி, வழக்குப் பதிவு செய்து, 12-ஆம் தேதி கொலையாளிகள் 4 பேரை கைது செய்தனர்.
பிரபாகரன் கொலைக்கான காரணங்களை நாம் விசாரித்தபோது பல்வேறு தகவல்கள் காதில் விழுந்தன. திருச்சி அரசு மருத்துவமனையின் பின்புறமுள்ள பகுதிகளில் அதிகளவில் கஞ்சா, போதை ஊசி போன்றவை விற்பனை செய்யும் தொழி லில் ஈடுபட்டு வந்தவர் பிரபாகரன். அதேபோல் திருச்சி அரசு மருத்துவமனை வளாகத்திற்குள் தன்னுடைய ஆம்புலன்ஸ் மட்டும்தான் நிறுத்தப்பட வேண்டும் எனக்கூறி இதற்குமுன் இருந்த எல்லா அரசு மருத்துவமனை டீன்களையும் கைக்குள் வைத்துக்கொண்டு ஒரு தனி சாம்ராஜ்யமே நடத்திவந்தார்.
அரசு ஊர்தி சேவைகள் வந்தபிறகு இவருடைய ஆதிக்கம் கொஞ்சம் குறைந்தது. இருப்பினும், விபத்தில் சிக்கியவர்களை மீட்பது, இறந்துபோனவர்களை அவர்களுடைய சொந்த ஊர்களுக்குக் கொண்டுசெல்வது என்று தன்னுடைய அதிகாரத்தை செலுத்தி, தான் நிர்ணயிப்பதுதான் விலை என்று மிரட்டி பணம் சம்பாதித்துவந்தார்.
பழைய கார்களை வாங்கிவிற்கும் புரோக்கர் தொழிலும் செய்துவந்த நிலையில், தொழிலதிபர் ராமஜெயம் கொலை வழக்கில் பயன்படுத்தப்பட்ட வெர்சா கார் தொடர்பாக சிறப்பு புலனாய்வுப் பிரிவின் விசாரணைக்கு கடந்த 9-ஆம் தேதி நேரில் ஆஜராகி விசாரணையை முடித்துவிட்டு வந்துள்ளார். 12-ஆம் தேதி நேரில் ஆஜராகவேண்டிய நிலையில் பிரபாகரன் கொலைசெய்யப்பட்டுள்ளது சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளது.
ராமஜெயம் கொலைவழக்கில் பிரபாகரன் வாய்திறந்தால், குற்றவாளிகள் யார் என்பது தெரிந்துவிடுமோ என்பதற்காக கொலை செய்யப்பட்டார் என்ற பேச்சு கிளம்பியது. உண்மையில் ராமஜெயம் கொலை வழக்கிற்கும், பிரபாகரனுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை. கொலைக்குப் பயன்படுத்தபட்டதாகச் சொல்லப்படும் வெள்ளைநிற வெர்சா காரை இவர் வாங்கி விற்பனை செய்துள்ளார்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ramajayam2_2.jpg)
சமீபத்தில் அவர் கார் வாங்கி விற்பனைசெய்ததில் ராமகிருஷ்ணன் என்பவருடன் ஏற்பட்ட தகராறு காரணமாக அவரை மிரட்டிப் பணம் பறித்த வழக்கில்தான் அரசு மருத்துவமனை காவல்நிலையத்தில் ஆஜராகி கையெழுத்து போட்டு வந்துள்ளார். அந்த காவல்நிலையத்தில் ஆய்வாளராக உள்ள அருள்ஜோதியிடம் பேசிய பிரபாகரன், "நீ கேட்கும் போதெல்லாம் எவ்வளவு பணத்தை அள்ளிக்கொடுத் திருக்கேன். ஆன நீ என்மேலயே கேஸ் போட்டுருக்க''” என்று சண்டை போட்டுள்ளார்.
ராமகிருஷ்ணன் காவல் ஆணையரிடம் புகாரளித்துவிடுவேன் என்று கூறியதால், அந்த புகாரை பெற்றுக்கொண்டு வழக்குப் பதிவு செய்திருக்கிறார்.
இதெல்லாம் ஒருபுறமிருக்க, பிரபாகரன் கொலை செய்யப்படுவதற்கு மற்றொரு முக்கிய காரணம் பிரபாகரனின் கார் ஓட்டுநராகவும், ஆம்புலன்ஸ் ஓட்டுநராகவும் அரியமங்கலத்தைச் சேர்ந்த ரவுடி அப்பு (எ) ஹரிகிருஷ்ணன் இருந்துள்ளார். பிரபாகரன் பெண்கள் விஷயத்தில் கொஞ்சம் வீக். ஹரியின் மனைவியிடமும் தன்னுடைய கைவரிசையை பிரபாகரன் காட்டியுள்ளார். இதேபோல் தன் நண்பர்கள், தன்னிடம் பணியாற்றும் ஓட்டுநர்களின் மனைவிகள் என பல பெண்களிடம் தன்னுடைய கைவரிசையைக் காட்டியதாகக் கூறப்படுகிறது. இதனால் ஆத்திரமடைந்த ஹரி தன்னுடைய நண்பர்கள் மூலம் பிரபாகரனை பழி வாங்கியுள்ளார்களாம்.
இதுதவிர, கார்கள் வாங்கி விற்பனை செய்வதில் தொடர்ந்து பல பிரச்சனைகள் ஏற்பட்டுள்ளதாகவும், கொடுக்கல் -வாங்க லில் மிரட்டி பணம் பறித்ததாக பல வழக்குகள் இவர்மீது உள்ளதால், அவர்களில் யாராவது கொலை செய்திருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது.
இதுதொடர்பாக திருச்சி மாநகர காவல்துறை ஆணையர் காமினியை தொடர்புகொண்டு பேசியபோது,
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/ramajayam1_3.jpg)
"காவல் ஆய்வாளர் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டு, விசாரணை செய்யப்பட்டு வந்தது. அதில் அரியமங்கலத்தை சேர்ந்த அப்பு (எ) ஹரிகிருஷ்ணனுடன் கார்கள் வாங்கி விற்கும் தொழிலில் முன்பகை இருந்துவந்திருக்கிறது. அவருடைய தூண்டுதலின்பேரில் பொன்மலை யைச் சோந்த ரவுடிகள் ரியாஸ்ராஜ், லட்சுமணன், தஞ்சாவூர் மாவட்டத்தை சேர்ந்த ராஜேஷ் பைலட் (எ) கல்லணை ராஜேஷ், அரியமங்கலத் தைச் சேர்ந்த அப்துல் கபூர் பஷீர் ஆகியோர்களுடன் சேர்ந்து கொலை செய்துள்ளனர். இதில் நான்கு பேரையும் கைது செய்துள்ளோம். ஹரியிடம் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது''’என்றார்.
ராமஜெயம் கொலைவழக்கில் தொடர்புடையவர் கொல்லப்பட்டது திருச்சி மாநகரையே திகைப்பில் ஆழ்த்தியுள்ளது.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2023-12/ramajayam-t.jpg)