"ஹலோ தலைவரே, தேர்தல் திருவிழா தொடங்குவதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்துவிட்டது.''”
"ஆமாம்பா, தேர்தல் ஆணைய அதிகாரி களிடம் பரபரப்பைப் பார்க்க முடிகிறதே?''”
"உண்மைதாங்க தலைவரே, தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான சட்டமன்றத் தேர்தலை ஒரேகட்டமாக ஏப்ரல் முதல் வாரத்தில் நடத்த தலைமைத் தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது. இதற்கான அறிவிப்பை, பிப்ரவரி 28ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவிக்க விருக்கிறதாம். இதற்கிடையே, தமிழகத்தில் காலியாக இருக்கும் 6 ராஜ்யசபா இடங்களுக் கான தேர்தலையும் அது நடத்தியாக வேண் டும். இந்த 6 இடங்களில் தி.மு.க. கூட்டணி 4 இடங்களிலும் அ.தி.மு.க. கூட்டணி 2 இடங்களிலும் போட்டியிடும் என்பதால் 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்படவிருக்கிறார்கள். இந்த ராஜ்யசபா தேர்தலை மார்ச்சில் நடத்தவும் உத்தேசித்திருக்கிறதாம் தேர்தல் ஆணையம்.''”
"தங்கள் கட்சிக்கான தேர்தல் அறிக்கையைத் தயாரிக்க, ஒரு சிறப்புக் குழுவை நடிகர் விஜய் நியமித்திருக் கிறாரே?''”
"த.வெ.க. தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்காக சிறப்புக்குழுவை அமைத்திருக்கிறார் நடிகர் விஜய். 12 பேர் இடம்பெற்றுள்ள இந்தக் குழுவில் செங்கோட்டையன் இல்லாதது அவர் தரப்பினரை ஏமாற்றத்தில் கைபிசைய வைத்திருக்கிறதாம். விஜய் நியமித்த இந்த சிறப்புக் குழுவினர், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பொதுமக்கள், விவசாயிகள், தொழிலமைப்பு கள், சமூகம் மற்றும் தொழிலாளர் நல அமைப்பு கள், கல்வியாளர்கள், மகளிர் அமைப்பினர், இளை ஞர்கள், பட்டதாரிகள், பொருளாதார வல்லுநர்கள் என பல தரப்பட்டவர்களையும் சந்தித்து, அவர் களின் குரல்கள் எதிரொலிக்கும் வகையில் அந்தத் தேர்தல் அறிக்கையைத் தயாரிக்க இருக்கிறார் களாம். தேர்தலின் போது, ஒவ்வொரு அரசியல் கட்சியின் தேர்தல் அறிக்கையும் மக்களால் உற்று கவனிக்கப்படும் என்பதால், அதில் அதீத கவனத் தை விஜய் செலுத்துகிறாராம். தனக்குக் கூடும் கூட் டத்தை, தங்கள் தேர்தல் அறிக்கை வாக்குகளாக மாற்றும் என்றும் அவர் அழுத்தமாக நம்புகிறாராம்.''’
"அதேசமயம், டெல்லியின் கிடுக்கிப்பிடியில் நடிகர் விஜய் முழுமையாக சிக்கியிருக்கிறாரே?''”
"ஆமாங்க தலைவரே, த.வெ.க. தலைவர் விஜய்க்கு, தங்களின் டெல்லி அலுவலகத்தில் வந்து ஆஜராகுமாறு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியதால், விஜய் ரொம்பவே பதட்டமாகிவிட்டார். உடனே தனது வழக்கறிஞர்களிடம் அவர் ஆலோசித்தார். வழக்கறிஞர்களோ, "பிரச்சாரக் கூட்ட ஏற்பாடு களை எங்கள் கட்சி நிர்வாகிகள்தான் கவனித்துக் கொண்டார்கள். நான் அவர
"ஹலோ தலைவரே, தேர்தல் திருவிழா தொடங்குவதற்கான அறிகுறிகள் தெரிய ஆரம்பித்துவிட்டது.''”
"ஆமாம்பா, தேர்தல் ஆணைய அதிகாரி களிடம் பரபரப்பைப் பார்க்க முடிகிறதே?''”
"உண்மைதாங்க தலைவரே, தமிழகம் மற்றும் புதுச்சேரிக்கான சட்டமன்றத் தேர்தலை ஒரேகட்டமாக ஏப்ரல் முதல் வாரத்தில் நடத்த தலைமைத் தேர்தல் ஆணையம் ஆலோசித்து வருகிறது. இதற்கான அறிவிப்பை, பிப்ரவரி 28ஆம் தேதி தேர்தல் ஆணையம் அறிவிக்க விருக்கிறதாம். இதற்கிடையே, தமிழகத்தில் காலியாக இருக்கும் 6 ராஜ்யசபா இடங்களுக் கான தேர்தலையும் அது நடத்தியாக வேண் டும். இந்த 6 இடங்களில் தி.மு.க. கூட்டணி 4 இடங்களிலும் அ.தி.மு.க. கூட்டணி 2 இடங்களிலும் போட்டியிடும் என்பதால் 6 வேட்பாளர்களும் போட்டியின்றி தேர்வு செய்யப்படவிருக்கிறார்கள். இந்த ராஜ்யசபா தேர்தலை மார்ச்சில் நடத்தவும் உத்தேசித்திருக்கிறதாம் தேர்தல் ஆணையம்.''”
"தங்கள் கட்சிக்கான தேர்தல் அறிக்கையைத் தயாரிக்க, ஒரு சிறப்புக் குழுவை நடிகர் விஜய் நியமித்திருக் கிறாரே?''”
"த.வெ.க. தேர்தல் அறிக்கையை தயாரிப்பதற்காக சிறப்புக்குழுவை அமைத்திருக்கிறார் நடிகர் விஜய். 12 பேர் இடம்பெற்றுள்ள இந்தக் குழுவில் செங்கோட்டையன் இல்லாதது அவர் தரப்பினரை ஏமாற்றத்தில் கைபிசைய வைத்திருக்கிறதாம். விஜய் நியமித்த இந்த சிறப்புக் குழுவினர், தமிழகம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து பொதுமக்கள், விவசாயிகள், தொழிலமைப்பு கள், சமூகம் மற்றும் தொழிலாளர் நல அமைப்பு கள், கல்வியாளர்கள், மகளிர் அமைப்பினர், இளை ஞர்கள், பட்டதாரிகள், பொருளாதார வல்லுநர்கள் என பல தரப்பட்டவர்களையும் சந்தித்து, அவர் களின் குரல்கள் எதிரொலிக்கும் வகையில் அந்தத் தேர்தல் அறிக்கையைத் தயாரிக்க இருக்கிறார் களாம். தேர்தலின் போது, ஒவ்வொரு அரசியல் கட்சியின் தேர்தல் அறிக்கையும் மக்களால் உற்று கவனிக்கப்படும் என்பதால், அதில் அதீத கவனத் தை விஜய் செலுத்துகிறாராம். தனக்குக் கூடும் கூட் டத்தை, தங்கள் தேர்தல் அறிக்கை வாக்குகளாக மாற்றும் என்றும் அவர் அழுத்தமாக நம்புகிறாராம்.''’
"அதேசமயம், டெல்லியின் கிடுக்கிப்பிடியில் நடிகர் விஜய் முழுமையாக சிக்கியிருக்கிறாரே?''”
"ஆமாங்க தலைவரே, த.வெ.க. தலைவர் விஜய்க்கு, தங்களின் டெல்லி அலுவலகத்தில் வந்து ஆஜராகுமாறு சி.பி.ஐ. சம்மன் அனுப்பியதால், விஜய் ரொம்பவே பதட்டமாகிவிட்டார். உடனே தனது வழக்கறிஞர்களிடம் அவர் ஆலோசித்தார். வழக்கறிஞர்களோ, "பிரச்சாரக் கூட்ட ஏற்பாடு களை எங்கள் கட்சி நிர்வாகிகள்தான் கவனித்துக் கொண்டார்கள். நான் அவர்கள் அழைத்துச்சென்ற இடங்களில் பேசினேன். இது தவிர எனக்கு எதுவும் தெரியாது என்று சொல்லுங்கள்'’என ஆலோசனை கூறினர். இதற்கிடையே சி.பி.ஐ. அதிகாரிகளோ, விஜய்யின் பிரச்சார வேன் ஓட்டுநரைத் தூக்கிச் சென்று, அவருக்கு எதிராக வாக்குமூலத்தை வாங்கியிருக்கிறார்களாம். அதேபோல் விஜய் கட்சியின் முக்கிய நிர்வாகிகளும் அவருக்கு எதி ராகவே சி.பி.ஐ.யிடம் பேசியதாகச் சொல்கிறார்கள். இதையெல்லாம் வைத்துக்கொண்டு விஜய்யை சுற்றிவளைக்க நினைக்கிறதாம் டெல்லி. ''”
"கரூரிலும் மத்திய தடயவியல் குழுவினர் களமிறங்கி, விஜய்க்கு எதிரான தடயங்களைச் சேகரித்ததாகவும் சொல்கிறார்களே?''”
"ஆமாங்க தலைவரே, 41 பேர் பலியான கரூர் வேலுச்சாமிபுரத்தில் மத்திய தடய அறிவியல் குழுவினர் 10ஆம் தேதி அதிரடி ஆய்வில் இறங்கி னர். அப்போது விஜய்யின் பிரச்சார வாகனம் நிறுத்தப்பட்டிருந்த இடம், சாலையின் அகலம் உள்ளிட்டவற்றை அளவீடு செய்தனர். அந்த பிரச் சார வேனின் உள்ளே சென்று, அது எப்படியெல் லாம் சொகுசாக அமைக்கப்பட்டிருக்கிறது என்றெல்லாம் ஆராய்ந்திருக்கிறார்கள். வாகன அளவீட்டுக்காக 10ஆம் தேதி காலை 9 மணிக்கு அந்த வாகனத்தின் ஓட்டுநர் பரணிதரன், விஜய் யின் பிரச்சார வாகனத்தை சுற்றுலா மாளிகைக்கு ஓட்டி வந்திருக்கிறார். அந்த வாகனத்தின் நீள, அகலத்தை அளந்ததோடு, பரணிதரனையும் விசா ரணை செய்திருக்கிறார்கள் சி.பி.ஐ. அதிகாரிகள். பின்னர், நெரிசலின்போது உயிரிழந்தவர்களின் வீடுகளுக்குச் சென்று, அவர்களின் குடும்பத்தின ரிடம் நெரிசல் சம்பவம் எப்படி நடைபெற்றது என் றும் விசாரணை மேற்கொண்டனர். இதன்மூலம் 41 பேர் பலியான விவகாரத்தில் விஜய்யை குற்றவாளி ஆக்குவதற்கான ஆவணங்கள் தயாராகிறதாம்.''”
"தி.மு.க.வையும் பலவீனமாக்க அமலாக்கத்துறை யை டெல்லி ஏவப்போகிறது என்கிறார்களே?''”
"ஆமாங்க தலைவரே, இப்போது திரிணாமுல் காங்கிரஸ் தலைவரான மேற்குவங்க முதல்வர் மம்தா பானர்ஜியைக் குறிவைத்து அமலாக்கத்துறை எப்படி மேற்குவங்கத்தில் களமிறக்கப் பட்டிருக்கிற தோ, அதே போல் இங்குள்ள தி.மு.க.வை குறிவைத் தும் அமலாக்கத்துறை களமிறக்கப்படவிருக் கிறது என்கிறது டெல்லி பக்கமிருந்து வரும் செய்தி. அதற் கான வேலைகள் எல் லாம் தொடங்கிவிட்டன வாம். தி.மு.க. அமைச்சர் கள் ஒவ்வொருவரைப் பற்றியும் அவர்கள் ஆவ ணங்களைத் தயாரித்து வைத்திருக்கிறார்களாம். அதனால் விரைவில் தமி ழகத்தில் அமலாக்கத்துறை யின் ஆட்டத்தைப் பார்க்க லாம் என்கிறார்கள்.''”
"இதுபோல் தி.மு.க. எத்தனையோ சோதனை களைப் பார்த்துவிட்டது. அதை விடுப்பா, முதல்வர் ஸ்டாலினிடம் மு.க.அழகிரி ஆதரவாளர்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்களே?''”
"மு.க.அழகிரியின் வலதுகரம் என்று வர்ணிக்கப்படும் மதுரைக்காரரான மன்னன், அண்மையில் மதுரைக்குச் சென்ற முதல்வர் ஸ்டாலினை சந்தித்து, "இந்த தேர்தலிலாவது கழகப் பணி செய்ய, அழகிரி ஆதரவாளர்களான எங்களை அனுமதியுங்கள்'’என்று கோரிக்கை மனுவை கொடுத்திருக்கிறார். கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக அழகிரியும் அவரது ஆதரவாளர்களும் ஸ்டாலினால் ஓரங்கட்டப்பட்டிருக்கும் நிலை யில்,’"மாற்றுக் கட்சியினர் எங்களை அழைத்தும் கருப்பு சிவப்பைத் தவிர வேறு எண்ணம் எங்களுக்கு இல்லை என்று உறுதியோடு இருக்கிறோம். அப்படிப்பட்ட எங்களை இன்னும் மனஉளைச்சலில் ஆழ்த்தாமல், 2026 தேர்தலில் தி.மு.க. வெற்றிக்கு பாடுபட அனுமதிக்க வேண்டும்'’ என அந்த கோரிக்கை மனுவில் குறிப்பிட்டிருக்கிறார் மன்னன்.'' ”
"அதுசரி, அரசின் விலையில்லா லேப்டாப் களைப் பெறும் மாணவ மாணவிகள், அரசுத் தரப்பைத் திகைக்க வைக்கிறார்களே?''”
"உலகம் உங்கள் கையில் எனும் திட்டத்தின் படி தமிழக கல்லூரி மாணவ-மாணவிகளுக்கு விலையில்லா லேப்டாப்களை வழங்கிவருகிறது தி.மு.க. அரசு. நடப்பு நிதியாண்டில் 10 லட்சம் லேப்டாப்களை வழங்கும் வகையில் இதற்கான திட்டத்தை அண்மையில் தொடங்கிவைத்தார் ஸ்டாலின். இந்த லேப்டாப்களின் மேல்புறத்தில் கலைஞர் மற்றும் ஸ்டாலின் படங்களும் தமிழக அரசின் இலச்சினையும் பொறிக்கப்பட்டிருக்கின் றன. மாணவ-மாணவிகளோ, இவற்றை கெமிக்கல் மூலம் அழித்துவிட்டு, தங்களுக்குப் பிடித்தவர் களின் படங்களை அதில் ஒட்டிக் கொள்கிறார் களாம். இது தி.மு.க. தரப்பை அதிரவைத்திருக் கிறது. இதைக்கண்ட உயரதிகாரிகள், மாணவர் களின் இந்த செயலை எப்படித் தடுப்பது என ஆலோசனை நடத்தினர். இதையடுத்து, இந்தப் படங்களையும் சீரியல் நம்பரையும் அழித்துவிட் டால், ஒருவருட வாரண்டி இல்லை என்று எல்காட் நிறுவனம் மூலம் மாணவ -மாணவி களுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டிருக்கிறது.''”
"தி.மு.க.வுடன் ராமதாஸ் தரப்பு பா.ம.க. ரகசியப் பேச்சுவார்த்தை நடத்துகிறதே?''”
"ஆமாங்க தலைவரே, அ.தி.மு.க. -பா.ஜ.க. கூட்டணியில் இணைந்திருக்கிறார் அன்புமணி. இது, பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராம தாஸை எரிச்சல்படுத்தியிருக்கிறது. இந்த நிலையில் அ.தி.மு.க. கூட்டணிக்கு வரும்படி, அவரிடம் மீடியேட்டராக வந்து வலியுறுத் திய யூடியூபர் ஒருவரிடம், ’எடப்பாடி பெயரைச் சொல்லிக்கொண்டு இனி இங்கே வராதே’ என்று கடுமை காட்டியிருக்கிறார் ராமதாஸ். இந்தச் சூழலில், தி.மு.க பக்கம் ராமதாசின் பார்வை திரும்பியுள்ளது. ஜி.கே.மணி மூலம் தி.மு.க. தரப்புடன் ரகசியப் பேச்சு வார்த்தை நடந்துகொண்டிருக்கிறது. 8 சீட்டுகளுக்கு மேல் தரவேண்டும் என்று டிமாண்ட் வைக்கப்படுகிறது. இதற்கிடையே, பா.ம.க. சார்பில் போட்டியிட விரும்புகிறவர் களிடம் இருந்து விருப்ப மனு வாங்கும் வைபவம் தைலாபுரத்தில் தொடங்கியிருக் கிறது. ஆர்வமாக சீட் கேட்டு பலரும் விருப்ப மனுக்களைத் தாக்கல் செய்து வருகிறார்கள். ராமதாசின் மகளும் கட்சியின் செயல் தலைவருமான ஸ்ரீகாந்தி, இந்த தேர்தலில் போட்டியிட வேண்டும் என்று பலரும் அவ ரது பெயரில் பணம் கட்டி வருகின்றனர்.''”
"காங்கிரஸ் கட்சியின் தலைமை அலுவலகமான சத்தியமூர்த்தி பவனில், கத்திக் குத்து சம்பவம் அரங்கேறியிருக்கிறதே?''”
"ஆமாங்க தலைவரே, சென்னை சத்திய மூர்த்தி பவனில் சுகாதாரப் பணியாளராக இருந்துவரும் பாக்கியத்துக்கும், அவர் கணவரான ஆட்டோ ஓட்டுநர் சங்கருக்கும் கொஞ்ச காலமாகவே தகராறாம். இந்த நிலையில் சமீபத்தில் ’தள்ளாடியபடியே சத்தியமூர்த்தி பவனுக்கு வந்த சங்கர், திடீ ரென்று யாரும் எதிர்பாராத நேரத்தில், அங்கி ருந்த தன் மனைவி பாக்கியத்தின் கழுத்தில் கத்தியால் குத்தியிருக்கிறார். பாக்கியத்தின் அலறலைக் கேட்டு திகைத்தவர்கள், ஓடி வந்து ரத்தக்களறியான பாக்கியத்தை மீட்டு, மருத்துவமனைக்கு கொண்டு சென்றிருக் கிறார்கள். சம்பவம் தங்கள் அலுவலகத்தில் நடந்தபோதும், கட்சித் தலைவரான செல் வப்பெருந்தகை எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லையாம். இந்த விபரீத விவகாரம், தங்கள் பாதுகாப்பை எண்ணி, காங்கிரஸ் நிர்வாகிகளைப் பதறவைத்திருக்கிறதாம்.''”
"கடலூர் தே.மு.தி.க. மாநாடு, அக் கட்சித் தொண்டர்களை ஏமாற்றத்தில் ஆழ்த்தியிருக்கிறதே?''”
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/12/rang1-2026-01-12-16-01-58.jpg)
"எந்த கட்சியுடன் கூட்டணி என்பதை கடலூர் மாநாட்டில் அறிவிப்போம் என சொல்லியிருந்தார் தே.மு. தி.க. பிரேமலதா. ஆனால் அந்த மாநாட்டில் பேசிய அவர், ’"எந்த ஒரு கட்சியும் கூட்டணியை இறுதியாக அறிவிக்காதபோது, நாம் மட்டும் ஏன் அவசரப்பட வேண் டும்? அதனால் பொறுத்திருந்து அறிவிப்போம்'’என்று உப்புச்சப்பில்லாமல் சொல்ல, இது தே.மு.தி.க.வினரை பெரும் ஏமாற்றத்தில் தள்ளியிருக்கிறது. கூட்டணி குறித்து அவர் ஏன் அறிவிக்கவில்லை? என நாம் விசாரித்தபோது, தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. ஆகிய இரண்டு கட்சிகளோ டும் அவர் பேசிக்கொண்டிருப்பதாகவும், அவர்களிடம் இரட்டை இலக்கத்தில் தொகுதிகளையும், 1 ராஜ்யசபா சீட்டையும், தேர்தல் செலவுக்கு சில கோடிகளையும் கேட்டு டீலிங் பேசிக்கொண்டிருக்கிறாரென்றும் தகவல் கிடைத்தது. பணம் என்பது அந்த 2 கட்சிகளுக்கும் பிரச் சினை இல்லை. ஆனால், மற்ற அவரது 2 கண்டிசன்களைத் தான் தி.மு.க.வும், அதிமுகவும் ஏற்க மறுக்கின்றனவாம்.''”
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/12/rang2-2026-01-12-16-02-46.jpg)
"நானும் என் காதுக்கு வந்த ஒரு தகவலைப் பகிர்ந்துக்கறேன். தன்னை ஜெ.வின் மகள் என்று கூறிக்கொள்ளும் ஜெயலட்சுமி என்பவர், அண்மையில் அமித்ஷாவை சந்தித்திருக்கிறார். அதேவேகத்தில் அ.தி.மு.க. அலு வலகம் வந்து, நான் ஆண்டிப் பட்டியில் நிற்க விரும்புகிறேன் என்று விருப்ப மனுவைத் தாக்கல் செய்திருக்கிறார். அவரைக் கண்டு கடுப்பான அ.தி.மு.க. தொண்டர்கள், ’யார், யாருக்கு மகள்?’என்றபடி அவரை செமையாக கவனித் திருக்கிறார்கள். அப்படியும் கடந்த 10ஆம் தேதி, நேர் காணலுக்காக அவர் மீண்டும் அ.தி.மு.க. அலுவலகத்துக்கு வந்திருக்கிறார். அப்போதும் அவரைத் தாக்கியிருக்கிறார் கள். அந்த நிலையிலும், ஜெ.’எழுதி வைத்த உயில் விவகா ரம் ஒன்று விரைவில் வெளியே வரும் என்று சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்.''
_______________
இறுதிச் சுற்று!
எம்.எல்.ஏ.க்கள் நீக்கம்!
அன்புமணி தரப்பு எம்.எல்.ஏ.க்கள் 3 பேரை பா.ம.க.விலிருந்து நீக்கி திங்கள்கிழமை (12-1-2026) அறிவித்திருக்கிறார் டாக்டர் ராமதாஸ். பா.ம.க.விற்கு 5 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். இவர்களில் மயிலம் எம்.எல்.ஏ. சிவக்குமார், தரும்புரி வெங்கடேஸ்வரன், மேட்டூர் சதாசிவம் ஆகிய மூன்றுபேரும் அன்புமணி ஆதரவாளர்களாக இருந்துவருகின்றனர். இவர்கள் தொடர்ச்சியாக கட்சிவிரோத நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாகச் சொல்லி, அவர்களை நீக்குவதாக அறிவித்துள்ளார் ராமதாஸ். இந்த நீக்கம், பா.ம.க.வில் தொடரும் மோதலை மேலும் ஆழப்படுத்தியுள்ளது என்கிறார்கள்.
-இளையர்
முடிவுக்கு வந்த தூய்மைப் பணியாளர் போராட்டம்!
தூய்மைப் பணியாளர்களின் கோரிக்கைகளை ஏற்று அவர்களது போராட்டத்தை அமைச்சர் சேகர்பாபு முடித்து வைத்தார். தனியார்மயம், வேலை நிறுத்தம் உள்ளிட்ட கோரிக்கைகளை வ-யுறுத்தி தூய்மைப் பணியாளர்கள் கடந்த சில மாதங்களாக தொடர் போராட் டத்தில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் சென்னை அம்பத்தூரில் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் தூய்மைப் பணியாளர்களை 12ஆம் தேதி திங்கள்கிழமை சந்தித்து, அமைச்சர் சேகர்பாபு போராட்டத்தை முடிவுக்கு கொண்டுவந்தார்.
போதைப்பொருள் விநியோக விவகாரத்தில் கைதான அந்த ’ஸ்ரீ’ நடிகர், அரசியல் கட்சி தொடங்கி, சி.பி.ஐ. விசாரணை வளையத்தில் சிக்கியிருக்கும் உச்சநடிகரும், தங்கள் போதை லிங்க்கில் இருப்பதாக வாக்குமூலம் கொடுத்திருக்கிறாராம். இதையும் இப்போது அவருக்கு எதிரான துருப்புச்சீட்டாக டெல்லி கையில் எடுத்திருக்கிறதாம்.
-கீரன்
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us