Advertisment

ராமதாஸ் - அன்புமணி! வன்னியர் சங்கத்தில் குமுறல்!

ss

மீப காலமாகவே பா.ம.க. நிறுவனர் ராமதாசுக்கும் அன்புமணி ராமதாசுக்கும் கருத்து வேறுபாடு அதிகரித்துவருகிறது, கட்சியை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர அன்புமணி தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு முக்கிய பதவிகளை வழங்கியதுடன், வன்னியர் சங்கத்திலிருந்து சீனியர்களை ஓரம்கட்ட ஆரம்பித்தார். இதனால் பல சீனியர்கள் அதிருப்தியில் வெளியேறினார்கள், சில சீனியர்கள் வெளியற்றப்பட்டார்கள்.

Advertisment

செஞ்சி முன்னாள் எம்.எல்.ஏ. செந்தமிழ்செல் வன், எடப்பாடி முன்னாள் எம்.எல்.ஏ. காவேரி, ஓமலூர் முன்னாள

மீப காலமாகவே பா.ம.க. நிறுவனர் ராமதாசுக்கும் அன்புமணி ராமதாசுக்கும் கருத்து வேறுபாடு அதிகரித்துவருகிறது, கட்சியை தன் கட்டுப்பாட்டில் கொண்டுவர அன்புமணி தனக்கு வேண்டப்பட்டவர்களுக்கு முக்கிய பதவிகளை வழங்கியதுடன், வன்னியர் சங்கத்திலிருந்து சீனியர்களை ஓரம்கட்ட ஆரம்பித்தார். இதனால் பல சீனியர்கள் அதிருப்தியில் வெளியேறினார்கள், சில சீனியர்கள் வெளியற்றப்பட்டார்கள்.

Advertisment

செஞ்சி முன்னாள் எம்.எல்.ஏ. செந்தமிழ்செல் வன், எடப்பாடி முன்னாள் எம்.எல்.ஏ. காவேரி, ஓமலூர் முன்னாள் எம்.எல்.ஏ. தமிழரசு, திரு வண்ணாமலை முன்னாள் எம்.எல்.ஏ. எதிரொலி மணியன், திருத்தணி முன்னாள் எம்.எல்.ஏ. ரவிராஜ், புதுவை முன்னாள் எம்.பி. ராமதாஸ், முன்னாள் மத்திய அமைச்சர் பொன்னுசாமி, பா.ம.க. மாநில துணைச் செயலாளர் ஏழுமலை, பசுமை தாயகம் பழனி ஆகியோர் குறிவைக்கப் பட்டு அன்புமணியால் கட்சியைவிட்டு ஒதுக்கப் பட்டார்கள்.

Advertisment

dd

அ.தி.மு.க.வின் சீனியரான சி.வி.சண்முகம் தைலாபுரத்தில் கூட்டணி தொடர்பாக ராமதாசு டன் பேச்சுவார்த்தை நடத்திய விவகாரம் பா.ம.க.வைத் தன் கட்டுப்பாட்டில் வைத்திருக்கும் அன்புமணிக்குப் பிடிக்கவில்லை. இதன் எதிரொலியாகவே, பா.ம.க. பொதுக்குழுவில் பேசிய அன்பு மணி அ.தி.மு.க. ஐந்து பாகங்களாக உடைந்து விட்டது என்ற தொனியில் பேசினார் என்கிறார்கள்.

கடந்த சில நாட்களுக்கு முன் நடந்த பா.ம.க. நிழல் நிதிநிலை அறிக்கை வெளியீடு நிகழ்ச்சியில் அன்புமணி செய்தியாளர்களிடம் பேசிக்கொண்டி ருந்தார். அப்போது ஜி.கே.மணி, அன்புமணியின் காதருகே சென்று மெதுவாக "சட்டசபைக்குச் செல்ல நேரமாகிவிட்டது''” என கூறினார். அதற்கு ஜி.கே.மணியை முறைத்த அன்புமணி, "சரி, நீங்க கிளம்புறதுனா கிளம்புங்க.. சட்டசபையில் போய் நீங்க சொல்லிட்டா அப்படியே கேட்டுப்பாங்க.. அதான் அவங்க பேசவே விடுறதில்லையே'' எனக் கடிந்துகொண்டார். கட்சியின் சீனியர் கௌரவத் தலைவர், பா.ம.க. சட்டமன்றக் குழு தலைவரையே அனைவரின் மத்தியில் மேடையிலேயே நக்க லடிப்பதாக நடந்துகொண்டது கட்சி நிர்வாகி களிடையே கசப்பை உருவாக்கியுள்ளது.

இந்த நிலையில் கடந்த பிப்ரவரி 19-ஆம் தேதி தைலாபுரத்தில் நடந்த வன்னியர் சங்கக் கூட்டத்தில் பேசிய பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், "கட்சியில் மாவட்டச் செயலாளர்களும் அன்புமணியும் என்னை மதிப்பதில்லை. இதனால் கட்சியில் சில பிரிவினைகள் ஏற்படுகின்றது''” என்று குமுறியுள்ளார்.

நாடாளுமன்றத் தேர்தல் நெருங்கும் நிலையில் பா.ஜ.க. தரப்பில் பத்து சீட்டு என்று பேசப்பட்டு வருகிறது. பா.ம.க. தரப்பில் அ.தி.மு.க.விடம் 9 தொகுதி கேட்கப்பட்டதாகவும், எடப்பாடி பழனிசாமி தரப்பே. ராமதாசிடம் மட்டும்தான் பேச்சுவார்த்தை. அன்புமணியுடன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டுமென்றால் பா.ம.க.வுடன் கூட்டணியே வேண்டாம் என்ற நிலைப்பாட்டில் உள்ளதாகவும் பேசப்படுகிறது.

nkn240224
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe