"ஹலோ தலைவரே, அரசியல் பர பரப்புக் காட்சிகளுக்கு நடுவில், பிரியங்கா காந்தி பற்றிய செய்தி ஒன்றும் விறுவிறுப்பை ஏற்படுத்துது.''”

Advertisment

"ஆமாம்பா, தமிழகத்துக்கு வர விருப்பம் இல்லைன்னு இங்குள்ள காங்கிரஸ் நிர்வாகி களிடம் பிரியங்கா தெரிவித்திருக்கிறாராமே?''”

"உண்மைதாங்க தலைவரே, நெல்லையில் செப்டம்பர் 7ஆம் தேதி பிரியங்கா காந்தியை வைத்துப் பொதுக்கூட்டம் நடத்துவதற்கு தமிழக காங்கிரஸ் ஏற்பாடு செய்திருந்தது. இந்த நிலையில், பிரியங்கா காந்தி, பொதுக்கூட்டத்துக்கு வர இயலாது என்று தமிழக காங்கிரசுக்குத் தகவல் கொடுத்து ஷாக் தந்திருக்கிறார். பிரியங்காவை வைத்து பொதுக்கூட்டம் நடத்த, கன்னியாகுமரி காங்கிரஸ் நிர்வாகிகள் மறுத்தது குறித்தும், நெல்லை நிர்வாகிகள் கூட்டம் நடத்த ஆர்வம் காட்டியது குறித்தும் அண்மையில்தான் நாம் விவாதித்திருந்தோம். நெல்லை நிர்வாகிகளும் கூட 2 லட்சம் பேர் கூடும் பொதுக்கூட்ட மைதானத்தில் கூட்டத்தை நடத்த வேண்டாம். வெறும் 20 ஆயிரம் பேர் திரளக்கூடிய சிறிய மைதானத்தில் நடத்துவோம்னு சொல்லியிருக்கிறார்கள்.  இந்த அக்கப்போர் செய்திகளெல்லாம் பிரியங்கா காதுக்கு சில மூத்த நிர்வாகிகள் மூலம் போயி ருக்கிறது. இதைக்கேட்டு வருத்தமான அவர், இப் படிப்பட்ட நிர்வாகிகள் இருக்கும் தமிழ்நாட்டுக்கு நான் வர விரும்பவில்லை என்று சொல்லிவிட்டா ராம். இருப்பினும் அவ ரை சமாதானப்படுத்த முயற்சித்து வருகிறார்கள்.''”

"பா.ம.க. நிறுவனர் ராமதாஸ், இரண்டாவது மனைவி யுடன் 50ஆவது மணநாளைக் கொண்டாடியிருக்கிறாரே?''

Advertisment

"பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் அண்மையில் கூட்டிய பொதுக்குழு முடிவின்படி, ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் சார்பில் அன்புமணியிடம் 16 கேள்விகளுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பப்பட்டது. அதற்கு அன்புமணி பதிலே கொடுக்கவில்லை. அதனால் தைலா புரத்தில் பா.ம.க.வின் நிர்வாகக் குழுவைக் கூட்டி, இது குறித்து முடிவெடுக்கத் தீர்மானித்திருக்கிறார் ராமதாஸ். இதற்கிடையே டாக்டர் ராமதாஸ், தனது இரண்டாவது மனைவியான முன்னாள் நர்ஸ் சுசிலாவுடனான 50ஆவது திருமண நாளை அண்மையில் கொண்டாடியிருக்கிறார். இது தொடர்பான படத்தை வெளியிட்டு பகிரங்கப்படுத்தி யது அன்புமணி தரப்பாம். சுசீலாவுடனான உறவை இத்தனை நாள் ரகசியமாக வைத்திருந்த ராமதாஸ், இப்போது நண்பர்கள் சூழ மணநாள் கொண்டாடியிருப்பது தைலா புரத்தில் சூறாவளியை உருவாக்கியிருக் கிறதாம். இந்நிலையில்... பா.ம.க. ஒழுங்கு நடவடிக்கைக் குழுவால் கேட்கப்பட்ட 16 கேள்விகளுக்கும் அன்புமணி விளக்கமளிக் காததால், அவர் மீதான அடுத்தகட்ட நடவடிக்கை எடுப்பது குறித்து செப்டம்பர் 1-ந் தேதி பா.ம.க.வின்  ஒழுங்கு நடவடிக்கை குழு  உறுப்பினர்கள் ஆலோசனை நடத்தி னார்கள். "கட்சியின் கட்டுப்பாட்டை மீறி நடந்துகொள்வதாலும், ஒழுங்கு நடவடிக் கைக் குழுவின் நோட்டீசுக்கு விளக்க மளிக்காததாலும் அவரை தற்காலிகமாக பா.ம.க.விலிருந்து நீக்கி வைக்கலாம்' என்று முடிவெடுத்து, அதனை டாக்டர் ராம தாசிடம்  ஒப்படைத்துள்ளனர். ஒழுங்கு நடவடிக்கைக் குழுவின் பரிந்துரையை நிர்வாகக் குழுவில் விவாதித்து இறுதி முடிவை ராமதாஸ் எடுப்பார் என்று பா.ம.க. தரப்பில் தெரிவிக்கப்படுகிறது.''”

"கணவன், மனைவி இருவருக்கும் அரசுப் பதவிகளைக் கொடுத்தது பற்றி நாம் பேசினோமே, தி.மு.க. தரப்பில் அதுக்கு ஒரு காரணத்தைச் சொல்கிறார்களேப்பா?''”

"ஆமாங்க தலைவரே, தமிழ்நாடு ரியல் எஸ்டேட் ஒழுங்குமுறை ஆணையத்தின் உறுப்பினராக, ஓய்வுபெற்ற சென்னை மாநகராட்சி அதிகாரி ஒருவர் நியமிக்கப் பட்டுள்ளார் என்றும், அவரது மனைவி தமிழ்நாடு அரசு பணியாளர் ஆணையத் தின் உறுப்பினராக ஏற்கனவே அரசால் நியமிக்கப்பட்டிருக்கிறார் என்றும், ஒரே குடும்பத்தைச் சேர்ந்தவர்களுக்கே அரசு பதவிகளைக் கொடுப்பது சர்ச்சையாகிவரு கிறது என்றும் கடந்தமுறை நாம் பேசிக் கொண்டோம். ஓய்வுபெற்ற அந்த மாநக ராட்சி அதிகாரியின் அப்பா, சென்னை மேயராக இருந்து மறைந்த சிட்டிபாபுவாம். மிசா சட்டத்தில் ஸ்டாலின் இருந்தபோது, காவல்துறையால் தாக்கப்பட்டார். அப் போது, அந்த தாக்குதலில் இருந்து ஸ்டா லினை காப்பாற்றியவர் சிட்டிபாபு. அத னால் சிட்டிபாபுவின் குடும்பத்தினர் மீது பாசம்கொண்டிருக்கும் ஸ்டாலின்,  அந்தக் குடும்பத்துக்கு அரசியல்ரீதியாக எதுவும் செய்ய முடியவில்லையே என்கிற ஆதங்கத்தால்தான், சிட்டிபாபுவின் மகனுக்கும் அவரது மனைவிக்கும் இந்த அரசுப் பதவிகளைக் கொடுத்திருக்கிறார் என்கிறார்கள் தி.மு.க. உடன்பிறப்புகள்.''”

Advertisment

"என்னப்பா, பா.ஜ.க. மாஜி மாநில நிர்வாகிக்கு, மத்திய நிதி அமைச்சர் நிர்மலாவிடம் இருந்து செமையாக டோஸ் விழுந்ததாமே?''

"பா.ஜ.க. மாஜி மாநில நிர்வாகியோடும் அவர் தொடர்பான ரகசியங்களோடும் இத்தனை நாளாய் ஒட்டி உறவாடிவந்த, அமர்பிரசாத் ரெட்டியை, பா.ஜ.க. மாநிலத் தலைவர் நயினார், கணிசமாகக் கவனித்து, தனது ஆதரவாளராக மாற்றிவிட்டாராம். நயினாரின் தூண்டுதலால் அந்த மாஜி நிர்வாகி, கட்சியின் பவரை வைத்துக்கொண்டு எப்படிப் பணம் சம்பாதித்தார்? எந்தளவுக்கு  அவர் சம்பாதித்தார்? தி.மு.க. அமைச்சர்களிடம் ரகசியமாக வளைந்துகொடுத்து, அவர் என்னென்ன காரியங்களைச் சாதித்துக்கொண்டார்? என்பது போன்ற அத்தனை ரகசியங்களையும் அமர், தற் போது மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராம னிடம் போட்டுக் கொடுத்திருக்கிறாராம். இதனால் கடுப்பான நிர்மலா சீதாராமன், அந்த மாஜியைப் பிடித்து, "உன் அத்தனை வண்டவாளங்களும் தெரிஞ்சிடிச்சி. நீ தனிக்கட்சி ஆரம்பிக்கும் அளவுக் குப் போவியா? தி.மு.க.வுடன் ரகசிய உறவு வைத் துக்கொண்டு, கட்சிக்கு நீ செய்த துரோகமெல்லாம் உறுதியாயிடிச்சி. கட்சியின் தேசியத் தலைமை உன்னை உரியபடி தண்டிக்கும்' என்றெல்லாம் ‘அர்ச்சனை’ செய்தாராம். இதனால் ஒடுங்கிப் போய்விட்டாராம் அந்த மாஜி.''

rang1

"சிவகாசி பட்டாசு ஆலை விபத்தில் சிக்கி, தி.மு.க. பிரமுகர் ஒருவர் மரணமடைந்திருக்கிறாரே?''

"சிவகாசி பகுதியைச் சேர்ந்த கந்தசாமி மற்றும் கண்ணபிரான் ஆகியோருக்குச் சொந்த மான பட்டாசு ஆலை, தூத்துக்குடி மாவட்டம் கருப்பூர் கிராமத் தின் வெளியே காட்டுப் பகுதியில் செயல்பட்டு வந்திருக்கிறது. இங்கு  கடந்த 29ஆம் தேதி அதிக வெயிலின் வெப்பத்தால், பட்டாசு ஆலையின் ஒரு பகுதியில் தீப்பிடிக்க, அங்கி ருந்த பட்டாசுகள் எல்லாம் வெடித்துச் சிதறின. இந்த விபத்தின்போது பட்டாசு ஆலை யின் உரிமையாளர் களில் ஒருவரான  கே.வி.கந்தசாமி,  உயிர் தப்பிப்பதற் காக ஓடியிருக் கிறார்.  அப்போது ஆலையை சுற்றி அமைக்கப்பட்டி ருந்த இரும்பு கம்பி வேலியில் சிக்கி கொண்டதில் அங் கேயே அவர் உடல் கருகி உயிரிழந்தார். இந்த விபத்து குறித்து ஆராய 15 ஆய்வுக் குழுக்கள் நியமிக்கப் பட்ட நிலையில்... அவர்களும் விசாரித்து வருகின்ற னர். கரிசல்பூமி விவசாயிகள் சங்க தலைவர் வட மலாபுரம் வரதராஜனோ, விவசாயம் நடக்கக்கூடிய இந்த கரிசல்பூமி, அதிகாரிகளின் சுயநலத்தால் கந்தக பூமியாக மாறிவருகிறது என்கிறார் கவலையாய். உயிரிழந்த கே.வி.கந்தசாமி, விருதுநகர் வடக்கு மாவட்ட தி.மு.க.வில் பொதுக்குழு உறுப்பினராக இருந்தவர். கட்சிப் பணியிலும், பொதுப்பணியிலும் துடிப்புடன் செயல்பட்டவர். அவரது மரணம் தி.மு.க. தரப்பை அதிரவைத்திருக்கிறது. முதல்வரும் இரங் கல் தெரிவித்திருக்கிறார். அரசு ரூ.4 லட்சம் அவர் குடும்பத்துக்கு வழங்க உத்தரவிட்டிருக்கிறது.''” 

"என்னப்பா ஆம்பூர் கலவரம் தொடர்பான தீர்ப்பு வெளியாகியிருக்குதே?''”

"முதல்ல அந்த ஆம்பூர் கலவரம் பத்திப் பார்ப்போங்க தலைவரே, 2015ஆம் ஆண்டு ஜூன் மாதம், வேலூர் மாவட்டம்  குச்சிப்பாளையத்தை சேர்ந்த பழனி மனைவி பவித்ரா காணாமல் போன நிலையில், அது தொடர்பான புகாரின் பேரில் ஆம்பூரைச் சேர்ந்த இளைஞர் ஷமீல் அகமதுவை அழைத்து வந்து போலீஸார் தங்கள் பாணியில் விசாரித்தனர். இதில் அவர் உடல்நலம் பாதிக்கப் பட்ட நிலையில் உயிரிழந்தார். காவல்துறையின் சித்ரவதையால்தான் அவர் இறந்தார் என அவரது உறவினர்கள் குற்றம்சாட்டினர். இதனால், 2015 ஜூன் 26ஆம் தேதி அவரது உறவினர்களும், இஸ்லாமிய அமைப்பினரும் மூவாயிரத்திற்கு மேற்பட்டோர் இரவில் திரண்டு மறியலில் குதித்த னர். அப்போது அவர்களுக்கும் காவல்துறைக்கும் மோதல் ஏற்பட, அது கலவரமாக மாறியது. அந்த வழக்கு கடந்த 10 ஆண்டுகளாக திருப்பத்தூர் மாவட்ட நீதிமன்றத்தில் நடந்துவந்தது.''”

"ஆமாம்பா, மறக்க முடியுமா அன்றைய பதட்டத்தை? தீர்ப்பும் கொஞ்சம் ஹாட்டாக இருக்குதே?''”

"இது தொடர்பான வழக்கில்  கடந்த 26ஆம் தேதி தீர்ப்பு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்ட தால், மாவட்டம் முழுதும் 1,200க்கும் மேற்பட்ட போலீசார்  குவிக்கப்பட்டிருந்தனர். குற்றம் சாட்டப் பட்ட 132 பேரில் 4 பேர் இறந்துவிட்ட நிலையில், 106 பேர் சந்தேகத்தின் அடிப்படையில் கைது செய்யப்பட்டதாகக் கூறி, விடுதலை செய்யப்பட்ட னர். மீதியுள்ள 22 பேரும் குற்றவாளிகள் என தீர்ப்பளிக்கப்பட்டது. 9 முதல் 16 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையும், 4.22 லட்சம் அபராதமும் விதிக்கப்பட்டது. வழக்கில் சிலர் தப்பியுள்ளார்கள் என்று கூறும் இந்துத்துவா அமைப்புகள், வழக்கில் மேல்முறையீடு செய்யவேண்டும் என்று சொல்லிவருகின்றன. அதேபோல் தண்டனை பெற்றவர்களும் மேல்முறையீடு செய்வது குறித்து ஆலோசனை நடத்திவருகின்றனர்.''” 

"காங்கிரஸ் பிரமுகர் படுகொலை விவகாரம் விசாரிக்கப்படுவதில் அ.தி.மு.க. ஆர்வம் காட்டு கிறதே?''” 

"நெல்லை மாவட்ட காங்கிரஸ் தலைவர் ஜெயக்குமார் படுகொலை வழக்கு, சி.பி.சி.ஐ.டி. போலீசாருக்கு மாற்றப்பட்டு ஒரு வருடத்துக்கு மேலாகியும், இதுவரை  யாரும் கைது செய்யப்பட வில்லை. ஆரம்பத்தில் காட்டிய வேகத்தை சி.பி.சி.ஐ.டி. போலீஸ் இப்போது காட்டவில்லை யாம். காரணம், காங்கிரஸ் எம்.எல்.ஏ. ஒருவர் இந்த படுகொலையின் பின்னணியில் இருப்பதாக போலீஸ் கண்டறிந்துள்ளதாம்.  அந்த எம்.எல்.ஏ. வின் பண பலம் பாதாளம் வரை பாய்ந்ததால், மேலிடத்தில் இருந்து வந்த உத்தரவால் விசாரணை அடுத்த கட்டத்துக்கு நகரவில்லை.  இதனால் ஜெயக்குமாரின் குடும்பத்தினர், இந்த வழக்கை சி.பி.ஐ.க்கு மாற்றக் கோரி நீதிமன்றத்தை அணுக ஆலோசித்து வருகிறார்களாம். நீங்கள் தெரி வித்ததுபோல்,  இதன் பின்னணியில் அ.தி.மு.க. இருப்பதாகவும் சொல்லப்படுகிறது.''”

"தூய்மைப் பணியாளர்கள் விவகாரத்தை உற்றுக் கவனித்து வருகிறவர்கள் சில கேள்விகளை எழுப்புறாங்களே கவனீச்சிங்களா?''”

rang2

"ஆமாங்க தலைவரே, தூய்மைப் பணியாளர் கள் விவகாரம் எதிர்பார்த்ததைவிடவும் பெரிய அளவில் விவகாரமாகி, அவர்களை போராட்டக் களத்திலிருந்து கிளப்புவதற்கே அரசு சிரமப்பட வேண்டியதாப் போச்சு. இதில் சம்பந்தப்பட்ட துறை அமைச்சரைவிடவும் இதில் சம்பந்தமில்லாத அமைச்சர் ஒருவரோட தலை உருட்டப்பட்டது. தூய்மைப் பணியாளர்கள் 8 வருஷமா இந்தப் பணியை தனியார்மயமாக்கக்கூடாதுனு தீவிரமா யிருக்காங்க. அப்ப இதனை தனியார்மயமாக்குனா, அதனோட விளைவுகள் எப்படியிருக்கும்னு உளவுத்துறை எச்சரிக்கை தரலையா? ஸோன் 7-ல 15 பிரிவுகள் இருக்கு. இதுல 3-ஐ மட்டும் தனியார்மயமாக்கிட்டு, மற்ற 12 பிரிவுகள் மட்டும் தனியார்மயமாக்கப்படாததன் பின்னணி என்ன? ககன்தீப்சிங் பேடி, ராதாகிருஷ்ணன் காலகட்டத் துல தூய்மைப் பணியை தனியார்மயமாக்காம பார்த்துக்கிட்டாங்க. இப்ப மட்டும் தனியார் மயமாக்க விட்டது யார்?, தனியாருக்கு கான்ட்ராக்ட் கொடுத்தது யார்? ரிப்பன் பில்டிங்கில் போராட்டம் தொடங்கும்போதே அத யாரும் கண்டுக்கல. அந்த இடம் போராட்டத்துக்கான இடம் இல்லங்கிறத தெரிஞ்சிருந்தும், அவர்கள் உடனடியாக அகற்றப்படாததற்கு யார் காரணம்?னு அடுக்கடுக்கா அவங்க கேள்வியெழுப்புறாங்க. இதைத்தான் பாவம் ஓரிடம் பழி ஓரிடம்னு சொல்றதுன்னு பேசிக்கிறாங்க.''”

"பாரில் அலப்பறை செய்த நடிகை லட்சுமி மேனனுக்கு கேரள காவல்துறை ஆதரவாக இருப்பதாக ஒரு தகவல் வருகிறதே?''”

rang3

“"பாரில் அலப்பறை, ஆள் கடத்தல் உள்ளிட்ட விவகாரத்தில் சிக்கிய நடிகை  லட்சுமி மேனனை செப்டம்பர் 17 வரை, கைது செய்யத் தடை விதித்திருக்கிறது கேரள உயர்நீதிமன்றம். இந்த நிலையில், காவல்துறை அதிகாரிகளின் ஒத்துழைப்பால்தான் லட்சுமி மேனன் இப்படி ரிலாக்ஸாகி இருக்கிறார் என்கிற டாக் கேரளா முழுக்க உலவுகிறது. இது குறித்து, இந்த வழக்கை விசாரிக்கும் அதிகாரிகள் தரப்பில் கேட்டபோது, ‘"கடத்தப்பட்டதாக லட்சுமி மேனன் தரப்பு மீது புகார் கொடுத்த அலியார் ஷாவுக்கு ரவுடிகளின் பின்புலம் உண்டு. அவர்தான் பிரச்சினை பெரிதாகக் காரணம். இதை எங்கள் மேலிடத்திற்குத் தெரிவித்தோம். தீர விசாரிக்குமாறு அவர்கள் சொல்லியிருக்கிறார்கள். காரணம் இது தேர்தல் நேரம். இப்போது தங்களுக்கு எதிராக இந்த விவகாரம் ஆகிவிடக்கூடாது என்று அவர்கள் நினைக்கிறார்கள். நடிகை மீது தப்பில்லாதபோது அவருக்கு நெருக்கடி கொடுக்க வேண்டாம் என்று டைரக்டர் ஜெனரல் ஆஃப் ப்ராசிக்யூஷன் தரப்பிலிருந்து எங்களுக்கு ஸ்ட்ராங் இன்ஸ்ட்ரக்ஷன் வந்தது. அதனால்தான் லட்சுமி மேனனின் முன்ஜாமீன் மனுவிற்கு நாங்கள் அதிக எதிர்ப்பைத் தெரிவிக்கவில்லை'’என்றார்கள் தெளிவாகவே. கடத்தப்பட்டதாகச் சொன்ன நபரின் பின்னணியை இப்போது தீவிரமாக ஆராய்கிறதாம் கேரள போலீஸ்.'' 

"புது டி.ஜி.பி. பத்தி என்ன சொல்றாங்க?''

"ஆமாங்க தலைவரே... மற்ற டி.ஜி.பி.க்கள் போல வெங்கட்ராமன் இருக்கமாட்டார் என்றும், தமிழகத்தின் சட்டம் ஒழுங்கிற்கான லகானை இறுக்கிப் பிடிப்பார் என்றும் காவல்துறையினர் சொல்கிறார்கள். எந்தவித வளைவு நெளிவும் இல்லாத, காவல்துறையின் சுதந்திரமான செயல்பாட்டிற்கு இவர் வழிகோலுவார் என்றும் சொல்கிறார்கள். அதேபோல் கீழ்நிலை அதிகாரிகள் செய்யும் தவறுகளையெல்லாம் காவல்துறையின் தலையில் போட இவர் இடம் தரமாட்டார் என்பதும் காவல்துறையின் கருத்தாக இருக்கிறது.''”

"நானும் என் காதுக்கு வந்த ஒரு முக்கியமான தகவலைப் பகிர்ந்துக்கறேன். தமிழகத்தின் புதிய டி.ஜி.பி.யாக வெங்கட் ராமன் பதவியேற்றது, அப்பதவியைக் குறிவைத்துக் காத்திருந்த மற்ற அதிகாரிகளை ரொம்பவே சங்கடப் படுத்தியிருக்கிறதாம். வெங்கட்ராமனின் பதவி உயர்வை அங்கீகரித்த ஐ.பி.எஸ். அதிகாரிகளான டேவிட்சன் ஆசிர்வாதம், செந்தில்வேலன் ஆகியோர் மீது மற்ற 8 டி.ஜி.பி.க்களின் ஆதங்க கோபம் திரும்பியிருக்கிறதாம். மேலும் இவர்கள் புதிய டி.ஜி.பி.யின் பதவியேற்பு நிகழ்ச்சியில் கலந்துகொள்ளாமல் புறக்கணித்துவிட்டார் களாம்.''’

________
இறுதிச் சுற்று!

ஜெர்மனியில் முதல்வர்! 

rang-box1

தமிழகத்திற்கு புதிய முதலீடுகளை ஈர்ப்பதற்காக அரசுமுறைப் பயணமாக ஜெர்மன் மற்றும் பிரிட்டன் நாடுகளுக்குச் சென்றுள்ளார் தமிழக முதல்வர் ஸ்டாலின். வெளிநாடுகளில் 7 நாட்கள் தங்கியிருக்கும் அவர், தொழில் முதலீட்டாளர்களுடன் ஆலோசனை, தமிழர்களை சந்தித்தல்,வெளிநாட்டு தமிழ்ச் சங்கத்தினர் ஏற்பாடு செய்துள்ள நிகழ்வுகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டுவருகிறார். ஜெர்மனில் அவருக்கு சிறப்பான வரவேற்பு தரப்பட்டது. "அப்பா' என்ற பதாகையுடன் பூக்கள், பலூன்கள் நிறைந்த வரவேற்பை அளித்தனர். ஐரோப்பியவாழ் தமிழர்கள் ஏற்பாடு செய்திருந்த மாபெரும் தமிழ்க் கனவு   நிகழ்வில் கலந்துகொண்டு உரை யாற்றினார். அப்போது, "உலகில் எந்த மூலைக்குப் போனாலும் தமிழன் இருப்பான். எங்கு வாழ்ந்தாலும் தமிழன் என்ற அடையாளத்தை மறக் காதீர்கள். திராவிட மாடல் ஆட்சி அமைந்த பிறகு தமிழகம் எல்லாவற்றி லும் முன்னேறியுள்ளது. உங்கள் சகோதரன்தான் தமிழகத்தில் முதலமைச்சராக இருக்கிறான் என்ற உரிமையோடும் நம்பிக்கையோடும் வந்து முதலீடு செய்யுங்கள்.  அப்படியே முதலீட்டாளர்களை அழைத்து வாருங்கள். தமிழகம் வளரவேண்டும்... அதற்கு முடிந்த உதவிகளை தாய் மண்ணிற்கு நீங்கள் செய்ய வேண்டும்'' என்றார். செப்டம்பர் 1-ந் தேதி முதலீட்டாளர்களை சந்தித்தார் முதல்வர்  ஸ்டாலின்.  இதில் பல்வேறு புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் போடப்பட்டுள்ளன.       

-இளையர்


உடல்நலம்  தேறிவருகிறார் ஐயா நல்லகண்ணு!

rang-box

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஐயா நல்லகண்ணுவை நலம் விசாரிக்க ஞாயிற்றுக்கிழமையன்று, நக்கீரன் ஆசிரியரும் வைகோவின் மகன் துரைவைகோவும் ராஜீவ்காந்தி மருத்துவமனைக்கு சென்றனர். நல்லகண்ணுவின் உடல்நலன் கருதி, ஐ.சி.யூ. அறையினுள் யாரும் அனுமதிக்கப் படாத நிலையில், அந்த அறையின் கண்ணாடிக் கதவு வழியே பார்த்தபோது, இருவரையும் பார்த்த நல்லகண்ணு, தான் நலமாக இருப்பதாக கட்டை விரலை உயர்த்திக் காட்டியிருக்கிறார். இந்நிலையில், திங்களன்று (1-9-2025) அவரது உடல்நிலையில் முன்னேற்றம் ஏற்பட்டதால் சுவாசத்துக்கான வெண்டிலேட்டர் சப்போர்ட் அகற்றப்பட்டது. நூறாண்டு கடந்த ஐயா நல்லகண்ணு, தனது வில் பவர் காரணமாகவே உடல்நலம் தேறி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.           

 -கீரன்