Advertisment

ராமர் கோவில்! வாழ்வாதாரத்தை இழந்த வணிகர்கள்!

r

ற்போது அயோத்தியில் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ள ராமர் கோவில், ஏற்கெனவே இருந்த பாபர் மசூதியை இடித்து, அந்த இடத்தில் எழுப்பப் பட்டது என்பதை அனைவரும் அறிவோம். ராமர் கோவிலுக்காக பாபர் மசூதியை மட்டும் இடிக்கவில்லை... கிட்டத்தட்ட 1100 வியாபாரி களின் வாழ்வாதாரத்தையும் இடித்துத் தள்ளி யிருக்கிறார்கள். தற்போதுள்ள ராமர் கோவிலுக்குச் செல்லும் பாதையான ஆர்ட்டீரியல் சாலை என்றழைக்கப்பட்ட சாலையின் பெயரை தற்போது ராமர் பாதை (Ram Path) என்று மாற்றியமைத்துள்ளனர். இந்த ராமர் பாதை எனப்படும் 13 கி.மீ. நீளப் பாதைக்காக சுமார் 1100 கடைகளுக்கு மேல் இடித்துத் தள்ளியிருக்கிறார்கள். இவர்களுக்கு தரப்பட்ட இழப்பீட்டுத்தொகை, சந்தை மதிப்பைவிடக் குறைவாக இருப்பதால், வேறு இடத்தில் கடை பிடிக்கவோ, வியாபாரம் செய்யவோ முடியாத நிலையில், தங்கள் வா

ற்போது அயோத்தியில் கட்டப்பட்டு திறக்கப்பட்டுள்ள ராமர் கோவில், ஏற்கெனவே இருந்த பாபர் மசூதியை இடித்து, அந்த இடத்தில் எழுப்பப் பட்டது என்பதை அனைவரும் அறிவோம். ராமர் கோவிலுக்காக பாபர் மசூதியை மட்டும் இடிக்கவில்லை... கிட்டத்தட்ட 1100 வியாபாரி களின் வாழ்வாதாரத்தையும் இடித்துத் தள்ளி யிருக்கிறார்கள். தற்போதுள்ள ராமர் கோவிலுக்குச் செல்லும் பாதையான ஆர்ட்டீரியல் சாலை என்றழைக்கப்பட்ட சாலையின் பெயரை தற்போது ராமர் பாதை (Ram Path) என்று மாற்றியமைத்துள்ளனர். இந்த ராமர் பாதை எனப்படும் 13 கி.மீ. நீளப் பாதைக்காக சுமார் 1100 கடைகளுக்கு மேல் இடித்துத் தள்ளியிருக்கிறார்கள். இவர்களுக்கு தரப்பட்ட இழப்பீட்டுத்தொகை, சந்தை மதிப்பைவிடக் குறைவாக இருப்பதால், வேறு இடத்தில் கடை பிடிக்கவோ, வியாபாரம் செய்யவோ முடியாத நிலையில், தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து புலம்பிக்கொண்டி ருக்கின்றனர்.

Advertisment

ramar kovil

நீரஜ் சிங் என்பவர், கிட்டத்தட்ட நான்கு தலைமுறையாக அங்கே பூஜைப்பொருட்கள் விற்பனை செய்துவந்துள்ளார். அவர்களது வீட்டில் 30 அடி நீளத்துக்கு சாலை விரிவாக்கத்துக்காக இடித்துத் தள்ளிவிட்ட னர். ராமர் கோவில் தீர்ப்பு வந்த 2019ஆம் ஆண்டிலிருந்து அங்குள்ள இடமதிப்பு அதிகரித்த நிலையில், தற்போது சுமார் 18 லட்ச ரூபாய் மதிப்புள்ள இடத்துக்கு வெறும் 3 லட்சம் மட்டும் இழப்பீடாகக் கொடுத்து முடித்திருக்கிறார்கள்! தற்போது தனது வாழ்வாதார இடத்தை இழந்துள்ள அவரால் இழப்பீட்டுத்தொகையை மட்டுமே வைத்து வேறிடத்துக்கு செல்ல முடியாததால், அங்கேயே சிறிய அளவில் வியாபாரம் செய்துவருகிறார்.

ரவி சத்ரபால் என்பவர் அப்பாதையில் பேக்கரி கடை வைத்திருக்கிறார். சாலை விரிவாக்கத்துக்காக அவரது கடையின் 25 அடி நீளத்தில் 20 அடி நீளத்துக்கு இடித்துத் தள்ளிவிட்டனர். வெறும் 5 அடி அளவை வைத்து கடை நடத்த முடியாததால், ராம ஜென்மபூமி ட்ரஸ்டுக்கு 10 லட்ச ரூபாய் பகடி கொடுத்து 10 அடி நீளத்துக்கு இடத்தைப் பெற்று கடை நடத்துகிறார். தனது 20 அடி நீள இடத்தை இழந்தவருக்கு தரப்பட்ட இழப்பீட்டுத்தொகை வெறும் 1 லட்ச ரூபாய் மட்டுமே! கடையை வெறும் 10 அடி நீளத்துக்கு முன்புறம் அதிகரிக்கவே 10 லட்சம் பகடி தருகிறாரென்றால், 20 அடி நீளத்தை எடுத்துக்கொண்ட அரசு, வெறும் 1 லட்சம் மட்டும் இழப்பீடாகக் கொடுத்தது எவ்வகையில் நியாயம்?

Advertisment

ramarkovil

அதேபோல ஹனுமான் கார்கி என்ற அனுமான் கோவிலுக்கு செல்லக்கூடிய சாலையைத் தற்போது 14 மீட்டர் அளவுக்கு அகலப்படுத்தி, மொத்தம் 800 மீட்டர் தூரத்துக்கு பக்தி பாதை என்று பெயரிட்டுள்ளனர். இந்த பாதையிலும் இருபுறத்திலு முள்ள கடைகளை பாதியளவுக்கு மேல் இடித்துத்தள்ளி யுள்ளனர். இந்த கடைகள் அனைத்தும் ஹனுமான் கார்கி அறக்கட்டளைக்கு சொந்தமானவை. ராகவ் சைனி என்ற பாத்திரக்கடை வியாபாரிக்கு இந்த சாலையில் 4 கடைகள் உள்ளன. அவற்றில் 3 கடைகளை இடித்துத் தள்ளிவிட்டனர். இழப்பீட்டுத்தொகையாக 20 லட்ச ரூபாய் வழங்கியுள்ளனர். 3 கடைகளைப் பறிகொடுத்துள்ள ராகவால், ஒரேயொரு கடையை வைத்து சமாளிக்க முடியாததால் இன்னொரு கடையை சற்று தள்ளி வாங்க முற்பட்டபோது ஒரு கடைக்கே 22 லட்ச ரூபாய்க்கு விலை பேசியிருக்கிறது ஹனுமான் கார்கி அறக்கட்டளை! என்னவொரு அயோக்கியத்தனம்!

பல தலைமுறைகளாக இயங்கிவந்த ஒரு பலசரக்குக்கடையை அங்கிருந்து அப்புறப்படுத்தி அடுத்த தெருவில் இடம் ஒதுக்கியிருக்கிறார்கள். அவர்களுக்கு மிகக்குறைவான இழப்பீட்டுத்தொகை தரப்பட, தங்கள் பரம்பரை தொழில் என்பதால் வேறுவழியின்றி அந்த வியாபாரத்தைத் தொடர்வதாகக் கண்ணீர் வடித்திருக்கிறார். இப்படியாக அப்புறப்படுத்தப்பட்ட, இடித்து நொறுக்கப் பட்ட ஒவ்வொரு கடை உரிமையாளர் களிடமும் கண்ணீர்க்கதை இருக்கிறது. ராமஜென்ம பூமி அறக்கட்டளையும், ஹனுமான் கார்கி அறக்கட்டளையும் அக்கோவிலைச் சுற்றியுள்ள வணிகர்களின் கடைகளை இடித்துத் தள்ளி, மீண்டும் அவர்களுக்கு இடமளிப்பதன்மூலம் பல கோடிகளை சம்பாதித்துள்ளனர்! இந்த வணி கர்கள் அனைவருக்குமே, ராமர் கோவில் வருவது மகிழ்ச்சிதான் என்றாலும், இவர்கள் எங்கள் வாழ்வாதாரத்தை அடித்துப் பிடுங்கி முடக்குவது எவ்வகையில் நியாயம்? என்று கேள்வி எழுப்புகின்றனர். ராமர் கோவில் என்பது வெறும் ஓட்டரசியல் மட்டுமல்ல... குறிப்பிட்ட சில அறக்கட்டளைகள் கொள்ளையடிப்பதற்கான மிகப்பெரிய வணிக உத்தி என்பதும் தெரியவருகிறது!

nkn270124
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe