தி.மு.க.வின் திருச்சி சிவா, என்.ஆர்.இளங்கோ, அந்தியூர் செல்வராஜ், கனிமொழி சோமு, அ.தி.மு.க.வின் தம்பிதுரை, த.மா.கா.வின் ஜி.கே.வாசன் ஆகிய 6 பேரின் ராஜ்யசபா பதவிக்காலம் வரும் ஏப்ரல் 2-ல் முடிவடைகிறது.
இந்த நிலையில், காலியாகும் 6 ராஜ்யசபா இடங்களுக்கான தேர்தல் மார்ச் 16-ஆம் தேதி நடைபெறும் என்று அறிவித்துள்ளது தலைமைத் தேர்தல் ஆணையம். இந்த திடீர் அறிவிப்பு, தி.மு.க. மற்றும் அ.தி.மு.க. கட்சிகளுக்கு நெருக்கடியை அதிகரிக்கச் செய்திருக்கிறது.
சட்டமன்றத்தில் தி.மு.க. மற்றும் அ.தி.மு.க.விற்கு இருக்கும் எம்.எல்.ஏ.க்களின் பலத்தின் அடிப்படையில் தி.மு.க. 4 இடங் களிலும் அ.தி.மு.க. 2 இடங்களிலும் ஜெயிக்க முடியும். அந்த வகையில் தேர்தல் களத்தில் 6 பேர் மட்டுமே நிறுத்தப் பட்டால் தேர்தலுக்கு வேலை இல்லை. போட்டி யின்றி தேர்வு செய் யப்பட்டதாக அறிவிக்கப்படுவர். ஆனால், கூடுதலாக ஒரு வேட் பாளரை தி.மு.க.வோ அல்லது அ.தி. மு.க.வோ நிறுத்தி னால் தேர்தல் நடக்கும். அப்போது ஏகப்பட்ட சட்ட நடைமுறைகள் பின்பற்றப்பட வேண்டுமென்பதால் குதிரைபேரங்களுக்கு வழி வகுக்கும். ஏனெ னில் ராஜ்யசபா தேர்தல் என் பது முதல் விருப்புரிமை, இரண்டாம் விருப்புரிமை அடிப் படையில் வாக்குப்பதிவு செய்யப்படவேண்டும். ஆனால், சட்டமன்றத் தேர்தல் நெருங்கிவிட்ட தால் ராஜ்யசபா தேர்தலில் கூடுதலாக ஒரு நபரை நிறுத்த தி.மு.க.வும் அ.தி.மு.க.வும் விரும்பாது. அதனால், போட்டியின்றி 6 பேர் தேர்வு செய்யப்படுவார்கள் என்பதே எதார்த்த நிலையாக இருக்கிறது.
இந்த நிலையில், தி.மு.க.வுக்கும் அ.தி.மு.க.வுக்கும் கூட்டணிக் கட்சிகளால் நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது இந்த தேர்தல். அதாவது, தி.மு.க. கூட்டணியிலுள்ள காங்கிரஸ், ஆட்சியில் பங்கும், 2 ராஜ்யசபா சீட்டுகளையும் கேட்டுவருகிறது. ஆட்சியில் பங்கு தர சம்மதிக்க மறுத்து வரும் தி.மு.க., காங்கிரசை தக்க வைத்துக்கொள்ள 1 ராஜ்யசபா சீட் கொடுத்து சமாளிக்கப் பார்க்கிறது. ஆனால், 2 வேண்டும் என அடம்பிடிக்கிறது காங்கிரஸ்.
அதேபோல, "கடந்த முறை ம.தி.மு.க.வுக்கு ஒதுக்கியதால் இந்தமுறை எங்களுக்கு ஒரு சீட் கொடுங்கள்' என சி.பி.எம். கட்சியும் வலியுறுத்து கிறது. ராஜ்யசபாவில் தங்களின் எண்ணிக் கையை உயர்த்த நினைக்கும் தி.மு.க., 1 சீட் டை மட்டும் தாரை வார்க்கலாம்; அதற்கு மேலே கொடுக்கக்கூடாது என்பதில் உறுதியாக இருக்கிறது. இந்த நிலையில், அ.தி.மு.க. கூட் டணியில் இணையும் என எதிர்பார்க்கப்பட்ட தே.மு.தி.க., திடீரென தி.மு.க. கூட்டணியில் இணைந்திருக் கிறது. தே.மு.தி.க.வுக்கு ஒரு ராஜ்யசபா சீட் உறுதி யாகியுள்ளது. இதற்கிடையே, ராஜ்யசபா சீட்டை கைப்பற்ற தி.மு.க.வில் பலரும் முட்டிமோதுகிறார்கள். நாடாளுமன்றத்தில் நீண்ட அனுபவம் கொண்ட திருச்சி சிவா, தி.மு.க. வழக்குகளை உச்ச நீதிமன்றத்தில் கவனித்துவரும் என்.ஆர்.இளங்கோ ஆகியோ ருக்கு மீண்டும் சீட் தர வேண் டிய கட்டாயத்தில் இருக்கிறது தி.மு.க. தலைமை. ஆனால், இந்தமுறை புதியவர்களுக்குத் தான் வாய்ப்பு வழங்கவேண்டும் என்கிற குரல்கள் வலுத்து வருகிறது.
தி.மு.க.வின் சூழல் இப்படி யெனில்... அ.தி.மு.க.விடம் இருக்கும் 2 சீட்டுகளுக்கு ஏக போட்டி. மீண்டும் தனக்கு சீட் தரவேண்டும் என எடப்பாடி யிடம் கடுமையாக வாதாடி வருகிறார் தம்பிதுரை. ஆனால், இதுவரை வாய்ப்பு வழங்கப் படாத சீனியர்களுக்கு கொடுக் கப்பட வேண்டும் என்றும், 2 சீட்டுகளையும் அ.தி.மு.க. எடுத்துக்கொள்ள வேண்டும் என்றும் எடப்பாடிக்கு நெருக் கடி கொடுக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், மீண்டும் தனக்கு சீட் ஒதுக்க வேண்டும் என அ.தி.மு.க.வின் கூட்டணிக் கட்சியான த.மா.கா. வாசனும், புதிதாக கூட்டணியில் இணைந்துள்ள அன்புமணியும் சீட் கேட்டு எடப்பாடிக்கு நெருக்கடி தந்துள்ளனர். அந்த வகையில் இடியாப்பச் சிக்கலில் சிக்கியிருக்கிறார் எடப்பாடி.
ஆக, இரண்டு பிரதான கட்சிகளுக்கும் மன உளைச் சலை ஏற்படுத்தியுள்ளது ராஜ்யசபா தேர்தல்!
-இளையர்
--------------
பிரிண்டர்... பில்!
அ.தி.மு.க.வின் நூதன பிரச்சாரம்!
ஆளுங்கட்சியான தி.மு.க.வை எதிர்கொள்ள புது வியூகங் களில் மிக ரகசியமாக குதித்திருக்கிறார் எடப்பாடி. கடந்த நாலரை ஆண்டுகால தி.மு.க. ஆட்சியில், முதல்வர் ஸ்டாலின் நடைமுறைப் படுத்திய பல்வேறு திட்டங்களால் ஒவ்வொரு வீட்டிலும் யாரேனும் ஒருவருக்கு பலன் கிடைத்துவருகிறது. அதுபோக, மதவாத சக்திகளையும், அதன் கூட்டணியையும் துணிச்சலாக எதிர்ப்பதிலும் தி.மு.க. அரசு மீது பாசிட்டிவ் இமேஜ் உருவாகியிருக்கிறது. மீண்டும் தி.மு.க. ஆட்சி தான் எனப் பெரும்பான்மையான சர்வேக்களும், அரித்மேட்டிக் கால்குலேசன்களும் சொல்கின்றன. அண்மையில், 1 கோடியே 31 லட்சம் பெண்களுக்கு வழங்கப்பட்ட 5,000 ரூபாய் மகளிர் உரிமைத்தொகையும் பெண்கள் மத்தியில் உற்சாகத்தைக் கொடுத்திருக்கிறது.
இப்படிப்பட்ட நிலையில்தான், தி.மு.க.வை வீழ்த்த கையடக்க பிரிண்டருடன் அ.தி.மு.க.வினரை களத்தில் இறக்கியிருக்கிறார் எடப்பாடி. "அதென்ன கையடக்க பிரிண்டர்?'' என விசாரித்தோம்.
ஒரு செயலியை உருவாக்கி, அதனை கையடக்க பிரிண்ட ருடன் இணைத்துள்ளனர். அந்த பிரிண்டருடன் வீடுவீடாகச் சென்று மக்களை சந்திக்கின்றனர் அ.தி.மு.க.வினர். ஒவ்வொரு வீட்டிலும், தி.மு.க. ஆட்சியில் விலைவாசி ஏற்றத்தால் மக்களுக்கு பாதிப்புகள் ஏற்பட்டுள்ளதாக மக்களிடம் எடுத்துக்கூறி, அதனை விளக்குவதற்காக தங்கள் கையிலுள்ள பிரிண்டரின் பட்டனை தட்டுகிறார்கள். ஷாப்பிங் மால்களில் கொடுக்கப்படும் பில்களைப் போல ஒரு பில் வருகிறது.
அதில், அரிசி, பால், சமையல் எண்ணெய், பருப்பு வகைகளின் விலைவாசியும், மின் கட்டணம், வீட்டு வரி, குடிநீர்க் கட்டணம் போன்றவையும் அ.தி.மு.க. ஆட்சியில் எப்படியிருந்தது, தற்போது எவ்வளவு உயர்ந்திருக்கிறது என்பதையும் காட்டி, அதன்மூலம் மக்க ளிடம் பிரச்சாரம் செய்கிறார்கள்.
-சஞ்சய்
இறுதிச் சுற்று!
அ.தி.மு.க.வில் அழகிரி ஆதரவாளர்!
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/02/19/rajasabhamp1-2026-02-19-16-50-16.jpg)
கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு மு.க.அழகிரியின் வலதுகரமாகத் திகழ்ந்த மதுரை முன்னாள் துணைமேயர் மன்னன் எடப்பாடியை சந்தித்து அ.தி.மு.க.வில் இணைந்தார். இந்நிலையில் அழகிரியின் மற்றொரு வலதுகரமான எஸ்.ஆர்.கோபி, 19-ஆம் தேதி வியாழக்கிழமை தனது ஆதர வாளர்கள் 1000 பேருடன் மதுரையிலிருந்து கிளம்பி சென்னை வந்து எடப்பாடியை சந்தித்து அ.தி.மு.க.வில் இணைந்தார்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/member_avatars/2026/02/07/2026-02-07t115543118z-newsdesk-2026-02-07-17-25-38.jpg)
/nakkheeran/media/media_files/2026/02/19/rajasabhamp-2026-02-19-16-49-57.jpg)