"ஹலோ தலைவரே, ஊரக உள்ளாட்சித் தேர்தல் இரண்டு கட்டமா நடக்க இருக்கும் நிலையில், அதுக்கு முன்னதாக ராஜ்யசபா தேர்தலும் அறிவிக்கப்பட்டிருக்கு.''”
"ஆமாம்பா, தமிழகத்தில் காலியாக இருந்த 3 ராஜ்யசபா பதவிகளில் ஒன்றுக்கு ஏற்கனவே தேர்தல் நடந்துடுச்சு. மிச்சமுள்ள 2 தொகுதி களுக்குதானே இப்ப தேர்தல்?''”
"ஆமாங்க தலைவரே, அந்த ஒரு காலி இடத் துக்குதான் தி.மு.க.வைச் சேர்ந்த புதுக்கோட்டை அப்துல்லா, அன்னபோஸ்டா ஜெயிச்சிருக்கார். மத்த 2 இடங்களுக்கான தேர்தல், அக்டோபர் 4-ந் தேதி நடக்குது. இதிலும் ஏறத்தாழ போட்டியில்லாத நிலைதான். இரண்டு இடங்களில் ஓர் இடத்துக்கு, தி.மு.க. தொடங்கியபோது அண்ணாவுக்கு உறுதுணையாக இருந்த என்.வி.நடராசன் குடும்பத்தைச் சேர்ந்தவரும் மறைந்த தி.மு.க. இணையமைச்சர் என்.வி. என்.சோமுவின் மகளு மான மாநில மருத்துவ அணி செயலாளர் டாக்டர் கனிமொழியையும், நாமக்கல் கிழக்கு மாவட்ட தி.மு.க பொறுப்பாளர் ராஜேஷ்குமாரையும் வேட்பாளராக தி.மு.க. அறிவிச்சிருக்கு’.''’
"தி.மு.க. வேட்பாளரா அறிவிச்சால், அவங்க ராஜ்யசபாவுக்கு உறுதியா போறாங்கன்னு தானே அர்த்தம்?''”
"ஆமாங்க தலைவரே, எம்.எல்.ஏ.க்களின் பலம் தி.மு.க.விடம் அதிகமாக இருப்பதால், அவங்க ஓட்டில் இந்த ரெண்டு பேரும் அப்துல்லாவைப் போலவே அன்னபோஸ்டா ஜெயிச்சிடுவாங்க. இந்த வகையில் ராஜ்யசபாவில் தி.மு.க.வின் பலம் கிடுகிடுன்னு 10 ஆக உயருது. டாக்டர் கனிமொழி இரண்டு முறை சட்டமன்றத் தேர்தலில் போட்டியிட்டு ஜெயிக்க முடியாமல் போனவர். பரவலா கட்சியில் அறிமுகமில்லாததும், கட்சியின் உள்ளடியும் இதற்கு காரணமா இருந்தது. அதனால, சிக்கல் இல்லாமல் ராஜ்யசபாவுக்கு அவரை அனுப்ப மு.க.ஸ்டாலின் முடிவெடுத்திருக்காரு.''”
"இரண்டு இடங்களில் 4 ஆண்டுகளுக்கு மேல் பதவிக்காலம்

"இரண்டு இடங்களில் 4 ஆண்டுகளுக்கு மேல் பதவிக்காலம் உள்ள இடம் இவருக்குத் தானா?''”
"ஆமாங்க தலை வரே.. மருத்துவ அணியைச் சேர்ந்த டாக்டர் கனிமொழிக்கு ராஜ்யசபா சீட் கொடுத்ததில் மகளிர் அணியினர் ஆதங்கத்துல இருக்காங்க. மகளிரணியில் சீனியர்களும், கட்சிக்காக களமிறங்கி செயல்படுற பல பிரமுகர்களும் இருக்கும்போது, பெண் எம்.பி.க்கான சீட்டை மருத்துவ அணிக்கு ஒதுக்கியதில் மக ளிரணிக்கு வருத்தம்தான். இன்னொரு வேட்பாள ரான ராஜேஷ்குமாருக்கு பதவிக்காலம் ரொம்ப குறைவுதான். உதயநிதி சிபாரிசில், கட்சியில் இளைஞரணி மாவட்ட பொறுப்புக்கு வந்தவருக்கு அதற்குள்ளே அடுத்த புரமோஷனான்னு சீனியர்கள் புருவம் உயர்த்துறாங்க. சட்டமன்றத் தேர்தலில் தி.மு.க. படு அடி வாங்கிய கொங்கு மண்டலத்தின் சூழலை மாற்றுவதற்காக இவரை வேட்பாளராக்கியுள்ளதாம் தலைமை.''”
"வியூகம் கை கொடுக்குமா?’''’
"கொங்கு மண்டலத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டதுபோல, அ.தி.மு.க.வின் கே.பி.முனுசாமியால் காலியான இடத்தில், அவர் சமூகமான வன்னியர் இனத்தைச் சேர்ந்தவரையும், முக்குலத்தோரான வைத்திலிங்கத்தால் காலியான இடத்துக்கு, அவர் சமூகத்தைச் சேர்ந்த ஒருத்தரையும் நிறுத்தியிருக்கலாம்னு ஆதங்கப்படுற ஆளுங்கட்சிக்காரங்க இருக்காங்க. அ.தி.மு.க.வின் முகமது ஜான் இடத்தில் தி.மு.க தரப்பில் எம்.எம்.அப்துல்லாவை நிறுத்தி ஜெயிக்க வைத்து, எம்.பி.யாக்கியிருப்பதை சுட்டிக்காட்டுறாங்க. தி.மு.க தலைமையோ, முக்குலத்தோர் -வன்னியர் சமூகத்தின் சார்பில் நாடாளுமன்றத்தில் தி.மு.க.வுக்கு பிரதிநிதித்துவம் இருக்குது. முஸ்லிம் சமுதாயத்தின் சார்பில் யாரும் இல்லாததால், அப்துல்லாவுக்கு வாய்ப்பு தரப்பட்டதுன்னு சொல்லுது.''”
"ஊரக உள்ளாட்சித் தேர்தல்ல, பா.ம.க. தனிச்சிப் போட்டின்னு அறிவிச்சதால் அ.தி.மு.க.வில் சலசலப்பு ஏற்பட்டிருக்குதே?''”
"ஆமாங்க தலைவரே, பா.ம.க. தங்களுடன் சீட் பங்கீடு பற்றி பேருக்குக் கூட கலந்து பேசாம, தன்னிச்சையா தனிச்சிப் போட்டின்னு அறிவிச்சதால், அ.தி.மு.க. தரப்பு பலத்த அப்செட்டில் இருக்குது. பா.ம.க.வின் இந்த முடிவை, மாஜி அ.தி.மு.க. அமைச்சர் ஜெயக்குமார், எடப்பாடிகிட்ட சொன்னப்ப, இது தெரிஞ்ச முடிவுதாங்க. ஏன்னா, ஜி.கே.மணியை தி.மு.க. வளைச்சிடுச்சி. அது எனக்கு நல்லாவே தெரியும் என்று எடப்பாடி சொல்லியிருக்கார். அதோட, அ.தி.மு.க.வின் வாக்குகள் பா.ம.க.வுக்கு விழுவதில்லைன்னு ராமதாஸ் சொல்றது உண்மைன்னா, நாடாளுமன்றத் தேர்தலுக்கு அப்புறமும் எதற்காக சட்டமன்றத் தேர்தலில் அ.தி.மு.க.வுடன் கூட்டணி வச்சாராம்? லோக்சபாவில் ஜெயிக்க முடியாமல் போன பா.ம.க.வுக்கு சட்டமன்றத்திலும் ஒரு எம்.எல்.ஏ.கூட இல்லாத நிலையில், ராஜ்யசபா சீட் கொடுத்தோமே, கூட்டணி வேண்டாம்னா, அந்தப் பதவியை அன்புமணி ராஜினாமா செய்திருக்கணும்னு கொந்தளித்த எடப்பாடி, அவர்களுக்கு எவ்வளவோ செஞ்சும் நன்றி மறந்துட்டாங்கன்னு தன் கோபத்தைக் கொட்டி இருக்கார்.''”
"நன்றின்னா சசிகலாவுக்கு எடப்பாடி காட்டினாரே அதுதானே?''”
"தலைவரே, நான் பா.ம.க. ஏரியா தகவலைத் தொடர்ந்து சொல்றேன். அன்புமணி ராமதாஸின் மகள் சங்கமித்ராவுக்கும், சோழிங்கநல்லூர் பகுதியை சேர்ந்த சங்கர் பாலாஜிக்கும் திருமணம் நடந்திருக்கு. இதற்கான வரவேற்பு ஐ.டி.சி. சோழாவில் நடந்துச்சு. முதல்வர் ஸ்டாலின் உள்ளிட்ட அரசியல் தலைவர்களுக்கு மட்டுமான நிகழ்ச்சியா இது ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. ஸ்டாலின் கொடுத்த தேதியில்தான் இந்த வரவேற்பை வைத்தாராம் ராமதாஸ். அதேபோல, கட்சிக்காரர்கள் மற்றும் உறவினர்கள் கலந்துகொள்வதற்காக 16-ந் தேதி தனியா ஒரு வரவேற்பு நிகழ்ச்சியை மகாபலி புரத்தில் நடத்தியிருக்கு தைலாபுரம். இதை அவங்க தொண்டர்களே வினோதமாப் பாக்கறாங்க.''”
"உள்ளாட்சித் தேர்தலை நினைச்சி பா.ஜ.க. குழம்புதே?''”
"ஆமாங்க தலைவரே... பா.ஜ.க. இருக்கும் அ.தி.மு.க. கூட்டணி, இப்ப நெல்லிக்கா மூட்டை போல் சிதறித் தெறிச்சிக்கிட்டு இருக்குது. குறிப்பா, அந்தக் கூட்டணியை விட்டு பா.ம.க. வெளியேறியதால், அ.தி.மு.க.வுடன் பா.ஜ.க.வும் த.மா.கா.வும் மட்டும்தான் இப்ப இருக்குது. பா.ம.க.வைப் போலவே, தே.மு.தி.க.வும், தனித்துப் போட்டியிடப் போவதாக அறிவித்துவிட்டது. இந்தநிலையில், தனியா நிக்கும் அ.தி.மு.க.வுக்கும் ஏகப்பட்ட முட்டல், மோதல் நடக்குது. போதாக்குறைக்கு கொடநாடு கொலை கொள்ளை விவகாரத்தில், வெளில யாரு இருப்பா? உள்ள யாரு போவான்னு, அவங்களுக்குள்ளேயே பட்டிமன்றம் நடக்குது. அதனால, நாமும் கூட்டணியை விட்டு வெளியேறலாமா?ன்னு பா.ஜ.கவின் தேசியத் தலைவருக்கு தகவல் அனுப்பியிருக்கிறாராம் தமிழகத் தலைவரான அண்ணாமலை.''”
"கொடநாடு விவகாரத்தில் சிக்கப் போறார்னு நக்கீரன் சுட்டிக்காட்டியிருந்த பத்திரப் பதிவு அதிகாரி ஒருத்தர் காத்திருப்பு பட்டிய-ல் வைக்கப்பட்டிருக்கிறாரே?''”
"ஆமாங்க தலைவரே, கோவை மண்டல பத்திரப் பதிவுத்துறை இன்ஸ்பெக்டர் ஜெனரலா இருந்த செல்வகுமாரை, முதல்வர் அலுவலக உத்தரவின் பேரில், துறை அமைச்சர் மூர்த்தி காத்திருப்பு பட்டியலில் வைத்திருக்கிறார். அந்த அதிகாரி, மன்னார்குடி தரப்பைச் சேர்ந்த ராவணனுக்கு மிகவும் நெருக்கமானவர். போன ஆட்சியில் அவர் கொடிகட்டிப் பறந்தாராம். கொடநாடு கொலை, கொள்ளை விவகாரத்தின் போது, ஜெ.வின் முன்னாள் டிரைவர் கனகராஜ் அள்ளி வந்த சொத்து ஆவணங்கள் எல்லாம் இவரிடம்தான் வந்திருக்கு. இவர், அதையெல்லாம் தன் பவரை வச்சி, மறு உருவாக்கம் செய்து, மாஜிக்கள் உட்பட பலரது பெயருக்கு மாற்றிக் கொடுத்திருக்கார்.''
"பலே.''”
"அது மட்டும் இல்லீங்க தலைவரே, இந்த உதவிகளுக்காக அவர் 600 கோடி வரை, லாபம் பார்த்தாராம். இதை யெல்லாம் தெரிஞ்சிதான் அவரை காத்திருப்பு பட்டிய-ல் வைத்தி ருக்கிறார்கள். இவருக்கு உதவிய அந்தத் துறையைச் சேர்ந்த 8 பேருக்கு அதிரடி டிரான்ஸ்பர் உத்தரவும் பறந்திருக்கு. அடுத்து, செல்வகுமார் கைது செய்யப் படலாம் என்றும், விசா ரணையின்போது செல்வகுமார் கொடுக்கப்போகும் வாக்குமூலம், எடப்பாடியின் முழுமையான திட்டத்தை அம்பலப்படுத்துவதாக இருக்கும் என்றும் காவல்துறை தரப்பே சொல்லுது. இதனால் எடப்பாடித் தரப்பும் மாஜி மந்திரியான வேலுமணி தரப்பும் திகிலின் உச்சத்தில் இருக்குதாம்.''”
"விருகம்பாக்கம் தி.மு.க. எம்.எல்.ஏ. பிரபாகர் ராஜா தன்னோட தொகுதியில் உள்ள சமூகநலக் கூடத்தில் அதிகாரம் செலுத்து வதையும், இளைஞரணிச் செயலாளர் உதயநிதி தரப்பு ஆட்களுடன் உரசுவதையும் பற்றி பேசியிருந்தோமே, அதற்கு எம்.எல்.ஏ. பிரபாகர் ராஜா மறுப்பு தெரிவிச்சி கடிதம் அனுப்பியிருக்காரு. விதிமீறல்கள் எதுவுமில் லைன்னும், எதிலும் அதிகாரம் செலுத்தலைன்னும் விரிவா எழுதியிருக்காரு.''
"நானும் ஒரு முக்கியமான செய்தியைப் பகிர்ந்துக்கறேன்பா. தி.மு.க.விடம், எங்களுக்கு ஒரு ராஜ்யசபா சீட்டைக் கொடுங்கன்னு, காங்கிரஸ் தொடர்ந்து கேட்டுச்சு. ஆனால், தி.மு.க.வோ, பிடிகொடுக்கவே இல்லை. சோனியா சார்பில், ப.சிதம்பரமே நேர்ல வந்து ஸ்டாலினிடம் பேசிப் பார்த்தார். ஸ்டாலினோ, இப்ப நடப்பதெல்லாம் ராஜ்யசபா இடைத் தேர்தல்கள்தான். 2022-ல் நடக்க இருக்கும் 6 இடங்களுக்கான ராஜ்யசபா தேர்தலில், காங்கி
ரசின் கோரிக்கையை உறுதியாகப் பரிசீலிப்போம்னு சொல்லிவிட்டார். அதனால் இரு கட்சிகளுக்கும் இடையில் ஒருவித இறுக்கம் நிலவுது.''