மீண்டும் ஷூýட்டிங் ஸ்பாட் கிளம்பிவிட்டார் ரஜினி. சன் பிக்சர்ஸ் கலாநிதி மாறன் தயாரிக்கும் புதுப்படத்தில் நடித்து வரும் ரஜினி, டேராடூனுக்கு லொக்கேஷன் மாறுவதால் கிடைத்த இடைவெளியில் டார்ஜிலிங்கிலிருந்து கடந்த வாரம் சென்னை வந்தார். மக்கள் மன்றத்தின் தலைமை நிர்வாகிகளுடன் தனது வீட்டில் இரு நாட்கள் ஆலோசனை நடத்திய ரஜினி, விருத்தாசலம் டாக்டர் இளவரசனுக்கு மாநில அளவில் மேலும் ஒரு கூடுதல் rajiniபொறுப்பு வழங்கும் முடிவுக்கு வந்துள்ளாராம்.

சில ஏற்பாடுகளையும் பல அறிவுரைகளையும் தனது குடும்பத்தினருக்கும் வழங்கிவிட்டு, டேராடூனுக்கு கிளம்புவதற்கு முன்பாக, தனது வீட்டில் கடந்த ஞாயிறன்று பத்திரிகையாளர்களைச் சந்தித்தார் ரஜினி. அப்போது ஈரோட்டில் சாலையில் கிடந்த 50 ஆயிரம் ரூபாயை போலீசில் ஒப்படைத்த சிறுவன் முகமது யாசினைப் பாராட்டி தங்கச் சங்கிலி அணிவித்த ரஜினி, ""எனது மகன் போல் நினைத்து யாசினை படிக்க வைப்பேன்'' என்றது பலரையும் நெகிழ வைத்தது.

அடுத்ததாக தனது வழக்கமான பாணியில் பேச ஆரம்பித்தார். தூத்துக்குடி கலவரத்திற்கு சமூக விரோதிகள்தான் காரணம் என்று ஏற்கனவே சொல்லியிருந்த ரஜினி, ""8 வழிச்சாலை சமூகத்திற்கு மிகவும் பயனுள்ளது, இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் இந்த மாதிரி பெரிய திட்டங்கள் வந்தால்தான் நாடு வளர்ச்சி அடையும். தமிழக அரசும் இன்னும் சிறப்பாக செயல்படலாம். தமிழக பள்ளிக் கல்வி அமைச்சர் செங்கோட்டையன் அவரது வேலையை நன்றாகச் செய்து கொண்டிருக்கிறார்''’என பாராட்டுப் பத்திரம் வாசித்தவரிடம், இந்தியாவிலேயே ஊழல் நிறைந்த மாநிலம் தமிழகம்தான் என பா.ஜ.க.தலைவர் அமித் ஷா பேசியது குறித்துக் rajiniகேட்டபோது, ""இதப்பத்தி நீங்க அமித் ஷாவிடம் தான் கேட்க வேண்டும்'' என ட்ரிக்காக பதில் அளித்தார்.

""முழுமையான அரசியல்வாதியாக எப்ப மாறுவீங்க, நாடாளுமன்றத் தேர்தலில் உங்க கட்சி போட்டி போடுமா?'' என்ற இரு கேள்விகளுக்கும் ""அதற்கு நேரம்தான் பதில் சொல்லும்'' என்றார். ரஜினியின் இந்த புது வாய்ஸ்தான் அவரது ரசிகர்களை ரொம்பவே குழப்பிவிட்டது. ரஜினி மக்கள் மன்றத்தைச் சேர்ந்த முக்கிய நிர்வாகி ஒருவரிடம் நாம் பேசிய போது, ""எப்ப வருவேன், எப்படி வருவேன்னு தெரியாது என பல வருஷமா சொல்லிக்கிட்டிருந்த தலைவர், வந்துட்டாரேன்னு சந்தோஷப்பட்டோம். ஆனா இப்ப நேரம்தான் பதில் சொல்லணும்கிறாரு. தற்போதைய சூழல்களைப் பார்த்துதான் தயங்குகிறார். நிச்சயம் நேரம் வரும்'' என்றார்.

Advertisment

தமிழக அரசுக்கு பாராட்டு தெரிவித்து, அமித் ஷா பற்றிய கேள்விக்கு பதில் சொல்லாமல் நழுவியது இவற்றையெல்லாம் கூட்டிக் கழித்து வேறொரு கூட்டணிக் கணக்கு சொல்கிறார்கள் அரசியல் வட்டாரத்தில்.

-ஈ.பா.பரமேஷ்வரன்

படங்கள்: குமரேஷ்

Advertisment