ராங்-கால் ரஜினி-பா.ம.க. நட்புறவு! களத்திற்கு வரும் முன்னாள் தலைமைச் செயலாளர்!

ff

"ஹலோ தலைவரே, தன் சொந்த மாவட்டமான சேலத்தில் நடந்த, சர்வதேச கால்நடைப் பூங்காவுக்கான அடிக்கல் நாட்டு விழாவுக்காக அமைச்சர்கள் புடைசூழச் சென்ற எடப்பாடி, அமைச்சர்களுக்கு அங்கே மணக்க மணக்க பலவகை டிஷ்களோட அசைவ விருந்து கொடுத்து அசத்தியிருக்கார்.''

""என்ன ஸ்பெஷல் ட்ரீட்டாம்?''

""வர்ற தேர்தல்லயும் நான்தான் முதல்வருக்கான வேட்பாளர் என்பதை எல்லோருக்கும் புரியவைங்க. இன்னைல இருந்தே வேலை பாருங்க. இது ஆரம்ப ட்ரீட்தான்னு மந்திரிகளுக்கு உற்சாகமா கீ கொடுத் திருக்கார் எடப்பாடி. சேலத்தில் இருந்து திரும்பிய அதே வேகத்தில் மூன்று நாள் ஆலோசனைக் கூட்டத்தை 10-ந் தேதி தொடங்கிட்டார். அதுக்கு அமைச்சர்கள், மா.செ.க்கள், மாநில நிர்வாகிகள் ஆகியோருக்கு மட்டும்தான் முதல்ல அழைப்பு போச்சுது. பிறகு, மாநகராட்சி, நகராட்சி, ஒன்றிய நிர்வாகிகளுக்கும் அழைப்பு போயிருக்கு.''’

rr

"எதுக்காக இந்தக் கூட்டமாம்?''’

""நிறுத்தி வைக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கும் சேர்த்து விரைவில் தேர்தல் நடத்தப்பட இருப்பதால், அது தொடர்பான ஆலோசனைகளை வழங்கு றதுக்காகத்தான் இந்தக் கூட்டமாம். நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தாங்கள் கட்சிப் பிரமுகர்களால் அனுபவித்த சிரமங்களை எல்லாம் இந்தக் கூட்டத்தில் வெளிப்படுத்தணும்ன்னு ஒன்றிய அளவிலான நிர்வாகிகள் ஆவலோட இருந்தாங்க. ஆனால், மந்திரிகளும் மா.செ.க்களும், மாவட்டப் பிரச்சினைகளையும் குற்றச்சாட்டுகளையும் இந்தக் கூட்டத்தில் யாரும் எழுப்ப

"ஹலோ தலைவரே, தன் சொந்த மாவட்டமான சேலத்தில் நடந்த, சர்வதேச கால்நடைப் பூங்காவுக்கான அடிக்கல் நாட்டு விழாவுக்காக அமைச்சர்கள் புடைசூழச் சென்ற எடப்பாடி, அமைச்சர்களுக்கு அங்கே மணக்க மணக்க பலவகை டிஷ்களோட அசைவ விருந்து கொடுத்து அசத்தியிருக்கார்.''

""என்ன ஸ்பெஷல் ட்ரீட்டாம்?''

""வர்ற தேர்தல்லயும் நான்தான் முதல்வருக்கான வேட்பாளர் என்பதை எல்லோருக்கும் புரியவைங்க. இன்னைல இருந்தே வேலை பாருங்க. இது ஆரம்ப ட்ரீட்தான்னு மந்திரிகளுக்கு உற்சாகமா கீ கொடுத் திருக்கார் எடப்பாடி. சேலத்தில் இருந்து திரும்பிய அதே வேகத்தில் மூன்று நாள் ஆலோசனைக் கூட்டத்தை 10-ந் தேதி தொடங்கிட்டார். அதுக்கு அமைச்சர்கள், மா.செ.க்கள், மாநில நிர்வாகிகள் ஆகியோருக்கு மட்டும்தான் முதல்ல அழைப்பு போச்சுது. பிறகு, மாநகராட்சி, நகராட்சி, ஒன்றிய நிர்வாகிகளுக்கும் அழைப்பு போயிருக்கு.''’

rr

"எதுக்காக இந்தக் கூட்டமாம்?''’

""நிறுத்தி வைக்கப்பட்ட உள்ளாட்சி அமைப்புகளுக்கும் சேர்த்து விரைவில் தேர்தல் நடத்தப்பட இருப்பதால், அது தொடர்பான ஆலோசனைகளை வழங்கு றதுக்காகத்தான் இந்தக் கூட்டமாம். நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில் தாங்கள் கட்சிப் பிரமுகர்களால் அனுபவித்த சிரமங்களை எல்லாம் இந்தக் கூட்டத்தில் வெளிப்படுத்தணும்ன்னு ஒன்றிய அளவிலான நிர்வாகிகள் ஆவலோட இருந்தாங்க. ஆனால், மந்திரிகளும் மா.செ.க்களும், மாவட்டப் பிரச்சினைகளையும் குற்றச்சாட்டுகளையும் இந்தக் கூட்டத்தில் யாரும் எழுப்பக் கூடாதுன்னு வாய்ப்பூட்டு போட்டுட் டாங்களாம்.''’

""காதலர் தினம் கொண்டாடப்படும் பிப்ரவரி 14-ல் தமிழக பட்ஜெட் தாக்கலாகுதே. அது மக்களாலும் காதலிக்கப்படும் வகையில் இருக்குமா?''’

rao

""சகலதுறை அதிகாரிகளும் போராடித் தயாரிச்சிருக்கும் வழக்கமான பற்றாக்குறை பட்ஜெட்டைத் தாக்கல் செய்ய, நிதி அமைச்சரும் துணை முதல்வருமான ஓ.பி.எஸ். தயாராயிட்டார். இந்த பட்ஜெட் மீது கடும் விமர்சனங்கள் வரும்ன்னு ஆளுங்கட்சித் தரப்புக்கே தெரியுது. எதிர்க்கட்சியின் கிடுக்கிப்பிடியில் சிக்காமல் நழுவுறதுக்காக, பட்ஜெட் விவாதத்தை 17-ந் தேதி தொடங்கி, அதிகபட்சம் 5 நாட்களுக்குள் அவசரகதியில் முடிச்சிடணும்னு சபாநாயகர் தனபாலிடம் முதல்வர் எடப்பாடி ஆலோசிச்சிருக்காராம். இதற்கிடையே, 110 விதியின் கீழ் அறிவிக்க வேண்டிய முக்கிய அறிவிப்புகள் பற்றியும் அவர் அதிகாரிகளிடம் ஆலோசனை பண்ணியிருக்கார். மீதமுள்ள உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் ஏப்ரல், மே’யில் நடத்தப்பட இருப்பதால், அதற்குள் முக்கிய துறைகளில் இருக்கும் டெண்டர் விவகாரங்களை எல்லாம் முடிச்சிடுங்கன்னும் எல்லோரையும் விரைவு படுத்தியிருக்கிறார் எடப்பாடி.''’

""அ.தி.மு.க. எம்.பி.க்களே எடப்பாடிக்கு டெல்லியில் இருந்தபடியே ஷாக் கொடுக்கறாங் களாமே?''’

""தலைவரே, கடந்த 7-ந் தேதி ராஜ்யசாவில் பேசிய அ.தி.மு.க. எம்.பி விஜயகுமார், திடீர்ன்னு, நாடு தழுவிய மதிய உணவுத் திட்டத்துக்கு காமராஜர் பெயரை வைக்கவேண்டும்னு குரல் கொடுத்ததோட, காஷ்மீர் வரை செல்லும் தேசிய நெடுஞ்சாலை குமரியில் தொடங்குவதால், அங்கே காமராஜருக்கு 1000 அடி உயரத்தில் மெஹா சிலை ஒன்றை மத்திய அரசு அமைக்கணும்ன்னு பேசி யது பலரையும் திகைக்க வச்சிருக்கு. எடப்பாடிக்கும் ஷாக்காம். விஜயகுமார் தனது குமரி மாவட்ட மக்கள் கொடுத்த கோரிக்கை கடிதத்தை பிரதமர் அலுவலகத்தில் கொண்டுபோய்க் கொடுத்திருக்கார். பிரதமர் அலுவலகமோ, இதை அப்படியே ராஜ்யசபாவில் பேசுங்கள்ன்னு சொல்லியிருக்கு. அதன்படியே விஜயகுமார் செயல்பட, நம்ம எம்.பி.க்களும் அவங்க ரிமோட்டிலா?ன்னு எடப்பாடி அதிர்ச்சியாயிட்டாராம்.''’

""ஆன்மிகத்தின் பெயரால் பலருக்கும் அதிர்ச்சி கொடுக்குறவருக்கே இப்ப அடுக்கடுக்கா அதிர்ச்சிகள் வருதாமே?''’

""ஆமாங்க தலைவரே, பிடதி ஆசிரமத்தில் இருந்த ஒரு மண்டபத்தைக் கோயில் மாதிரி செட் போட்டுக் காட்டி, அதுக்கு ஜனவரி 30-ந் தேதி கும்பாபிசேகம் நடக்கப் போகுதுன்னு 16 கோடி ரூபாய்க்கு மேல் தன் ஆட்கள் மூலம் வசூல் பண்ணி, போலீஸ் டீமுக்கே அதிர்ச்சி கொடுத்தாராம் நித்தியானந்தா. இதுக்கிடையில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டதால் நித்தியின் குஜராத் ஆசிரம பெண் நிர்வாகிகளான பிரன்பிரியா, பிரியா தத்வா ஆகிய இருவரும் ஜாமீனில் விடப்பட்டிருக்கிறார்கள். இந்த நிலையில், நேபாளத்தில் கொல்லப்பட்ட நித்தியின் சீடரான சதீஷ் செல்வகுமாருடன் சென்றிருந்த நித்தியின் இரண்டு பெண் சீடர்கள், தற்போது பலத்த காயங்களோடு நேபாளத்தில் உயிருக்குப் போராடுகிறார்களாம். இது போன்ற தகவல்கள் தொடர்ந்து வருவதாலும், நீதிபதி குன்ஹா, நித்தி வழக்கில் தீவிரமாக இருப்பதாலும், நித்தியை எப்படியாவது மடக்குங்கள்ன்னு மத்திய உள்துறை உத்தரவைப் பிறப்பித்து, இப்போது நித்தியானந்தா தரப்புக்கு ஹைவோல்ட் அதிர்ச்சியைக் கொடுத்திருக்கு.''’

rr

"ரஜினி ஏப்ரலில் கட்சி தொடங்கி, ஆகஸ்ட்டில் மாநாடு நடத்தி, செப்டம்பரில் சுற்றுப் பயணம்ன்னு அறிவிச்சதோட பா.ம.க.வுடன் கூட்டணி பற்றியும் அவர் முடிவெடுப் பார்ன்னு உற்சாகமாகப் பேட்டி கொடுத்த தமிழருவி மணியன், அதே வேகத்தில் ரஜினி யாகக் கட்சி தொடங்கும்வரை, அது குறித்து நான் வாயைத் திறக்கப் போவதில்லைன்னு விரக்தியை வெளியிட்டிருக்காரே?''’

""பா.ம.க.வுக்கும் ரஜினிக்கும் இடையில் மலர்ந்த நட்புறவை முதலில் அம்பலப்படுத்தியது நம்ம நக்கீரன்தான். இதையே மணியனும் அழுத்தமாக உணர்த்தியிருந்தார். நட்புக்கான வடிவம் இன்னும் முழுமை பெறுவதற்குள், இது பற்றி மணியன் போட்டு உடைத்து விட்டதில், ராமதாசுக்கும் ரஜினிக்குமே வருத்தமாம். அதன் எதிரொலிதான் தமிழருவி மணியனின் முடிவு. இந்த நிலையில் தாங்கள் அ.தி.மு.க. கூட்டணியில் இருப்பதாக மட்டுமே வெளிப்படுத்த வேண்டும் என்று கட்சியின ருக்கு அறிவுறுத்தியிருக்கிறாராம் ராமதாஸ். இந்த நிலையில், அரசியல் விமர்சகர்கள் இருவர் ஆடிட்டர் குருமூர்த்தி அனுப்பியதாகச் சொல்லி, அன்புமணியை சந்திக்க முயன்றிருக்கிறார்கள். அன்புமணி இது பற்றி குருமூர்த்தியிடமே விசாரிக்க, நான் யாரையும் அனுப்பவில்லைன்னு அவர் சொல்லிவிட்டார். அதனால், அந்த இருவரையும் அனுப்பியது யார்ன்னு விறுவிறுப்பாக விசாரித்துக்கொண்டு இருக்கிறார்.''’

""முன்னாள் தலைமைச் செயலாளர் ராம்மோகன் ராவ் அரசியல், சங்கப் பணின்னு களமிறங்கிட் டாரே?''’

""உண்மை தாங்க தலைவரே, ஜெ.’ ஆட்சிக்காலத் தில் செல்வாக்கான அதிகாரியா இருந் தவர். பணி ஓய் வுக்குப் பிறகு, ஆந்திராவில் கட்சி ஆரம்பித்த நடிகர் பவன் கல்யாணிடம் அரசியல் ஆலோசக ராக சேர்ந்துவிட் டார். தி.நகர் ஆந்திர கிளப்பில், நாயுடு சமூகத்தினரை வர வழைத்து ஆலோசனை நடத்துவதையும் வழக்கமா வச்சிருக்கார். இந்த நிலையில், கடந்த 8-ந் தேதி மதுரையில் நடந்த திருமலை நாயக்கரின் 437 ஆவது பிறந்த நாள் விழாவில் கலந்துக்கிட்ட அவரிடம், தமிழ்நாடு அரசியலில் கவனம் செலுத்தும்படி விழா நடத்திய தெலுங்கு இனத்தவர் சொல்லியிருக்காங்க. இதற்கு ராம் மோகன் ராவும் சம்மதம் தெரிவித்திருக்கிறாராம். அவரை எடப்பாடி அரசு கண்காணித்துக் கொண்டே இருக்கிறது.''’

rang

""நானும் ஒரு முக்கியமான தகவலை சொல்றேன். தி.மு.க.வுக்கு ஆலோசனைகளைச் சொல்ல நியமிக்கப்பட்டிருக்கும் பிரசாந்த் கிஷோர் டீம், பெரும்பான்மையா உள்ள இந்து ஓட்டுகளையும் பெண்கள் வாக்கு களையும் கவரணும்னும் இந்து மதத்தை புண்படுத்தக்கூடாதுன்னும் சொல்லியிருக்காம். கட்சி சீனியர்களோ இது பா.ஜ.க. குரல் போல இருக்கேனு டென்ஷன் ஆகுறாங்க. எல்லாத்தையும் விரிவா பேசுறதுக்காக 17-ந்தேதி மா.செ. கூட்டத்தை தி.மு.க. தலைமை கூட்டியிருக்குது.''’

nkn120220
இதையும் படியுங்கள்
Subscribe