அ.தி.மு.க.வின் கொடிக்கம்பம் விழுந்து தனது டூவீல ரோடு லாரி சக்கரத் தில் சிக்கி படுகாய மடைந்து, நீலம்பூரில் உள்ள ராயல் கேர் ஹாஸ்பிடலில் சேர்க் கப்பட்ட ராஜேஸ் வரிக்கு கடந்த 15-ந் தேதி சிகிச்சை பல னின்றி இடதுகால் எடுக்கப்பட்டுவிட்டது.
இதற்கு விளக்கம் கொடுத்த மருத்துவமனை நிர்வாக டாக்டர்கள், ""இடது காலின் தசைகள் சிதைந்து, எலும்புகள் முறிந்திருந்தன. அந்தப் பெண்ணின் உயிரைக் காப்பாற்ற வேண்டிய நிலையில் இடது காலின் தொடைப் பகுதியில் இருந்து காலை அகற்ற வேண்டிய நிலை ஏற்பட்டதையடுத்தே ஆபரேஷன் செய்து காலை அகற்றி உள்ளோம். செயற்கை கால் பொருத்த முடிவு செய்யப்பட்டுள்ளது'' என மீடியாக்களுக்கு தெரிவித்தனர்.
ராஜேஸ்வரியின் இற்றுப்போன மரக்கத வுடன் கூடிய வீடு உள்ள சிங்காநல்லூர் அக்ர ஹாரம் பகுதியைச் சேர்ந்த சுதா என்கிற பெண் மணி நம்மிடம் பேசினார். ""இந்தப் பொண்ணு அவினாசி ரோட்டில் உள்ள கோகுலம் கார் டன்ல வேலை பார்த்துட்டிருந்தா. 8 வயசு குழந் தையோட கஷ்டப்பட்டுக்கிட்டிருந்தா. அவ ளோட அம்மா சித்ரா சமையல் வேலைக்கு போயிட்டு வர்றாங்க. இந்த ஒரு வருசத்துக்கு முன்னாலதான் இந்த ஸ்கூட்டியை வாங்கிக் கொடுத்தாங்க.
இங்கிருந்து போகும்போதே யூனிஃபார்ம் சேலைலதான் வேலைக்குப் போவா. அப்படிப் போகும்போதுதான் இந்த அ.தி.மு.க.காரங்க வச்சிருந்த கொடிக்கம்பம் சாய்ஞ்சு அவமேல விழ... அவ கீழே விழுந்து... லாரி ஏறி துடியா துடிச்சுட்டு இருந்திருக்கா. அப்ப அந்த வழியா வந்த ராஜேஸ்வரிகூட வேலை பாக்குற வடிவேல் என்கிறவர்தான், அந்த யூனிபார்மை பார்த்துட்டு "அட... நம்ம பொண்ணாச்சே'ன்னு பதறியடிச்சு ஹாஸ்பிடல் கொண்டுபோக முயற்சி எடுத்தாரு. அவர்தான் "கொடிக்கம்பம் சாய்ஞ்சு விழுந்த ராஜேஸ்வரிக்கு இப்படி ஆச்சு'ன்னு எல்லோர்கிட்டயும் சொல்லிட்டிருந்தாரு. ஆனா இப்ப அவர் எங்க இருக்காருன்னே தெரியலை. அவரை யாரோ சிலர் ஆஃப் பண்ணி வச்சு இருக்காங்க'' என்கிறார் மனமுருக .
ராஜேஸ்வரியின் சிகிச்சைக்கு 20 லட்ச ரூபாய்க்கு மேல் ஆகும் என ஹாஸ்பிடல் நிர்வாகம் சொல்லியிருக்கற நிலையில்... அதற்கான நிதியை திரட்டிக்கொண்டிருக்கும் ரமேஷ் நம்மிடம்... ""வடிவேலு கொடுத்த கம்ப்ளைண்ட்டுக்கு பீளமேடு போலீசார் போட்ட எஃப்.ஐ.ஆர். காபில "கொடிக் கம்பம் விழுந்துதான்...' அப்படிங்கற தகவலை பதிவு பண்ணாம, "டூ வீலர் ஸ்கிட்டாகி விழுந்து லாரியில் அடிபட்ட ராஜேஸ்வரிக்கு முட்டியிலும், கால் பெருவிரலிலும் அடிபட்டிருக்கு' என எழுதியிருந்ததைப் படித்துப் பார்த்ததும் அதிர்ச்சியாயிடிச்சி. அந்த எஃப்.ஐ.ஆர். காபிய இப்பவரைக்கும் கொடுக்கல.
அ.தி.மு.க.வில் இருந்து பிரபலங்கள் யாருமே இந்த பொண்ணைப் பார்க்க வரவேயில்லை. ஏன்? கவுண்டம்பாளையம் தொகுதி அ.தி.மு.க. எம்.எல்.ஏ ஆறுக்குட்டியின் உறவினர்கள் மட்டும் ஹாஸ்பிடலுக்கு வந்து ராஜேஸ்வரியின் பெற்றோரை சந்திச்சு நலம் விசாரிச்சுட்டுப் போனாங்க. ராஜேஸ்வரி வேலை செஞ்ச கோகுலம் கார்டன்ஸ், எம்.எல்.ஏ. ஆறுக்குட்டியின் மருமகனோடது, அதுக்காகத் தான் வந்து பார்த்தாங்க'' என்றார் வேதனையுடன்.
"கொடிக்கம்பம் வைக்க தடையில்லை' என முதல்வர் எடப்பாடி அலட்சியமாக பதிலளித்த நிலையில்... எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், ராஜேஸ்வரியின் வீடு தேடிச் சென்று 5 லட்ச ரூபாய் நிதி அளித்துள்ளார்.
"அ.தி.மு.க. கொடிக்கம்பம் சாய்ந்து விழுந்துதான் ராஜேஸ் வரிக்கு இந்த நிலை ஏற்பட் டது' ... என அப்போது புகார் கொடுத்த வடிவேலுவின் இருப்பிடத்தை அறியவோ, தொடர்புகொள்ளவோ முடிய வில்லை.
வடிவேலுவை யார் மறைத்து வைத்திருக்கிறார்கள்...?
ராஜேஸ்வரி அடிபட்ட கோல்டு வின்ஸ் பகுதியில் இருந்து பக்கத்தில் உள்ள கே.எம்.சி.ஹெச். ஹாஸ்பிடலில் ராஜேஸ்வரியை கொண்டு சேர்க்காமல் 6 கிலோ மீட்டர் தொலைவில் உள்ள ராயல் கேர் ஹாஸ்பிடலுக்கு போலீஸ் உத்தரவின் பேரில் கொண்டு சென்றது, ஏன்?
வணிக ஏரியாவான கோவை-அவினாசி சாலை கோல்டு வின்ஸ் பகுதியில் உள்ள எந்த அத்தனை நிறுவனங் களிலும் சி.சி.டி.வி. கேமராக் கள் அந்த நாளில் மட்டும் இயங்காமல் போய் விட்டதா? போலீசார் சம்பவம் நடந்த இடத்தில் உள்ள நிறுவனங் களுக்குள் புகுந்து கேமரா புட்டேஜ்களை கைப்பற்றிச் சென்றது ஏன்? என பல சந்தேகக் கேள்விகள் வட்ட மடிக்கின்றன.
-அருள்குமார்