வினில் வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்துள்ளார் எனத் தொடரப்பட்ட வழக்கில், முன்ஜாமீன் வழங்க உயர்நீதிமன்றம் மறுத்ததால், தலைமறைவாக இருந்தபடியே உச்ச நீதிமன்றத்தில் முன்ஜாமீன் வாங்கிடத் துடிக்கும் முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜியை, 6 தனிப்படை போலீசார் வலைவீசித் தேடி வருகின்றனர். அவருடன் தொடர்பில் இருப்பவர்களின் கைபேசி எண்கள், காவல்துறையால் தொடர்ந்து கண்காணிக்கப்பட்டு வருகின்றன.

rr

Advertisment

ராஜேந்திர பாலாஜி தன்னுடைய மொபைல் போனை ஆஃப் செய்வதற்கு முன், விஜயபாஸ்கரிடம் பேசிய விவரம் தெரியவரவே, புதுக்கோட்டை பக்கமும் போலீஸ் பார்வை திரும்பியது. போலீசின் ஒவ்வொரு மூவும் ராஜேந்திர பாலாஜிக்கு அப்டேட் ஆக, 10 நாட்களுக்கு முந்தைய அவருடைய அழைப்புகளை ஆராய்ந்ததில் கோகுல இந்திராவின் உறவுக்கார இன்ஸ்பெக்டர் ஒருவரின் நம்பரும் இருந்துள்ளது. போலீசுக்குள்ளேயே இப்போது விசாரணை தீவிரமாகியுள்ளது.

கேரளா, பெங்களூரு பக்கம் தீவிரத் தேடுதல் நடந்தாலும், மதுரை மாஜியின் விராட்டிப்பட்டி தோப்பு, மானாமதுரை உறவினர் வீடு, விருதுநகர் ஒதுக்குப்புறம் என மேலும் சில இடங்களையும் போலீஸ் குறிவைத்துள்ளது. தலைமறைவாகி ஒளிந்த ராஜேந்திரபாலாஜியிடம் ஒரு துப்பாக்கியும் இருக்கிற விவரம் போலீசுக்குக் கிடைத்துள்ளது. ஆவின் வேலை மோசடி தான் அவரை அலைக்கழிக்கிறது. கட்சியினரோ, கட்சிப் போஸ்டிங் மற்றும் பண விவகாரத்தை உதவியாளர் பாபுராஜும், ஆவின் வேலை சம்பந்தப் பட்ட விஷயங்களை உதவியாளர் பலராமனும் கவனித்து வந்ததாகக் கூறுகின்றனர். மேலும், வெம்பக்கோட்டை அ.தி.மு.க. மேற்கு ஒன்றியச் செயலாளராக இருந்த விஜயநல்லதம்பியிடம், ஆவின் வேலை விஷய மாக பலராமன் பேசியபோது ‘ரெகார்ட்’ செய்யப்பட்டவையே, தற்போது ராஜேந்திரபாலாஜிக்கு எதிராக ஆவணமாக்கப்பட்டுள்ளது. ஒன்றியச் செயலாளர் என்ற முறையில் விஜயநல்ல தம்பி முன்வைத்த ஆவின் வேலை rrசம்பந்தமான கோரிக்கைகளைப் பரிசீலித்து, பலராமன் நிறைவேற்றித் தந்ததெல்லாம் நடந்திருக்கிறது. இதே சிவகாசியில், தற்போது மாநகராட்சியின் முக்கிய பொறுப்பில் அமர்வதற்கு, ‘கிருஷ்ணார்ப்பணம்’ என ரூ.30 லட்சம் தந்து விட்டே வந்திருக்கிறார்,

‘சபா’ காளிமுத்துவின் தம்பி, அதாவது விஜயநல்ல தம்பியின் உடன்பிறந்த அண்ணன் ரவிச்சந்திரனுக்கு, அமைச்சராக இருந்தபோது ராஜேந்திரபாலாஜி ஒரு ‘சகாயம்’ செய்தார். ஜெயலலிதா ஆட்சிக் காலத் தில், ரவிச்சந்திரனின் மனைவிக்கு துணைவேந்தர் பதவி கிடைப்பதற்கு, உயர் கல்வித்துறை அமைச்சராக இருந்த பழனியப் பன் மூலம் எதிர்பார்ப்பின்றி உதவினார். அதை யெல்லாம் மறந்து, அவருக்கு எதிராகக் களமிறங்கி விட்டார்கள். விஜயநல்லதம்பி வசூலித்துக் கொடுத்த பணத்துக்கான ஆவின் போஸ்டிங், சம் பந்தப்பட்ட ஒரு சிலருக்கு கிடைத்தே இருக்கிறது. கட்சி விட்டு கட்சி மாறி, மோசடி வழக்குகளில் சிக்குவதெல்லாம் விஜயநல்லதம்பிக்கு தண்ணிபட்ட பாடு. மோசடிப் புகாரால் ராஜேந்திரபாலாஜி தலை மறைவானதும், விருதுநகர் மாவட்ட அ.தி.மு.க.வை மேலும் பலவீனப்படுத்தியிருக்கிறது'' என்கிறார்கள்.

Advertisment

அப்படியென்றால், விஜயநல்லதம்பி இழந்த ரூ.3 கோடி எங்கே? ‘டைவர்ஸ்’ வழக்கிற்காக, தனது பெண்குழந்தையுடன் விஜயநல்லதம்பியைச் சந்தித்த ‘அழகு நிலைய’ அம்மணி ஒருவருடன், தனக்கும் சேர்த்து இரண்டாவதாக ஒரு ‘புது வாழ்க்கை’ அமைத்துக்கொண்டார், விஜயநல்லதம்பி. ‘மகா’ என்ற செல்லப் பெயரில் அழைக்கப்படும், அந்த லட் சுமிகரமான பெண்ணுக்கு ஆண் வாரிசு ஒன்றும் இவர் மூலம் கிடைத்துள்ளது. அந்த இரண்டாவது குடும்பத்துக்கு, சிவகாசி கருமன் கோவில் அருகிலுள்ள பிருந்தாவனம் தெருவில், வெளியில் சாதாரணமாகவும், கிரானைட், தேக்கு என பிரம்மாண்ட உள்வேலைப்பாடு களுடனும் கூடிய பங்களாவை, கோடிக்கும் மேல் செலவழித்துக் கட்டியிருக்கிறார். மகா மற்றும் மகன் பெயரில் ஏக்கர் கணக்கில் நிலங்களும் வாங்கிப் போட்டிருக்கிறார். வேலை வாங்கித் தருகிறேன் என்று பணமோசடி செய்ததாகவும், வேறு சில நிதி நெருக்கடியை சந்திக்க நேரிட்டபோதும், நிலத்தை விற்று செட்டில் செய்துவிடுகிறேன்..’ என்று உறுதியளித்தார். ஆனால், நிலத்திற்குரிய பெண்மணியோ, எனக்கும் அவருக்கும் சம்பந்தமில்லை எனப் போலீஸ் முன்னிலையிலேயே எழுதிக் கொடுத்துவிட்டார்.

இந்த நிலையில்தான், ரவீந்திரன் என்பவர் தன்னுடைய சகோதரி மகனுக்கு ஆவினில் மேனேஜர் வேலை வாங்கித்தருவதாகச் சொல்லி ரூ.30 லட்சம் மோசடி செய்துவிட்டதாக புகார் அளித்துவிட்டார். காவல்துறையிடம் உறுதியளித்த படி ரவீந்திரனுக்கு திருப்பித்தராத நிலையில்தான், ராஜேந்திரபாலாஜி மற்றும் உதவியாளர்கள் மீது ரூ.3 கோடி புகார் அளித்தார் விஜயநல்லதம்பி.

rr

‘ராஜேந்திரபாலாஜி மீது பல புகார்கள் வந்துள்ளன. நிச்சயம் நடவடிக்கை எடுக்கப்படும்..’ என்று தமிழக பால்வளத்துறை அமைச்சர் நாசர் கூறிவரும் நிலையில், மோசடி வழக்கில் தேடப் படும் குற்றவாளியாக இருக்கிறார், ராஜேந்திரபாலாஜி.

‘குற்றச்சாட்டுக்கு உள்ளான ராஜேந்திர பாலாஜியை எப்படி வேண்டுமானாலும் தேடிக் கொள்ளுங்கள். அவருடைய குடும்ப உறுப்பினர் களைத் தொந்தரவு செய்ய வேண்டாம். தேவைப் பட்டால், சம்மன் அனுப்பி விசாரியுங்கள்..’ என்று தமிழகக் காவல்துறைக்கு வலிக்காமல் குட்டி யுள்ளது உயர்நீதிமன்றத்தின் மதுரைக் கிளை.

போலீஸ் எப்படி கச்சிதமாக வலைவிரிக்கும் என்பதை அறிந்தவரான ராஜேந்திர பாலாஜி, சுப்ரீம் கோர்ட்டில் முன்ஜாமீனுக் காகப் பிரார்த்திக்கிறார்.