2018 மத்தியப்பிரதேச, ராஜஸ் தான் இரு மாநில தேர்தலிலும் காங்கிரஸே வென்றது. சச்சின் பைலட்டுக்கு முதல் வர் கனவு இருந்தபோதும் ராஜஸ்தான் ஆட்சியை அசோக் கெலாட் இறுகப் பற்றிக்கொண்டார். மாறாக, ஜோதிராதித்ய சிந்தியா அதிருப்தியால் தனது ஆதரவாளர்களுடன் பா.ஜ.க.வுக் குத் தாவ, ஒன்றரை வருடத்தில் மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தது.
மத்தியப்பிரதேசத்தில் பா.ஜ.க.வின் பலம், மோடி மற்றும் முதல்வர் சிவராஜ் சிங்கின் ஆளுமை. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே பா.ஜ.க. மத்தியப்பிரதேசத்தில் தேர்தல் மோடில்தான் இருக்கிறது.
நடுவில் காங்கிரஸ் ஆட்சிசெய்த ஒன்றரை வருடங்களைத் தவிர்த்தால் தொடர்ச்சியாக 18 வருடங்கள் பா.ஜ.க. ஆட்சிசெய்துவருகிறது. இதனால் ஏற்படும் ஆட்சிக்கு எதிரான மனநிலையை வெல்வது தான் பா.ஜ.க.வுக்கு முன்னிருக்கும் சவால்.
மத்தியப்பிரதேச பா.ஜ.க.வில் உட்கட்சிப் பூசல்கள் வலுவாக வெடிக்க ஆரம்பித்திருக்கிறது. ஜோதிராதித்ய சிந்தியாவுடன் பா.ஜ.க.வு
2018 மத்தியப்பிரதேச, ராஜஸ் தான் இரு மாநில தேர்தலிலும் காங்கிரஸே வென்றது. சச்சின் பைலட்டுக்கு முதல் வர் கனவு இருந்தபோதும் ராஜஸ்தான் ஆட்சியை அசோக் கெலாட் இறுகப் பற்றிக்கொண்டார். மாறாக, ஜோதிராதித்ய சிந்தியா அதிருப்தியால் தனது ஆதரவாளர்களுடன் பா.ஜ.க.வுக் குத் தாவ, ஒன்றரை வருடத்தில் மத்தியப்பிரதேசத்தில் காங்கிரஸ் ஆட்சி கவிழ்ந்து பா.ஜ.க. ஆட்சிக்கு வந்தது.
மத்தியப்பிரதேசத்தில் பா.ஜ.க.வின் பலம், மோடி மற்றும் முதல்வர் சிவராஜ் சிங்கின் ஆளுமை. தேர்தல் தேதி அறிவிக்கப்படுவதற்கு முன்பாகவே பா.ஜ.க. மத்தியப்பிரதேசத்தில் தேர்தல் மோடில்தான் இருக்கிறது.
நடுவில் காங்கிரஸ் ஆட்சிசெய்த ஒன்றரை வருடங்களைத் தவிர்த்தால் தொடர்ச்சியாக 18 வருடங்கள் பா.ஜ.க. ஆட்சிசெய்துவருகிறது. இதனால் ஏற்படும் ஆட்சிக்கு எதிரான மனநிலையை வெல்வது தான் பா.ஜ.க.வுக்கு முன்னிருக்கும் சவால்.
மத்தியப்பிரதேச பா.ஜ.க.வில் உட்கட்சிப் பூசல்கள் வலுவாக வெடிக்க ஆரம்பித்திருக்கிறது. ஜோதிராதித்ய சிந்தியாவுடன் பா.ஜ.க.வுக்குத் தாவிய பலரும் திரும்பவும் காங்கிரஸுக்குத் தாவ ஆரம்பித்திருக்கிறார்கள். பா.ஜ.க. வைச் சேர்ந்த 3 பேர் உள்பட வெவ்வெறு கட்சிகளைச் சேர்ந்த 9 பேர் காங்கிரஸில் சேர்ந்திருப்பது, காங்கிர ஸுக்கு வாய்ப்பு வலுவாக இருப்பதையே காட்டுகிறது.
நீண்டகாலம் சிவராஜ்சிங் சௌகானே முதல்வ ராகத் தொடர்வதால், முதல்வர் பதவியை எதிர்பார்க்கும் இரண்டாம், மூன்றாம் கட்டத் தலைவர்கள் எரிச்சலடைய ஆரம்பித்திருக்கிறார்கள்.
மாநில அரசின் மக்கள் பணித் திட்டங்களில் பங்கெடுக்கும் காண்ட்ராக்டர்களிடம் 50 சதவிகித கமிஷன் வாங்கப்படுவதாக பிரியங்கா காந்தி, கமல்நாத் ஆகியோர் குற்றம்சாட்ட, வெகுண்ட மாநில அரசு, இருவர் மீதும் வழக்குப் பதிவுசெய் திருக்கிறது. கர்நாட கத்திலும் 40 சத விகித கமிஷன் ஊழல் குற்றச்சாட்டே ஆட்சி மாற்றத்திற் கான முக்கிய பங்குவகித்தது குறிப்பிடத் தக்கது. மத்தியப்பிரதேசத்தின் பிரசித்தி பெற்ற சிவன்கோவிலான மகாகாலேஸ்வரர் கோவிலை பல்வேறு வசதிகளுடன் ரூ.850 கோடியில் விரிவுபடுத்திக் கட்டியதில் பெரிய அளவில் ஊழல் நடந்திருப்பதாக எழுந்திருக்கும் குற்றச்சாட்டு பா.ஜ.கவை பலவீனப்படுத்தும்.
தலித்துகள், பெண்கள், பழங்குடியின ருக்கு எதிரான குற்றங்கள் அதிகரித் திருப்பதாக எழுந்துள்ள குற்றச்சாட்டு முதல்வர் சௌகானின் வசீகரத்தைக் குறைத்திருக்கிறது. சித்தி மாவட்டத்தில் பழங்குடி வாலிபர்மேல் மூத்திரம் பெய்த விவகாரத்தில் முதல்வரே தலையிட்டு விஷயத்தை சீர்படுத்தவேண் டியதானதை யாரும் அத்தனை எளிதில் மறந் திருக்கமாட்டார்கள்.
தற்போதைய நிலையில் காங்கிரஸுக்கே கூடுதல் வெற்றி வாய்ப்பு!
ஐந்து மாநில தேர்தலில் மக்களால் அதிகம் கவனிக்கப்படும் மற்றொரு தேர்தல் களம் ராஜஸ்தான். பா.ஜ.க. ஒருமுறை காங்கிரஸ் ஒருமுறை என ராஜஸ்தானில் முதல்வர் பதவியை மாறி மாறிப் பிடித்து வருகின்றன. இதே பாணி இந்தத் தேர்தலிலும் தொடர்ந்தால் காங்கிரஸ் ஆட்சியை இழக்கும்.
எனவே இந்த முறை தங்களது ஆட்சி என்ற நம்பிக்கையுடன் பிரச்சாரங்களில் மும்முரம் காட்டிவருகிறது பா.ஜ.க. இந்த வருடத்தில் மட்டும் பிரதமர் மோடி ராஜஸ் தானுக்கு 11 முறை வருகை தந்துவிட்டார்.
தவிரவும், ராஜஸ்தானில் இரண்டு மூன்று முறை அரசுப் பணித் தேர்வுக்கான கேள்வித்தாள் வெளியாகி மாநில அரசுக்கு தர்மசங்கடத்தை ஏற்படுத்தியிருக்கிறது. ஜல்ஜீவன் திட்டத்தில் கான்ராக்ட் கொடுத்த தில் ஊழல், அனுபவ மில்லாத நிறுவனங் களுக்கு கான்ட் ராக்ட் கொடுக்கப் பட்டிருப்பது, திட்டத்தை நிறைவேற்றுவதில் தாமதம் என பல்வேறு புகார்களை அடுக்குகிறது பா.ஜ.க.
அமலாக்கத் துறை கடந்த செப்டம்பர் மாதம் தகவல் தொழில்நுட்பத் துறையின் தலைமை அலுவலகங்களில் நடத்திய சோதனையில் ரூ.2.03 கோடி ரூபாய் மற்றும் 1 கிலோ தங்கத்தைக் கைப்பற்றியது. இந்த விவகாரமும் காங்கிரஸை தர்மசங்கடம் அடையவைத் திருக்கிறது.
தவிர அசோக் கெலாட்டால் பதவியிறக்கம் செய்யப்பட்ட முன்னாள் அமைச்சர் ராஜேந்திர குஹா, ரெட் டயரி விவகாரமும் தேர்தல் பேசுபொருளா யிருக்கிறது.
நடந்து முடிந்த 7 இடைத்தேர்தல்களில் 5-ல் காங்கிரஸ் வென்றிருப்பது நல்ல அறிகுறி. அசோக்கெலாட்டும், சச்சின் பைலட்டும் தேர்தல் என்றதும் "எங்களுக்குள் என்ன பிரச்சினை, நாங்கள் ஒற்றுமையாகத்தான் இருக்கிறோம்' என பிரச்சாரம் செய்துவருகின்றனர்.
பா.ஜ.க.வில் கடந்த ஐந்து வருடத்தில் கட்சியின் தலைமைப் பொறுப்பில் மூன்றுபேர் இருந்திருக் கிறார்கள். முதல்வர் கனவில் வசுந்தரா ராஜே, கஜேந்திரசிங் ஷெகாவத், அஸ்வினி வைஷ்ணவ், ஓம் பிர்லா என பல தலைகள் முட்டி மோதுகின்றன. இதனால் பா.ஜ.க.வால் இவர்தான் முதல்வர் வேட்பாளர் என தைரியமாக அறிவிக்க முடியவில்லை. இந்தப் போட்டி காங்கிரஸுக்கான சாதகத்தை அதிகரித்திருக்கிறது.
மாநில அரசின் சார்பாக கேஸ் சிலிண்டருக்கு ரூ.500 மானியம், சிரஞ்சீவி ஆயுள் காப்பீடு, வீட்டுக்கு வீடு இலவச மொபைல் போன், அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதியத் திட்டம் போன்ற மக்களுக்குச் செய்த நலத் திட்டங்களை காங்கிரஸ் நம்பியிருக்கிறது.
ஒரு துளி சாதகம் பா.ஜ.க.வுக்குக் கூடுதலாக இருந்தாலும், தேர்தல் சதுரங்கத்தில் மீண்டும் ஒருமுறை பா.ஜ.க.வுக்கு செக் வைக்க முடியு மென்ற நம்பிக்கை யுடன் பிரச்சாரத்தில் சூடு கிளப்புகிறது காங்கிரஸ்.