Advertisment

ஜனாதிபதி அதிகாரத்தைக் கைப்பற்ற ராஜபக்சேக்கள் திட்டமா? -கவர்னர் செந்தில் தொண்டமான் பேட்டி!

ss

லங்கையிலுள்ள இந்திய வம்சாவளித் தமிழர்களான மலையக மக்களை கௌரவிக்கும் வகையில் பிரதமர் மோடியின் ஆலோசனையில் தபால் தலை (ஸ்டாம்ப்) வெளியிட்டுள்ளது இந்திய தபால் துறை அமைச்சகம். பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தபால் தலையை வெளியிட, இலங்கை கிழக்கு மாகாண கவர்னரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலை வருமான செந்தில் தொண்டமான் முதல் பிரதியை பெற்றுக் கொண்டிருக்கிறார். அவரிடம் சில கேள்விகளை முன்வைத் தோம்.

Advertisment

இலங்கையின் மலையகத் தமிழர் களுக்கு தபால் தலை வெளியிடுவதன் பின்னணியில் இலங்கைத் தமிழர்களை அரசியல்ரீதியாக ஈர்ப்பதற்கு பா.ஜ.க. தலைமை திட்டமிடுகிறதா?

மலையகத் தமிழர்களை அங்கீகரிக்க வேண்டிய தார்மீகக் கடமை இந்தியாவுக்கு இருக்கிறது. அதன் பின்னணியில் தான் மலையகத் தமிழர்களை கௌரவப்படுத்த வும் அங்கீகரிக்கவும் முன்வந்து, தபால்தலை வெளியிட்டு கடமையை நிறைவேற்றியிருக் கிறார் பிரதமர் நரேந்திர மோடி. இதற்கான முயற்சி களை எடுத்தவர் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணா மலை. இதனைக்கடந்து எந்த அரசியல் திட்டமும் உள்நோக்கமும் கிடையாது.

gg

இந்தியாவுக்கு அப்படி என்ன தார்மீகக் கடமை இருக்கிறது?

Advertisment

இருநூறு ஆண்டு களுக்கு முன்பு இந்தியா வின் தென்மாநிலங்களில் வறுமை தலைவிரித்தாடியது. இதனை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட பிரிட்டிஷ் அரசு, தமிழகத்திலுள்ள திருச்சி, ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 10 லட்சத்துக்கும் அதிகமான தமிழர்களை லண்டனுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி இலங்கைக்கு அழைத்துச் சென்றது. காடுகளை அழித்து, இலங்கை பொருளாதா ரத்துக்கு உதவும் ரப்பர், தேயிலைத் தோட்டங்களில் தமிழர்கள் அடிமைப்படுத்தப் பட்ட

லங்கையிலுள்ள இந்திய வம்சாவளித் தமிழர்களான மலையக மக்களை கௌரவிக்கும் வகையில் பிரதமர் மோடியின் ஆலோசனையில் தபால் தலை (ஸ்டாம்ப்) வெளியிட்டுள்ளது இந்திய தபால் துறை அமைச்சகம். பா.ஜ.க.வின் தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, தபால் தலையை வெளியிட, இலங்கை கிழக்கு மாகாண கவர்னரும் இலங்கை தொழிலாளர் காங்கிரசின் தலை வருமான செந்தில் தொண்டமான் முதல் பிரதியை பெற்றுக் கொண்டிருக்கிறார். அவரிடம் சில கேள்விகளை முன்வைத் தோம்.

Advertisment

இலங்கையின் மலையகத் தமிழர் களுக்கு தபால் தலை வெளியிடுவதன் பின்னணியில் இலங்கைத் தமிழர்களை அரசியல்ரீதியாக ஈர்ப்பதற்கு பா.ஜ.க. தலைமை திட்டமிடுகிறதா?

மலையகத் தமிழர்களை அங்கீகரிக்க வேண்டிய தார்மீகக் கடமை இந்தியாவுக்கு இருக்கிறது. அதன் பின்னணியில் தான் மலையகத் தமிழர்களை கௌரவப்படுத்த வும் அங்கீகரிக்கவும் முன்வந்து, தபால்தலை வெளியிட்டு கடமையை நிறைவேற்றியிருக் கிறார் பிரதமர் நரேந்திர மோடி. இதற்கான முயற்சி களை எடுத்தவர் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணா மலை. இதனைக்கடந்து எந்த அரசியல் திட்டமும் உள்நோக்கமும் கிடையாது.

gg

இந்தியாவுக்கு அப்படி என்ன தார்மீகக் கடமை இருக்கிறது?

Advertisment

இருநூறு ஆண்டு களுக்கு முன்பு இந்தியா வின் தென்மாநிலங்களில் வறுமை தலைவிரித்தாடியது. இதனை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்ட பிரிட்டிஷ் அரசு, தமிழகத்திலுள்ள திருச்சி, ராமநாதபுரம், தூத்துக்குடி, சிவகங்கை, புதுக்கோட்டை, நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலிருந்து 10 லட்சத்துக்கும் அதிகமான தமிழர்களை லண்டனுக்கு அழைத்துச் செல்வதாகக் கூறி இலங்கைக்கு அழைத்துச் சென்றது. காடுகளை அழித்து, இலங்கை பொருளாதா ரத்துக்கு உதவும் ரப்பர், தேயிலைத் தோட்டங்களில் தமிழர்கள் அடிமைப்படுத்தப் பட்டனர். இலங்கைக்கு சுதந்திரம் கிடைத்தபோது இலங்கை பாராளு மன்றத்தில் தமிழர்களின் குடியுரிமைக்கு எதிராக நிறைவேற்றப்பட்ட தீர்மானம் மூலமாக மலையகத் தமிழர்களின் குடியுரிமை பறிக்கப்பட்டது. இதனால் மலையகத் தமிழர்கள் நாடற்றவர்களானார்கள். இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் சௌமியமூர்த்தி தொண்டமான் தலைமையில் மலையகத் தமிழர்களின் உரிமைகளுக்கான போராட்டங்கள் வலுப்பெற்றன. இந்தியாவுடன் பேச்சுவார்த்தை நடத்தி மலையகத் தமிழர்களை இந்தியா வுக்கு திருப்பியனுப்ப இலங்கை அரசு தீவிரம் காட்டியது. 1964-ல் உருவான சிரிமா-சாஸ்த்ரி ஒப்பந்தத்தின் ஊடாக 5 லட்சம் தமிழர்களுக்கு படிப்படியாக இலங்கையின் குடியுரிமை வழங்கப்படும் என உறுதி அளிக்கப்பட்டது. 5 லட்சம் தமிழர்களை இந்தியா திரும்ப அழைத்துக்கொண்டது. இதனால் மலையகத் தமிழர்களின் எண்ணிக்கை குறைந்ததுடன், அரசியல்ரீதியான வலிமையையும் இழந்தனர். எனவே, இலங்கைத் தொழிலாளர் காங்கிரசின் போராட்டங்கள் கூர்மைப்படுத்தப்பட்டன. ஒரு கட்டத்தில் வாக்குரிமை கிடைத்தாலும், மலையக மக்களின் வாழ்வாதாரம் பின்தங்கியே இருந்தது. அதனை மேம்படுத்த வேண்டிய தார்மீகக் கடமை இந்தியாவுக்கு இருந்தது. அதனால் எம் மக்களின் வாழ்நிலையை கருத்தில் கொண்டு வீடு கட்டித்தரும் திட்டத்தை முன்னெடுத்ததுடன், சுகாதாரம், கல்வி மேம்பாடுகளிலும் அக்கறை காட்டியது. இதற்காக நிதி உதவிகளையும் செய்து வருகிறது இந்தியா. மலையகத்திற்கு விஜயம் மேற்கொண்டு மலையகத்தமிழர்களை நேரில் சந்தித்து ஆதரவு வழங்கினார் இந்திய பிரதமர் நரேந்திரமோடி. தற்போது, மலையகத் தமிழர்களை அங்கீகரிக்கும் தார்மீகக் கடமையை நிறைவேற்றி யுள்ளது இந்தியா.

இந்தியாவுக்குத் திரும்பிய மலையகத் தமிழர்களின் வாழ்நிலை எப்படி இருக்கிறது?

இந்தியாவுக்கு திரும்பிய தோட்டத் தொழிலாளர்கள், தமிழகத்தின் நீலகிரி, வால்பாறை, கூடலூர் என பல்வேறு மலைப்பிரதேசங்களில் இருக்கிறார்கள். இவர்களின் வாழ்வாதாரம் மிக மோசமாக இருப்பதையறிந்து அவர்களுக்கு வீடு கட்டித் தரும் திட்டம் உட்பட பல நன்மைகளை செய்திருக்கிறார் தமிழக முதல்வர் மு.க. ஸ்டா லின். இது எம்மக்களுக்கு மன ஆறுதலை தந்திருக்கிறது.

ss

மிக்ஜாம் புயல் மழை வெள்ளப் பாதிப்புகளில் தமிழக அரசின் நடவடிக்கைகளை எப்படி பார்க்கிறீர்கள்?

சென்னையில் நான் பயணித்த இடங்கள் மிக்ஜாம் புயல் தாக்கப்பட்டதன் சுவடே தெரியாமல் இருக்கிறது. அந்தளவுக்கு சீரமைப்புப் பணிகளில் கவனம் செலுத்தியிருக்கிறது தமிழக அரசு. கடந்த காலங்களில் உலகில் இதே போல் 90 கிலோமீட்டர் வேகத்தில் வீசப்பட்ட காற்றும், 45 செ.மீ. மழை புயலாலும் பாதிக்கப்பட்ட நகரங்களை ஒப்பிடும் போது, தமிழகத்தில் மீட்புப் பணி மிக விரை வாக இருந்ததுடன், தமிழக முதல்வர் மு. க ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு சிறப்பாக செயல்பட்டு மக்களின் வாழ்க்கையை விரைவாக இயல்பு நிலைக்கு கொண்டு வந்துள்ளனர்.

இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரம சிங்கேவை வீழ்த்தி விட்டு ஜனாதிபதி அதிகாரத் தைக் கைப்பற்ற ராஜபக்சேக்கள் திட்டமிடுவதாக சொல்லப்படுகிறதே?

இலங்கை நாடாளுமன்றத்திலும் அமைச்சரவையிலும் பெரும்பான்மை பலம் மகிந்த ராஜபக்சேவுக்கு இருக்கிறது. இலங்கை அரசியலமைப்புச் சட்ட விதிகளின்படி ஜனாதிபதி பதவி விலகினால் மட்டுமே புதிய ஜனாதிபதி தேர்ந்தெடுக்கப்படுவார். இல்லையெனில் தேர்தல் வரை பொறுத்திருக்க வேண்டும். ஜனாதிபதி பதவி விலக வேண்டிய சூழல் எதுவும் இலங்கையில் இல்லை. தற்போதைய ஜனாதிபதி மிகச் சிறப்பாக ஆட்சியை நடத்தி வருகிறார்.

மிகக்கடுமையான பொருளாதார நெருக்கடிகளை சந்தித்த இலங்கை, தற்போது நெருக்கடிகளில் இருந்து மீண்டுவிட்டதா?

ஜனாதிபதியின் வெளிநாட்டு, உள்நாட்டு கொள்கைகள் மூலம் பொருளாதார வீழ்ச்சியிலிருந்து இலங்கை மீண்டிருக்கிறது. கடந்த காலங்களை விட அதிவேகமான வளர்ச்சியில் பயணிக்கிறது இலங்கை. இலங்கைக்கு 4 பில்லியன் டாலர் கடன் உதவி வழங்கி பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கையை மீட்டெடுத்ததில் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு முக்கிய பங்களிப்பு இருக்கிறது. அதேபோல, 40 லட்சம் குடும்பங்களுக்குத் தேவையான உணவு தானியங்கள், 100 மெட்ரிக் டன் மருந்துகள், பிறந்த குழந்தைகளுக்காக 100 மெட்ரிக் டன் பால் பவுடர்கள் வழங்கி உதவி புரிந்த தமிழக முதல்வர் ஸ்டாலினுக்கும் பெரும் பங்கு உண்டு!

இந்தியாவால் முன்மொழியப்பட்ட இலங்கை அரசிய லமைப்பின் 13-வது சட்டத் திருத்தத்தை நிறைவேற்றுவதில் சிக்கல் நீடிக்கிறதே?

ss

காவல்துறை மற்றும் நிலம் தொடர்பான அதி காரங்கள் 13-வது சட்டப் பிரிவுகளின் படி பாராளுமன்றத் திடம் இருக்கிறது. முழுமையான மாநில சுயாட்சி அதிகாரங்கள் மாநில அரசுக்கு கொடுக்கப்பட வேண்டும் என்பதுதான் 13-வது சட்டத்திருத்தம். காவல்துறை, நிலம் ஆகிய 2 அதிகாரங்களும் மாநில அரசிடம் இருக்க வேண்டும் என்பதில் மாற்றுக்கருத்து இல்லை. இலங்கையிலுள்ள 9 மாநிலங்களில், 7 மாநிலங்கள் சிங்கள மக்கள் பெரும்பான்மையாக இருக்கும் பிரதேசத்திலும், 2 மாநிலங்கள் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் பிரதேசத்திலும் இருக்கின்றன. மாநிலங்களுக்கு இந்த 2 அதிகாரங்களை வழங்குவதில் ஜனாதிபதி ரணில், திறந்த மனதுடன் இருக்கிறார். இதுகுறித்து நடத்தப்பட்ட பேச்சுவார்த்தைகளின் போது, முதலில் நிலம் குறித்த அதிகாரத்தையும், பிறகு காவல்துறை அதிகாரத்தையும் தருகிறோம் என்கிறார் ஜனாதிபதி. ஆனால், தமிழ் அரசியல் தலைவர்கள், இரண்டையும் உடனே தரவேண்டும் என்கிறார்கள். சில மாநிலங்கள் இரண்டையும் வேண்டும் என்றும், சில மாநிலங்கள் இரண்டையும் வேண்டாம் என்றும் வலியுறுத்துகின்றன. இந்த நிலையில், அனைத்துத் தரப்பினரிடமும் ஆலோசித்து முடிவெடுக்கும் முயற்சியில் இருக்கிறார் ஜனாதிபதி. அதனால் இப்பிரச்சனையில் தீர்வுக்கு அருகில் இருக்கிறோம்.

இரண்டு அதிகாரங்களையும் பெறுவதில் தமிழ் அரசியல் தலைவர்களிடமுள்ள முரண்பாடுகளை சரிசெய்ய நீங்கள் முயற்சிக்கலாமே?

வடகிழக்கை பிரதிநிதித்துவப்படுத்த 15-க்கும் மேற்பட்ட தமிழ் பாராளுமன்ற உறுப்பினர்கள் இருக்கிறார்கள். உதாரணத்திற்கு 30 பேர் கொண்ட அமைச்சரவையில், 3 அமைச்சர் பதவியை வட கிழக்கிலுள்ள தமிழர் கள் பெற முடியும். அந்த வகையில், காவல்துறை மற்றும் நிலம் தொடர் பான அமைச்சகத்தை தமிழ் எம்.பி.க்கள் பெறமுடியும். அப்படி பெற்றிருந்தால், வடகிழக்கு மாநிலம் மட்டுமல்லாமல் முழு இலங்கைக்கும் அவர்கள் காவல்துறை, நிலம் தொடர்பான முக் கிய முடிவுகளை எடுக்க முடியும். ஒருவேளை அமைச்சுப்பதவியை ஏற்க விருப்பமில்லையெனில், வடகிழக்கு மாநிலம் முழுமைக்கும் காவல்துறை, நிலம் தொடர்பான பதவிகள் அனைத்திலும் தமிழர்களை நியமித்தால் இப்பிரச்சனைக்கு தீர்வு காண முடியும். இதனை நான் அவர்களிடம் வலியுறுத்தியிருக்கிறேன். மகிந்த ராஜபக்சே அதிபராக இருந்தபோது, வடகிழக்கில் உள்ள தமிழ்த்தலைவர்களுக்கு அவர் வேண்டப்படாதவராக இருந்தார். அப்போது எதிர்க்கட்சியாக இருந்த ரணிலுக்கு ஆதரவாக வடகிழக்கு எம்.பி.க்கள் இருந்தனர். தமிழ்த் தலைவர்களுக்கு நம்பிக்கைக்குரிய ரணில்தான் இப்போது ஜனாதிபதியாக இருக்கிறார். அவரிடம் கலந்தாலோசித்து இப்பிரச்சனைக்கு தீர்வு கண்டிருக்கலாம். ஆனால், ஏன் தாமதிக்கிறார்கள் என எனக்கு தெரியவில்லை.

nkn030124
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe