டந்த ஏப்ரல் 12-ஆம் தேதி, தென்னிந்தியாவின் இலங்கை துணை உயர் ஆணையராக வெங்கடேஷ் வரன் என்பவர், ராஜபக்ஷேவால் நேரடியாக நியமிக்கப்பட்டார். இவர் பொறுப்பேற்று கொண்ட நாள் முதலாக, பல்வேறு நாடுகளுக்குச் சென்று அந்நாட்டில் உள்ள முக்கிய வளர்ச்சிப் பணிகளை நேரில் பார்வையிட்டு வருகிறார். அதன்படி இந்தியாவிற்கு வந்தவர், முதலில் கேரள மாநிலத்தில், முதல்வர் உள்ளிட்ட முக்கிய தலைவர்களை நேரில் சந்தித்துள்ளார். அதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டுக்கு வருகைதந்த வெங்கடேஷ்வரன், தலைமை செயலாளர் இறையன்பு வைச் சந்தித்தார். அதன்பிறகு காரைக்கால் துறைமுகத்துக்குச் சென்று பார்வையிட்டுள்ளார்.

ll

வெங்கடேஷ்வரன், கடந்த ஜூன் மாதம் 25-ம் தேதி, திருச்சி காட்டூரில் உள்ள கோத்தாரி சுகர் மற்றும் கெமிக்கல்ஸ் நிறுவனத்திற்கு வருகை தந்துள்ளார். அதைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் அவரது சுற்றுப்பயணத்தை முடித்துவிட்டு ஆந்திராவுக்குச் சென்றவர், அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியை நேரில் சந்தித்துப் பேசியிருக்கிறார். இப்படி தொடர்ந்து பல மாநிலங்களின் முதல்வர்களையும் நேரில் சந்தித்து அந்தந்த மாநிலங்களின் வளர்ச்சிப் பணிகளைப் பார்வையிட்டு, அவை குறித்த விவரங்களைக் கேட்டறிந்து வருகிறார்.

தற்போது இலங்கை துணை உயர் ஆணையரின் வருகை ஒரு சர்ச்சையாகப் பார்க்கப்படுகிறது. இவரது வருகை குறித்து பல்வேறு கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர். முக்கியமாக, 2009-ம் ஆண்டில் இலங்கை இராணுவத்தின் மூலம் அப்பாவித் தமிழர்களையும், விடுதலைப்புலிகளையும் கொன்று குவித்த சவேந்திரசில்வா மற்றும் கமல்குணரன் ஆகியோரின் வெற்றிக் கொண்டாட்டத்திற்கு அனைத்து ஏற்பாடுகளையும் செய்து கொடுத்த தமிழகத் துரோகி இவரென்று அடையாளப்படுத்தப்படுகிறார்.

Advertisment

ll

அடுத்ததாக, 2009-ம் ஆண்டில் தமிழர்களுக்கு எதிரான போரில் இலங்கை ஈடுபட்டுக்கொண்டி ருந்தபோது விடுதலைப் புலிகளுக்கு எங்கிருந்து உணவுகள், உணவுப் பொருட்கள் வருகின்றன, அவர் களுடைய போக்குவரத்திற்கான பெட்ரோல், டீசல் எங்கிருந்து வரு கிறது என்பது தொடர்பான ரகசியங் களை இலங்கை ராணுவத்திற்கு அறிவித்து சன்மானங்களை பெற்றுக்கொண்டவர் இவரென்றும் கூறப்படுகிறது. தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டிருப்பதால், தமிழகத்தின் செயல்பாடுகள், திட்டங்கள் குறித்து ரகசியமாக அறிந்துகொண்டு, அவற்றை இலங்கை அரசுக்குத் தெரிவிப்பதற்காக ராஜபக்சே அனுப்பி வைத்திருக்கிறார் என்றும் இன்னொரு குற்றச் சாட்டு கூறப்படுகிறது. இவ்வாறு அவர்மீது பல்வேறு சந்தேகங்களும், குற்றச்சாட்டுகளும் எழுப்பப்படுகின்றன.

மேலும் அவருடைய இந்த பதவியும்கூட ஏதோவொரு திட்டத்தின் காரணமாகத்தான் உருவாக்கப்பட்டதாகப் பார்க்கப்படுகிறது. இதற்குமுன் தென்னிந்தியாவில் இலங்கை துணை உயர் ஆணையர் பதவிக்கு இலங்கை வெளிநாட்டுச் சேவைத் துறை மூலமாக மட்டுமே தேர்வு செய்யப்பட்டார்கள். கடந்த காலங்களில் தேர்வு செய்யப்பட்ட அதிகாரிகள், தமிழர்களாக இருந்தபோதிலும் ராஜபக்சே அரசுக்கு அரசியலமைப்புச் சட்டத்தை மீறி ஒத்துழைப்பு வழங்கவில்லை. ஆனால் தற்போது, அரசிய லமைப்புச் சட்டத்தை மீறி தென்னிந்தியாவிற் கான இலங்கை துணை உயர் ஆணையராக வெங்கடேஷ்வரன் நியமிக்கப்பட்டிருப்பது, உளவாளியாக இந்தியாவிற்குள் நுழைந்து, குறிப்பாக தென்னிந்தியாவிலுள்ள மாநிலங் களின் செயல்பாடுகள், திட்டங்களை வேவு பார்க்கவே திட்டமிட்டு இவரை நியமித் திருப்பதாகக் குற்றச்சாட்டு முன்வைக்கப் பட்டுள்ளது.

Advertisment

இத்தனை குற்றசாட்டுகள் முன்வைக்கப் பட்டுள்ள நிலையில், தற்போது இலங்கையில் சீனா துறைமுகத்தைக் கட்டமைத்து வருகிறது. இலங்கையை தற்போது தன்வசப்படுத்தி இந்தியாவிற்கு எதிரான பல சதித் திட்டங்கள் தீட்டப்பட்டுள்ள நிலையில், தமிழகத்தில் தூத்துக்குடி துறைமுகம், காரைக்கால் துறைமுகம் சீனாவிற்கு பெரும் அச்சுறுத்தலாக இருந்துவரும் நிலையில், இந்த இரண்டு துறைமுகங்களையும் பலவீனப்படுத்தும் முயற்சியில் சீனா ஈடுபட்டுள்ளது என்பதை வெங்கடேஷ்வரனின் வருகை உறுதிப்படுத்தி உள்ளதாக கூறப்படுகிறது.

ll

அதேபோல் திருச்சி காட்டூரில் உள்ள கோத்தாரி சுகர் மற்றும் கெமிக்கல்ஸ் நிறு வனத்திற்கு வருகை தந்து பார்வையிட்டுள்ளார். திருச்சிக்கு அவர் வருகை தந்துள்ளதும் பெரும் சர்ச்சையாக மாறி உள்ளது. கோத்தாரி நிறுவனம் இயற்கை உரங்கள் தயாரிக்கும் பணியினையும் செய்துவருவதால், அவற்றின் செயல்பாடுகள் குறித்து அறிந்துகொள்ள வருகை தந்ததாக வெங்கடேஷ்வரன் தன்னுடைய அதிகாரப் பூர்வமான முகநூல் பக்கத்தில் வெளி யிட்டுள்ளார். எனவே இந்த நிறுவனத்தை வந்து பார்வையிட காரணம், அதிலும் திருச்சியில் உள்ள நிறுவனத்திற்கும் இலங்கைக்கும் என்ன தொடர்பு உள்ளது என்ற கேள்வி எழுந்துள்ளது.

அவருடைய வருகை குறித்த தகவல்களை இலங்கைத் தூதரோடு இருந்த கோத்தாரி நிறுவனத்தின் பொதுமேலாளர் ராம சந்திரனிடம் கேட்கையில், "கடந்த ஜூன் மாதம் எங்களுடைய நிறுவனத்திற்கு வெங்க டேஷ்வரன் வருகை தந்திருந்தார். எங்களுக்கும் அவருக்கும் எந்தவிதத் தொடர்பும் இல்லை. எங்கள் நிறுவனத்துடன் தொடர்பில் இருக்கும் ஒருவரால் அவர் அழைத்து வரப்பட்டார். அவர் எங்களுடைய நிறுவனத்துடன் நீண்டநாட்களாக புரிந்துணர்வு செயல்பாட்டால் அவர் மூலம் வெங்கடேஷ்வரன் எங்களுடைய நிறுவனத்திற்கு வந்தார். நேரடியாக எங்கள் யாருக்கும் அவர் பழக்கமில்லை. மேலும் 15 நிமிடங்கள் மட்டுமே எங்களோடு அவர் கலந்துரையாடினார். நாங்கள் உற்பத்தி செய்யும் இயற்கை உரங்கள் குறித்து கேட்டறிந்தார்'' என்று போனை துண்டித்தார்.

என்னதான் இலங்கையை நட்புநாடாக இந்திய ஒன்றிய அரசு பார்த்தாலும், தமிழ் நாட்டைப் பொறுத்தவரை பார்வை மாறுபடும். அதிலும், சீனாவின் ஆதிக்கம் அங்கே மிகுந்துள்ள நிலையில்... இதனை தமிழ்நாடு அரசு அவ்வளவு எளிதாக எடுத்துக்கொள்ளக்கூடாது.