ராகுல் சைலண்ட்! தி.மு.க. அப்செட்! -கூட்டணியை கலைக்க எடப்பாடி -பா.ஜ.க. ப்ளான்!

ff

ட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தி.மு.க. கூட்டணியில் ஒரு பெரிய கலகத்தை விளைவிப்பதற்கு பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் இணைந்து முயற்சிகளை எடுத்துவருகின்றன. இதனால் தி.மு.க. கூட்டணிக் குள் பெரிய சலசலப்பு உருவாகிவருகிறது. காங்கிரஸின் வியூக அமைப்பாளராக இருப்பவர் சுனில். இவர், ராகுல்காந்திக்கு இந்தியா முழுமைக்குமான வியூகங்களை வகுத்துத் தருகிறார்.

congress

இவர் சமீபத்தில் ஒரு ரிப்போர்ட்டை ராகுல் காந்திக்கு அனுப்பினார். அதில், "காங்கிரஸ் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியிலிருப்பது அந்த கட்சியின் நலனுக்கு நல்லதல்ல. தி.மு.க. கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளி யேறி, அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தால், 1967க்குப் பிறகு காங்கிரஸ் அமைச்சர்கள் இல்லாத தமிழகத்தில், காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சர்கள் வருவார் கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வரும். அதற்கு அடுத்த தேர்தலில் காங்கிரஸ் முதல்வர் வருவார்' என ஒரு பரபர ரிப்போர்ட்டை கொடுத்திருக்கிறார்.

இது, "ஸ்டாலினுடன் சைக்கிள் ஓட்டத் தயார்!' என ராகுல்காந்திக்கு கொடுத்த ட்வீட்டுக்கு பதிலாகக் கொடுக்கப்பட்

ட்டமன்றத் தேர்தலுக்கு முன்பாக தி.மு.க. கூட்டணியில் ஒரு பெரிய கலகத்தை விளைவிப்பதற்கு பா.ஜ.க.வும், அ.தி.மு.க.வும் இணைந்து முயற்சிகளை எடுத்துவருகின்றன. இதனால் தி.மு.க. கூட்டணிக் குள் பெரிய சலசலப்பு உருவாகிவருகிறது. காங்கிரஸின் வியூக அமைப்பாளராக இருப்பவர் சுனில். இவர், ராகுல்காந்திக்கு இந்தியா முழுமைக்குமான வியூகங்களை வகுத்துத் தருகிறார்.

congress

இவர் சமீபத்தில் ஒரு ரிப்போர்ட்டை ராகுல் காந்திக்கு அனுப்பினார். அதில், "காங்கிரஸ் தமிழகத்தில் தி.மு.க. கூட்டணியிலிருப்பது அந்த கட்சியின் நலனுக்கு நல்லதல்ல. தி.மு.க. கூட்டணியிலிருந்து காங்கிரஸ் வெளி யேறி, அ.தி.மு.க.வுடன் கூட்டணி அமைத்தால், 1967க்குப் பிறகு காங்கிரஸ் அமைச்சர்கள் இல்லாத தமிழகத்தில், காங்கிரஸ் கட்சிக்கு அமைச்சர்கள் வருவார் கள். காங்கிரஸ் ஆட்சிக்கு வரும். அதற்கு அடுத்த தேர்தலில் காங்கிரஸ் முதல்வர் வருவார்' என ஒரு பரபர ரிப்போர்ட்டை கொடுத்திருக்கிறார்.

இது, "ஸ்டாலினுடன் சைக்கிள் ஓட்டத் தயார்!' என ராகுல்காந்திக்கு கொடுத்த ட்வீட்டுக்கு பதிலாகக் கொடுக்கப்பட்ட ரிப்போர்ட். இதில், காங்கிரஸ் எத்தனை தொகுதிகளில் நிற்கலாம், அ.தி.மு.க.வுடன் சேர்ந்தால் எத்தனை தொகுதிகள் ஜெயிக்கலாம், காங்கிரஸுக்கு ஆட்சியில் பங்கு தர எடப்பாடி தயார் எனப் பல அம்சங்கள் வியூகங்களாகக் கொடுக்கப்பட்டிருந்தன. இந்த ரிப்போர்ட்டை பற்றி ராகுல் காந்தி எதுவும் பேசவில்லை. இது தமிழக காங்கிரஸார் மத்தியில் பெரும் விவாதத்தை கிளப்பியது. இங்கிருக்கும் தமிழகக் காங்கிரஸ் தலைவர்கள், தி.மு.க. கூட்டணி எவ்வளவு முக்கியம், அ.தி.மு.க., பா.ஜ.க. விஷயத்தில் நம்பகத்தன்மையுள்ள கட்சி அல்ல, அ.தி.மு.க. பா.ஜ.க.வோடு எந்த நேரத்திலும் இணையக் கூடியது' எனத் தெளிவாக, சுனிலுக்குப் போட்டியாக ஒரு ரிப்போர்ட்டை ராகுலுக்கு அனுப்பி வைத்திருக்கிறார்கள்.

சுனிலுக்கான ரிப்போர்ட்டை தமிழகத்திலிருந்து தயாரித்துக் கொடுத்தவர் ஈஸ்வரமூர்த்தி என்கிற ஓய்வுபெற்ற காவல்துறை அதிகாரி. ஈஸ்வரமூர்த்தியும், எடப்பாடி பழனிச் சாமியும் மிகவும் நெருக்கமானவர்கள். எடப்பாடி அதிகாரத் தில் இருக்கும்போது அவரது ஆட்சியைப் பாதுகாக்க, ஈஸ்வர மூர்த்தி, சத்தியமூர்த்தி ஆகிய போலீஸ் அதிகாரிகளும், கேரளாவின் முன்னாள் கவர்னரும், அமித்ஷாவுடன் நெருக்கமாகப் பேசி, எடப்பாடி ஆட்சியைக் காப்பாற்றினார்கள்.

cc

ஓய்வுபெற்ற பிறகும் ஈஸ்வரமூர்த்தி, எடப்பாடிக்கான அரசியல் வியூகங்களை வகுத்துவருகிறார். பா.ஜ.க.விற்கு, அ.தி.மு.க.வைப் பொறுத்தவரை 2 வியூகங்கள் இருக்கின்றன. ஒன்று, அ.தி.மு.க. - பா.ஜ.க கூட்டணி அமைப்பது. இல்லை யென்றால், அ.தி.மு.க. - பாஜ.க. தனித்தனியாகப் போட்டியிடுவது. பா.ஜ.க.வை எதிர்க்கும் அ.தி.மு.க. கூட்டணிக்கு, தி.மு.க. கூட்டணிக் கட்சிகளைக் கொண்டுவருவது. அதன்மூலம் தி.மு.க. கூட்டணியைக் கலைத்து, தி.மு.க.வின் பலத்தைக் குறைப்பது. அ.தி.மு.க.வுடனும், தி.மு.க. கூட் டணியிலுள்ள கட்சிகளோடும் ஒரு பலமான கூட்டணியை உருவாக்கிவிட்டால், 2026 தேர்த லில் தி.மு.க.வை தோற்கடித்துவிட முடியும். இந்த 2 வியூகங்களையும் ஈஸ்வரமூர்த்தி செயல்படுத்தி வருகிறார். அதற்காகத்தான் சுனிலை வைத்து காங்கிரஸை தி.மு.க. கூட்டணியிலிருந்து கழற்றிவிட வேலை பார்த்தார். இதே வேலையை கடந்த பாராளுமன்றத் தேர்தலின்போதும் சுனில் செய்தார்.

ராகுல்காந்தி, கடந்த முறையும் சுனிலின் தி.மு.க. எதிர்ப்புக் கருத்துக் களை ஏற்கவில்லை. இந்த முறையும் சுனிலின் கருத்தை ராகுல் காந்தி ஏற்கவில்லை. இதனால் அதிருப்தி யடைந்த சுனில், இந்தியா வில் அனைத்து மாநிலங் களிலும் நான் சொல்லும் கருத்தை ஏற்கும் ராகுல், தமிழகத்தில் மட்டும் நான் சொல்வதை கேட்க மாட்டேன் என்கிறார் எனப் புலம்பி வருகிறார் என்கிறது காங்கிரஸ் வட்டாரங்கள்.

cc

ராகுலிடம் தோற்ற இந்த வியூகத்தை அடுத்த கட்டமாக விடுதலை சிறுத்தைகள் கட்சி வழியாகத் திணிக்கத் தொடங்கியது ஈஸ்வரமூர்த்தி டீம், வி.சி.க.வின் நிர்வாகியான ஆதவ் அர்ஜுனா, "திருமாவை முதல்வராக்கவேண்டும். வி.சி.க.வுக்கு ஆட்சியில் பங்கு கொடுக்க வண்டும். உதயநிதி துணை முதல்வராகும்போது திருமாவிற்கு அதற்கான தகுதி இல்லையா?'' என பேச ஆரம்பித்தார். வி.சி.க.வின் மது ஒழிப்பு மாநாட்டையொட்டி இந்த பேச்சுக்கள் தி.மு.க. கூட்டணியில் சலசலப்பை ஏற்படுத்தியது. ராகுலை வைத்து எடுக்கப்பட்ட கூட்டணி சலசலப்பு முயற்சிகள் சைலண்ட்டாக முடிந்துவிட்டன. ஆனால் ஆதவ் அர்ஜுனா, சமூக வலைத்தளங்களி லும், தொலைக்காட்சிகளிலும் தானே முன்வந்து, "வி.சி.க. தயவில்லாமல் வட மாவட்டங்களில் தி.மு.க.வால் ஜெயிக்கவே முடியாது' என்று தி.மு.க.வை விமர்சித்துப் பேசியது பரபரப்பை ஏற்படுத்தியது. வி.சி.க. இனி தி.மு.க. கூட்டணியில் நீடிக்க முடியாது என்ற தோற்றத்தையும் ஏற்படுத்தியது.

இதற்கு பதிலளித்த திருமா, "ஆதவ் அர்ஜுனாவின் டைரக்ஷனில் திருமா நடிப்பதாக சிலர் சொல்கிறார்கள். திருமாவை டைரக்ட் செய்யுமளவுக்கு யாரும் பிறக்க வில்லை'' என பதி லளித்தார். ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்கு தி.மு.க. வட்டாரமும் சமூக வலைத்தளங் களில் சூடாக பதிலளித்தது. இப்படி, தி.மு.க. -வி.சி.க. இடையே ஆதவ் அர்ஜுனாவின் மூலம் ஒரு மோதல் உருவாகியுள்ளது. திருமாவையும், வி.சி.க.வையும் முதன்மைப்படுத்திப் பேசும் ஆதவ் அர்ஜுனாவின் பேச்சுக்களின் பின்னணியில் அ.தி.மு.க.வும், பா.ஜ.க.வும் இருக்கின்றன என தி.மு.க.வினர் சொல்கிறார்கள். ஒட்டுமொத்தமாக, தி.மு.க. கூட்டணியில் ஒரு சலசலப்பை ஏற்படுத்து வதில் அ.தி.மு.க. -பா.ஜ.க. வெற்றி பெற்றுள்ளது என்கிறார்கள் சமூக ஆர்வலர்கள்.

nkn250924
இதையும் படியுங்கள்
Subscribe