Advertisment

ராகுல் - கனிமொழி சந்திப்பு! உறுதியானதா  கூட்டணி?

raghul-kani

சைக்க முடியாதது என சொல்லப்பட்ட தி.மு.க. கூட்டணிக்குள் அதன் தோழமைக் கட்சியான காங்கிரஸ் செய்துவரும் களேபரங்களால், தி.மு.க. கூட்டணி உடையுமோ? என்கிற தோற்றத்தை எதிர்க்கட்சிகள் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், ராகுல்காந்தியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார் தி.மு.க.வின் துணைப் பொதுச் செயலாளர்  கனிமொழி எம்.பி. 

Advertisment

"எங்களுடன் இணையும் தோழமைக் கட்சிகளுக்கு நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதிகாரத்தில் பங்கு தருவோம்' என த.வெ.க. தலைவர் விஜய் எப்போது சொன்னாரோ, அப்போதிலிருந்தே மனக்கோட்டை கட்டத் தொடங்கிவிட்டது காங்கிரஸ்.  அக்கட்சியின் தமிழக தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், அகில இந்திய தலைவர்களைச் சந்தித்து, "தி.மு.க.விடம் கூடுதல் சீட்டும், ஆட்சியில் பங்கும் கேளுங்கள். இதற்கு ஒப்புக்கொள்ள தி.மு.க. மறுத்தால் கூட்டணியை மறுபரிசீலனை செய்யுங்கள். காங்கிரசை வரவேற்க நடிகர் விஜய் தயாராக இருக்கிறார், அவருடன் கூட்டணி வைத்தால் அதிகாரம் காங்கிரசுக்கு கிடைக்கும். கட்சியின் வளர்ச்சிக்கு அது பெரிதும் உதவும். எத்தனை காலத்துக்கு கூட்டணி தர்மத்துக்காக நமது சுயத்தை இழப்பது? நாமும் வளர வேண்டாமா?' என்று வலியுறுத்தினர். 

Advertisment

இந்த வலியுறுத்தல்கள் ராகுல்காந்தியிடம் சொல்லப்பட்டன. அவரும் ஆட்சியில் பங்கு என்பதில் உறுதியாக இருந்தார். இதனை தி.மு.க. தலைவர் ஸ்டாலினிடம் வலியுறுத்துவதற்காகவும், தி.மு.க.விடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவும், காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர் தலைமையில் ஐவர் குழுவை அமைத்தார் ராகுல்காந்தி. 

அந்த ஐவர் குழுவினர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஸ்டாலினை சந்தித்து காங்கிரசின் எதிர்பார்ப்பு களை விவரித்தனர். அதனை கேட்டுக்கொண்ட ஸ்டாலின், "தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் இருக்கின்றன. அதற்குள் பேச்சுவார்த்தைக் குழுவை அமைத்து பேச வந்திருக்கிறீர்களே? இப்போது என்ன அவசரம்? எங்கள் கட்சியில் பேச்சுவார்த்தை

சைக்க முடியாதது என சொல்லப்பட்ட தி.மு.க. கூட்டணிக்குள் அதன் தோழமைக் கட்சியான காங்கிரஸ் செய்துவரும் களேபரங்களால், தி.மு.க. கூட்டணி உடையுமோ? என்கிற தோற்றத்தை எதிர்க்கட்சிகள் உருவாக்கிக் கொண்டிருக்கின்றன. இந்த நிலையில், ராகுல்காந்தியை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியிருக்கிறார் தி.மு.க.வின் துணைப் பொதுச் செயலாளர்  கனிமொழி எம்.பி. 

Advertisment

"எங்களுடன் இணையும் தோழமைக் கட்சிகளுக்கு நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அதிகாரத்தில் பங்கு தருவோம்' என த.வெ.க. தலைவர் விஜய் எப்போது சொன்னாரோ, அப்போதிலிருந்தே மனக்கோட்டை கட்டத் தொடங்கிவிட்டது காங்கிரஸ்.  அக்கட்சியின் தமிழக தலைவர்கள் மற்றும் நிர்வாகிகள், அகில இந்திய தலைவர்களைச் சந்தித்து, "தி.மு.க.விடம் கூடுதல் சீட்டும், ஆட்சியில் பங்கும் கேளுங்கள். இதற்கு ஒப்புக்கொள்ள தி.மு.க. மறுத்தால் கூட்டணியை மறுபரிசீலனை செய்யுங்கள். காங்கிரசை வரவேற்க நடிகர் விஜய் தயாராக இருக்கிறார், அவருடன் கூட்டணி வைத்தால் அதிகாரம் காங்கிரசுக்கு கிடைக்கும். கட்சியின் வளர்ச்சிக்கு அது பெரிதும் உதவும். எத்தனை காலத்துக்கு கூட்டணி தர்மத்துக்காக நமது சுயத்தை இழப்பது? நாமும் வளர வேண்டாமா?' என்று வலியுறுத்தினர். 

Advertisment

இந்த வலியுறுத்தல்கள் ராகுல்காந்தியிடம் சொல்லப்பட்டன. அவரும் ஆட்சியில் பங்கு என்பதில் உறுதியாக இருந்தார். இதனை தி.மு.க. தலைவர் ஸ்டாலினிடம் வலியுறுத்துவதற்காகவும், தி.மு.க.விடம் பேச்சுவார்த்தை நடத்துவதற்காகவும், காங்கிரஸ் கட்சியின் மேலிட பொறுப்பாளர் கிரீஷ் சோடங்கர் தலைமையில் ஐவர் குழுவை அமைத்தார் ராகுல்காந்தி. 

அந்த ஐவர் குழுவினர் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு ஸ்டாலினை சந்தித்து காங்கிரசின் எதிர்பார்ப்பு களை விவரித்தனர். அதனை கேட்டுக்கொண்ட ஸ்டாலின், "தேர்தலுக்கு இன்னும் சில மாதங்கள் இருக்கின்றன. அதற்குள் பேச்சுவார்த்தைக் குழுவை அமைத்து பேச வந்திருக்கிறீர்களே? இப்போது என்ன அவசரம்? எங்கள் கட்சியில் பேச்சுவார்த்தைக் குழு அமைக்கப்பட்டதும் சொல்கிறோம், அப்போது விவாதிக்க லாம்'' என்று இயல்பாகச் சொல்லியனுப்பினார். 

ஆனால், காங்கிரஸ் கட்சி அமைதியாக இருக்க வில்லை. தங்களின் எதிர்பார்ப்புகளை பொது வெளியில் பேசத் தொடங்கினர் காங்கிரஸார். இதனால் சர்ச்சைகள் வெடித்தன. இதனை ஸ்டாலின் உட்பட தி.மு.க. தலைவர்கள் யாரும் ரசிக்கவில்லை. இதனை ராகுலுக்கும் தெரியப்படுத்தியது தி.மு.க. அதன்பிறகும், கூட்டணிக்குள் சிக்கலை உருவாக்கும் வகையில் பேசும் தமிழக காங்கிரஸ் நிர்வாகிகளை கண்டிக் காததும்,  கூட்டணிக்குள் இருந்து கொண்டே நடிகர் விஜய்யிடம் காங்கிரஸ் தலைமையின் அனுமதியுடன் பேச்சு வார்த்தை நடத்துவதும் தி.மு.க.வை எரிச்சல் படுத்தியது. இதற்கு ஒரு முற்றுப்புள்ளி வைக்க, அண்மையில் ஊட்டிக்கு வந்த ராகுல்காந்தியிடம் பேச ஆ.ராசாவை அனுப்பிவைத்தார் ஸ்டாலின். ராகுலை அவர் சந்தித்தபோது, "இதனை கிரீஷ் சோடங்கரிடம் விவாதியுங்கள்; நான் அவசரமாகப் புறப்பட வேண்டிய திருக்கிறது'' எனச்சொல்லி, ஊட்டியிலிருந்து கிளம்பினார் ராகுல். 

இதனையடுத்து கிரீஷ் சோடங்கரை சந்தித்து விவாதித்த ஆ.ராசா, தமிழகத்தில் கூட்டணி ஆட்சி அமைவதில் உள்ள சிக்கல்களை விரிவாக எடுத்துச் சொல்லி விட்டு, "ஆட்சியில் பங்கு; அதிகாரத்தில் பங்கு என்பதில் தலைவருக்கு (ஸ்டாலின்) உடன்பாடில்லை. அதன்பிறகு உங்கள் விருப்பம்'' என்று கட் அண்ட் ரைட்டாகத் தெரிவித்தார். 

உங்கள் விருப்பம் என தி.முக. தலைமை சொன்னதைத் தொடர்ந்து,  தமிழக காங்கிரஸ் தலைவர்கள், எம்.பி.க்கள், எம்.எல்.ஏ.க்கள், நிர்வாகிகள் என 41 பேர் டெல்லிக்கு அவசரமாக அழைக்கப்பட்ட னர். அந்த அவசர ஆலோசனைக் கூட் டத்தில் முன்னாள் தலைவர்கள் கிருஷ்ண சாமி, கே.எஸ். அழகிரி ஆகிய இருவரை தவிர மற்ற 39 பேரும் கலந்துகொண்டனர். அவர்களிடம் மல்லிக்கார்ஜுனகார்கே, ராகுல்காந்தி, கே.சி.வேணுகோபால் ஆகியோர் ஒன் டூ ஒன் சந்தித்தனர். 

அப்போது, "அதிக சீட்டும், ஆட்சியில் பங்கும் தரவில்லையெனில் தி.மு.க. கூட்டணியிலிருந்து வெளியேறி, விஜய்யின் த.வெ.க.வுடன் கூட்டணி வைக்கலாம். கட்சியின் வளர்ச்சிக்காக இந்த முடிவை எடுக்கலாம். மற்றபடி தலைமை என்ன முடிவு எடுத்தாலும் அதற்கு கட்டுப்படுகிறோம்' என்று தெரிவித்தனர். இதில், தி.மு.க.வுடன் கூட்டணி வேண்டாம் என கார்கே காலில் விழுந்து கெஞ்சியிருக்கிறார் சட்டமன்ற காங்கிரஸ் தலைவர் ராஜேஷ்குமார்.  கலந்துகொண்ட 39 பேரில் பெரும்பாலானோரின் கருத்து இதே கோணத்தில் இருந்தது. ப.சிதம்பரம், செல்வப்பெருந்தகை, தங்கபாலு, திருநாவுக்கரசு உள்ளிட்ட தலைவர்கள் சிலரின் கருத்துக்கள் மட்டும் தி.மு.க.வுக்கு ஆதரவாக இருந்தது. 

அவசர ஆலோசனைக் கூட்டத்தை முடித்த மறுநாள் காங்கிரஸ் கட்சியின் சீனியர்களிடமும், ராகுல் வைத்திருக்கும் இண்டலெக்சுவல்ஸ் 10 பேரில் 6 பேரிடமும் ஆலோசித்தார் ராகுல்காந்தி. அதில் விவாதிக்கப்பட்ட விசயங்கள் அனைத்தும் தி.மு.க.வின் நிலைப்பாட்டிற்கு எதிராகவே இருந்தன. 

இந்த மீட்டிங் குறித்து டெல்லி சோர்ஸ் களிடம் விசாரித்தபோது, "தி.மு.க. கூட்டணியை விரும்பும் மல்லிகார்ஜுன கார்கே கூட, தி.மு.க.வை இந்த மீட்டிங்கில் கடுமையாக விமர்சித்திருக்கிறார். குறிப்பாக, தனது கட்சிக்குப் பெரும்பான்மை பலம் கிடைத்தும் பா.ஜ.க.வுக்கும், பவன் கல்யாணுக்கும் ஆட்சியில் பங்கு கொடுத்திருக்கிறார் ஆந்திர சி.எம். சந்திரபாபு. அந்த எண்ணம் ஏன் தி.மு.க.வுக்கு இல்லை? தி.மு.க.வுடன் காங்கிரஸ் இருப்பது கொள்கை கூட்டணி கிடையாது; தேர்தல் உடன்பாடு கூட்டணிதான். அப்படியிருக்கும்போது, கூட்டணியாக தேர்தலை சந்திக்கிறோம்; கூட்டணி ஆட்சியை கொடுத்தால் என்ன தப்பு? தி.மு.க. ஆட்சியில் நமக்கு பங்கில்லை. ஆனா, தி.மு.க. ஆட்சியில் நடக்கும் ஊழல்களுக்கு காங்கிரஸ் கட்சியும்தானே பொறுப்பேற்க வேண்டியதிருக் கிறது. தேர்தலில் தி.மு.க. தண்டிக்கப்பட்டால், அந்த தண்டனையை காங்கிரசுக்கும்தானே மக்கள் கொடுக்கின்றனர்'' என்றெல்லாம் கடுமையாகப் பேசியிருக்கிறார் கார்கே. 

இதற்கு ஒரு படிமேலே போய், கே.சி.வேணு கோபாலும், இண்டலெக்சுவல்ஸ்களும் தி.மு.க. ஆட்சியை வேறு ஒரு ரூட்டில் விமர்சித்துள்ளனர். அதாவது வருவாய் சம்மந்தப்பட்ட விசயத்தை சுட்டிக்காட்டி விமர்சித்திருக்கிறார்கள். மேலும், "தி.மு.க. கூட்டணியில் காங்கிரசுக்கு தற்போது 17 எம்.எல்.ஏ.க்கள் இருக்கிறார்கள். அதனால் என்ன பிரயோஜனம்? நமக்கு 1 எம்.எல்.ஏ. கிடைத்தாலும், 20 எம்.எல்.ஏ.க்கள் கிடைத்தாலும் அதிகாரம் இல்லாதபோது மதிப்பு ஒன்று தான். வேறு எந்த லாபமும் காங்கிரசுக்கு இல்லை. அதிகாரம் இல்லாத நிலையில் சட்ட மன்றத்தில் காங்கிரசுக்கு எம்.எல்.ஏ.க்கள் இருந்தால் என்ன ? இல்லாவிட்டால் என்ன? அதனால், இழப்பதற்கு நம்மிடம் ஒன்றுமில்லை. தற்போதைய தமிழக அரசியல் சூழல், காங்கிரஸுக்கு சாதகமாக இருக்கிறது. அதனை சரியான கோணத்தில் அணுகவேண்டும்' என பேசினர். 

இறுதியில், தி.மு.க.விடம் கூட்டணி ஆட்சிக்கு வலியுறுத்து வோம்; 41 சீட், அமைச்ச ரவையில் 6 இடங்கள்; 1 ராஜ்யசபா சீட்; உள்ளாட்சி தேர்தல்களில் 33 சதவீதம் காங்கிரசுக்கு ஒதுக்கீடு; வாரியம், அரசு வழக்கறிஞர் உள்ளிட்ட பல்வேறு அரசு பதவிகளில் காங்கிரசுக்கு இடம் வேண்டும். இது குறித்து அக்ரிமெண்ட் போடப்பட வேண்டும் என்கிற நம் நிலைப்பாட்டை தி.மு.க.வுக்கு தெரிவிக்கலாம். இதற்கு தி.மு.க. சம்மதித்தால், கூட்டணியை கண்டினியூ செய்ய லாம். இல்லையெனில் மாற்றி யோசிப்பதுதான் சரியானது என சொல்ல... ராகுல்காந்தி இதனை மறுத்துப் பேசவில்லை. மீட்டிங்கில் பேசப்பட்ட இந்த எதிர்பார்ப்புகளை மீண்டும் தி.மு.க.வுக்கு தெரிவித்துள்ளது காங்கிரஸ் தலைமை''”என்று விவரிக்கின்றனர். 

காங்கிரசின் இந்த நிலைப்பாடு தி.மு.க.வை அதிர்ச்சியடைய வைத்திருக்கிறது. இப்படிப்பட்ட சூழலில்தான், "தி.மு.க. தலைமையின் உத்தரவில் ராகுல்காந்தியை சந்தித்து விவாதித்திருக்கிறார் கனிமொழி' என்கிறார்கள் திமுகவினர். 

இதுகுறித்து காங்கிரஸ் தரப்பில் விசாரித்த போது, "எங்கள் கோரிக்கையில் சில மாற்றங்களை செய்து புதிய ஆஃபருடன் ராகுலிடம் விவாதித் துள்ளது தி.மு.க. அதாவது, கூட்டணி ஆட்சி, அமைச்சரவையில் பங்கு என்பதற்கு இப்போது வெளிப்படையாக உறுதி தரமுடியாது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு இதனை பரிசீலனை செய்கிறோம். அதேபோல, உள்ளாட்சி அமைப்பு களுக்காக இப்போதே அக்ரிமெண்டெல்லாம் போடமுடியாது. இவைகளுக்கு மாற்றாக, 41 சீட்; 1 ராஜ்யசபா சீட் என நீங்கள் கேட்பதில் ஒன்றுக்கு இரண்டாக ராஜ்யசபா சீட் தருகிறோம்; 2 ராஜ்ய சபா என்பது 12 எம்.எல்.ஏ.க்களுக்கு சமம். அதனால், 41 சீட்டில் 12 சீட்டுகளை கழித்துக்கொண்டால் 29 வருகிறது. அந்த வகையில், 29  தொகுதிகளும் 2 ராஜ்யசபா சீட்டும் தருகிறோம்; காங்கிரஸ் போட்டியிடும் தொகுதிகளுக்கான செலவுகளையும் நாங்கள் பார்த்துக்கொள்கிறோம் என புதிய ஆஃபரை தந்துள்ளது தி.மு.க. இதனைத்தான் ராகுல்காந்தியிடம் அவரது பாணியில் விவரித்த கனிமொழி, விஜய்யை மனதில் நிறுத்திக்கொண்டு தி.மு.க.விடம் நீங்கள் வலியுறுத்துகிறீர்கள். விஜய்க்கான பலம் என்னவென்றே தெரியாதபோது அவரை நம்புவது காங்கிரசுக்கு நன்மை சேர்க்காது எனவும் சொல்லியிருக்கிறார் கனிமொழி. அவர் பேசிய அனைத் தையும் உள்வாங்கிக்கொண்ட ராகுல் காந்தி, மீண்டும் பேசுவோம் என்பதை மட்டும் சொல்லியிருக்கிறார்''’என்கிறார்கள் கே.சி.வேணுகோபாலுக்கு நெருக்கமான தமிழக காங்கிரஸ் எம்.பி.க்கள்.  

இதற்கிடையே தி.மு.க. தரப்பில் விசாரித்தபோது, "காங்கிரஸ் போனால் போகட்டும் என சீனியர்கள் சொன்னதை ஏற்றுக்கொண்டிருந்த தலைவர் (ஸ்டாலின்), தற்போது காங்கிரசை விட்டுவிடக்கூடாது; தக்க வைத்துக்கொள்ள வேண்டும் என நினைக்கிறார். காரணம், தி.மு.க.வில் நடக்கும் உள்கட்சி சிக்கல்கள்தான். அதனை தீர்ப்பதற்கே நேரம் போதவில்லை. இந்த நிலையில், கூட்டணியிலும் சிக்கல் உருவாகி உடைந்து போனால் தி.மு.க.வுக்கு அது பெரிய பலவீனம். அதனால், தி.மு.க.வை விட்டு காங்கிரசும், காங்கிரசை விட்டு தி.மு.க.வும் விலகாது. பரஸ்பரம் இரு கட்சிகளுக்கும் தேவையிருக்கிறது. இதனை ராகுல்காந்தியிடம் தெளிவாக விவரித்திருக்கிறார் கனிமொழி'' என்கிறார்கள். 

nkn310126
Advertisment
இதையும் படியுங்கள்
Advertisment
Here are a few more articles:
Read the Next Article
Subscribe