(121) 1967 ஜனவரி 12
என் தந்தையும், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களும் சகோதரத்துவத்தோடு பழகிய நெருங்கிய நண்பர்கள் என்பதை ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.
"நல்லவன் வாழ்வான்' படத்தின் க்ளைமாக்ஸ் ஃபைட் அண்டர்வாட்டரில் எடுக்கப்பட்டிருக்கும். தண்ணீரில் நனைந்தால் அப்பாவுக்கு சுவாசப் பிரச்சினை வரும். அதனால் அந்த ஸ்டண்ட் காட்சியில் நடிப்பதைத் தவிர்த்தார் என் அப்பா. ஆனால்... அவருக்கு இருக்கும் சுவாசப் பிரச்சினை பற்றி அறியாததால்... ""நீங்க என்கூட ஃபைட் பண்ணினா நல்லா இருக்கும்ணே'' என புரட்சித்தலைவர் கேட்டுக்கொண்டதால், அப்பா நடித்தார். அதனால் அப்பாவுக்கு உடம்பு முடியாமல்போக... ஒருவாரம், தன்னுடைய ஷுட்டிங்கையெல்லாம் ரத்து செய்துவிட்டு, தினமும் காலையில் எங்கள் வீட்டுக்கு வந்து கட்டிலில் படுத்திருக்கும் என் அப்பாவின்முன் தரையில் அமர்ந்தபடி... தியானம் செய்வதுபோல அப்பாவையே பார்த்துக்கொண்டிருப்பார் புரட்சித்தலைவர். மாலையில் கிளம்புவார்.
இது... சிறுவர்களாக இருந்த எங்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது.
""யதார்த்தமா நடிக்கும் திறமையுள்ளவன் ராமச்சந்திரன்'' என என் அப்பா மற்றவர்களிடம் சொல்வதையும், பின்னாளில் நான் அப்பாவுக்கு காரோட்டியாக இருந்தபோது, என்னிடமும் சொல்வதைக் கேட்டிருக்கிறேன்.
என் அப்பாவைப் பற்றி மற்றவர்களிடம் பேசும்போது... ""ராதாண்ணன்'' என்றே குறிப்பிட்டுப் பேசுவார் புரட்சித்தலைவர் என்பதையும் பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்குப் பிறகு, பெரியார் மறைந்த அன்று... ராஜாஜி ஹாலில் என் அப்பாவும், புரட்சித்தலைவரும் தரையில் எதிரெதிரே
(121) 1967 ஜனவரி 12
என் தந்தையும், புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். அவர்களும் சகோதரத்துவத்தோடு பழகிய நெருங்கிய நண்பர்கள் என்பதை ஏற்கனவே சொல்லியிருக்கிறேன்.
"நல்லவன் வாழ்வான்' படத்தின் க்ளைமாக்ஸ் ஃபைட் அண்டர்வாட்டரில் எடுக்கப்பட்டிருக்கும். தண்ணீரில் நனைந்தால் அப்பாவுக்கு சுவாசப் பிரச்சினை வரும். அதனால் அந்த ஸ்டண்ட் காட்சியில் நடிப்பதைத் தவிர்த்தார் என் அப்பா. ஆனால்... அவருக்கு இருக்கும் சுவாசப் பிரச்சினை பற்றி அறியாததால்... ""நீங்க என்கூட ஃபைட் பண்ணினா நல்லா இருக்கும்ணே'' என புரட்சித்தலைவர் கேட்டுக்கொண்டதால், அப்பா நடித்தார். அதனால் அப்பாவுக்கு உடம்பு முடியாமல்போக... ஒருவாரம், தன்னுடைய ஷுட்டிங்கையெல்லாம் ரத்து செய்துவிட்டு, தினமும் காலையில் எங்கள் வீட்டுக்கு வந்து கட்டிலில் படுத்திருக்கும் என் அப்பாவின்முன் தரையில் அமர்ந்தபடி... தியானம் செய்வதுபோல அப்பாவையே பார்த்துக்கொண்டிருப்பார் புரட்சித்தலைவர். மாலையில் கிளம்புவார்.
இது... சிறுவர்களாக இருந்த எங்களுக்கு வியப்பை ஏற்படுத்தியது.
""யதார்த்தமா நடிக்கும் திறமையுள்ளவன் ராமச்சந்திரன்'' என என் அப்பா மற்றவர்களிடம் சொல்வதையும், பின்னாளில் நான் அப்பாவுக்கு காரோட்டியாக இருந்தபோது, என்னிடமும் சொல்வதைக் கேட்டிருக்கிறேன்.
என் அப்பாவைப் பற்றி மற்றவர்களிடம் பேசும்போது... ""ராதாண்ணன்'' என்றே குறிப்பிட்டுப் பேசுவார் புரட்சித்தலைவர் என்பதையும் பலர் சொல்லக் கேட்டிருக்கிறேன்.
துப்பாக்கிச்சூடு சம்பவத்திற்குப் பிறகு, பெரியார் மறைந்த அன்று... ராஜாஜி ஹாலில் என் அப்பாவும், புரட்சித்தலைவரும் தரையில் எதிரெதிரே அமர்ந்து பேசிக்கொண்டபோது... "ராதாண்ணன்' என்றே குறிப்பிட்டுப் பேசினார் புரட்சித்தலைவர். அதை நான் நேரில் பார்த்திருக்கிறேன்... கேட்டிருக்கிறேன்.
""எம்.ஜி.ஆர். ரொம்ப நல்ல மனுஷன். அவர்கிட்டப் போய் பிரச்சினை பண்ணீட்டீங்களே...'' என அம்மா, என் அப்பாவிடம் அவ்வப்போது சொல்லுவார்.
அந்தச் சம்பவம் நடந்த அன்று... எங்கள் வீட்டிலிருந்து என் அப்பா கிளம்பியிருந்தால் அது நடந்திருக்காது. அப்பாவை அடக்குவதற்கான அங்குசங்கள் இங்கு இருந்தன.
அன்று என் அப்பா அடையாறு நாராயணன் தோட்டம் எதிரே உள்ள ஸ்ரீநிவாசா அவென்யூவில் உள்ள கீதாஅம்மாளின் (ராதிகாவின் தாயார்) வீட்டிலிருந்து கிளம்பிப் போனார்.
ஏன்?
சகோதரத்துவமாக பழகிவந்த நடிகவேளுக்கும், புரட்சித்தலைவருக்கும் இடையே என்ன பிரச்சினை? ஏன் ஏற்பட்டது?
என் அப்பாவின் நண்பர் வாசு (சுசீலா வாசு) புரட்சித்தலைவரை வைத்து படம் தயாரிக்க விரும்பினார். படத்தயாரிப்பிற்காக 1966-ஆம் ஆண்டிலேயே ஒரு லட்ச ரூபாயை வாசுவுக்கு கொடுத்தார் என் அப்பா. புரட்சித்தலைவரின் ராமாவரம் தோட்ட வீட்டிற்கு எதிரேதான் எங்களுடைய தோட்டம் இருந்தது. அந்தத் தோட்டத்தை ஆலந்தூர் சேட்டுவிடம் அடமானம் வைத்து ஒருலட்ச ரூபாய் கொடுத்தார் என் அப்பா.
என் அப்பா கேட்டுக்கொண்டதால் உடனடியாக கால்ஷீட் கொடுத்தார் புரட்சித்தலைவர்.
"பெற்றால்தான் பிள்ளையா' என்ற பெயரில் உருவான அந்தத் திரைப்படம், என் அப்பாவின் நூறாவது படமாக அமைந்தது.
படம் தயாரித்து முடிந்தும்கூட வாசு பணத்தை திருப்பித் தரவில்லை. என் அப்பா கேட்டபோது, ஒரு கட்டத்தில்... ""உங்களுக்கு நான் தரவேண்டிய ஒரு லட்சரூபாயை எம்.ஜி.ஆர். கொடுத்திடுறதா சொல்லீட்டார்'' என வாசு சொல்லிவிட்டார்.
என் அப்பாவை சந்திக்க மூன்று, நான்கு முறை புரட்சித்தலைவர் அழைத்திருக்கிறார். அப்பாவும் கிளம்பிப் போயிருக்கிறார். ஆனால் புரட்சித்தலைவர் என் அப்பாவை சந்திக்கவில்லை. ஒருமுறை எனக்குத் தெரிந்து புரட்சித்தலைவரின் அழைப்பின்பேரில் அப்பா சத்யா ஸ்டுடியோவுக்கு போனார். ஆனால் சந்திக்கவில்லை. அப்பா மீது அவருக்கு ஏதேனும் கோபம் இருந்திருக்கலாம்.
என் அப்பா சுயமரியாதைக்காரராச்சே... அவருக்கு புரட்சித்தலைவர் மீது கோபம் இருந்திருக்கலாம்.
எங்கள் வீடிருக்கும் தேனாம்பேட்டை போயஸ் ஏரியா... அதாவது மவுண்ட் ரோட்டிலிருந்து உள்பகுதி டைரக்டர் பீம்சிங் அவர்களுக்குச் சொந்தமான தோட்டமாக இருந்தது.
1967 ஜனவரி 12-ஆம் தேதி காலை ஒன்பது மணிக்குள்ளாக இருக்கும். பீம்சிங் தோட்ட காவலாளி பதற்றத்துடன் ஓடிவந்து... ""அம்மா... நம்ம ஐயா எம்.ஜி.ஆர சுட்டுட்டதா பரபரப்பா பேசிக்கிறாங்கம்மா'' எனச் சொல்லிவிட்டுப் போனார். எங்களுக்கு அதிர்ச்சியாக இருந்தது.
புரட்சித்தலைவரின் வீட்டிற்கு தயாரிப்பாளர் சுசீலா வாசுவுடன், வாசுவின் காரில்தான் சென்றார் என் அப்பா.
துப்பாக்கிச் சூடு சம்பவம் நடந்தபின்... வேலூரில் இருந்து சென்னை நோக்கி வந்து கொண்டிருந்த ஒரு காரில் லிஃப்ட் கேட்டு, சைதாப்பேட்டை போலீஸ் ஸ்டேஷனில் இறங்கியிருக்கிறார் என் அப்பா.
புரட்சித்தலைவரும், அப்பாவும் ராயப்பேட்டை மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர்.
ஷுட்டிங் கேஸில் என் அப்பா சிறையில் அடைக்கப்பட்டார்.
ஏழாண்டுகள் தண்டனை விதித்தது செஷன்ஸ் கோர்ட். அந்தத் தீர்ப்பை உறுதிசெய்தது ஹைகோர்ட். அப்பீலில் நன்னடத்தை காரணமாக மூன்றரை ஆண்டுகளில் என் அப்பாவை விடுவித்தது சுப்ரீம் கோர்ட்.
அப்பா சிறையில் இருந்த சமயம்...
ஒரு பூனை வளர்த்திருக்கிறார். தனக்கு தரப்படும் உணவை முதலில் பூனைக்குக் கொஞ்சம் தந்துவிட்டுத்தான், தான் உண்பாராம். ஒருநாள் வழக்கம்போல பூனைக்கு உணவு வைத்திருக்கிறார். பூனை இறந்துவிட்டது. உடனே... விசாரணைக்கு உத்தரவிடுவதாக ஜெயில் அதிகாரிகள் சொல்ல... ""அதெல்லாம் வேணாம், இது யதார்த்தமா நடந்திருக்கலாம்'' என பெருந்தன்மையோடு அப்பா சொல்லிவிட்டாராம்.
கல்லூரிகளுக்கிடையேயான போட்டியில் வென்றவர்களுக்கு தேனாம்பேட்டை எஸ்.ஐ.இ.டி. கல்லூரியில் கேடயம் வழங்கும் விழாவில் கலந்துகொண்ட முதலமைச்சர் புரட்சித்தலைவரிடம் சட்டக்கல்லூரி சார்பில் வென்ற எங்கள் டீம் சார்பில் நான் கேடயம் வாங்கியபோது... ""வாத்யாரே... அது எம்.ஆர்.ராதா மகன்'' என மாணவர்கள் கத்தினார்கள். என்னைப் பார்த்து புன்னகைத்து, ""உடம்பை நல்லா வச்சுக்கணும்'' என அட்வைஸ் செய்தார்.
சத்துணவுத் திட்டத்திற்காக நிதி திரட்ட கலைநிகழ்ச்சி, நாடகம் நடத்தியவர்களுக்கு தங்கமோதிரங்கள் பரிசளிக்கையில் எனக்கு மோதிரத்தை மாட்டிவிட்டு, ""உடம்பை நல்லா வச்சுக்கணும்'' என அட்வைஸ் பண்ணினார்.
விமானத்தில் பெங்களூரு வழியாக கோவை சென்றபோது... புரட்சித்தலைவர் சென்ற விமானத்தில் நானும் சென்றேன். பெங்களூரு விமானநிலையத்தில் விமானம் நின்றபோது... நான் வணக்கம் தெரிவிக்க, என்னை ஆரத்தழுவி அன்புகாட்டினார். கோவையில் விமானம் நின்றதும்... புரட்சித்தலைவரை வரவேற்க பெரும் தொண்டர்கள் கூட்டம் இருப்பதை அறிந்து... என் பாதுகாப்பை மனதில் வைத்து, ""நான் விமானநிலையத்தைவிட்டு வெளியே சென்றபிறகு ராதாரவியை அனுப்புங்கள்'' என அதிகாரிகளிடம் சொன்னார் அக்கறையுடன்.
ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோதும் எங்களைப் பழிவாங்கவில்லை புரட்சித்தலைவர்.
இப்போது புரட்சித்தலைவர் உயிரோடு இருந்தால், அவரிடம் நான் ஒரே ஒரு கேள்விதான் கேட்பேன்.
""எங்க அண்ணன் எம்.ஆர்.ஆர்.வாசு "ஜம்பு' படத்தில் நடிப்பதற்காக சத்யா ஸ்டுடியோ சென்றபோது... அவரை உள்ளே நுழைய விடவில்லை. இதை நான் என் கண்ணாரப் பார்த்தேன். ஏன் அவரை அனுமதிக்கவில்லை?'' என்று கேட்பேன்.
""அவரைப் பார்த்தப்பவே கேட்டிருக்கலாமே?'' என நீங்கள் கேட்கலாம்.
புரட்சித்தலைவரை நேரில் பார்க்கும்போது கேள்வி கேட்கவே தோன்றாதே.
நான் லயோலா கல்லூரியில் பி.யூ.சி. படித்துக்கொண்டிருந்தபோது... புரொபஸர் ஙழ்.இங்ழ்ஸ்ரீட்ம்ஹய்ள் லாஜிக் சம்பந்தமான பாடம் எடுத்தார்.
""ஒரு விஷயத்தை லாஜிக்கலா திங்க் பண்ணணும். அப்பத்தான் எங்கெங்க எஹப்ப்ஹஸ்ரீண்ங்ள் (குற்றம்) இருக்குனு தெரியும். இப்ப நாம உதாரணத்துக்கு எம்.ஜி.ஆர். ஷுட்டிங் கேஸை எடுத்துக்கலாம்...'' என புரொபஸர் சொல்லிக் கொண்டிருக்கும்போதே... ""சார்... இவன் எம்.ஆர்.ராதா மகன்'' என சக மாணவர்கள் சொல்ல... ""வேணாம்ப்பா... இது பெரிய இடத்து சமாச்சாரம்'' எனச் சொல்லி அந்த உதாரணத்தையே நிறுத்திவிட்டார் புரொபஸர்.
நான் சட்டக்கல்லூரியில் படித்துக்கொண்டிருந்தபோது... ஒரு வக்கீல் என்னிடம் ஷுட்டிங் கேஸ் குறித்து வெகுநேரம் பேசினார்.
அப்போது... வழக்கின் தன்மையிலிருந்து ஆராய்ந்து பத்து கேள்விகளை முன்வைத்தார்.
(அந்தக் கேள்விகளை நான் உங்கள் முன் வைக்கிறேன்)