(118) அரசியலை மிஞ்சிய நடிகர் சங்கத் தேர்தல்!
1986-ஆம் ஆண்டு...
நடிகர் திரு. ஐசரிவேலன் அவர்கள் என்னிடம்... ""தம்பி.. நடிகர் சங்கத் தேர்தல்ல நாம ஒரு டீமா போட்டியிடலாம். நம்ம டீம்ல கமிட்டி மெம்பர் பதவிக்கு நீங்க நிற்கணும்'' எனக் கேட்டார்.
""கண்டிப்பா நிக்குறேன் அண்ணே...'' என நானும் வாக்கு கொடுத்தேன்.
ஆனால் தேர்தல் கொஞ்சநாள் தள்ளிப்போனது.
இந்தச் சமயத்தில்... நிர்வாகிகள் இருந்தும் சிறிதும் செயல்படாமல் கிடந்த டப்பிங் ஆர்டிஸ்ட் யூனியன் தேர்தலில் நின்று தலைவராக ஜெயித்தேன்.
மறுபடி நடிகர் சங்க தேர்தல் அறிவிக்கப்பட்டபோது... ""ஐசரி வேலன் அண்ணன், தலைவர் பதவிக்கு போட்டியிட்டதோடு, மற்ற பதவிகளுக்கு ஒரு டீம் ஃபார்ம் பண்ணினார். என்ன நடந்ததோ... என்னை அவருடைய டீமில் சேர்க்கவில்லை.
எனது நண்பர்களும், டப்பிங் ஆர்டிஸ்ட் யூனியன் பிரமுகர்களுமான கே.ஆர்.செல்வராஜ், ஜெயமணி, ராஜேந்திரன், வீரமணி, எம்.ஏ.பிரகாஷ் போன்றவர்கள் “நீங்க நடிகர் சங்கத் தலைவர் பதவிக்கு போட்டியிடுங்க'' எனச் சொன்னார்கள். நானும் சம்மதித்தேன்.
ஐசரி வேலன் அண்ணன் அ.தி.மு.க.வில் இருந்தார். நான் தி.மு.க.வில் இருந்ததால்... கலைஞர் சித்தப்பாவிடம் ஆசி வாங்குவதற்காக... அப்போது தி.மு.க. கட்சித் தலைமை அலுவலகமாக செயல்பட்டுவந்த அன்பகத்திற்குச் சென்றேன்.
கலைஞர் சித்தப்பாவும், அண்ணன் வைகோ அவர்களும் பேசிக்கொண்டிருந்தார்கள்.
நான் விஷயத்தைச் சொன்னதும்... ""நான் என்னய்யா செய்யணும்?'' எனக் கேட்டார் கலைஞர்.
""நடிகர் சங்கம் பொதுவானது. கட்சி சாயம் இல்லாதது. நம்ம கட்சி கலரோ... கொடியோ... நடிகர்சங்கம் பக்கம் வராம இருந்தா ஜெயிச்சிடுவேன்'' என்றேன்.
நான் "கட்சி முத்திரை வேண்டாம்' எனச் சொன்னதால் கோபமான அண்ணன் வைகோ எழுந்து சென்றுவிட்டார்.
""அப்படியா? சரிய்யா... ஜெயிச்சிட்டு வாய்யா'' என வாழ்த்தினார் கலைஞர்.

தி.மு.க.வில் வைகோ அண்ணன் ஒருவிதமாக ஃபோர்ஸாக செயல்படுபவர் என்றால்... நான் கட்சியில் இன்னொருவிதமாக ஃபோர்ஸாக செயல்படக்கூடியவன்.
அன்பகத்தில் மாடிப்படி தொடங்குகிற இடத்தில் ஒரு சிறிய அறை உள்ளது. அங்கு போய் அமர்ந்துகொண்டார் அண்ணன் வைகோ.
நான் அவரைப் பார்த்து... ""அண்ணே... போய்ட்டு வர்றேண்ணே...'' என்றேன்.
""நீ தலைவர்கிட்ட அப்படிப் பேசியது எனக்குப் பிடிக்கல'' என்றார்.
""அப்படியாண்ணே... இது கலைஞருக்கும், எனக்கும் உள்ள டீலிங். இதுல யாரோட கருத்தையும் கேட்க நான் வரலண்ணே...'' எனச் சொல்லிவிட்டு கிளம்பினேன்.
நான் நடிகர் சங்க தேர்தலில் வாக்குறுதிகள் நிறைய தரவில்லை. ஆனால்... எங்கு பார்த்தாலும் "ராதாரவி' என்கிற பெயர் இருக்கும்படி பார்த்துக்கொண்டேன்.
நடிகர் சங்கத்தை நோக்கிவரும் எல்லா தெரு முனைகளிலும் பெரிய பெரிய பேனர்களை வைக்கச் சொன்னேன்.
அதற்குமுன் பெரிதாக பொதுமக்களின் கவனத்தைப் பெற்றிருக்காத நடிகர் சங்க தேர்தல் முதன்முதலாக பொதுத்தேர்தல் பரபரப்போடு திகழ்ந்தது.
பாலிவுட்டில் பிஸியாக இருந்த ஸ்ரீதேவியே இந்த தேர்தலில் வந்து ஓட்டளித்தார். ஸ்ரீதேவி வந்ததற்கு கமல் சார் முக்கிய காரணம். எனக்காக கமல் சார் தீவிரமாக கேன்வாஸ் செய்தார்.
நடிகர் சங்கத்தில் மெம்பராக இல்லாத சகோதரர் விஜயகாந்த் நடிகர் சங்க வளாகத்திற்குள் எனக்காக கேன்வாஸ் செய்ய... விஜிமாவுக்கு ஐசரிவேலன் அண்ணன் எதிர்ப்புத் தெரிவிக்க... வளாகத்திற்கு வெளியே வந்து கேன்வாஸ் செய்தார் விஜிமா. சந்துரு (வாகை சந்திரசேகர்), தியாகு ஆகியோரும் கடுமையாக உழைத்தார்கள் எனக்காக.
"அ.தி.மு.க.காரரான ஐசரி வேலன் தலைவராக போட்டியிடுவதால் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் தலையீடு தேர்தல்ல இருக்கு. சாயங்காலம் முதலமைச்சர் ஓட்டுப்போட வர்றாரு' என பரவலாகப் பேசப்பட்டது.
ஆனால்... புரட்சித்தலைவரின் தலையீடு இல்லவே இல்லை. அவர் ஓட்டளிக்கவும் வரவில்லை.
தேர்தல் முடிந்து ஓட்டு எண்ணிக்கை நடந்தபோது...
உள்ளூர் ஓட்டுகளிலேயே நான் ஐசரி அண்ணனைவிட 300 ஓட்டுகள் லீடிங்கில் இருக்கும்போது...
""ரவிமா... என்னை வீட்ல இறக்கிவிட முடியுமா?'' என என்னிடம் ஐசரி வேலன் அண்ணன் கேட்டார்.
""வாங்கண்ணே...'' என என் காரில் அவரை ஏற்றிக்கொண்டு... மயிலாப்பூர் சாய்பாபா கோவிலுக்கு எதிரே... அவரின் வீட்டில் இறக்கிவிட்டேன்.
""ரவிமா... சாப்ட்டுப்போலாமே...'' என்று அழைத்தார்.
""அண்ணே... தேர்தல் வெற்றி -தோல்வி முக்கியமில்ல. நாம எப்பவும் ஒண்ணா... சகோதரத்துவத்தோட இருக்கணும்ணே...'' எனச் சொல்லி, அவருடன் இரண்டு பெக் சாப்பிட்டுவிட்டு... நடிகர்சங்கத்திற்கு வந்தேன்.
ஓட்டு எண்ணிக்கை விறுவிறுப்பாக நடந்துகொண்டிருந்தபோது... ஐசரி அண்ணனின் தேர்தல் ஏஜெண்ட் கே.ராஜன் அண்ணனுக்கு போன்.
""ஏதாவது காரணம் சொல்லி... தேர்தலை நிறுத்த ஏற்பாடு செய்'' என ஐசரி அண்ணன் சொல்லியிருக்கிறார்.
""எதுக்கு நிறுத்தணும். தேர்தல் நியாயப்படிதானே நடக்குது... 250 தபால் ஓட்டுகளையும் ரவி உங்களுக்கு குடுக்குறதா சொல்றாப்ல. அப்படிப் பார்த்தாலும் ரவிதான் 50 ஓட்டுகள் அதிகமா இருக்காரு. அதனால தேர்தல் முடிவ நிறுத்த முடியாது'' என திட்டவட்டமாக சொல்லியிருக்கிறார் அண்ணன் நடிகர் கே.ராஜன் அவர்கள். அன்றிலிருந்து அண்ணன் கே.ராஜன் அவர்களுக்கும் எனக்கும் இடையேயான நட்பு இதயபூர்வமாக நீடித்துக்கொண்டிருக்கிறது.
முறைப்படி நான் தலைவராக அறிவிக்கப்பட்டதும் என் அம்மாவிடம் வந்து ஆசி பெற்றேன். பிறகு.. பெரிய ஊர்வலமாக நடிகர் சங்கத்திலிருந்து கிளம்பி நடிகர்திலகம் சிவாஜி அப்பாவின் வீட்டிற்குச் சென்று அவரிடம் ஆசி வாங்கினேன்.
ஆசி வழங்கிய சிவாஜி அப்பா... ""அண்ணன் மகனே... ஜாக்கிரதையா இரு. இப்ப உன்னை "வாழ்க'னு சொல்றவனுங்க... "ஒழிக'னும் சொல்வானுங்க'' என்றார்.
(என் அப்பா என்னிடம், ""எந்தப் பதவிக்கும் போகாத. நாடக நடிகன்கள நம்பாத'' என எனக்கு அடிக்கடி அட்வைஸ் செய்வார். அவர் சொன்ன இந்த இரண்டையும் நான் மீறினேன். என் அப்பாவின் பேச்சை மீறினது எவ்வளவு பெரிய தப்புங்கிறதையும், சிவாஜி அப்பா சொன்னதன் உண்மையையும் இப்போ நான் உணர்றேன்)
பதவி ஏற்பு விழா நடந்தபோது...
""சங்க கணக்கு-வழக்குல கோளாறு இருக்குறதா சொல்றாங்க. அதை சரிபண்ற வரைக்கும் நான் தலைவரா பதவியேத்துக்க மாட்டேன்'' என்றேன்.
உடனே லட்சிய நடிகர் எஸ்.எஸ்.ஆர். அப்பா எழுந்து... ""அந்த கணக்கு-வழக்கில் எந்த திகட்டல் வந்தாலும் நான் பொறுப்பு ஏத்துக்கிறேன்'' என்றார்.
அதனால் நான் பதவியேற்றுக்கொண்டேன்.
பதவியேற்பு விழா முடிந்து... கிளம்புகிற நேரத்தில்... "நடிகமணி' டி.வி.நாராயணசாமி அவர்களுக்கு ஹார்ட் அட்டாக் ஏற்பட... அவரை மருத்துவமனையில் சேர்த்தோம்.
நான் முதன்முதலில் நடிகர் சங்கத் தேர்தலில் போட்டியிட்ட அனுபவம் இப்படியாக இருந்தது.
என் சினிமா வாழ்க்கையில் மறக்க முடியாத நிகழ்ச்சிகள் நடந்த படம்... ரஜினி சார் நடித்த "உழைப்பாளி' படம்.
சென்னை -செங்கை -காஞ்சிபுரம் மாவட்ட திரைப்பட விநியோகஸ்தர் சங்கத் தலைவராக இருந்த "சிந்தாமணி' முருகேசன் அண்ணன் அவர்கள் எனது உறவினர்.
எனக்கு நிறைய உதவிகள் செய்திருக்கிறார். என் பிரச்சினைகளை அவர் முடித்து வைத்திருக்கிறார்.
விஜய வாஹினி நிறுவனம் தயாரிப்பில், பி.வாசு சார் இயக்கத்தில், ரஜினி சார் நடிக்க "உழைப்பாளி' படம் எடுக்க திட்டமிட்ட நேரம்...
சிந்தாமணி முருகேசன் அண்ணன், திருப்பூர் சுப்பிரமணியம் அண்ணன் உள்ளிட்ட விநியோகஸ்தர்கள் சங்க பிரமுகர்கள்... "நடிகர்கள் தங்களது சம்பளத்தை குறைக்க வேண்டும்' என்கிற விஷயத்தை கையில் எடுத்தனர்.
இதுசம்பந்தமாகப் பேச... தயாரிப்பாளர்கள் சங்கம், விநியோகஸ்தர்கள் சங்கம், தொழிலாளர் அமைப்பான ஃபெஃப்சி அமைப்பு, நடிகர் சங்கம் ஆகியவற்றின் கூட்டுக் கூட்டத்திற்கு ஏற்பாடு செய்யப்பட்டது.
""நடிகர்கள் சம்பளத்தை குறைக்கவேண்டும். ஒரு படம் ஓடினாலும் நடிகர்கள் சம்பளத்தை உயர்த்துறாங்க.. படம் ஓடலேன்னாலும் சம்பளத்தை உயர்த்துறாங்க. ஆனா... தியேட்டர் கட்டணம் உயரல....'' எனப் பேசிக்கொண்டே வந்தவர்கள், ஒரு கட்டத்தில் பேசிய பேச்சுக்கள்... ரஜினி சாரை டார்க்கெட் பண்ணி பேசியதாக நான் யூகித்தேன். பேச்சு அதிகமாகவே... "சடார்' என எழுந்த ரஜினி சார்... ""நான் என் சம்பளத்தைக் குறைச்சுக்கிறேன்'' எனச் சொல்லிவிட்டு... கூட்டத்திலிருந்து வெளியேறினார்.
""என்ன இது... பேசிக்கொண்டிருக்கும்போதே ரஜினி வாக்-அவுட் பண்ணீட்டாரு'' எனச் சொன்னதோடு ரஜினி சாரை மிகவும் கடுமையாகவும், கீழ்த்தரமாகவும் பேசினர்.
அவர்கள் அப்படிப் பேசியதில் அவர்களுக்கான நியாயம் இருக்கலாம். ஆனால்... நடிகர்சங்க தலைவராக... எனது சங்க உறுப்பினரை இப்படி தாக்கிப் பேசுவதை நான் எப்படி ஏற்கமுடியும்?
""இங்க பாருங்க... இந்த கூட்டத்துலருந்து நான் வாக்-அவுட் பண்றேன்'' எனச் சொல்லிவிட்டு, ஃபெஃப்சி தலைவர் மோகன் காந்திராமன் சாரையும் கையைப்பிடித்து இழுத்துக்கொண்டு... அவருடன் வெளியேறினேன்.
நேராக ரஜினி சார் வீட்டுக்குப் போனோம்.
(என்னைப் பார்த்ததும் என் கையைப் பற்றிக்கொண்டு... கண்கலங்கிய ரஜினி சார்... ""எனக்கு சினிமா வேணாம் ரவி'' என்றார்.)
ரூபம்... தத்ரூபம்!
சத்யராஜ், ரகுமான், சுகன்யா ஆகியோருடன் நான் நடித்த படம் "உடன்பிறப்பு' இதில் பந்தல் போடுபவர் வேஷம் எனக்கு. நான் ஒப்பனை செய்துகொண்டு வந்தபோது... தூரத்திலிருந்து என்னைக் கவனித்த டைரக்டர் பி.வாசு சார்... ""என்னய்யா நீ, நான் கதையா சொல்ற கேரக்டரை அப்படியே தத்ரூபமா கண் முன்னால நிறுத்துற...'' என்றார். என் மகளாக நடித்த சுகன்யாவின் பிரமாதமான நடிப்பால் என் கேரக்டரும் பேசப்பட்டது.