(117) நாட்டின் தலைவரிடம் நடிகர் சங்கத் தலைவராக...
நான் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக 1985-ஆம் ஆண்டிலிருந்து, 2000-வரை பதவி வகித்தேன். அப்போது... சங்கத்தின் கடனை அடைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டேன். "கடனை அடைக்க நான் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை' என குற்றம்சாட்டுபவர்களுக்கு "நிஜம் என்ன?' என்கிற கதையைச் சொல்கிற புகைப்படங்கள் இவை.
படம்-1
காங்கிரஸ் பெண் தலைவர்களில் முக்கியமானவராகவும், எம்.பி.யாகவும் இருந்த திருமதி மரகதம் சந்திரசேகர் அம்மா அவர்கள் மூலம் அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் அவர்களையும், அப்போதைய நிதியமைச்சர் மன்மோகன்சிங் அவர்களையும் உதவி கேட்க... அவர்களை சந்திக்க ஏற்பாடு செய்து தரும்படி... மரகதம் அம்மாவின் மகள் சகோதரி லதா பிரியகுமாரிடம் கேட்டேன். என் கோரிக்கையை மரகதம் அம்மாளிடம் தெரிவித்தார் லதா பிரியகுமார்.
அதன்படி மரகதம் அம்மாளின் டெல்லி வீட்டில் அவரைச் சந்தித்தேன். விஷயத்தை முழுமையாக கேட்டுக்
(117) நாட்டின் தலைவரிடம் நடிகர் சங்கத் தலைவராக...
நான் தென்னிந்திய நடிகர் சங்கத் தலைவராக 1985-ஆம் ஆண்டிலிருந்து, 2000-வரை பதவி வகித்தேன். அப்போது... சங்கத்தின் கடனை அடைக்க பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டேன். "கடனை அடைக்க நான் எந்த முயற்சியும் மேற்கொள்ளவில்லை' என குற்றம்சாட்டுபவர்களுக்கு "நிஜம் என்ன?' என்கிற கதையைச் சொல்கிற புகைப்படங்கள் இவை.
படம்-1
காங்கிரஸ் பெண் தலைவர்களில் முக்கியமானவராகவும், எம்.பி.யாகவும் இருந்த திருமதி மரகதம் சந்திரசேகர் அம்மா அவர்கள் மூலம் அப்போதைய பிரதமர் நரசிம்மராவ் அவர்களையும், அப்போதைய நிதியமைச்சர் மன்மோகன்சிங் அவர்களையும் உதவி கேட்க... அவர்களை சந்திக்க ஏற்பாடு செய்து தரும்படி... மரகதம் அம்மாவின் மகள் சகோதரி லதா பிரியகுமாரிடம் கேட்டேன். என் கோரிக்கையை மரகதம் அம்மாளிடம் தெரிவித்தார் லதா பிரியகுமார்.
அதன்படி மரகதம் அம்மாளின் டெல்லி வீட்டில் அவரைச் சந்தித்தேன். விஷயத்தை முழுமையாக கேட்டுக்கொண்ட மரகதம் அம்மாள், நரசிம்மராவ் அவர்களையும், மன்மோகன் சிங் அவர்களையும் சந்திப்பதற்கான ஏற்பாடுகளைச் செய்து தந்தார்.
படம்-2
"நரசிம்மராவ் அவர்கள் சிரிக்கவே மாட்டார்...' என எல்லோரும் அப்போது சொல்வதுண்டு. பத்திரிகைகளிலும் அதுபற்றி படித்திருந்தேன். பிரதமர் அலுவலகத்தில் மரகதம் அம்மாளுடன் நான் அவரைச் சந்தித்தபோதும்... அவர் சிரிக்கவில்லை. இறுக்கமான முகத்துடன்தான் இருந்தார். என்னைப்பற்றிய குறிப்புகளை முன்கூட்டியே தெரியப்படுத்தித்தான் அப்பாயின்ட்மெண்ட் வாங்கப்பட்டது என்றபோதும்...
""சார்... நமஸ்காரம்... நேனு எம்.ஆர்.ராதாகாரு சன் ராதாரவி''’என என்னைப் பற்றி தெலுங்கில் அவரிடம் அறிமுகப்படுத்திக்கொண்டதும்... மின்னல்போல ஒரு மெல்லிய சிரிப்பு சிரித்தார்.
"தென்னிந்திய நடிகர் சங்கம் நலிந்த நாடக, சினிமா கலைஞர்களுக்கு சேவை செய்வதை முதன்மையாக கொண்டு செயல்படும் அமைப்பு’என்பதையும், அதனால் வட்டிக்குமேல் வட்டியாக உயர்ந்து நிற்கிற வங்கிக் கடனை ரத்துசெய்ய ஆவன செய்யவேண்டும்'’எனவும் விரிவாக எழுதப்பட்டிருந்த மனுவை அவரிடம் அளித்தேன்.
படம்-3
மன்மோகன்சிங் அவர்களை நிதி அமைச்சக அலுவலகத்தில் சந்தித்தேன். பிரதமர் அலுவலகத்தில் கொடுத்த கடன் தள்ளுபடி மனுவின் சாராம்சம் கொண்ட மனுவை மன்மோகன் சிங் அவர்களிடமும் கொடுத்தேன்.
கிட்டத்தட்ட ஒரு கோடி ரூபாய் அளவிற்கு கடன் இருப்பதைச் சொன்னேன்.
"சினிமா ஸ்டார்களெல்லாம் சேர்ந்து இந்தக் கடனை தீர்க்கக்கூடாதா?'’எனக் கேட்டார்.
அதில் இருக்கும் பின்னடைவுகளைச் சொல்லி... ""கடனை ரத்து செய்ய உத்தரவிட்டு... எங்களுக்கு உதவணும்''’என்றேன்.
"சுட்டுப்புடுவேன்'’என சிரித்துக்கொண்டே சொன்னவர்... "இப்படி கடன்களை தள்ளுபடி செய்தால் நாட்டுக்கு எவ்வளவு நஷ்டம் வரும்னு தெரியுமா?'’எனக் கேட்டவர்... ‘"பார்க்கலாம்'’ எனச் சொன்னார்.
படம்-4
புரட்சித்தலைவி அம்மா அவர்கள் முதன்முதலாக முதலமைச்சராக பதவியேற்றிருந்த சமயம்...
நான் தி.மு.க.வில் இருந்தபோதும்... நடிகர் சங்கத் தலைவராக இருந்ததால்... நடிகர் சங்க நிர்வாகிகளுடன் அம்மா அவர்களை மரியாதை நிமித்தமாக கோட்டையில் சந்தித்தோம். அப்போது... "நடிகர் சங்க கடன் தீர்ப்பு கோரிக்கை மனு'வை அம்மா அவர்களிடம் கொடுத்தேன்.
(பெரிய நடிகர்களுக்கு வந்த பிரச்சினைகள்... நடிகர் சங்கம் சார்பில் தீர்த்து வைத்த அனுபவங்கள்)
____________
அம்மா - மகன் - பந்தம்!
டி.வி.ரத்னம் அம்மா அவர்கள் பிரபல பாடகி. "ரத்தக் கண்ணீர்'’உட்பட பல திரைப்படங்களில் பாடல்கள் பாடியிருக்கிறார். கே.பி.சுந்தராம்பாள் அம்மா அவர்கள் ஔவையாராக நடித்த "ஔவையார்'’ திரைப்படத்தில் சிறுவயது ஔவையாராக நடித்திருப்பார். மைலாப்பூர் வடக்குமாட வீதியில் இருந்த வீட்டில் டி.வி.ரத்னம் அம்மாள் குடும்பத்தினர் கூட்டுக் குடும்பமாக வசித்து வந்தனர். மதியம் 11, 12 மணிவாக்கில் அந்தவீடு மிகவும் பிஸியாக இருக்கும். படப்பிடிப்புக்காகவும், வேலைக்காகவும் சென்றிருக்கும் அந்த குடும்பத்தினருக்கு மதியஉணவு பார்ஸல் செய்கிற வேலை பரபரப்பாக நடக்கும். சுமார் 15 டிபன் கேரியர்களில் சாப்பாடு வைத்து ஆங்காங்கே இருக்கும் தங்களின் குடும்பத்தினருக்கு மதியச்சாப்பாடு அனுப்புவார்கள்.
நான் சட்டக்கல்லூரியில் படித்தபோது... ஒரு போராட்ட பிரச்சினையில் என்னை கைது செய்ய முயற்சி நடந்தபோது... எனக்கு நீதிமன்றத்தில் முன்ஜாமீன் கிடைக்கிறவரை... டி.வி.ரத்னம் அம்மாள் அவர்களின் வீட்டில்தான் தங்கியிருந்தேன். ""ரவி... நீ ஏன் கீழ வர்ற? மாடியிலயே இரு''’எனச் சொல்லி என்னை தன் பிள்ளையைவிட அதிக அக்கறையோடு கவனித்து, உபசரித்தார்கள். ரத்னம் அம்மாவின் மகன் டி.வி.சங்கர், என் நெடுநாளைய நண்பர். நானும் சங்கரும் நியூகாலேஜில் ஒன்றாகப் படித்தோம். நாங்கள் இருவரும் சில நண்பர்களோடு சேர்ந்து இசைக்குழு ஒன்றையும் வைத்திருந்தோம்.
நான் தயாரித்த படங்களில் புரொடக்ஷன் மேனேஜராக பொறுப்பேற்றுக்கொண்டு கடுமையாக உழைத்தவர் டி.வி.சங்கர். இன்றும் நாங்கள் சிறந்த நண்பர்களாகத் திகழ்கிறோம்.