கர்ஜனை! - இளையவேள் ராதாரவி (113)

radharavi

(113) கூட்டி கழிச்சுப் பாருங்க... தெரியும்!

ஜினி சாரின் "எஜமான்' படப்பிடிப்பு பொள்ளாச்சியில் நடந்தபோது... "தெய்வ வாக்கு'’ படப்பிடிப்பிற்காக நானும் பொள்ளாச்சியில் இருந்ததால்... சொரத்தூர் பேலஸில் தங்கியிருந்த ரஜினி சாரை சந்தித்து, “""நான் படம் தயாரிக்கப்போறேன்; நீங்க நடிச்சுக்குடுங்க''’என்றேன்.

""கண்டிப்பா செய்றேன் ரவி''’என்றார். ஹோட்டலுக்கு திரும்பி, என் மனைவி பாக்யலட்சுமியிடம் விஷயத்தைச் சொன்னேன். "கால்ஷீட் தருவாரா?' என்று கேட்டார். ""தந்தால் ஓ.கே., தராவிட்டாலும் பரவாயில்லை'' என்று சொன்னேன். எதிர்பார்ப்புகளோடு இருந்தால் ஏமாற்றம் ஏற்படும் என்பதை உணர்ந்தவன் நான். அதனால் ரஜினி சார் கால்ஷீட் தருவார் என பெரிய எதிர்பார்ப்பை வைத்துக்கொள்ளவில்லை.

radharavi

சென்னை திரும்பிய சில நாட்களுக்குப் பிறகு... ரஜினி சாரிடமிருந்து ஒரு கடிதம் வந்தது எனக்கு.

""இப்போதைக்கு கால்ஷீட் தர இயலவில்லை. நீங்க சின்ன பட்ஜெட் படம் எடுங்கள். வாய்ப்பிருந்தால் அதன்பிறகு பார்க்கலாம்''’என அந்தக் கடிதத்தில் தெரிவித்திருந்தார்.

ஒருநாள்...

""ரவி... அருணாச்சலாவுக்கு வாங்க''’என ரஜினி சாரிடமிருந்து போன்.

"அருணாச்சலா'’ என்பது பாம்குரோவ் ஹோட்டலுக்கு அருகில் இருக்கும் ரஜினி சாரின் அலுவலகம்.

"கால்ஷீட் தரத்தான் கூப்பிடுறார்'’என நினைத்துக்கொண்டு அங்கே போய் அவரைச் சந்தித்தேன்.

இருவரும் பொதுவாக சில விஷயங்களைப் பேசிக்கொண்டிருந்தோம்.v ""சார்... ஜனகராஜ் உங்ககூட ஃப்ரெண்ட் கேரக்டர் பண்றார்ல... அதுபோல உங்ககூட கேரக்டர் செய்யணும். எனக்கு காமெடி ரொம்ப நல்லா வரும்''’என்றேன்.

அதைக்கேட்டு மௌனமாக சிரித்த ரஜினி சார், ""எனக்கு ஒரு உதவி செய்யமுடியுமா ரவி?''’எனக் கேட்டார்.

""சொல்லுங்க சார்''’என்றேன்.

""நான் அடுத்து பண்ணப்போற படம் கே.பி.சாரோட கம்பெனிக்கு. "அண்ணாமலை'’ டைட்டில்''’’

""சூப்பர் சார்''’’

""எனக்காக... இந்த ஒரு படத்துல மட்டும் நீங்க வயசான வேஷத்துல நடிங்க. படத்துல என்னை எதிர்த்து நிற்கிற கேரக்டர். சரத்துக்கு அப்பாவா நடிக்கணும்''’’

""கவிதாலயாவா? சார்... கவிதாலயா நிர்வாகி நடராஜன் (பிரமிட் நடராஜன்) படத்துக்காக ஒப்பந்தம் பண்ண போன்பண்ணும்போது "வாழ்க வளமுடன்'னு சொல்லித்தான் பேசுவார். சம்பளம் பேசுறப்போ... வாழவிடமாட்டார் சார் நடராஜன்''’என்றேன்.

ரஜினி சார் சிரித்துவிட்டு, ""இல்ல ரவி... ‘"அண்ணாமலை'’ படத்தை நான் அண்டர்டேக் பண்றேன். கவலைப்படாம... சம்மதம் சொல்லுங்க''’என்றார்.

""சார்... நான் ‘"அண்ணாமலை'ல நடிக்கிறேன்''’எனச் சொல்லிவிட்டு, நான் எதிர்பார்த்த சம்பளத்தையும் தெரிவித்துவிட்டுக் கிளம்பினேன்.

போன் ஒலித்தது... எடுத்தேன்.

""ரவி... வாழ்க வளமுடன்...'' எனச் சொல்லிவிட்டு நடராஜன் சார் சம்பளம் பேசினார்.

நான் கேட்ட சம்பளத்திற்கும், நடராஜன் சார் தருவதாகச் சொன்ன சம்பளத்துக்கும் இடையே பெரிய கேப்.

""நான் அப்புறமா உங்ககிட்ட பேசுறேன்''’எனச் சொல்லிவிட்டு... ரஜினி சாருக்கு போன் அடித்தேன்.

""நீங்க ஏன் வொரி பண்ணிக்கிறீங்க? ஒருமணி நேரத்தில உங்களுக்கான அட்வான்ஸ் வரும்''’என்றார் ரஜினி சார்.

நான் ரஜினி சாரிடம் சொல்லியிருந்த சம்பளத்தின் அடிப்படையில் அட்வான்ஸ் தொகை என் வீடு தேடி வந்தது.

ஏவி.எம். ஸ்டுடியோவில் ‘"அண்ணாமலை'’ படப்பிடிப்பு.

கவிதாலயா கம்பெனியில் எனக்காக ஏகப்பட்ட கோட்-சூட்களை தைத்து வைத்திருந்தார்கள். பணக்கார வில்லனாச்சே... அதனால்.

சுந்தரமூர்த்தி அண்ணன் மேக்-அப் போட்டுவிட்டார். வசனகர்த்தா சண்முகசுந்தரம் சார்... டயலாக் சொல்லத் தயாரானார்..

நான் இளம் தந்தை. என் மகன் சிறுவன். அவனுக்கு பிறந்தநாள் விழா. என் பணக்கார நண்பர்களெல்லாம் குழுமியிருக்க... கேக் வெட்டவேண்டிய அவன் யாருக்கோ காத்திருப்பான்.

""யாருக்கு வெய்ட் பண்ற?''’என நான் கேட்டதும்... “"அண்ணாமலைக்கு வெய்ட் பண்றேன்'’’ என்பான். நான் கோபமாக முறைப்பேன்.

இந்த முதல் காட்சி எடுத்து முடிக்கப்பட்டது.

அப்போது சரத்பாபு வந்தார்.

""இவர் எதுக்கு இங்க வர்றார்?'' என ரஜினி சாரிடம் கேட்டேன்.

""படத்துல சரத், உங்க மகனா நடிக்கிறார்''’என்றார்.

""சார்... நீங்க ‘சரத்துனு சொன்னதும், நான் ‘சரத்குமார்னு நினைச்சிட்டேன். சரத்பாபு என்னோட நல்ல நண்பர், திறமையான நடிகர். ஆனா... இயற்கைலயே அவர் என்னைவிட மூத்தவர். அவருக்கு அப்பாவா....''’என நான் இழுக்க...

""எனக்காக நடிங்க ரவி''’என்றார் ரஜினி சார்.

""அப்படின்னா... இன்னைக்கி எடுத்த இந்த ஒரு ஸீன் போதும் சார்... நான் இளம் அப்பாவா நடிக்கிறத இந்த ஸீனோட நிறுத்திக்கிட்டு... என் கேரக்டரை வேற மாதிரி பண்ணலாம்''’ என்றேன்.

ரஜினி சாரும் சம்மதித்தார்.

"எனக்காக கம்பெனில இவ்வளவு விதம்விதமா கோட்-சூட் தைச்சு வச்சிருக்காங்க. பணக்கார அப்பா- மகன்னு நானும், சரத்பாபுவும் கோட்-சூட் போட்டுக்கிட்டிருந்தா நல்லாவா இருக்கும். அதனால வேற ஐடியா பண்ண வேண்டியதுதான்'’என மனசுக்குள் நினைத்துக்கொண்டேன்.

நான் சொன்னபடி ஷூட்டிங் நிறுத்தப்பட்டது.

டைரக்டர் சுரேஷ்கிருஷ்ணா சார், மேக்-அப்மேன் சுந்தரமூர்த்தி அண்ணன், நான்... மூவரும் உட்கார்ந்து கலந்து பேசினோம்.

இந்த ஒரு காட்சியுடன் எனது கோட்-சூட் போட்ட இளம்தந்தை கெட்-அப்பை முடித்துக்கொள்வது... ரஜினியும், சரத்பாபுவும் வாலிபர்களாகும் கட்டத்தில் நான் நடுத்தர அப்பாவாவது... இந்த கேரக்டருக்காக மொட்டைத் தலையில் கொஞ்சம் கருப்பு-வெள்ளை முடியுடன், அரைக்கை சட்டை போட்டிருப்பதுபோல் கெட்-அப் போடுவது... ரஜினிக்கும், சரத்பாபுவுக்கும் நரைவிழத் தொடங்கிய அடுத்த கட்டத்தில், நான் முழுக்கை சட்டை... (கிழவனுக்கு கைத்தோல் சுருங்கலியே என ஆடியன்ஸ் கேட்டுவிடக் கூடாதே. அதனால் கையை மறைக்கும்படி முழுச்சட்டை), தலை, மீசை, புருவம் என முழுக்க வெள்ளை முடியுடன் இருப்பது... என கெட்-அப் உருவாக்கப்பட்டது. (இந்த வயதான கேரக்டருக்கா... வெள்ளைப் புருவமுடி ஒரு செட் எக்ஸ்ட்ராவாக செய்து, அதையே மீசையாக ஒட்டிக்கொண்டேன்)

ஒருமனதாக எனது கெட்-அப்கள் முடிவானது.

மூன்று கோடி பெறாத வீட்டை அண்ணாமலை 12 கோடிக்கு ஏத்திவிட்ட கோபத்தில் என் மகனை நான் திட்டும் மிக லென்த்தியான காட்சி.

நீண்ட மாடிப்படிகளில் ஏறிப் பேசிக்கொண்டு போகவேண்டும் நான்.

ஆவேசமாக மகனைத் திட்டிவிட்டு... பிறகு ""நாமளா? அண்ணாமலையா?னு பார்த்திருவோம் கண்ணு''’எனச் சொல்லியபடி படிகளில் இறங்கவேண்டும்.

சண்முகசுந்தரம் சார் டயலாக்கை சொன்னார்.

""ரவி... உங்க ஸ்டைல்ல ஏதாவது மேனரிஸம் பண்ணுங்க''’எனறார் ரஜினி சார்.

எனது கேரக்டர் பணத்தைப் பற்றியே கணக்குப் போடுகிற கேரக்டர் என்பதால்... “""கூட்டிக் கழிச்சுப்பாரு... கணக்கு சரியா வரும்''’என ஒரு டயலாக்கை பிடித்தேன்.

ஆமாம்... இது பிடித்த டயலாக்தான்.

சிவாஜி அப்பா நடிச்ச ‘"படிக்காத மேதை'’ படத்தில் ரெங்காராவ் அய்யாவால் சிவாஜியப்பா வீட்டைவிட்டு வெளியேற்றப்படும் காட்சியில்... மாபெரும் கலைஞனான டி.எஸ்.துரைராஜ் அவர்கள்... “"தம்பி... கவலைப்படாதீங்க... நான் சொல்றதை கூட்டிக் கழிச்சுப் பாருங்க... கணக்கு சரியா வரும்'’என நகைச்சுவையாகச் சொல்லியிருப்பார்.

அதைப் பிடித்து... படத்தில் பல இடங்களில் நான் பேசினேன்.

"காட்ஃபாதர்'’ படத்தில் மார்லன் பிராண்டோ உச்சந்தலையை சொறியும் மேனரிஸத்தை அடிக்கடி பயன்படுத்தியிருப்பார். அது நினைவுக்கு வந்தது. ஆனால் அதை உருவி, ‘"நாயகன்'’ படத்தில் கமல் சார் செய்தார். அதுவும் நினைவுக்கு வந்தது. அதையே நான் செய்ய முடியாதே. செய்தால்... ‘"கமலை காப்பியடிச்சிட்டாண்டா'னு சொல்வார்கள். அதனால்... அதே டைப்பில் வேறு ஏதாவது செய்யலாம் என யோசித்ததுதான்... பின் கழுத்தை சொறிந்தபடி... ‘""கூட்டிக் கழிச்சுப்பாரு... கணக்கு சரியாவரும்''’ என பேசும் மேனரிஸம்.

(இருட்டு அறையில் முரட்டு உருவம்)

________________

என்னோட அய்யர்!

radharavi

திருச்செந்தூர் முருகன் கோயிலில் குருக்களாக இருக்கிறார் சங்கரய்யர்.

"நாளைய செய்தி'’ படத்தில் நான் நடித்துக்கொண்டிருந்த சமயம் டைரக்டர் பி.வாசு சார் மூலம் எனக்கு அறிமுகமானார்.

கோயில் குருக்கள்தானே’என அவரை ன்ய்க்ங்ழ் ங்ள்ற்ண்ம்ஹற்ங் பண்ணிவிட முடியாது. நியாயத்துக்காகப் போராடுபவர். சிலம்பாட்ட கலையைக் கற்றவர். ஏதாவது வேலையாக சென்னை வந்தால், என் வீட்டில்தான் தங்குவார். ஆணின் வெற்றிக்குப் பின்னால் இருக்கும் பெண் என்பதற்கேற்ப... சங்கரய்யருக்கு அவரின் மனைவி.

ஒரு மகன், ஒரு மகள்... திருமணமாகிவிட்டது. சங்கரய்யரைப் போலவே அவரின் மகனும் மனோதிடமானவர். பைக்கிலேயே காசிக்கு போய்விட்டு வருவார் அந்த இளைஞர். என் அம்மா தன் மகனைப்போல சங்கரய்யர் மீது பாசம் காட்டுவார். என் நண்பர்கள் எல்லாருக்கும் சங்கரய்யரைத் தெரியும். திருச்செந்தூர் கோயிலில் அவருக்குப் பெயர்... "ராதாரவியோட அய்யர்'’ என்பதுதான்.

nkn210918
இதையும் படியுங்கள்
Subscribe