கர்ஜனை! -"இளையவேள்'’ராதாரவி (108)

radharavi

(108) குஷ்புவைப் பார்த்து பயந்தேன்!

பி.எஸ்.வீரப்பா அவர்களின் கம்பெனி தயாரிப்பில், அமீர்ஜான் சார் இயக்கத்தில் பார்ட்னரும், நானும் நடித்த படம் "வணக்கம் வாத்தியாரே.'’

ஒகேனகலில் ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தபோது ஒருநாள்... ஷூட்டிங் லஞ்ச் பிரேக்கில் “"நான் ஹோட்டல் ரூம் வரைக்கும் போயிட்டு வந்திடுறேன்'’எனச் சொல்லிவிட்டு கிளம்பினார் பார்ட்னர் கார்த்திக்.

radharavi

வெகுநேரமாக யூனிட் காத்திருக்க... பார்ட்னர் வரவே இல்லை. ஹோட்டலுக்குப் போய் அவரை அழைத்துவர ஆளனுப்பினார்கள். சிறிது நேரத்தில் திரும்பி வந்த யூனிட் ஆள்... "கார்த்திக் சார், சென்னைக்குப் போறதா ஹோட்டல்ல சொல்லிட்டுக் கிளம்பிட்டாராம்'’எனச் சொன்னார். "சென்னைக்குப் போறதா சொல்லிட்டுப் போயிருந்தா... வேற ஸீன்களை எடுப்பாங்க. அல்லது ஷூட்டிங்க கேன்ஸல் பண்ணிட்டு... அடுத்த விஷயத்தை யோசிப்பாங்க. ஆனா... சொல்லாம கிளம்பிப் போனதால முடிவு எதுவும் எடுக்க முடியாதபடி... குழப்பம் ஆகிருச்சே...' என எல்லோரும் வருத்தப் பட்டார்கள். பார்ட்னர் ஏன் சொல்லாமல் கிளம்பிப்போனார்... என்பது எனக்கு இன்றுவரை புரியவில்லை. அதன்பிறகு... கோபிச்செட்டிபாளையத்திலும் ஷூட்டிங் நடந்தது. பார்ட்னர் கலந்துகொண்டார். பார்ட்னர் கார்த்திக் -நான் -டைரக்டர் அமீர்ஜான் சார் கூட்டணி என்றால்... அந்தப் படம் வெற்றிபெறும். அதன்படி... ‘"வணக்கம் வாத்தியாரே'’ படமும் நன்றாக ஓடியது.

ன் முதல் தமிழ்ப்படமான "மன்மத லீலை'யில் எனக்கு டப்பிங் பேசியவர்... என் பள்ளித்தோழர் கண்மணி சுப்பு. கவியரசு கண்ணதாசன் அய்யா அவர்களின் மகன். ஜெயந்த்குமார், வினோதினி ஜோடியை வைத்து கண்மணி சுப்பு இயக்கிய "சித்திரைப் பூக்கள்' படத்தில் நான் முக்கிய கேரக்டரில் நடித்தேன். சரத்க

(108) குஷ்புவைப் பார்த்து பயந்தேன்!

பி.எஸ்.வீரப்பா அவர்களின் கம்பெனி தயாரிப்பில், அமீர்ஜான் சார் இயக்கத்தில் பார்ட்னரும், நானும் நடித்த படம் "வணக்கம் வாத்தியாரே.'’

ஒகேனகலில் ஷூட்டிங் நடந்துகொண்டிருந்தபோது ஒருநாள்... ஷூட்டிங் லஞ்ச் பிரேக்கில் “"நான் ஹோட்டல் ரூம் வரைக்கும் போயிட்டு வந்திடுறேன்'’எனச் சொல்லிவிட்டு கிளம்பினார் பார்ட்னர் கார்த்திக்.

radharavi

வெகுநேரமாக யூனிட் காத்திருக்க... பார்ட்னர் வரவே இல்லை. ஹோட்டலுக்குப் போய் அவரை அழைத்துவர ஆளனுப்பினார்கள். சிறிது நேரத்தில் திரும்பி வந்த யூனிட் ஆள்... "கார்த்திக் சார், சென்னைக்குப் போறதா ஹோட்டல்ல சொல்லிட்டுக் கிளம்பிட்டாராம்'’எனச் சொன்னார். "சென்னைக்குப் போறதா சொல்லிட்டுப் போயிருந்தா... வேற ஸீன்களை எடுப்பாங்க. அல்லது ஷூட்டிங்க கேன்ஸல் பண்ணிட்டு... அடுத்த விஷயத்தை யோசிப்பாங்க. ஆனா... சொல்லாம கிளம்பிப் போனதால முடிவு எதுவும் எடுக்க முடியாதபடி... குழப்பம் ஆகிருச்சே...' என எல்லோரும் வருத்தப் பட்டார்கள். பார்ட்னர் ஏன் சொல்லாமல் கிளம்பிப்போனார்... என்பது எனக்கு இன்றுவரை புரியவில்லை. அதன்பிறகு... கோபிச்செட்டிபாளையத்திலும் ஷூட்டிங் நடந்தது. பார்ட்னர் கலந்துகொண்டார். பார்ட்னர் கார்த்திக் -நான் -டைரக்டர் அமீர்ஜான் சார் கூட்டணி என்றால்... அந்தப் படம் வெற்றிபெறும். அதன்படி... ‘"வணக்கம் வாத்தியாரே'’ படமும் நன்றாக ஓடியது.

ன் முதல் தமிழ்ப்படமான "மன்மத லீலை'யில் எனக்கு டப்பிங் பேசியவர்... என் பள்ளித்தோழர் கண்மணி சுப்பு. கவியரசு கண்ணதாசன் அய்யா அவர்களின் மகன். ஜெயந்த்குமார், வினோதினி ஜோடியை வைத்து கண்மணி சுப்பு இயக்கிய "சித்திரைப் பூக்கள்' படத்தில் நான் முக்கிய கேரக்டரில் நடித்தேன். சரத்குமார் சாரும் முக்கிய கேரக்டரில் நடித்தார். "மாப்ள' தமிழ்மணி இந்தப் படத்தைத் தயாரித்தார். பத்திரிகைத் துறையிலிருந்து வந்தவர் "மாப்ள' தமிழ்மணி. அதனால் அவருக்கு, அதிகாரிகள் மட்டத்தில் நல்ல பழக்கம். தமிழ்மணி ஆபத்பாந்தவன். எனக்கும், அவருக்கும் இடையே கணக்கு, வழக்கு பார்க்கமாட்டோம்.

"குரோதம்'’ பிரேம், பிரபுமா... இருவரையும் வைத்து டபுள் ஹீரோ சப்ஜெக்ட்டில் ‘"பில்லா' கிருஷ்ணமூர்த்தி சார் இயக்கிய "வெற்றிக்கரங்கள்'’படத்தில் நானும் நடித்தேன். பிரேமின் மனைவி இந்திரா, சென்னை சட்டக்கல்லூரியில் நான் படித்தபோது... எனக்கு ஜூனியர். (அண்ணன் கே.ஜே.ஜேசு தாஸின் உறவினர் இந்திரா) இந்தப் படத்தை இந்திரா பெயரில் பிரேம் தயாரித்தார்.

பிரேம்-இந்திரா தம்பதி அமெரிக்காவில் மிக வசதி யாக வசிக்கிறார்கள். பிரேம் நல்ல பிசினஸ்மேன். நிறைய சம்பாதிப்பார். சென்னை வந்து படம் தயாரித்து, நடிப் பார். அதில் பிரேமுக்கு நஷ்டம்தான் ஏற்படும். திரும்ப அமெரிக்கா செல்வார். சம்பாதிப்பார்... படம் தயாரிக்க வருவார். ஒருமுறை நான் பிரேமிடம்... ""அமெரிக்காவுல சம்பாதிக்க வேண்டியது... அதை இங்க கொண்டுவந்து படம் எடுக்க வேண்டியது... நஷ்டப்பட வேண்டியது... இதென்ன வேண்டுதலா பிரதர்?''’என நான் கிண்டலாகக் கேட்டதுண்டு. ஆனால்... அவருக்கு சினிமாமேல் அப்படி ஒரு விருப்பம். பிரேம் தயாரித்து, நடித்த படங்களில் "குரோதம்'’படம் செமஹிட். அதனால்தான் அவரை "குரோதம்' பிரேம் என்பார்கள்.

சினிமா தயாரிப்பாளர்கள் யாருக்குமே பாக்கி வைக்காத தயாரிப்பாளர் பிரேம்.

radharaviருநாள் டைரக்டர் பி.வாசு சார் போன் செய்து வரச்சொன்னார். கலைஞர் அவர்களின் கோபாலபுரம் வீட்டுக்கு அருகில் பி.வாசுவின் வீட்டில் இருக்கும் ஃப்ரண்ட் ஆபீஸில் சந்தித்தேன்.

ஒரு கதையை அவுட் லைனாக சொல்லிவிட்டு... அந்தக் கதையில் வரும் ஒரு பெரியவீட்டின் மூத்த அண்ணன் கேரக்டரைப் பற்றி விவரித்தார்.

கதைப்படி... ஒரு விதவைத் தாயை தூக்கிவரச் செய்து, பூ வைத்தும், பொட்டு வைத்தும் துடிக்க வைப்பான் அந்தப் பெரிய அண்ணன்.

கதையை... குறிப்பாக பெரிய அண்ணன் கேரக்டரைக் கேட்டு நான் மிரட்சி ஆகிவிட்டேன்.

கதையை பி.வாசு சார் சொல்லி முடித்ததும்... “"இந்தப் படம் மிகப்பெரிய வெற்றியை எட்டும்'’என நான் சொன்னேன்.

தாலி சென்ட்டிமெண்ட் கதையான அதுதான் "சின்னத்தம்பி.' பிரபுமா, குஷ்பு, மனோரமா, சுலக்ஷனா, பெரிய அண்ணனாக நான்... என பலரும் நடித்த படம். வெவ்வேறு இடங்களில், சூப்பரான லொகேஷன்களில் ஷாட்ஸ் எடுத்து அதை ஒரு ஸீனாக இணைத்து படமாக்குவதில் பி.வாசு சார் மிகத்திறமையானவர்.

பவானிசாகர் அணைக்கட்டில் ஒரு சின்ன பில்டிங் இருக்கும். வெளியில் பார்க்க பிரமாதமாக இருந்தாலும், உள்ளே ஒரு பத்துபேர் சேர்ந்து நிற்கமுடியாது. அதைத்தான் கதைப்படி எங்கள் பெரிய குடும்பத்தின் வீடாகக் காட்டினார். பில்டிங்கை ஒட்டி நீர்நிலை இருப்பதால்... அந்த லொகேஷனை வீடாக்கினார். ஆனால் அதை வீட் டின் எக்ஸ்டர்னல் காட்சியாகத்தான் பயன்படுத்தினார்.

வீட்டின் இன்டர்னல் காட்சிகளை சென்னை யில் வாசன் ஹவுஸில் எடுத்து மேட்ச் பண்ணினார் பி.வாசு. கதைப்படி தாலியைப்பற்றி தெரியாத பிரபு, என் தங்கையான குஷ்புவுக்கு தாலி கட்டுவார். அதை எங்களுக்குத் தெரியாமல்... ஆடைக்குள் மறைத்து அணிந்திருப்பார் குஷ்பு. தாலியை பார்த்துவிடும் என் தம்பிகள்... குஷ்புவை அடிக்கப் பாய்வார்கள். நான் அவர்களை தடுத்து, குஷ்பு வைப் பார்த்து ஒரு புன்சிரிப்பு சிரிப்பேன். குஷ்பு நீண்ட டயலாக் பேசுவார். இந்த உணர்ச்சிகரமான காட்சியையும்கூட கட்பண்ணி கட்பண்ணித்தான் எடுத்தார் வாசு. ‘""என்னடா இது...?''’என நான் சலித்துக்கொண்டேன். ஆனால் திரையில் அது பிரமாத மாக இருந்தது.

ஒரு ஸ்டூல் மேல் குஷ்புவை நிற்க வைத்து... என் நெஞ்சில் குஷ்பு சாய்ந்துகொண்டு... “"அண்ணே.... நான் பார்த்த வெளி உலகத்து முதல் ஆம்பள சின்னத் தம்பிதான்...'’என லென்த்தியான டயலாக் பேசவேண்டும். குஷ்புவுக்கு தமிழ் பேச வராது அப்போது. ’"சின்னத்தம்பி' என்பதைத்தவிர வேறு டயலாக் எதுவும் பேசாமல் வாய்க்கு வந்ததை பேசச் சொன்னார் வாசு. அப்படியே குஷ்புவும் பேசினார்.

டயலாக்கை இப்படிப் பேசினாலும்... இந்தக் காட்சிக்கு குஷ்பு மேக்-அப் போட்டு தயாரான போது... பார்த்தேன். அழுது, அழுது மூக்கு சிவக்குமே... அதற்கேற்றாற்போல... மூக்கில் ரோஸ் பவுடரை தடவிக்கொண்டிருந்தார்.

"போச்சுடா... வடநாட்டுப் பொண்ணு... வளர்ந்து வர்ற நடிகை... இதுக்கு என்ன தெரியும்னு நினைச்சா... இவ்வளவு நுணுக்கமா இருக்கே? இந்தக் காட்சியில குஷ்பு பேர் வாங்கிடும்'’என நினைத்தேன்.

உண்மையைச் சொல்ல வேண்டுமென்றால்... குஷ்புவைப் பார்த்து நான் பயந்தேன்.

அடுத்த ஷாட்... நான் எட்டு டேக் வாங்கினேன்.

இவ்வளவு உணர்ச்சிகரமான காட்சி அமைப் பிற்கு காரணம்... அதற்கு முந்தைய காட்சியான... குஷ்பு கழுத்தில் தாலி இருப்பதை பார்ப்பதுதான்.

ஆனால்... தாலியைப் பார்த்த பிறகு உண் டாகும் எமோஷனல் காட்சியை எடுத்துவிட்டே... தாலியைப் பார்க்கிற காட்சியை எடுத்தார் பி.வாசு.

""உனக்கும் சின்னத்தம்பிக்கும் கல்யாணம் பண்ணி வைக்கிறேன்''’எனச் சொல்லிவிட்டு... வெளியே வந்து என் தம்பிகளிடம், ""சின்னத்தம்பிய தீர்த்திடுங்க''’எனச் சொல்வேன்.

இதை எங்களின் மனைவி கள் பார்த்து அதிர்ச்சியடை வார்கள். உடனே நான்... “""இந்த விஷயம் நந்தினிக்கு (குஷ்புவுக்கு) தெரிஞ்சது... எங்களுக்கு வேற கல்யாணம் நடக்கும்''’என்பேன்.

கடுமையான எச்சரிக்கையை இப்படி வித்தியாசமாக நான் சொல்ல... ஷூட்டிங் ஸ்பாட்டி லும், தியேட்டரிலும் கிளாப்ஸ் கிடைத்தது இந்த டயலாக்கிற்கு.

றையின் கதவைப் பூட்டிக்கொண்டு... கண்ணாடிப் பொருட்களையெல்லாம் உடைத்து நொறுக்கி... அதில் வெறும் பாதத்தில் நடந்தபடி... ‘"நீ எங்கே?'’பாடலைப் பாடி சோகத்தை வெளிப்படுத்துவார் குஷ்பு. நாங்கள் குஷ்புவுக்கு எதுவும் ஆகிவிடக் கூடாது என பதறி கதவைத் திறக்கச் சொல்லி தட்டவேண்டும்.

இந்த சீரியஸான காட்சியைப் படமாக்க தயாரானதும்... குஷ்புவுக்கு காட்சிகளை விளக்குவதற்காக அறைக்குள்ளே உதவி இயக்குநர் சௌந்தரை அனுப்பியிருந்தார்கள்.

நாங்கள் பதற்றத்துடன் கதவைத் தட்ட... உதவி இயக்குநர் ஏதோ ஞாபகத்தில் கதவைத் திறந்து... "என்னங்க?'’என கேட்க... விழுந்து விழுந்து சிரித்தோம். ஒருவழியாக சிரிப்பு அடங்கிய பிறகு... அந்தக் காட்சியை எடுத்தோம்.

விதவைத் தாயாக நடித்த மனோரமாவுக்கு பொட்டு வைத்து, பூ வைத்து சித்ரவதை செய்கிற ஸீன். எல்லாரும் ஷூட்டிங் ஸ்பாட்டில் இருந்தோம்.

"‘விதவைத் தாயை இப்படி கொடுமைப் படுத்துறது... இயற்கைக்கே தாங்கல...'’ என்பதுபோல காட்ட நினைத்தார் பி.வாசு. அதற்கு பலத்த காற்று வீச வேண்டும். அதனால்... சென்னையில் ஏவி.எம். ஸ்டுடியோவிலிருந்து புரபல்லர் மிஷின் கொண்டு வரச் சொல்லிவிட்டு... ஷூட்டிங்கை கேன்ஸல் செய்துவிட்டார்.

மறுநாள் புரபல்லர் வந்ததும் அந்தக் காட்சியை படமாக்கினார்.

இப்படிப் பார்த்துப்... பார்த்து படத்தை எடுத்து முடித்தார் பி.வாசு.

(படம் பார்த்துவிட்டு கெட்டவார்த்தையில் கமெண்ட் அடித்த பிரபலங்கள்)

nkn040918
இதையும் படியுங்கள்
Subscribe