கர்ஜனை! -"இளையவேள்'’ராதாரவி (106)

radharavi

(106) அம்மன் கடாட்சம்!

"பணக்காரன்'’படத்தின் கதைப்படி.. சுமித்ரா எனது சகோதரி. சொத்துக்கு ஆசைப்பட்டு அவரின் குழந்தையை கொலை செய்யச் சொல்லி, செந்தாமரை அண்ணனிடம் கொடுப்பேன். அவரோ... குழந்தையைக் கொன்றுவிட்டதாக பொய் சொல்லி... குழந்தையை வளர்ப்பார். அந்தக் குழந்தை வளர்ந்து வாலிபனாகும். அதுதான் ரஜினி சார் கேரக்டர்.

ரஜினி சாரும் என் மகளாக வரும் கௌதமியும் காதலிப்பார்கள். இது எனக்குப் பிடிக்காது. ரஜினி சாரை காலிசெய்ய, எஸ்டேட்டை கண்காணிக்கும் மேனேஜர் வேலைக்கு அனுப்புவேன். எஸ்டேட்டில் இருக்கும் முரடர்கள் கண்காணிப்பு பணிக்கு யார் வந்தாலும் கொன்றுவிடுவார்கள். இதனால் நான் அங்கு அனுப்பிவைப்பேன்.

ரஜினி சாரை அனுப்புவதற்கான காட்சி சாலிகிராமத்தில் உள்ள எஸ்.ஏ.சந்திரசேகர் சார் வீட்டில் எடுக்கப்பட்டது.

இதற்கான ரிகர்ஸல் நடந்தபோது... ரஜினி சாரிடம் நான்...

""இந்தாப்பா... இதுல நல்ல ட்ரெஸ் இருக்கு... போட்டுக்கோ. இந்தா விசிட்டிங் கார்டு. இது.... பால் கார்டு இல்ல... இந்தா... ஏரோபிளான்ல போறதுக்கு டிக்கெட். நீ பழைய ஞாபகத்துல... ‘"ஹோல்டன்'னு சொல்லி ஏரோபிளேன்லருந்து எறங்கீராத...''’எனச் சொன்னேன்.

சொன்ன அடுத்த நிமிஷமே எனக்கு குற்றஉணர்ச்சி.

ரஜினி சாரே பலமுறை... தான் பஸ் கண்டக்டராக வேலை பார்த்ததைப் பற்றி சொல்லியிருக்கிறார்... என்றாலும் எனக்கு ஏதோ... அவரை குத்திக்காட்டுவதுபோல் பேசிவிட்டதாகத் தோன்றியது.

"பழசை சொல்லிக்காட்டுறதா ரஜினி சார் நினைப்பாரோ...'’ எனவும் எனக்கு சங்கடமாக இருந்தது.

radharavi

ஃபைனல் ரிகர்ஸலின்போது... “"இது ஃபிளைட் டிக்கெட், நடுவுல இறங்கிடாத...'’என்று மட்டும் சொன்னேன்.

""நீங்க முதல்ல சொன்னது நல்ல

""நீங்க முதல்ல சொன்னது நல்லா இருந்துச்சே... அதையே சொல்லுங்க''’என்றார் ரஜினி சார்.

ஆனால் நான் சொல்ல மறுத்துவிட்டேன்.

"பணக்காரன்'’படப்பிடிப்பு ஊட்டியில் நடந்தபோது... நாங்கள் சதர்ன் ஸ்டார் ஹோட்டலில் தங்கியிருந்தோம்.

அந்தச் சமயம்... தயாரிப்பாளர் சங்கத்தில் சில முடிவுகள் எடுத்திருந்தார்கள். அதன்படி... “படப்பிடிப்பிற்காக ஹோட்டலில் தங்கியிருக்கும் நட்சத்திரங்கள், தொழில்நுட்பக் கலைஞர்கள் தங்கள் இஷ்டத்துக்கு உணவு வகைகளை ஆர்டர் செய்யக்கூடாது. தேவையில்லாமல் போன் செய்யக்கூடாது. அப்படிச் செய்வதாக இருந்தால்... போன் பேசியதற்கான பில் தொகையை கொடுத்துவிட வேண்டும். படப்பிடிப்பு இடங்களுக்கு செல்வதைத் தவிர... வெளியிடங்களுக்கு போவதென்றால் கம்பெனி காரை பயன்படுத்தக்கூடாது...’’

-இப்படி பல கண்டிஷன்கள் போடப்பட்டன.

""உணவு ஆர்டர் செய்றதுக்கும், வீட்டுக்கு போன் பேசுறதுக்கும் போட்ட கண்டிஷன்களுக்கு நான் கட்டுப்படமாட்டேன்''’எனச் சொல்லிவிட்டேன்.

தயாரிப்பாளர் சங்கத்திலிருந்து உத்தரவு வந்த முதல்நாள் மட்டும் அதை தீவிரமாக அமல்படுத்திய சத்யஜோதி தியாகராஜன் சார்... பிறகு ஃபிரீயாக விட்டுவிட்டார்.

ரஜினி சார் படப்பிடிப்பு என்றாலே... ஜாலியாக இருக்கும். அதிலும் ரஜினி சாருடன் ஒரே ஹோட்டலில் தங்கியிருந்து ஷூட்டிங் போவதென்றால்... ரொம்ப ஜாலிதான்.

என் வளர்ச்சியில் அக்கறைகொண்ட... டைரக்டர் அமீர்ஜான் சார் இயக்கத்தில், பார்ட்னர் கார்த்திக், சித்தாரா, குயிலி, சார்லி, வாத்தியார் ராமன்... ஆகியோருடன் மெயின் வில்லனாக கராத்தே ஹுஸைனி நடித்த படம் "உன்னைச் சொல்லி குற்றமில்லை.'

அமீர்ஜான் சார் டைரக்ஷனில் நானும், பார்ட்னரும் சேர்ந்து நடிக்கும்போது... எங்களுக்குள் நடிப்பு போட்டியே இருக்கும். அதனால் படம் நன்றாக அமையும். வெற்றியும் அடையும்.

குயிலி நல்ல நடிகை. நல்ல டான்ஸரும்கூட.

சகோதரர் சார்லியைப் பார்க்கும்போது எனக்கு சந்திரபாபு சார் ஞாபகம்தான் வரும். சார்லி நன்கு படித்தவர், நல்ல அறிவாளி. (நாங்கள் கோவில்பட்டியில் நாடகம் போட்டபோது... சார்லியின் அப்பா எங்களுக்கு உதவி செய்தார்.)

ஃபாஃசில் உள்ளிட்ட மலையாள டைரக்டர்கள் தமிழில் படம் எடுக்கும்போது... தங்கள் படங்களில் சார்லியை நடிக்கவைப்பார்கள். சார்லி ஒரு பிராமிசிங் ஆக்டர்.

"உன்னைச் சொல்லி குற்றமில்லை'’படத்தில் பார்ட்னருக்கு போலீஸ் இன்ஃபாமர். நான் போலீஸ் அதிகாரி.

சித்தாரா என் மகள். கார்த்திக் லவ் பண்ணுவார்.

""என் பொண்ணு யாரையோ விரும்புறா. அது யார்?னு கண்டுபிடிச்சு சொல்லு''’என போலீஸ் இன்ஃபாமரான கார்த்திக்கிடமே நான் சொல்லுவேன்.

இப்படி பல ஸீன்கள் விறுவிறுப்பாக இருக்கும். நான் போலீஸ் வேஷத்தை ரசித்துச் செய்த சில படங்களில் இதுவும் ஒன்று.

படம் பெரும்வெற்றி பெற்றது. இதற்கு மிகமுக்கிய காரணம்... அமீர்ஜான் சாரின் ‘ஸ்டார் காஸ்டிங்.

உதாரணத்திற்கு... அப்பாவி தோற்றம் கொண்ட வாத்தியார் ராமன் அவர்களை கஞ்சா கடத்துபவராக காண்பித்தார் அமீர்ஜான்.

இராம.நாராயணன் சார் இயக்கிய ‘"மனைவி ஒரு மாணிக்கம்'’ படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்தேன்.

பத்துப் பதினைந்து பாம்புகளை உடல் முழுக்க போட்டுக்கொண்டு... பாம்பாட்டி சித்தராக நடித்தேன். “"கறுப்பு நிறத்தைப் பார்த்தா பாம்பு கொத்தும். அதனால... உங்க கண்ணுக்கிட்ட பாம்பை கொண்டு போயிராதீங்க. கவனமா நடிங்க'’என உஷார் படுத்தினார்கள். அதனால் மிக கவனமாக நடித்தேன்.

அபூர்வமான அனுபவத்தைத் தந்தது இந்தப்படம்.

கண்ணகியின் சிலம்பை அடிப்படையாகக் கொண்டு அமைக்கப்பட்ட கதையில் உருவான படம் "சிலம்பு.'’

கே.ஆர்.விஜயாம்மா, சகோதரர் சரத்பாபு உள்ளிட்டவர்களுடன் நான் நடித்த படம். "நேதாஜி' இயக்கினார். போடி மெட்டு பகுதியில் படப்பிடிப்பு நடந்தது.

போடி மெட்டுவில் கே.ஆர்.விஜயாம்மாவுக்கு எஸ்டேட் உண்டு. அங்கிருந்து பார்த்தால் போடி நகரம் முழுமையாகத் தெரியும். அந்த எஸ்டேட்டில் பிரமாதமாக ஒரு அம்மன் கோயில் கட்டியுள்ளார். கே.ஆர்.விஜயாம்மாவுக்கு அம்மன் கடாட்சம் உண்டு.

""ஏம்மா உங்களுக்குச் சொந்தமான எஸ்டேட் எத்தனை ஏக்கர் இருக்கும்?'' என்று அவரிடம் கேட்டேன்.

மூன்று மலைகளை கை காட்டினார்.

ஆரம்ப காலங்களில் திருச்சி -சங்கிலியாண்டபுரத்தில் எங்களின் வீட்டுக்கு எதிரில்தான் கே.ஆர்.விஜயாம்மா குடியிருந்தார். பிறகு சென்னை வந்தார்.

நாங்களும் சென்னை வந்தபிறகு... நான் சிறுவயதாக இருக்கும்போது... ஒருநாள் தி.நகர். வாணி மஹாலில் என் அப்பாவின் தலைமையில் ஒரு மேஜிக் ஷோ நடந்தது. நாங்கள் குடும்பத்துடன் போயிருந்தோம்.

"அந்த மேஜிக் ஷோவில் பங்கேற்ற ஒரு பெண்ண ஞாபகம் இருக்கா? அவர்தான் "கற்பகம்'’ பட நாயகி கே.ஆர்.விஜயா'’என பின்னாளில் என்னிடம் சொன்னார் மேக்-அப்மேன் கஜபதி அண்ணன். ‘"தெய்வநாயகி'’ என்கிற பெயரை "விஜயா'’என மாற்றி வைத்துக்கொள்ளச் சொன்னது என் அப்பாதான் என்பதையும் கஜபதி அண்ணன் சொன்னார்.

கடும் உழைப்பால் இந்த உயர்வை கே.ஆர்.விஜயாம்மா எட்டியிருக்கிறார்.

அம்மன் கடாட்சம் பெற்றவராயிற்றே...!

கே.ஆர்.விஜயாம்மா எஸ்டேட் பகுதியில் படப்பிடிப்பு நடந்தபோது... தினமும் நானும், சரத்பாபுவும் அதிகாலை நான்கு மணிக்கெல்லாம் எழுந்து வாக்கிங் போவோம்.

தினசரி படப்பிடிப்பை வேடிக்கை பார்க்க வந்ததன் மூலம் பழக்கமான ஒரு இருளர் இன இளைஞர் ""ராதாரவி சார்... இவ்வளவு வெள்ளனத்துல வாக்கிங் வராதீங்க. இது யானைங்க இருக்கிற காடு''’என்றார்.

அப்புறமென்ன... நாங்கள் தங்கியிருந்த வீட்டுக்குள்ளேயே வாக்கிங் போக ஆரம்பித்தோம்.

(தாணு சார் எனது நல்ல நண்பர். சிலசமயம்... அவர் என் நண்பர்தானா?’ என்கிற சந்தேகத்தை ஏற்படுத்தும் தாணு சாரின் பிஹேவியர்)

அந்த இருவர்!

எனது நண்பர் பல்லடம் டி.எம்.எஸ்.பழனிச்சாமியைப் பற்றி சொல்லியிருந்தேன்.

பல ஆண்டுகளுக்கு முன்...

ஒருநாள் அவர் எனக்கு போன் செய்து... “""கோவையிலருந்து பாலக்காடு போற ரோட்டில் இருக்கிற நவக்கரை நந்திகோயில்ல இருக்கும் ராமநாத சுவாமிகள் தங்களை பார்க்கணும்கிறார்''’எனச் சொன்னார். ""எனக்கு விருப்பமில்லை'' என்பதைச் சொன்னேன்.

""இல்ல... ‘ராதாரவிக்கு ஏதாவது ஆகுற மாதிரி செய்ங்கனு நடிகர் சங்கத்துல உங்களுக்கு எதிரா இருக்க ரெண்டு முக்கிய நபர்கள் வந்து சாமியார்கிட்ட சொல்லீருக்காங்க. அது சம்பந்தமாத்தான் பேசணுமாம்''’என்றார்.

நான் கோவை சென்று பழனிச்சாமியுடன் சுவாமியைச் சந்தித்தேன். (பாலக்காட்டில் தியேட்டர் நடத்திக்கொண்டிருந்தவர்... அதை விட்டுவிட்டு பக்தி மார்க்கத்தில் சுவாமிகள் ஆகிவிட்டார்.)

""உனக்கு கெடுதல் செய்யச் சொல்லி ரெண்டுபேரும் வந்தாங்க. ஆனா... நான் அதுக்கு மறுத்திட்டேன்''’எனச் சொல்லி அந்த இரண்டு பேர்களின் பெயர்களையும் சொன்னார் சுவாமி.

ஒரு பிரபல நடிகரின் பெயரால் நடிகர் சங்கத்தில் எனக்கு எதிராக குரல் கொடுத்து வந்த இரண்டு நடிகர்கள்தான் அவர்கள்.

அவர்களின் பெயரை நான் சொல்ல விரும்பவில்லை.

nkn280818
இதையும் படியுங்கள்
Subscribe