மாவட்ட ஆட்சியருக்கு வந்த புகாரின் அடிப்படையில், முறையாக அனுமதி பெறாமல் மருத்துவம் பார்த்ததால் கிளினிக்கிற்கு சீல் வைத்து, வைத்தியரை கைது செய்தது சிவகங்கை மாவட்ட காவல்துறை. ஒரு வைத்தியர் கைது செய்யப் பட்டவுடனேயே வழக்கமாக, அவர் போலி வைத்தியர் என்று சமூக வலைத்தளங்கள் அச்செய்தியை ஊதிப் பெரிதாக்கும். ஆனால், இந்த புத்தூர் கட்டு பாண்டி என்ற வைத்தியர் கைதை பொறுத்தவரை, "இது நாட்டு வைத்தியத்தை அழிப்பதற்கான ப்ளான். பின்னணியில் மெடிக்கல் மாஃபியா இருக்கிறது' என்று கைதுக்கு எதிராகவும், மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராகவும் போராட்டத்தில் இறங்கியுள்ளனர், அவரது வைத்தியத்தால் பலனடைந்த பொதுமக்கள்.
"எலும்பு முறிவு, முடக்குவாதம், நரம்புத் தளர்ச்சி போன்ற நோய்களுக்கு நான் ஸ்பெஷலிஸ்ட். என்னை நாடி வருபவர்களுக்கு நான் நோய் தீர்க்கும் கடவுள். 18 சித்தர்களில் நான் ஒருவன். என்னை தொட்டுப் பார்க்கணும் என நினைக்கிறீர்களா? தொட்டுப் பார்த்துக் கொள்ளுங்கள். கண்களில் ஒற்றிக்கொள்ளுங்கள். நான் தான் கடவுள்'' என இன்ஸ்டாகிராமில் நேரடியாக லைவ் வீடியோ போடுவது நெடுஞ்செழியன் எனும் புத்தூர் கட்டு பாண்டியின் ஸ்டைல். சிவகங்கை மாவட்டம், நெற்குப்பை அருகே ஆத்திகாடு பகுதியைச் சேர்ந்த புத்தூர் கட்டு பாண்டி, தொடக்கத்தில் திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சியில் நுட வைத்தியராக பணியாற்றி வந்திருக்கின்றார். பின்னாளில், திண்டுக்கல்லை சேர்ந்த சித்த மருத்துவரின் சான்றிதழை துணைக்கொண்டு சிங்கம்புணரியில் வைத்திய சாலையை ஆரம்பித்திருக்கின்றார்.
வைத்தியம் செய்துகொள்

வைத்தியம் செய்துகொள்ள வந்தவர்களை அருகில் வைத்துக்கொண்டு ஆயில் தேய்ப்பது, கட்டு கட்டுவது என நேரடியாக இன்ஸ்டாவில் லைவ் கொடுப்பதும், குணமடைந்தவர்களின் அனுபவங்களை சொல்லக்கூடிய வீடியோ பதிவுகளும் புத்தூர் கட்டு பாண்டிக்கு இந்த வைத்தியத்தில் அசுர வளர்ச்சியை பெற்றுத் தந்திருக்கிறது. அதுபோல், தினசரி இத்தனை நபர்களுக்கு தான் வைத்தியம் என டோக்கனை கொடுத்து டிமாண்டை உருவாக்கியதும், இவர் தனது தயாரிப்பாகக் கொடுக்கும் 200 மி.லி. தைலத்தை ரூ.600-க்கு விற்பனை செய்வதும் இவருக்கு பெரிய அளவு வருவாயை ஈட்டித் தந்திருக்கிறது.
இந்த நிலையில், தேவகோட்டை சார்-ஆட்சியர் ஆயுஷ் வெங்கட் வாட்ஸ் தலைமையில் சிவகங்கை மாவட்ட சுகாதாரத் துறை இணை இயக்குனர் அருள்தாஸ், திருப்பத்தூர் காவல் துணை கண்காணிப்பாளர் செல்வகுமார், மாவட்ட சுகாதார அலுவலர், சிங்கம்புணரி வட்டாட்சியர், மாவட்ட சித்த மருத்துவ அலுவலர், சிங்கம்புணரி நகர காவல் ஆய்வாளர் உள்ளிட் டோர், சிங்கம்புணரியி லுள்ள புத்தூர் கட்டு பாண்டியின் மருத் துவமனைக்கு அதிரடியாக சென்று, "நீங்கள் என்ன படித் துள்ளீர்கள்? அதற்கான சான்றிதழ் எங் கே? இங்குள்ள தைலங்கள் ஐ.எம்.ஏ.வின் அனுமதி பெற்று தயாரிக்கப்பட்டதா?'' எனப் பல கேள்விகளை புத்தூர் கட்டு பாண்டியிடம் தொடர்ந்து கேட்டிருக்கின்றனர். அவரும், தன்னிடமிருந்த சான்றிதழ்களை காண்பிக்க, "இது பொய்யான சான்றிதழ்'' எனக் கூறியவர்கள், அவரை மருத்துவமனையை விட்டு வெளியே அழைத்துவந்து, கைது செய்வதாக அறிவித்தனர்.
பின்னர், அவரது உரிமத்தில் சந்தேகம் இருப்பதாகவும், கால், கைகளில் தேய்ப்பதற்கு பயன்படுத்தும் தைல பாட்டில்களில் தயாரிப்பு தேதி, காலாவதி தேதி, தைலம் தயாரிக்கும் பொருட்களின் விபரம் இல்லாததால், தைல பாட்டில்கள், எண்ணெய் வகைகள், பச்சை மூலிகை போன்ற பொருட்களை பறிமுதல் செய்த பின் மருத்துவமனைக்கு சீல் வைத்தனர். புத்தூர் கட்டு பாண்டியோ, "மக்களே, உங்களுக்காக நான் இருந்தேன், என்னை கைது செய்கிறார்கள்'' என்று அங்கே குழுமியிருந்த மக்களை நோக்கி அழுது அரற்ற, அங்கிருந்த போலீஸ் அதிகாரிகளைப் பார்த்த மிரட்சியில், மக்கள் யாருமே கேள்வி கேட்காத நிலையில் போலீஸாரால் அழைத்துச் செல்லப்பட்டார் புத்தூர் கட்டு பாண்டி.
/filters:format(webp)/nakkheeran/media/media_files/2026/01/27/medical1-2026-01-27-11-39-31.jpg)
இதுகுறித்து மாவட்ட சுகாதாரத்துறை இணை இயக்குனர் அருள்தாஸ் கூறுகையில், "அவரிடம் சிகிச்சை செய்வதற்கான மருத்துவச் சான்றிதழ்கள் இல்லை. அதுபோக, பிளஸ் 2 வரை படித்த நெடுஞ்செழியன் என்ற புத்தூர் கட்டு பாண்டி, திண்டுக்கல்லில் அனுமதி பெறாத நிறுவனத்தில் பாரா மெடிக்கலில் உதவி செவிலி யர் படிப்பை படித்துள்ளார். மேலும், இவர் திண்டுக்கல்லை சேர்ந்த பிரபல மருத்துவரின் சான்றை போலியாகப் பயன்படுத்தி மருத்துவ மனையை நடத்தி வந்துள்ளார் என்பதும் தெரியவந்ததால் அவர்மீது புகாரளிக்கப்பட்டது'' என்றார். புத்தூர் கட்டு பாண்டியின் கைது, மாவட்ட நிர்வாகத்திற்கு எதிராக சமூக வலைத்தளத்தில் பல அதிர்வுகளை உருவாக்கி யுள்ளது.
புத்தூர் கட்டு பாண்டியிடம் சிகிச்சை யெடுத்து பலனடைந்த பரமக்குடி செல்ல முத்துவோ, "எனக்கு நீண்ட நாட்களாக மூட்டு வலி இருந்தது. நான் பல ஊர்களில் இருக்கும் மருத்துவர்களைப் பார்த்தேன். ஆனால் எந்த மருத்துவமும் எனக்கு சரிப்பட்டு வரல. கடைசியில், மூட்டு வலியை விட ஒவ்வொரு ஆஸ்பத்திரியா போயிட்டு வர வலி தான் அதிகமாகிடுச்சு. அதனால மருத்துவம் பார்க்கறதையே விட்டுட்டேன். என்னோட சொந்தக்காரங்க கல்யாணத்துக்கு போயிருந்தப்ப பஸ்ல வந்த ஒருத்தர் புத்தூர் கட்டு பாண்டியை பத்தி சொன்னாரு. சரி, போய் பார்க்கலாம்னு போய் பார்த்தேன். பார்த்த ஒரு மாசத்திலேயே அவர் கொடுத்த தைலத்துல என்னோட வலி கொஞ்சம் குறைஞ்சிடுச்சு. இப்ப அவரோட தைலத்தை தேய்ச்சு நல்லபடியா இருக்கேன்'' என்றார்.
சொக்கலிங்கபுரத்தை சேர்ந்த பாப்பாத்தி என்பவரோ, "எங்க ஊர்க்காரங்க கூட ரொம்ப வருஷமா கால் முறிஞ்சி ஆங்கில மருத்துவம் பார்த்தார்கள். எதுவுமே பலனளிக்காமல் இருந்தபோது தான், தெரிஞ்சவங்க இந்த ஊருக்கு போயி அவங்ககிட்ட புத்தூர் கட்டு கட்டுங்க, நல்லா இருக்கும்னு சொன்னாங்க. அதேபோல அங்க போய் கட்டு கட்டிட்டு வந்தாங்க. கட்டு கட்டுன ரெண்டு மாசத்துலேயே அவங்க கொஞ்சம் நல்லாவே எந்திரிச்சு நடக்க ஆரம்பிச்சிட்டாங்க'' என்றார்.
பெயர் கூறாத பாரம்பரிய வைத்தியர் ஒருவரோ, "புத்தூர் கட்டு பாண்டியின் மருத்துவமனையில் அலோபதி சம்பந்தமான எந்தவொரு பொருளையும் எடுக்கவில்லை. அப்படியிருக்கையில் அவரை அவசர
அவசரமாகக் கைது செய்யவேண்டிய அவசியம் என்ன? அரசு மருத்துவர்கள் என்று கூறிக்கொண்டு அரசாங்கத்திடம் சம்பளத்தை பெற்றுக்கொண்டு, தனியார் மருத்துவமனைக்கு செல்ல மாட்டேன் என்று உத்தரவாதம் கொடுத்துவிட்டு, பல அரசு மருத்துவர்கள் தனியார் மருத்துவமனைகளை கட்டி பிராக்டீஸ் செய்கிறார்கள்.
மாவட்ட நிர்வாகம் என்ன நடவடிக்கை எடுத் துள்ளது? குழந்தையை இயற்கையாகப் பிறக்கவிடாமல், சிசேரியன் செய்தால் பணம் கிடைக்குமென்ற அற்ப ஆசையில், தண்ணீர் சத்து கூடிவிட்டது, தண்ணீர் சத்து குறைந்து விட்டது என்று சொல்லி, அந்த குழந்தை பிறப்பதற்கு முன்பாகவே ஆபரேஷன்களை செய்யக்கூடிய மருத்துவர்கள்
மீது என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறார்கள்? அடிபட்டால் உடனே ஆபரேஷன் செய்தால் சரியாகும் என்ற தவறான எண்ணத்தை உடைத்தவர் புத்தூர் கட்டு பாண்டி. பல லட்சங் களையும், வலி, வேதனைகளை
யும் மிச்சம் செய்தவர். அது பொறுக்காத
அலோபதி மருத்துவ உலகம் தான் இந்த வேலையை செய்திருக்கிறது. இது நாட்டு வைத்தியத்தை அழிப்பதற்கான பிளான். இதன் பின்னணியில் மெடிக்கல் மாஃபியா இருக்கிறது'' என்றார் அவர்.
"பாரம்பரியமாக வைத்தியம் செய் பவர்களுக்கு தாசில்தார் அந்தஸ்திலான அதிகாரி ஒரு சான்றிதழ் கொடுப்பார். அதனை வைத்து வைத்தியம் பார்க்கலாம். ஆனால் விளம்பரம் செய்யக்கூடாது. அந்த தவறு தான் இப்போது புத்தூர் கட்டு பாண்டிக்கு கைது வரை சென்றுள்ளது. இன்னொன்று, பாரம்பரிய வைத்தியர் என்றாலும் தங்களது தயாரிப்பு
களுக்கு அவசியம் அனுமதி வாங்க வேண்டும். அதுவும் இல்லை. புத்தூர் கட்டு பாண்டி திறமையானவர் என்பதில் சந்தேகமில்லை.
நமக்கு என்ன தேவையோ அதை மட்டும் பேச வேண்டும். 18 சித்தரில் தானும் ஒருவன் எனவும், என்னை வணங்க வேண்டும் எனவும் வற்புறுத்திப் பேசுவதை கண்டும்காணாமல் இருக்க முடியாது. எனினும், இவர் மீதான கைது நடவடிக்கை பல சர்ச்சைகளை எழுப்பியுள்ளது என்பது நிஜம்'' என்கின்றார் மாவட்ட மருத்துவ அலுவலர் ஒருவர்.
பாரம்பரிய மருத்துவம் காக்கப்பட வேண்டுமென்பதே பலரின் கோரிக்கை. இதற்கு தமிழ்நாடு அரசின் அரவணைப்பும், ஒத்துழைப்பும் அவசியம்.
{{access_wall.title}}
{{access_wall.description}}
Follow Us