கராட்சி மாமன்றக் கூட்டத்தில் ஆளுங்கட்சி சேர்மனை எதிர்த்து ஆளுங்கட்சி கவுன்சிலர்கள் காரசாரமாகக் கேள்வியெழுப்பினர். அப்போது எதிர்க்கட்சி கவுன்சிலர் தீர்மானங்கள் ஆல் பாஸ் எனச் சொல்லி கூட்டத்தை முடிக்கச்செய்தது ஆளும்கட்சியின ரிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

cs

திருப்பத்தூர் நகரமன்றக் கூட்டம் கடந்த மாதம் நடைபெற்றது. இதில் சேர்மன் சங்கீதா வெங்கடேசனை நோக்கி துணைத்தலைவரான ஷபியுல்லா கேள்விமேல் கேள்வி கேட்டது பரபரப்பாகியுள்ளது. அதுகுறித்து அவரிடமே நாம் கேட்டபோது, "மூன்று மாதத்துக்கு ஒருமுறைதான் மீட்டிங் நடக்கிறது, அந்த மீட்டிங்கை யும் 10 நிமிடத்தில் முடித்துவிடுகிறார். இதனால் வார்டு களில் உள்ள குறைகளை எங்களால் பேசமுடிவதில்லை. நாங்களும் எவ்வளவு நாளைக்கு அமைதியாக இருப்பது, அதனால்தான் கூட்டத்தில் கேள்வி எழுப்பினேன். நகராட்சி பேருந்து நிலையத்தில் 55 கடைகள் கட்டப்பட்டு ஒன்றரை வருடங்களாகிறது. பலமுறை ஏலம் வைக்கிறார்கள், பின்னர் ஒத்திவைக்கிறார்கள்.

மூன்று மாதத்துக்கு முன்பு அ.தி.மு.க.வைச் சேர்ந்த ஒப்பந்த தாரர் மகேஷ், ஏலத்தில் கலந்துகொள்ள ஒரு கடைக்கு 50,000 என 50 டி.டி எடுத்துத் தந்தார். அவருக்கு ஒப்பந்தம் தந்தார்கள். பின்னர் அதனை ரத்து செய்துவிட்ட தாகச் சொன்னார்கள். அதன்பின் இப்போதுவரை சம்பந்தப்பட்டவ ரிடம் டி.டி.யைத் திருப்பித்தரவில்லை. நகராட்சி அலுவலகத்திலும் கிடை யாது. இதுகுறித்து கேட்டபோது பதிலில்லை. இது மட்டுமல்ல, பல ஃபைல்கள் அலுவலகத்திலிருந்து காணாமல்போகிறது, விவகாரம் பெரியதாகி புகார் தரலாம் என முடிவுசெய்தால் பீரோவுக்கு கீழே இருந்தது எனச்சொல்லி சேர்மன் கணவர் வெங்கடேசன் ஃபைல் கொண்டுவந்து தருகிறார். நகராட்சி அலுவலக பில்டிங் இன்னும் இரண்டு மாதத்தில் 5.5 கோடிக்கு கட்டப்படவிருக்கிறது. இப்போதுள்ள கட்ட டம் இடிக்கப்பட வுள்ளது. ஆனால் அத னைச் சீரமைக்கிறேன் என 25 லட்சம் ஒதுக்கப்பட் டுள்ளது. இதுகுறித்தெல்லாம் கேள்வி கேட்டால் பதிலில்லை. நான் கேள்வி கேட்டுக்கொண் டிருக்கிறேன். உடனே அ.தி.மு.க. கவுன்சிலர் தேவி எழுந்து, தீர்மானம் ஆல் பாஸ் என்கிறார். சேர்மன்தான் அதனைச் சொல்லவேண்டும். ஆனால் எதிர்க்கட்சி கவுன்சிலர் சொல்கிறார், சேர்மனும் கூட்டத்தை முடித்து விட்டார்'' என்கிறார்.

Advertisment

cs

தி.மு.க. கவுன் சிலர்கள் ஷபினா ரசாக், முஜிபூர் ரஹ்மான், மனோகரன், சுதாகர், ஐயப் பன், சுகுணா, அபுபக்கர் போன்றோர் நம்மிடம், "36 வார்டுகளில் 20 வார்டு களுக்கு மேல் கால்வாய் பிரச்சனை, பாதாளச் சாக்கடை பிரச்சனை இருக்கிறது. 15-வது வார் டில் சத்துணவு மையக் கட்டடம் மோசமாக உள்ளது. புது கட்டடம் கட்டித்தரச்சொல்லி 5 முறை மனு தந்தும் நடவடிக்கை இல்லை. இரண்டரை வருடமாக ரயில்வே காலனி பாதையில் லைட் எரியவில்லை. 6-வது வார்டில் கால்வாய் அமைக்கவில்லை, தண்ணீர்த் தொட்டி பராமரிப்பு இல்லை, அங்கன்வாடி மையத்தில் 50 குழந்தைகள் படிக்கிறார்கள். அதைச் சீர்செய்யச்சொல்லி பலமுறை மன்றத் தில் சொல்லியும் நடவடிக்கை எடுக்கவில்லை. பாரதிதாசன் நகரில் தண்ணீர் டேங்க் கட்டித்தரவில்லை, காடியாங்குட்டையில் உயர் தண்ணீர்த்தொட்டி இடிந்துவிழும் நிலையில் உள்ளது. அதனை அகற்றி புது தண்ணீர்த் தொட்டி அமைக்கச்சொல்லிக் கேட்கிறோம்... இதுவரை செய்யவில்லை.

குடிதண்ணீருக்கான மோட்டார் பம்ப் ரிப்பேராகிவிட்டால் நகராட்சி அதனைச் சரி செய்வதில்லை. நாங்களே சொந்தக் காசு போட்டு பலமுறை மோட்டார் சரி செய் கிறோம். இதோ அதற்கான பில் எங்களிடம் உள்ளது. கவுன்சிலர்களுக்கு தரும் அஜன்டாவில் இருப்பதுபோல் மினிட் புத்தகத்தில் இல்லை. கூட்டம் நடக்கும் போது எங்களிடம் கையெழுத்து வாங்கிக் கொண்டு அதன்பின் சில தீர்மானங் களைச் சேர்த்து மோசடி செய்யறாங்க''’என அடுக்கினர்.

ம.தி.மு.க.வைச் சேர்ந்த கவுன்சிலர் சரவணன், "“சேர்மனின் மொபைல் எண், கவுன்சிலர்கள் யாரிடமும் இல்லை. எதுவாக இருந்தாலும் அவரது கணவர் வெங்க டேசனிடம்தான் பேசவேண்டிய நிலை. கவுன்சிலர்கள் போன் செய்தால் அவர் எடுப்பதேயில்லை. கடந்த இரண்டரை ஆண்டுகளில் பல வார்டுகளுக்கு இது வரை சேர்மன் வந்ததில்லை. சேர்மன் நாற்காலிக்கு அருகில் அவரது கணவர் வெங்கடேசன் சேர் போட்டு உட்கார்ந்து கொள்கிறார். வார்டு களிலுள்ள குறைகளை நாங்கள் சொல்லத் தொடங்கினால் எழுந்து மற்றொரு அறைக்குள் போய் விடுகிறார். நாங்கள் செல்லும்வரை அவர் வெளியே வருவதில்லை. சேர்மன் சங்கீதா பொம்மை மாதிரி உட்கார்ந்திருக்கிறார். எதைச்சொன்னாலும் கணவரை கைகாட்டுகிறார். கமிஷனரும் அவரிடம்தான் கேட்கிறார். மக்கள் முன் நாங்கள் அசிங்கப்படுகிறோம்''’என்றார்.

இதுபற்றி நகரமன்றத் தலைவர் சங்கீதா வெங்கடேசன் மொபைல் எண்ணுக்கு தொடர்பு கொண்டபோது, நமது அழைப்பை எடுக்க வில்லை.

சங்கீதா வெங்கடேசன் சிறப்பாகச் செயல்படுவார் என அவரை சேர்மனாக்கியவர் ந.செ ராஜேந்திரன். அவரிடம் சேர்மன் தரப்பின் மோசமான நடவடிக்கை குறித்து முறையிட்டுள்ளனர். நான் பேசறேன்னு சொல்லி கண்டுகொள்ளவில்லை. இதனால் அமைச்சர் எ.வ.வேலுவிடம் முறையிட முடிவு செய் துள்ளனர். சேர்மனின் தவறுகளுக்கு ஆதர வாக தொகுதி எம்.எல்.ஏ இருப்பதால், இப்போது கோஷ்டி சண்டையாகவும் மாறுகிறது.

-து.ராஜா