திருச்சி கொட்டப்பட்டு மத்திய சிறையிலுள்ள சிறப்பு முகாமில் இந்தோனேஷியா, தாய்லாந்து உட்பட பல்வேறு நாடுகளைச் சேர்ந்த வெளிநாட்டைச் சேர்ந்த கைதிகள் 108 பேர் தங்கவைக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பல்வேறு வழக்குகளில் தொடர்புடை யவர்கள், போலி கடவுச்சீட்டு, விசா காலம் முடிந் தும் இங்கு தங்கியவர்கள். அவர்கள் மீதான வழக்கு கள் இன்றும் நிலுவையில் இருப்பதால் இங்கிருந்து வெளியே அனுப்பப்படாமல் தங்க வைக்கப் பட்டுள்ளனர். தங்கள் மீது எந்த வழக்குகளும் இல்லை என்றும், தங்கள் மீதான வழக்குகள் முடிந்த நிலையில் தமிழக அரசு தங்களை விடுதலை செய்யவேண்டும். குடும்பங்களோடு சேர்ந்து வாழ அனுமதிக்கவேண்டும் என்றும் கோரிக்கையை தமிழக அரசிடம் முன்வைத்து வருகின்றனர்.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/lawyer_15.jpg)
இதற்காக பல போராட்டங்களை தொடர்ந்து நடத்திவரும் அவர்கள், கடந்த மே மாதம் 20-ஆம் தேதி சிறப்பு முகாமிற்குள் உண்ணாவிரதப் போராட்டத்தைத் தொடங்கினார்கள். பலருடைய உடல்நிலை மிகவும் மோசமான நிலையை எட்ட, அவர்களுக்கு திருச்சி மகாத்மா காந்தி நினைவு அரசு மருத்துவ மனையில் தீவிர சிகிச்சையளிக்கப் பட்டது.
அடுத்தகட்டமாக தற்கொலை செய்து கொள்ளும் போராட்டத் தை நடத்தினார்கள். அதில் பலர், அளவுக்கு அதிகமான தூக்க மாத்திரைகளைத் தின்று, தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். டிக்சன் என்பவர் கழுத்தை அறுத் தும், ரமணன் என்பர் வயிற்றுப் பகுதியை அறுத்தும் தற்கொலை முயற்சியில் ஈடுபட்டனர். இவர்கள் அனைவருக்கும், மத்திய சிறை மற்றும் அரசு மருத் துவமனைகளில் சிகிச்சை அளிக்கப்பட்டது.
/nakkheeran/media/post_attachments/sites/default/files/inline-images/lawyer1_2.jpg)
இதையடுத்து திருச்சி மாவட்ட ஆட்சி யர் நேரில் சென்று அவர்களைப் பார்த்து சமாதானம் பேசியதோடு, போராட்டத்தைக் கை விட வேண்டுமென்றும், கோரிக்கைகளை பரிசீலித்து உரிய நடவடிக்கை எடுப்பதாகவும் உறுதியளித்தார். கடந்த சில வாரங்களுக்கு முன் போராட்டத்தில் ஈடுபட்டுவரும் இலங்கைத் தமிழர்களில் ஒருவர் தீக்குளித்து தற்கொலைக்கு முயன்றார். அவரை மீட்ட அதிகாரிகள், அவருக்கு திருச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சையளித்து வருகின்றனர். இன்னும் சிலர் அதிகமான மாத்திரைகளை எடுத்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றனர்.
இதனையடுத்து இலங்கைத் தமிழர் நல் வாழ்வுத்துறை ஆணையர் ஜெசிந்தா லாசரஸ் முகாமில் உள்ளவர்களை நேரில் சந்தித்து, அவர் களிடம் போராட்டத்தை கைவிடக் கோரினார். வழக்குகள் நிலுவையில் இல்லாதவர்கள் விரைவில் தங்களுடைய குடும்பங்களோடு சேர்ந்து வாழ அரசு நடவடிக்கை எடுக்கும் என்று நம்பிக்கையளித் தார். இதையடுத்து தமிழகம் முழுவதுமுள்ள முகாம் களிலிருந்து எவ்வித வழக்குகளும் நிலுவையில் இல்லாத 16 பேரை முதல்கட்டமாக விடுவித்து அரசு உத்தரவிட்டது. எனினும் வழக்கு நிலுவையில் இல்லாத இன்னும் 21 பேர் சிறையிலிருப்பதாகவும் அவர்களையும் விடுவிக்க வேண்டுமென்றும் தொடர்ந்து போராட்டத் தில் ஈடுபட்டு வருகின்றனர்.
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062512996z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/agency_attachments/2025/05/19/2025-05-19t062422400z-nkn-png-logo-640x480-nakkheeran-adops.png)
/nakkheeran/media/post_attachments/sites/default/files/2022-07/lawyer-t.jpg)