100 நாட்களைக் கடந்திருக்கும் மு.க. ஸ்டாலின் தலைமையிலான தி.மு.க. ஆட்சியின் முதல் நிதிநிலை அறிக்கையும் தாக்கல் செய்யப் பட்டுள்ளது. வெள்ளை அறிக்கையில், அரசுப் பேருந்து ஒன்று இயங்குவதால் ஒரு கிலோ மீட்ட ருக்கு 59 ரூபாய் அளவுக்கு நட்டம் என நிதியமைச் சர் தெரிவித்திருந்த நிலையில், பஸ் கட்டணம் உயரும் என்ற பதற்றம் மிகுந்த எதிர்பார்ப்பு பொதுமக்களிடம் இருந்தது. எனினும், நிதிநிலை அறிக்கையில் கட்டண உயர்வு பற்றிய அறிவிப்பு இல்லை. டீசல் விலை உயர்ந்துள்ள நிலையில், போக்குவரத்துக் கழகத்திற்கான நிதி ஒதுக்கீட்டில் கவனம் செலுத்தியுள்ளது தி.மு.க. அரசு.

Advertisment

bb

மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு அடுத்த படியாக சாமானிய மக்களின் அன்றாட வாழ்க்கையோடு கலந்திருக் கிறது போக்குவரத்து. இந்த துறையின் அமைச்சராக ராஜகண்ணப்பனை நிய மித்திருக்கிறார் ஸ்டாலின். சீனியரான ராஜ கண்ணப் பனின் அமைச்சரவை அனுபவம், அ.தி.மு.க. அரசின் நிர்வாக சீர்கேடுகளால் நட்டத்தில் இயங்கும் போக்குவரத்து துறையை மீட்க உதவும் என்பதாலேயே ராஜ கண்ணப்பனுக்கு இந்த வாய்ப்பு தரப்பட்டுள்ளது.

தமிழகத்திலுள்ள 8 போக்குவரத்து கழகங் கள், 23 மண்டலங்கள் மூலம் 22,000 பேருந்துகளை இயக்கி வருகிறது போக்குவரத்து துறை. சராசரியாக ஒரு நாளைக்கு 2 கோடி பேர் அரசு பேருந்துகளை பயன்படுத்துகின்றனர். கொரோனா நெருக்கடி களால் அமல்படுத்தப்பட்ட பொது முடக்கத்தால் பொது போக்குவரத்தும் முடங்கிப் போயிருந்தன. இதனால் கிட்டத்தட்ட 5000-த்திற்கும் அதிகமான பேருந்துகள் சிதிலமடைந்திருந்தன. அமைச்சரானதுமே அதனை நல்ல கண்டிஷனுக்கு கொண்டு வந்தார் கண்ணப்பன்.

Advertisment

cc

ஆட்சி பொறுப்பேற்ற தும் மகளிருக்கான கட்டண மில்லா பேருந்து திட்டத்தை அறிவித்தார் முதல்வர் ஸ்டாலின். "நகரப் பகுதிகளுக்கான சாதாரண பேருந்துகளில் இலவசமாக பெண்கள் பயணிக்கலாம்' என அறிவிக்கப்பட்டது. ஆனால், சாதாரண பேருந்துகள் நகரத்தில் இயக்கப்படுவது மிக மிக குறைவு; அதனால் திட்டத்தில் பயனில்லை என்ற குற்றச்சாட்டுகள் எழுந்தன. உடனே கண்ணப்பனை அழைத்து விவாதித்தார் ஸ்டாலின். அப்போது, மற்றவகை பேருந்துகளை குறைத்து 10 நிமிடத்துக்கு ஒரு சாதாரண பேருந்து வருவதுபோல அதன் எண்ணிக்கையை அதிகரிக்கவும், "பெண்களுக்கு இலவசம்' என்கிற போர்டை வைக்கவும் உத்தரவிட்டார் ஸ்டாலின். அதன்படி ஓரிரு நாளில் இதற்கான இயக்கத்தை தமிழகம் முழுவதும் கவனித்த சாமானியர்கள் வியந்து போனார்கள்.

பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு செல்லும் பெண்கள், அரசு மற்றும் தனியார் வேலைக்கு செல்லும் பெண்கள்; மீன், பூ, பழம், காய்கறிகள் விற்பனை செய்யும் பெண்கள்; வீட்டு வேலை மற்றும் கட்டிட வேலைக்கு செல்லும் பெண்கள் என பல தரப்பட்ட பெண்களும் இந்த இலவச பேருந்துகளை பயன்படுத்தினர். அவர்களின் முகத்தில் சிரிப்பையும் உற்சாகத்தையும் பார்க்க முடிந்தது. காரணம், ஒரு நாளைக்கு சராசரியாக 100 ரூபாய் என மாதம் 3000 ரூபாய் பஸ்ஸிற்காக செலவு செய்து வந்த நிலையில்... அந்த 3000-மும் மிச்சமாகியிருப்பதில்தான் அவர்களுக்கு உற்சாகம். மேலும், "ஆண்களின் ஆபாசப் பார்வையிலிருந்து அவர்கள் தப்பிப்பது இரட்டை சந்தோஷம்'‘’ என்கிறார்கள் நம்மிடம் பேசிய கண்டக்டர்கள்.

Advertisment

இலவச பேருந்தை 40 சதவீத பெண்கள் பயன்படுத்துவார்கள் என அதிகாரிகளால் கணக்கிடப்பட்டிருந்தது. அதன் மூலம் 1200 கோடி ரூபாய் போக்குவரத்து துறைக்கு இழப்பு ஏற்படும் என தெரிவித்திருந்தனர். அந்த 1200 கோடியையும் போக்குவரத்துத்துறைக்கு அரசு கொடுக்கும் என சொல்லி ஊழியர்களின் வயிற்றில் பால் வார்த்தார் ஸ்டாலின்.

அதேசமயம், பெண்களுக்கான இலவச பேருந்துகளை திட்டமிடப்பட்டதைவிட கூடுதலாக இயக்க அமைச்சர் ராஜ கண்ணப்பன் உத்தரவிட்டதால் பேருந்துகளை பயன்படுத்தும் பெண்களின் எண்ணிக்கை 65 சதவீதமாக உயர்ந்தது. இதனால் அரசுக்கு இன்னும் 600 கோடி ரூபாய் கூடுதல் செலவு.

bb

முதல்வர் ஸ்டாலினை சந்தித்து கண்ணப்பன் இதுபற்றி விவரிக்க... இந்த திட்டத்தை பெண்கள் மிகவும் வரவேற்கிறார்கள் என தமிழகம் முழுவதுமி ருந்தும் ரிப்போர்ட் வருகிறது. அதனால் "கூடுதல் செலவுகள் ஏற்படுவது குறித்து கவலை வேண்டாம். அதனை அரசு பார்த்துக்கொள்ளும்' என்று சொல்லி, திட்டத்தை மேலும் விரிவுப்படுத்த கண்ணப்பனுக்கு ஆலோசனை வழங்கியிருக்கிறார் ஸ்டாலின்.

அந்த வகையில் ஒரு நாளைக்கு சராசரியாக 30 லட்சம் பெண்கள் இலவச பேருந்துகளை பயன்படுத்துகின்றனர். திட்டம் துவக்கப்பட்ட 16.6.2021-லிருந்து 10.8.2021 வரை பெண்கள், திருநங்கைகள், மாற்றுத் திறனாளிகள் என 9 கோடியே 50 லட்சம் பெண்கள் பலனடைந்துள்ள னர். பெண்களுக்காக மட்டுமே 5,000 பேருந்துகள் இயக்கப்பட்ட நிலையில் தற்போது 8,000 பேருந்துகளை இயக்கி வருகிறார் கண்ணப்பன்.

சாதாரண பேருந்துகள் இயக்கப்படாத வழித்தடங்களிலும் பெண்களுக்கான இலவச பேருந்து இயக்கப்படுகிறது. தமிழகத்தின் தென்கோடியில் இருக்கும் நகரங்களைச் சேர்ந்த பெண்கள், தமிழகத்தில் வெவ்வேறு மாவட்டங் களில் இருக்கும் தங்களின் உறவுகளை பார்ப்பதற் காக இலவச பேருந்துகளை பயன்படுத்துவதும் நடக்கிறது. அதாவது ஒவ்வொரு ஊராக மாறி மாறி சென்று வருகின்றனர். ஆக, உழைக்கும் பெண்களின் குடும்பத்தில் மாதம் 3000 ரூபாய் மிச்சப்படுத்தி கொடுத்துள்ள முதல்வரை வாழ்த்துகிறார்கள். ஸ்டாலின் பஸ் என்ற பெயரும் இந்தப் பேருந்துகளுக்குக் கிடைத்துள்ளது -தமிழக பெண்களின் சமூக விடுதலைக்கும் பொருளாதார சூழல்களுக்கும் இந்த திட்டம் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது.

இந்தியாவிலேயே அதிக பேருந்துகளை இயக்கும் மிகப்பெரிய பொதுத்துறை நிறுவனம் தமிழகம்தான். ஆனால், அ.தி.மு.க. ஆட்சியின் நிர்வாக சீர்கேடுகளால் வருஷத்துக்கு 3,500 கோடி ரூபாய் நட்டத்தை சந்தித்து வருகின்றன போக்குவரத்து கழகங்கள். உதிரி பாகங்கள் தொடங்கி புதிய பேருந்துகள் வாங்குவதுவரை நடக்கும் கமிஷன், கரப்ஷன்கள்தான் நட்டத்துக்கு முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது. அ.தி.மு.க. ஆட்சியால் ஏற்பட்ட நிர்வாக சீர்கேடுகளால் தான் ஒரு கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு பேருந்தை இயக்கினால் சுமார் 59 ரூபாய் நட்டம் ஏற்படுகிறது.

இந்த நட்டத்திலிருந்து போக்குவரத்து கழகங்களை மீட்பதுதான் அமைச்சர் ராஜகண்ணப்பனுக்கு சவாலாக இருக்கிறது. காரணம், கொரோனா காலத்தில் பல மாதங்களாக பேருந்துகள் முடக்கப்பட்டதால் வருவாய் இழப்பு பன்மடங்கு அதிகரித்துக்கிடக்கிறது. ஆனால், மாத சம்பளம் உட்பட செலவினங்கள் மட்டும் கூடிக்கொண்டே இருக்கிறது.

bus

இதுகுறித்து சமீபத்தில் ஸ்டாலினுடன் விவாதித்திருக்கிறார் கண்ணப்பன். அப்போது, நட்டத்திற்கு பல காரணங்கள் இருந்தாலும் வருவாயை விட செலவினங்கள் அதிகமாக இருக்கிறது. பெட்ரோல், டீசல் விலை கடுமையாக உயர்ந்தும் பஸ் கட்டணத்தை உயர்த்தாது தான் முக்கிய காரணமென அதிகாரிகள் சொல்கிறார்கள். ஆனால், பஸ் கட்டணத் தை உயர்த்தாமலே நட்டத்தி-ருந்து கழகத்தை 8 மாதங்களில் மீட்க முடியும் என்று சில யோசனைகளை தெரிவித்துள் ளார் கண்ணப்பன். அதனை செயல்படுத்த ஒப்புதல் தந்துள்ளார் ஸ்டாலின். அதற்கான பணிகள் துவக்கப்பட்டுள்ளது.

குறிப்பாக, பணிமனைகளில் உள்ள தில்லுமுல்லுகள், அதிக எரிபொருளை சாப்பிடும் பேருந்துகள், திருடப்படும் பெட்ரோல், டீசல்கள் அதிகாரிகளுக்கு தேவைக்கதிகமாக செலவிடப்படும் செலவினங்கள் ஆகியவற்றை ஆய்வு செய்துள்ள கண்ணப்பன், அவைகளை சரிசெய்து வருகிறார். மேலும், பீக் அவர்சில் தனியார் பேருந்துகளுக்கு வழிவிடும் வகையில் அரசு பேருந்துகள் இயக்கப் படாத தில்லுமுல்லுகளை கண்டறிந்து அதிகாரிகளுக்கு செம டோஸ் கொடுத் துள்ளார் கண்ணப்பன். குக்கிராமங்கள் மற்றும் மலைக் கிராமங்களுக்கும் பேருந்து களை இயக்க உத்தரவிடப்பட்டிருக்கிறது.

பெண்களுக்கான இலவச பேருந்துகள் மூலம் பரவலான வரவேற்பை பெற்றுள்ள போக்குவரத்துறையில் பணி ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு கடந்த 4 ஆண்டுகளாக கொடுக்கப்படாமல் இழுத்தடிக்கப்பட்ட நிலுவை தொகை 497 கோடி ரூபாயை உட னடியாக கண்ணப்பன் வழங்கியதை மகிழ்ச்சியாக பார்க்கின்றனர் பணியாளர்கள்.

இந்த நிலையில், பஸ் கட்டணத்தை உயர்த்தாமல் அடுத்த 8 மாதங்களில் கழகங்களை நட்டத்திலிருந்து மீட்பேன் என சபதம் எடுத்துக் கொண்டிருக்கிறார் கண்ணப்பன். மக்கள் தலையில் சுமையை ஏற்றாமல் சீர்கேடுகளை களைய உத்தர விட்டிருக்கிறார் ஸ்டாலின். இனி உருவா கும் பிரச்சனைகளை சமாளிப்பதில்தான் இருக்கிறது கண்ணப்பனின் அனுபவம் என்கிறார்கள் அதிகாரிகள்.

(துறைகள் தொடரும்)

_______________________________

பொய்ப் புகார்!

நான் கடந்த 45 ஆண்டுகளாக மருத்துவப் பணி செய்து வருகிறேன். பல்வேறு சமூக நல அமைப்புகளிலும் பொறுப்புகள் வகித்து வருகிறேன். இவைதவிர வேறு எந்தத் தொழிலும் செய்தததில்லை. 2021, ஆகஸ்ட் 11-13 நக்கீரன் இதழில், “"போன ஆட்சியில் புகார்.. இந்த ஆட்சியிலாவது நடவடிக்கை? பாதிக்கப்பட்டோர் எதிர்பார்ப்பு!'” கட்டுரையில் என்னைப் பற்றி உண்மைக்குப் புறம்பான செய்திகள் இடம் பெற்றுள்ளன. நான் வட்டிக்கு கடன் கொடுக்கும் தொழில் செய்வதில்லை. என்னைப் பொருளாதார ரீதியாக ஏமாற்றியதுடன் -என் வளர்ச்சியைக் கண்டு காழ்ப்புணர்வு கொண்ட நபரின் பொய்யான புகார் இது.

-டாக்டர் ச.ராமதாஸ்

குழந்தைகள் நல மருத்துவர், திருக்கோகர்ணம்.