Advertisment

புதுக்கோட்டை! போலீசார் வேட்டை! கால் உடையும் ரவுடிகள்!

ss

டந்த சில மாதங்களாக தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க ரவுடிகள் வேட்டையைத் தொடங்கிய போலீஸ், சில என்கவுன்டர்களையும் செய்தது ரவுடிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் உயிர்பயம் கவ்விய ரவுடிகள், தங்களுக்கு ஆதரவான போலீசாரின் உதவியுடன் காவல் நிலையங்களில் சரணடையும் சம்பவங்கள் அரங்கேறிக்கொண்டிருக் கின்றன. சென்னை, சென்னை புறநகர் மற்றும் திருச்சி, கோவை, மதுரை போன்ற நகரங்களில் ரவுடிகளை ஒடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளைப் போலவே புதுக்கோட்டை மாவட்டத்திலும் ரவுடிகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, பயத்தில் பதுங்கியிருக்கும் ரவுடிகளைப் பிடிக்க மாவட்ட எஸ்.பி. வந்திதா பாண்டே தனிப்படைகளை அமைத்து தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளார்.

Advertisment

இதில் பலர், அடுத்தடுத்த குற்றச் சம்பவங்களி

டந்த சில மாதங்களாக தமிழ்நாட்டில் சட்டம் ஒழுங்கைப் பாதுகாக்க ரவுடிகள் வேட்டையைத் தொடங்கிய போலீஸ், சில என்கவுன்டர்களையும் செய்தது ரவுடிகள் மத்தியில் பீதியை ஏற்படுத்தியுள்ளது. அதனால் உயிர்பயம் கவ்விய ரவுடிகள், தங்களுக்கு ஆதரவான போலீசாரின் உதவியுடன் காவல் நிலையங்களில் சரணடையும் சம்பவங்கள் அரங்கேறிக்கொண்டிருக் கின்றன. சென்னை, சென்னை புறநகர் மற்றும் திருச்சி, கோவை, மதுரை போன்ற நகரங்களில் ரவுடிகளை ஒடுக்க எடுக்கப்படும் நடவடிக்கைகளைப் போலவே புதுக்கோட்டை மாவட்டத்திலும் ரவுடிகளைக் கட்டுப்படுத்த நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, பயத்தில் பதுங்கியிருக்கும் ரவுடிகளைப் பிடிக்க மாவட்ட எஸ்.பி. வந்திதா பாண்டே தனிப்படைகளை அமைத்து தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளார்.

Advertisment

இதில் பலர், அடுத்தடுத்த குற்றச் சம்பவங்களில் ஈடுபடுவதற்காகத் தலைமறைவாக, அவர்களைத் தனிப்படை போலீசார் தேடி வருகின்றனர். இந்த நிலையில், ஆலங்குடி தாலுகா, நெடுவாசல் கிழக்கு பகுதியில் பன்னீர் என்பவரது வீட்டில் சில ரவுடிகள் தங்கியிருப்பது பற்றிய தகவல் கிடைத்து, எஸ்.பி.யின் தனிப்படை உதவி ஆய்வாளர் பாலமுருகன் டீம் நெடுவாசலில் குறிப்பிட்ட வீட்டை சோதனை செய்தபோது, அங்கிருந்து ஒரு காரில் சிலர் தப்பிச் சென்றதாகக் கூறப்படுகிறது.

ss

இந்தத் தகவலை வடகாடு காவல் ஆய்வாளர் தனபாலுக்கு தனிப்படை போலீசார் பாஸ் செய்தனர். அதையடுத்து வடகாடு காவல் ஆய்வாளர் மற்றும் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்த நிலையில், அந்த வழியாக வந்த ஒரு காரை நிறுத்தி சோதனை செய்தனர். காரில் இருந்தவர்கள் சந்தேகத்திற்கிடமாகப் பதில் சொன்னதால் அனைவரையும் விசாரித்துக் கொண்டிருந்தபோது ஒருவர் மட்டும் காரிலிருந்து இறங்கி தப்பி ஓடிவிட்டார். மீதமிருந்த 4 பேரிடம் நடத்திய விசாரணையில், உடையாளிப்பட்டி காவல் நிலைய சரித்திர குற்றப் பதிவேட்டிலுள்ள ரவுடிகளான திருச்சி திருவரம்பூர் தாலுகா, பூலாங்குடி பாரத் நகர் பாலாஜி, புதுக்கோட்டை மாவட்டம் குளத்தூர் தாலுகா கீழையூர் குருமூர்த்தி, ஆலங்குடி விஜயமார்த்தாண்டன் என்பதும், தப்பி ஓடிய நபர் ராப்பூசல் கிராமத்தைச் சேர்ந்த பாலு (எ) பாலமுத்து என்பதும் தெரியவந்தது. இவரது பெயர் மாத்தூர் காவல் நிலையத்தில் சரித்திரப் பதிவேடு குற்றப் பதிவில் இருப்பதும் தெரியவந்தது.

Advertisment

ddதொடர்ந்து காரை சோதனை செய்தபோது, காருக் குள் அரிவாள்கள், கத்தி, இரும்புக் குழாய், 9 செல்போன் கள், ரூ.65 ஆயிரம் பணம் ஆகியவற்றை கைப்பற்றிய வட காடு போலீசார், தப்பி ஓடிய பாலமுத்துவை தேடிச் சென்றபோது, அவர் தடுமாறி விழுந்ததில் அவரது கால் உடைந்துள்ளது. அதனால் பாலமுத்துவை புதுக்கோட்டை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்த போலீசார், மற்ற 4 பேரையும் கைது செய்து நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி சிறைக்கு அனுப்பிவைத்துள்ளனர்.

பாலமுத்து, கடந்த ஆண்டு தனது நண்பனையே திருமணத்திற்கு முதல் நாள் மாத்தூரில் வைத்து கொன்ற வழக்கில் கைது செய்யப்பட்டவர். இவரை இப்போது திருச்சியில் பிடித்துக் கொண்டுவந்து, வடகாட்டில் பிடித்ததாக போலீசார் கூறுவதாகத் தெரிவிக்கிறார்கள் விபரமறிந்த சிலர். நெடுவாசல் பகுதியில் சரித்திரப் பதிவேட்டுக் குற்றவாளிகள் ஆயுதங்களுடன் தங்கியிருந்தது ஏன்? இந்தப் பகுதியில் ஏதேனும் சம்பவம் செய்வதற்காகத் தங்கியிருந்தார்களா? வேறு யாருக்காவது ஸ்கெட்ச் போடு வதற்கான அசைன்மெண்ட்டில் இங்கே தங்கியிருந்தார் களா? என்பது குறித்தெல்லாம் தீவிரமாக விசாரணை நடந்து வருகிறது. மேலும், தெற்கு மற்றும் மத்திய டெல்டா மாவட்டங்களில் குற்றச்சம்பவங்களில் ஈடுபடும் ரவுடிகள், கூலிப்படையினர், புதுக்கோட்டை மாவட்டத் தில் அடைக்கலம் புகுவது சில ஆண்டுகளாகத் தொடர்கதையாகி வருகிறது. அதனால் புதுக்கோட்டை மாவட்டம் முழுவதும் கூடுதல் தேடுதல் வேட்டை நடத்தப்படுவது அவசியமாகிறது. அதேபோல, அரிவாள் தூக்கிய பல ரவுடிகள் தற்போது இளைஞர்களையும் மாணவர்களையும் குறிவைத்து கஞ்சா போன்ற மாற்றுப் போதைப்பொருட்களை விற்பனை செய்வதை முன்னெடுத்து வருகின்றனர். ரவுடிகள் வேட்டையில் அரசியல் குறுக்கீடுகளை சமாளிப்பதற்கே போதும் போதுமென்றா கிறது என்கின்றனர் போலீசார். ரவுடி களைக் கட்டுப்படுத்துவதோடு, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருட்களின் புழக்கத்தையும் கட்டுப்படுத்துவது அசியமென்று சமூக ஆர்வலர்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.

nkn231024
இதையும் படியுங்கள்
Here are a few more articles:
Read the Next Article
Subscribe