3 பெண்கள் பலி! -அலட்சிய புதுச்சேரி அரசு!

sss

அந்த செவ்வாய்க்கிழமை எளிதாக புலர்ந்துவிடவில்லை புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதி மக்களுக்கு. "கழிவறைக்கு ஒதுங்கி நேரமாச்சே? அம்மாவைக் காணலையே?' என கழிவறைக்குள் அம்மாவைத் தேடிய மகளும், அம்மாவுடன் சேர்ந்து மூர்ச்சையாகி மரணமானார். இன்னொருபுறம் தாய், தந்தை வேலைக்குச் சென்ற நிலையில் கழிவறைக்கு ஒதுங்கிய +1 மாணவியும் மூர்ச்சையாகி மரணமடைய... அப்பகுதியே மரண ஓலத்திடம் மண்டியிட்டது.

""பொதுவெளியில் கழிப்பிடம் இல்லை. 100 சதவீதம் வீடுகளில் கழிப்பிடங்கள் கொண்ட மாநிலம் என அரசு அறிவித்தபோது நாங்கள் அடையாத மகிழ்ச்சி இல்லை. சுற்றுலாத் தலம் என்பதால் எங்கு பார்த்தாலும் குப்பைக் கூளங்கள். ஊருக்குள்ளே சாக்கடை நதிகள். மனிதக்கழிவுகள். இதெற்கெல்லாம் விடிவு காலம் என்றால் யாருக்குத் தான் மகிழ்ச்சி இருக்காது. ஆனால் அதே திட்டத்தால், அதிகாரிகளின் லஞ்ச லாவண்யத்தால் விஷவாயு தாக்கி மூன்று உயிர்கள் பலியானதுதான் மிச்சம். இப்பொழுது அரசு அறிவித்திருக்கின்ற நிவாரண நிதி யாருக்கு வேண்டும்..? தனியாரிடம் ஒப்படைத்த ஒப்பந்தத்தை ரத்து செய்து, துரிதமாக வேலை செய்து இருக்கின்ற

அந்த செவ்வாய்க்கிழமை எளிதாக புலர்ந்துவிடவில்லை புதுச்சேரி ரெட்டியார்பாளையம் பகுதி மக்களுக்கு. "கழிவறைக்கு ஒதுங்கி நேரமாச்சே? அம்மாவைக் காணலையே?' என கழிவறைக்குள் அம்மாவைத் தேடிய மகளும், அம்மாவுடன் சேர்ந்து மூர்ச்சையாகி மரணமானார். இன்னொருபுறம் தாய், தந்தை வேலைக்குச் சென்ற நிலையில் கழிவறைக்கு ஒதுங்கிய +1 மாணவியும் மூர்ச்சையாகி மரணமடைய... அப்பகுதியே மரண ஓலத்திடம் மண்டியிட்டது.

""பொதுவெளியில் கழிப்பிடம் இல்லை. 100 சதவீதம் வீடுகளில் கழிப்பிடங்கள் கொண்ட மாநிலம் என அரசு அறிவித்தபோது நாங்கள் அடையாத மகிழ்ச்சி இல்லை. சுற்றுலாத் தலம் என்பதால் எங்கு பார்த்தாலும் குப்பைக் கூளங்கள். ஊருக்குள்ளே சாக்கடை நதிகள். மனிதக்கழிவுகள். இதெற்கெல்லாம் விடிவு காலம் என்றால் யாருக்குத் தான் மகிழ்ச்சி இருக்காது. ஆனால் அதே திட்டத்தால், அதிகாரிகளின் லஞ்ச லாவண்யத்தால் விஷவாயு தாக்கி மூன்று உயிர்கள் பலியானதுதான் மிச்சம். இப்பொழுது அரசு அறிவித்திருக்கின்ற நிவாரண நிதி யாருக்கு வேண்டும்..? தனியாரிடம் ஒப்படைத்த ஒப்பந்தத்தை ரத்து செய்து, துரிதமாக வேலை செய்து இருக்கின்ற மிச்ச உயிர்களையாவது காப்பாற்றுங்கள் அது போதும் எங்களுக்கு'' என மூன்று உயிர்களைப் பலிகொடுத்த நிலையில்... ரெட்டியார்பாளையம் கம்பன் நகர் அருகே சாலை மறியலில் ஈடுபட்டனர் புதுச்சேரி மக்கள்.

ரெட்டியார்பாளையம், ஜவஹர் நகர் மற்றும் உழவர் நகர் பகுதிகளிலிருந்து உள்ள கழிவு நீர் இணைப்புக்கள் பாதாளச் சாக்கடை மூலமாக கனகன் ஏரியை ஒட்டியுள்ள சுத்திகரிப்பு நிலையத்தில் சுத்திகரிப்பு செய்து கனகன் ஏரி வாய்க்காலில் விடப்படுகிறது. சரியாக வீட்டிலிருந்து கழிவு நீர் வெளியேறுகிறதா.? அடைப்பு இருக்கின்றதா.? விஷவாயு உருவாகின்றதா.? என்பதனைக் கண்காணித்து, அதனை சீரமைக்க பொதுப்பணித்துறை அதிகாரிகள் மேற்பார்வையில் தனியார் நிறுவனத்திற்கு ஒப்பந்தத்தை அளித்துள்ளது புதுச்சேரி அரசு.

மூன்று உயிர்களைப் பலிவாங்கிய ரெட்டியார்பாளையம் பகுதி கனகன் ஏரிக்கு தெற்குப் பக்கத்திலும், வடக்குப் பக்கத்தில் முதல்வர் ரங்கசாமியின் இல்லமும் உள்ளது. செவ்வாய்க்கிழமை காலை சரியாக 8.80 மணியளவில் ரெட்டியார்பாளையம் புதுநகர் 4வது குறுக்குத் தெரு மக்களுக்கு ஒருவிதமான கண் எரிச்சல். இருப்பினும் அதனைக் கண்டுகொள்ளாது அன்றாட வேலைகளில் கவனம் செலுத்திய நிலையில், இயற்கை உபாதைக்காக, தன்னுடைய வீட்டிலுள்ள கழிப்பறையில் ஒதுங்கிய மாணவி செல்வராணியை மயக்கமான நிலையில் மீட்டெடுத்துள்ளனர் சகோதரர் ஜானியும் தாத்தா ஆசீர்வாதமும். அது போல் அப்பகுதியிலுள்ள, செல்வராணி வீட்டிலிருந்து 6வது வீட்டிலுள்ள கழிப்பறையில் மூதாட்டி செந்தாமரையையும், அவரது மகள் காமாட்சியையும் மயக்கமாக மீட்டெடுத்தார் பேத்தி பாக்கியலட்சுமி. அதற்கடுத்தாற் போல் வீட்டிலுள்ள பாலகிருஷ்ணனும் மயக்க நிலையிலேயே மீட்கப்பட்டனர். இது அக்கம்பக்கத்தினருக்கு தெரியவர, லேட்டாகவே சுதாரித்தவர்கள், ""விஷவாயு தாக்குகிறது... வெளியே வாருங்கள்'' என கூக்குரலிட்டு அழைக்க ஒட்டுமொத்த ஏரியாக்காரர்களும் வீதியின் மத்தியில் குவிய ஆரம்பித்தனர். இந்த நிலையில், விஷவாயு தாக்கி மயங்கிய அனைவரும் ஆட்டோ மூலம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்ட நிலையில் மாணவி செல்வராணி, மூதாட்டி செந்தாமரை, அவரது மகள் காமாட்சி உயிரிழந்தது தெரியவந்தது.

மூவர் உயிரிழந்த தகவல் மாநிலத்தையே அசைத்த நிலையில், சாவகாசமாக வந்து பாதிக்கப்பட்ட பகுதிகளுக்கு மக்கள் செல்லாதவாறு கயிறு கட்டியும், மீதமுள்ள மக்களுக்கு முகக்கவசமும் கொடுத்தனர் உழவர்கரை நகராட்சி அதிகாரிகளும், ரெட்டியார்பாளையம் போலீசாரும். "இந்தப் பகுதி மக்கள் சமையலறை மற்றும் கழிவறையைப் பயன்படுத்த வேண்டாம்' என அதிகாரிகள் அறிவுறுத்த, "இது காலைக்கடனுக்கான நேரம்! தற்காலிக கழிப்பறை வசதியை ஏற்படுத்திக் கொடுங்க' என அதிகாரிகளிடம் மல்லுக்கு நின்றனர் அப்பகுதி மக்கள்.

""இந்த மரணத்தால் வீட்டிலுள்ள கழிவறைக்குப் போகவே பயமாயிருக்கின்றது எங்களுக்கு. இதனால் மீண்டும் புதுச்சேரி மாநிலம் திறந்தவெளி கழிப்பிட மையமாக மாறினாலும் ஆச்சரியமில்லை. துர்நாற்றம் அதிகமாக இருக்குன்னு பல தடவை கம்ப்ளைண்ட் கொடுத்திருக்காங்க இப்பகுதி மக்கள். பெரிய, பெரிய ஹோட்டலில் இதுபோல் வேலை செய்தால் நிறைய பணம் கிடைக்கும் பொதுப்பணித்துறைக்கும், கழிவுநீர் சுத்தம் செய்யும் தனியார் நிறுவனத்திற்கும். அப்புறம் எப்படி வீடுகளில் உள்ள பிரச்சினைகளை சரிசெய்ய வருவாங்க.. அப்படியே மீறி வந்தாலும் "உன் வீட்டில்தானே பிரச்சனை. ஆயிரம், இரண்டாயிரம் செலவாகும்' என பெரிய தொகை கேட்கின்றார்கள். மீறி சட்டமன்ற உறுப்பினரிடம் கூறினாலும் பிரயோசனமில்லை. வடக்குப் பக்கம் இந்த விஷவாயு போயிருந்தால் முதல்வர் உயிரோடு இருப்பாரா..? நிவாரணத்தை விடுத்து இணைப்புக்களை சுத்தம் செய்யுங்க. அப்பொழுதுதான் எஞ்சியிருக்கின்ற ஜனங்கள் உயிர் பிழைக்க முடியும்'' என்கின்றார் அதே பகுதியைச் சேர்ந்த முருகன்.

கடந்த நான்கு மாதங்களுக்கு முன்னரே கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையத்தின் டெண்டர் முடிந்துவிட்டதாகவும், அதனால் எந்தவித பராமரிப்பு பணியும் மேற்கொள்ளாததாலும், புதுவை அரசின் அலட்சிய போக்காலும் உயிரிழப்பு ஏற்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு.

சம்பவ இடத்திற்கு வந்த முதல்வர் ரங்கசாமியோ, ""பலியான பள்ளி மாணவிக்கு ரூ.30 லட்சம், செந்தாமரை மற்றும் காமாட்சிக்கு தலா ரூ.20 லட்சம் நிதி வழங்குவதாக அறிவித்தார்.

இது இப்படியிருக்க... "இச்சம்பவம் குறித்து துறை ரீதியான விசாரணைக்கு உத்தரவிட வேண்டும். மேலும் இதுபோன்ற சம்பவம் தொடராமல் இருக்க உயர்நிலைக் குழு அமைத்து புதுச்சேரி முழுக்க பாதாள சாக்கடை திட்டத்தை முழுமையாக ஆய்வு செய்யவேண்டும்'' என்கின்ற கோரிக்கையும் வலுப்பெற்றுள்ளது.

இதையும் படியுங்கள்
Subscribe