சுற்றுலாப் பயணிகளை புதுச்சேரிக்கு வரவழைப்பதில் அங்கே சகாய விலையில் கிடைக்கும் மதுவுக்கு தனியிட முண்டு. இந்நிலையில், அரசே முழுவதுமாக மது விற்பனையை நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் கசிந்து, புதுச்சேரி மதுபான விற்பனையாளர்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் மதுபான விற்பனைக்கு இரண்டு விதமான லைசன்ஸ் தரப்பட்டுவருகிறது. எப்.எல்.1 என்கிற லைசன்ஸ், மொத்த விற்பனையாளர்களுக்கு தரப்படுகிறது. எப்.எல்.2 என்கிற லைசன்ஸ், சில்லறை விற்பனைக் கடைகள், பார்களோடு இணைந்த கடைகளுக்கு வழங்கப்படுகிறது. கடந்த 2023 டிசம்பர் கணக்குப்படி புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் 531 கடைகள் உள்ளன.
பாண்டிச்சேரியில் 6 மதுபான உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளன. 80 சதவீத சரக்குகள் இங்கிருந்துதான் மொத்த விற்பனையகங்களுக்கு செல்கின்றன். 20 சதவீத சரக்குகள் தமிழ்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இதிலிருந்து ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய் புதுச்சேரி
சுற்றுலாப் பயணிகளை புதுச்சேரிக்கு வரவழைப்பதில் அங்கே சகாய விலையில் கிடைக்கும் மதுவுக்கு தனியிட முண்டு. இந்நிலையில், அரசே முழுவதுமாக மது விற்பனையை நடத்த முடிவு செய்துள்ளதாக தகவல் கசிந்து, புதுச்சேரி மதுபான விற்பனையாளர்களிடம் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.
புதுச்சேரியில் மதுபான விற்பனைக்கு இரண்டு விதமான லைசன்ஸ் தரப்பட்டுவருகிறது. எப்.எல்.1 என்கிற லைசன்ஸ், மொத்த விற்பனையாளர்களுக்கு தரப்படுகிறது. எப்.எல்.2 என்கிற லைசன்ஸ், சில்லறை விற்பனைக் கடைகள், பார்களோடு இணைந்த கடைகளுக்கு வழங்கப்படுகிறது. கடந்த 2023 டிசம்பர் கணக்குப்படி புதுச்சேரி மாநிலத்தில் மொத்தம் 531 கடைகள் உள்ளன.
பாண்டிச்சேரியில் 6 மதுபான உற்பத்தி தொழிற்சாலைகள் உள்ளன. 80 சதவீத சரக்குகள் இங்கிருந்துதான் மொத்த விற்பனையகங்களுக்கு செல்கின்றன். 20 சதவீத சரக்குகள் தமிழ்நாடு மற்றும் வெளிநாடுகளிலிருந்து இறக்குமதி செய்யப்படுகின்றன. இதிலிருந்து ஆண்டுக்கு ஆயிரம் கோடி ரூபாய் புதுச்சேரி மாநில அரசுக்கு கலால் வரியாக வருகிறது. சுமார் 10 ஆயிரம் கோடி வரை தனியார் நிறுவன முதலாளிகள் சம்பாதிக்கிறார்கள் என்கிறது பா.ஜ.க. தரப்பு. மதுபான விற்பனையை ஒழுங்குபடுத்தினால் புதுவை அரசுக்கு மேலும் சில ஆயிரம் கோடி வரி வருவாயாக கிடைக்கும் என்கிறது கூட்டணி அமைச்சரவையிலுள்ள பா.ஜ.க.
இதுகுறித்து லெப்டினன்ட் கவர்னர் பொறுப்பு வகிக்கும் சி.பி.ராதாகிருஷ்ணன், "தமிழ்நாட் டில் டாஸ்மாக் மூலமாக அரசே மதுபானங்களை கொள்முதல் செய்து விற்பனை செய்வதுபோல் புதுவையிலும் மதுபான விற்பனைக்கென தனியாக ஒரு துறையை தொடங்கி மதுவை அரசே கொள்முதல் செய்து விற்பனை செய்யலாம்'' எனக் கருத்து கூறியிருக்கிறார். கவர்னரின் இந்த ஆலோசனை, என்.ஆர்.சி. -பா.ஜ.க. கூட்டணியில் விரிசலையே உருவாக்கி யுள்ளது என்கிறார்கள்.
இதுபற்றி முதலமைச்சருக்கு நெருக்கமான வட்டாரத்தில் விசா ரித்தபோது, "2011ஆம் ஆண்டு முதலமைச்சராக பதவியேற்ற ரங்கசாமி, அரசின் கஜானா காலியாக இருந்ததால் 2015ஆம் ஆண்டு, மதுபானங்களுக்கான கலால் வரியை உயர்த்தினார். இதில் அதிர்ச்சியான பாண்டிச்சேரியில் உள்ள மதுபான விற்பனையாளர்கள், முதலமைச் சரை சந்தித்து வரியை குறைக்கவேண்டும் எனக் கோரிக்கை வைத்தார்கள். அர சாங்கத்தின் நிலையை அவர் சொல்லிக் கொண்டிருந்தபோது, செல்வபாண்டியன் என்கிற ரீட்டய்லர் தன் அருகிலிருந்தவரிடம், "இவர் என்ன இப்படி சொல்றாரு, பாண்டிச்சேரி அரசியலை தீர்மானிக்கறதே நம்ம சாதி தான். நாம நினைச்சா ஆட்சியையே மாற்றி அமைக்கலாம். முன்னாள் சபாநாயகர் பழனிராஜன், பெருமாள்ராஜா, எம்.ஏ.சண்முகத்தைவிட இவர் என்ன பெரியஆளா?''ன்னு சொன்னது முதலமைச்சர் காதில் விழுந்து கடுப்பாகி, அப்படியே அனுப்பிவச்சிட்டார். அடுத்த தேர்தலில் அவங்க சொன்னமாதிரி அவரால் ஆட்சிக்கு வரமுடியவில்லை. 2021ல் மீண்டும் முதலமைச்சர் பதவியில் ரங்கசாமி அமர்ந்ததும், பழைய மதுபான ஃபைலை தூசு தட்டி எடுத்தார். ரெஸ்டோபார் லைசென்ஸ் விதிமுறைகளைத் தளர்த்தினார். மதுபான விற்பனையில் ஆதிக்கம் செலுத்திய குறிப்பிட்ட சாதியினரை தவிர்த்துவிட்டு, புதிய ரெஸ்டோபார் லைசன்ஸ்களை தான் சார்ந்த சாதி, பிற சாதியினருக்கு வாரி வழங்கச் செய்தார் முதலமைச்சர். இதன்மூலம் மதுபான விற்பனையில் ஒரு சாதியின் ஆதிக்கத்தை தகர்த்தார்'' என்கிறார்கள்.
இதுகுறித்து புதுச்சேரி தலைமைச்செயலக வட்டாரத்தில் விசாரித்தபோது, "மதுபான விற்பனை இங்கு தனியார் வசம் உள்ளது. இங்குள்ள அரசியல் கட்சிகளின் தலைமைப் பொறுப்பிலுள்ள ஒவ்வொருவரும் 10, 15 எனத் தங்கள் குடும்பத்தினர் பெயரிலும், பினாமிகள் பெயரிலும் மதுபானக் கடை களை வைத்திருக்கிறார்கள். இவர்களை மீறி மதுபானக் கடைகளை அரசுடமை யாக்குவது பெரும் சிரமம். தமிழ்நாடு போல் மதுபானக் கம்பெனிகளிடமிருந்து அரசே நேரடியாகக் கொள்முதல் செய்து கடைகளுக்கு விற்பனை செய்யலாம். தனியார் கடைகள், அரசுக்கடைகள் இங்கே வாங்கிக்கொள்ளட்டும். இதன்மூலம் அரசுக்கு அதிக வருவாய் கிடைக்கும் என ஒரு ஆலோசனை கவர்னர் தரப்பிலிருந்து வைக்கப்பட்டது.
அதாவது, தனியார் நடத்தும் மொத்த விற்பனைக் கடைகளை மூடலாம் என்றது. அரசே ஒரு துறையை உருவாக்கி மதுபானம் விற்பதில் முதலமைச்சர் ரங்கசாமிக்கு உடன்பாடில்லை. தனது பெயர் வரலாற்றில் வேறு மாதிரி பதிவாகிவிடும் எனப் பயப்படுகிறார். இதனால் மதுபானக்கடை தொடர்பான கவர்னரின் முடிவுக்கு எதிராக உள்ளார் முதலமைச்சர். இப்போது, பாண்டிச்சேரி கூட்டுறவுத் துறை, அமுதசுரபி மூலமாக சில இடங்களில் மது விற்பனை செய்வதை அதிகப்படுத்தலாம் என நினைக்கிறார்'' என்கிறார்கள்.
என்.ஆர்.சி.யுடன் கூட்டணியில் உள்ள பா.ஜ.க., "அரசின் கஜானாவை நிரப்ப இந்த முடிவு எடுக்கவில்லை. வரும் சட்டமன்றத் தேர்தலில் பா.ஜ.க. தனித்து இங்கு தேர்தலை சந்தித்து ஆட்சியைப் பிடிக்க முயற்சிக் கின்றனர். அதற்காக, நிதி திரட்டவும், அதிகாரத்தில் உள்ள சிலரின் பாக்கெட்டை நிரப்பிக்கொள்ளவும் இப்படியொரு மிரட்டல் விடுக்கிறார்கள்' என்கிறார்கள்.
மதுவை வைத்து ஆளும்கட்சி, அதன் கூட்டணிக் கட்சி, பிற கட்சிகளுக்கு இடையே பாண்டிச்சேரியில் ஆட்டம் தொடங்கியுள்ளது... முடிவு?