பா.ஜ.க. ஆளும் மணிப்பூரில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் வன்முறை களால் இதுவரை 200 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர். சுமார் 60 ஆயிரம் மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். பல பெண்கள் பாலியல் வன்புணர்வு, கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகியுள்ளனர். அதிலும் குறிப்பாக, இரண்டு குக்கி இனப் பெண்கள் ஒரு கும்பலால் நிர்வாணமாக இழுத்துவரப்பட்ட வீடியோ வெளியாகி நாடெங்கும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இவ்வளவு கொடுமைகள் நடந்தும் பிரதமர் மோடி ஒருமுறை கூட அம்மாநில
பா.ஜ.க. ஆளும் மணிப்பூரில் கடந்த ஒன்றரை ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடரும் வன்முறை களால் இதுவரை 200 பேருக்கு மேல் உயிரிழந்துள்ளனர். சுமார் 60 ஆயிரம் மக்கள் அகதிகளாக இடம்பெயர்ந்துள்ளனர். பல பெண்கள் பாலியல் வன்புணர்வு, கூட்டுப் பாலியல் வன்புணர்வுக்கு உள்ளாகியுள்ளனர். அதிலும் குறிப்பாக, இரண்டு குக்கி இனப் பெண்கள் ஒரு கும்பலால் நிர்வாணமாக இழுத்துவரப்பட்ட வீடியோ வெளியாகி நாடெங்கும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
இவ்வளவு கொடுமைகள் நடந்தும் பிரதமர் மோடி ஒருமுறை கூட அம்மாநிலத்துக்கு சென்று, பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆறுதல் சொல்லவில்லை. கலவரத்தை அடக்கமுடியாத பா.ஜ.க. முதல்வரை ராஜினாமா செய்யுமாறு அங்குள்ள எதிர்க்கட்சிகளும், சமூக செயற் பாட்டாளர்களும் குரல்கொடுத்தும் இதுவரை அவர்மீது எந்த நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை. இந்நிலையில் முதன்முறையாக மணிப்பூர் முதல்வர் பிரேன்சிங் பகிரங்கமாக மணிப்பூர் மக்களிடம் மன்னிப்பு கேட்டிருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
2025ஆம் ஆண்டு புத்தாண்டு பிறப்புக்கு முன்பாக, கடந்த டிசம்பர் 31ஆம் தேதி செய்தியாளர்களிடம் பேசிய பிரேன்சிங், "கடந்த ஆண்டு மே மாதம் 3ஆம் தேதி முதல் இப்போது வரை நடந்த அனைத்து சம்பவங்களுக்காகவும் நான் வருந்துகிறேன். இந்த ஆண்டு (2024) மிகவும் துரதிர்ஷ்டவசமானது. பலர் தங்களுடைய அன்புக்குரியவர்களை இழந்துள்ளனர். மேலும் பலர் வீடுகளை விட்டு வெளியேறினர். இப்படி நடந்ததற்காக நான் மிகவும் வருத்தப்படுகிறேன். அதோடு பாதிக்கப்பட்ட மக்களிடம் நான் மனப்பூர்வமாக மன் னிப்பு கேட்டுக்கொள்கிறேன். இப்பிரச்சனைக்கு அனைத்து சமூகங்களும் இணைந்து பேச்சுவார்த்தை நடத்தி தீர்வு காண வேண்டும்'' என்று மன்னிப்பு கோரியிருந்தார்.
மணிப்பூர் முதல்வரின் மன்னிப்பு குறித்து, "முதல் வரின் அறிக்கையிலிருந்து, இரட்டை எஞ்சின் அரசாங்கத் தின் தோல்வியை ஒப்புக் கொண்டிருப்பது தெரியவரு கிறது'' என்று மணிப்பூர் காங்கிரஸ் தலைவர் கெய்ஷாம் மேகசந்திரா தெரிவித்தார். காங்கிரஸ் தலைவர் சந்தீப் தீட்சித் கூறுகையில், "ஒரு முதல்வர், ஒரு சாரரின் பக்கமிருந்துகொண்டு, இரு தரப்பினருக்கிடையிலான மோதலை அதிகப்படுத்திவந்தது மன்னிக்க முடியாதது. அவர் பதவி விலகுவதே சரியான தீர்வாக இருக்கும்'' எனக் குறிப்பிட்டார். காங்கிரஸ் செய்தித் தொடர் பாளர் ஜெய்ராம் ரமேஷ், "முதல்வர் இன்று கூறியதைச் சொல்ல 19 மாதங்கள் ஆகியிருக்கிறது. அது போதாது. 19 மாதங்களாக, பிரதமர் ஏன் பேசவில்லை என்பதுதான் உண்மையான பிரச்சனை. மணிப்பூரின் மக்களைச் சந்திக்க பிரதமர் மறுக்கிறார் என்பதுதான் பிரச்சனை'' என பிரதமரைக் கடுமையாக சாடியுள்ளார்.
இனியாவது இவ்விவகாரத்தை முடிவுக்கு கொண்டுவர பிரதமர் முனைப்பு காட்டுவாரா என்ற கேள்வி இந்தியா முழுக்க எழுந்துள்ளது!
-தெ.சு.கவுதமன்