திருச்சி மாவட்டத்தின் கிழக்குத்தொடர்ச்சி மலையை ஒட்டிய அந்த வன கிராமம், அதிகாலை நேரத்திலேயே பதட்டமானது. காரணம், ஊரின் ஒதுக்குப்புறமான காட்டுப் பகுதியில் மண்ணில் புரண்ட நிலையில் ஒரு சடலம் கிடந்தது. அடுத்த சில நிமிடங்களில் காவல்துறையினர் அங்கு ஆஜரானார்கள். அது ஆணா, பெண்ணா என்று கூட அடையாளம் தெரியாத அளவுக்கு, உடம்பெல்லாம் மண் அப்பியிருந்தது. கொஞ்சநேரத்தில் தாசில்தார் அங்கே வர, அவர் முன்னிலையில் சடலம் வெளியே எடுக்கப்பட்டது. அது 40 வயது மதிக்கத்தக்க ஒரு ஆண் என்பது உறுதியானது.

Advertisment

psycho

இதுகுறித்து விசாரணையில் இறங்கியபோது டன் கணக்கில் அதிர்ச்சி ஏற்பட்டது.

இறந்தவர் பெயர் கணேசன். அந்த வன கிராமத்தில் தனது மனைவியோடு வசித்து வந்தவர். சுப்பிரமணி என்பவரின் மகன்.

இந்த கணேசனுக்கு திருமண மாகி பதின் பருவத்தை எட்டிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர். தனது குடும்பத்தோடும், பெற்றோர் மற்றும் அக்காவோடும் ஒரே வீட்டில் வசித்துவந்தார். அந்த கணேசனுக்கு குடிப்பதுதான் முழுநேரத் தொழிலாம். அவரது வயதான பெற்றோர் சலவைத் தொழில் செய்துவந்திருக்கிறார்கள்.

Advertisment

கணேசனைப் பற்றி ஏரியா வாசிகள் சொன்னது இதுதான்... "குடின்னா, நீங்க நெனைக்கிறது மாதிரி ஏதோ குவாட்டர், ஆஃப்புன்னு குடிக்கிறவன் இல்லை இவன். வெறி பிடிச்சமாதிரி குடிப் பான். குடிச்சிட்டு பொழுதன் னைக்கும் வீட்டில் ரகளை கட்டி அடிப்பான். அப்ப கையில் கிடைக்கிறதை எடுத்து பொண் டாட்டி, பிள்ளைகளையும் பெற்றோரையும்கூட அடிப்பான். அவனோட கொடுமையைத் தாக்குப்பிடிக்க முடியாத அவன் மனைவி, ‘"நீயும் வேணாம்; ஒன் சங்காத்தமும் வேணாம்'ன்னு சொல்-ட்டு, தன் மூத்த மகளை அங்கேயே விட்டுட்டும் சின்னப் பொண்ணை மட்டும் கூட்டிக்கிட்டு, புதுக்கோட்டைக்குப் பக்கத்துல இருக்கிற புத்தனாம்பட்டிக்கு போய்விட்டார். தட்டிக் கேட்க ஆளில்லாததால் கணேசன் ஆட்டமா ஆட ஆரம்பிச்சான். அதுக்கப்புறம் அவன் செஞ்சதை எல்லாம் வெளில சொல்லவே முடியாது...'’ என்றார்கள் தயக்கமாக.

கணேசனின் பழைய நண்பர்களோ இப்படி மனம் திறந்தார்கள். "பல வருசமா மதுப்பழக்கத்திற்கு அடிமையான கணேசனுக்கு, போதை தலைக் கேறினால், தான் என்ன செய்கிறோம்னு கூடத் தெரியாது. போதையில் அக்கம்பக்க பெண்களிடம் அடிக்கடி வம்பு செஞ்சிருக்கான். அதைவிடக் கொடுமை என்னன்னா... ராத்திரியானால் சுண் ணாம்பை எடுத்து வாய் முழுக்கத் தடவிக்கிட்டு, ஒரு மிருகம் மாதிரி ஆயிடுவான். அவன் வாயி-ருந்து காட்டு விலங்குகளைப் போலவே, இனம் புரியாத சத்தம் வரும். அந்த நேரத்தில், தான் என்ன செய்கிறோம்னு கூடத் தெரியாம, பெத்த தாய்ன்னு கூட பார்க்காமல் அவரிடமே பலமுறை தன் பலாத்காரத்தை காட்ட முயற்சி செஞ்சிருக்கான். அதோட, ஒரே வீட்டில் இருந்த அவனது சகோ தரியையும் கூட, அவன் விட்டு வைக்காம டார்ச்சர் கொடுத்திருக்கான். அதேபோல் பெற்ற மகள்னு கூடப் பார்க்காம, அந்த பொண்ணுகிட்டயும் சில்மிச புத்தியைக் காட்டி இருக்கான். அதனால், ராத்திரி ஆனாலே ஆளாளுக்கு மிரண்டு போய்ப்பதுங்குற அளவுக்கு நிலமை இருந்திருக்கு.

ssசம்பவத்தன்னைக்கும் வாய் முழுக்க சுண் ணாம்போடு, நடுநிசியில் வீட்டுக்கு வந்த கணேசன், உறங்கிக்கொண்டிருந்த தன் தாயிடம் தொந்தரவு கொடுத்திருக்கான். உடனே அவனை விரட்ட, அவன் அம்மா, ஒரு கட்டையை எடுத்து, அவன் மேல வீசியிருக்காங்க. உடனே அவங்களை விட்டுட்டு, தன் மகள்கிட்ட போயிருக்கான். அதனால் மறுபடியும் அவன் அம்மா, கட்டையால ஒரு அடி கொடுத்திருக்காங்க. உடனே, அவன் அங்கிருந்து ஓட்டம்பிடிச்சிருக்கான். அப்படியே மலையடிவாரம் பக்கம் போனவன் தான், பள்ளத்தில் தடுக்கி விழுந்து, அப்படியே உயிரிழந்திருக்கான்''’என்றார்கள் சங்கடம் மாறாமல்.

Advertisment

இதுகுறித்து நாம் முசிறி டி.எஸ்.பி. ஜாஸ்மினை சந்தித்துக் கேட்டபோது, "கணேசன் ஒரு மது நோயாளி என்பதைக் காட்டிலும், அவன் ஒரு மன நோயாளி என்பதாகவே தெரியவருகிறது. ‘ஸ்கிசோஃப்ரினியா’ (நஸ்ரீட்ண்க்ஷ்ர்ல்ட்ழ்ங்ய்ண்ஹ) என்ற அரிய வகை மனநோய்க்காக அரசு மருத்துவமனையில் அவன் சிகிச்சை எடுத்துக்கொண்ட தற்கான ஆதாரங்கள் எங்களுக்கு கிடைச் சிருக்கு. குறிப்பிட்ட அன்று, அவன் தலைக்கேறிய போதையோடு, மிருகத் தனமா வீட்டில் நடந்திருக்கான். அவனை உடனே விரட்டியிருக்காங்க. அப்ப ஓடும்போது நிலைப்படியில் முட்டி மோதி, கீழே விழுந்து, காயத்தோட எழுந்து ஓடியிருக்கான். போனவன் பள்ளத்தில் விழுந்திருக்கான். நடந்த சம்பவங்கள் அனைத்தையும் தீர விசாரித்துவிட்டோம். மாவட்ட எஸ்.பி. வருண்குமார் சாரும், நேரடி விசா ரணை நடத்தி எல்லாத்தையும் உறுதிப்படுத்தியிருக் கிறார். கணேசன் ஒரு ‘செக்ஸ் சைக்கோ’ என்பது தெள்ளத்தெளிவாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அவன் அம்மா, தன்னுடைய பாதுகாப்பிற்காகவும், தன் பேத்தியை பாதுகாக்கவுமே அவனை அடிச் சிருக்கார். இந்த வழக்கில், இந்திய குற்றவியல் சட்டப் பிரிவு 100, அதன் உட்பிரிவுகள் 3 மற்றும் 4 ஆகிய வற்றின் கீழ் தற்போது வழக்கு பதிவு செய்யப் பட்டுள்ளது''’என்றார் நிதானமாக. மனிதனாக இருந்தவன் மிருகமாக மாறி, தன்னுடைய தாயாரை யும் பெற்ற மகளையும் தன் காம இச்சைக்கு ப-யாக்க முயன்றபோது, இந்த சம்பவம் நடந்ததால், மேலே கூறிய பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யும்படி எஸ்.பி. உத்தரவிட்டார்' என்கிறார்கள்.

எது எப்படியோ, கணேசன் என்ற டேஞ்சரஸ் சைக்கோவின் மரணத்தால், அவனது குடும்பத் தினர் மட்டுமல்லாமல் ஒட்டு மொத்த அந்த மலைக்கிராமமும் தற்போது நிம்மதிப் பெருமூச்சு விடுகிறது.

__________

அந்நியன், சந்திரமுகி... ரகம்!

ன நோய்களில் பலவகை இருந்தாலும், "அந்நியன்'’ படத்தில் வரும் நடிகர் விக்ரம் போல மல்டிபிள் கேரக்டர் டிஸார்டர்’ என்ற ஒரு வகையான மனநோய்தான் ஸ்கிசோஃப்ரினியா எனக் கூறுகிறது மருத்துவ உலகம். இந்த நோயால் பாதிக்கப்பட்டவர் களில் சிலர், தாங்கள் நினைக்கும் கேரக்டர்களாகவே மாறிப்போய் விடுவது உண்டாம். சிலர், அவ்வப்போது ‘"சந்திரமுகி'’ போல மாறிவிடுவதும் உண்டாம். சிலருக்கு, அமைதியான நேரத்தில்கூட தங்களுக்குள் யாரோ பேசுவது போலவும், உத்தரவிடுவது போலவும் காதில் சத்தம் கேட்குமாம். சிலரோ, சம்பந்தமே இல்லாத வாசனைகளையும், சுவையையும் கூட உணர்வார்களாம். ஆனால், அவர்களில் ஒருசிலர் மட்டுமே கணேசனைப்போல டேஞ்சரஸ் செக்ஸ் சைக்கோவாக மாறி விடுவார்களாம். இதை முழுமையாக குணப்படுத்த முடியாவிட்டாலும் கூட, தொடர் சிகிச்சையின் மூலம் கட்டுப்பாட்டில் வைக்கலாம் என்கிறார்கள் மனநல மருத்துவர்கள்.